< Psalmów 93 >

1 PAN króluje, przyoblekł się w majestat, odział się PAN i przepasał potęgą; utwierdził też świat, że się nie zachwieje.
யெகோவா ஆளுகை செய்கிறார், மாட்சிமையை அணிந்துகொண்டிருக்கிறார்; யெகோவா வல்லமையை அணிந்து, அவர் அதை வார்க்கச்சையாகக் கட்டிக்கொண்டிருக்கிறார்; ஆதலால் உலகம் அசையாதபடி நிலைபெற்றிருக்கிறது.
2 Twój tron jest utwierdzony od wieków, ty jesteś od wieczności.
உமது சிங்காசனம் ஆரம்பம்முதல் உறுதியானது; நீர் என்றென்றும் இருக்கிறீர்.
3 Podniosły rzeki, PANIE, podniosły rzeki swój szum, podniosły rzeki swoje fale.
யெகோவாவே, நதிகள் எழும்பின; நதிகள் இரைச்சலிட்டு எழும்பின; நதிகள் அலைதிரண்டு எழும்பின.
4 Nad szum wielkich wód, nad potężne fale morskie mocniejszy jest PAN na wysokości.
திரளான தண்ணீர்களின் இரைச்சலைவிட, கடலின் வலிமையான அலைகளைவிட, யெகோவா உன்னதத்திலே வல்லமையுள்ளவர்.
5 Twoje świadectwa są bardzo pewne; twemu domowi, PANIE, przystoi świętość na wieczne czasy.
உமது சாட்சிகள் மிகவும் உண்மையுள்ளவைகள்; யெகோவாவே, பரிசுத்தமானது நிரந்தர நாளாக உமது ஆலயத்தின் அலங்காரமாக இருக்கிறது.

< Psalmów 93 >