< Psalmów 84 >
1 Przewodnikowi chóru, na Gittyt. Psalm dla synów Korego. O, jak miłe [są] twoje przybytki, PANIE zastępów!
௧கீத்தித் என்னும் வாத்தியத்தில் இசைக்கும் இராகத் தலைவனுக்குக் கோராகின் குடும்பம் அளித்த ஒரு துதிப் பாடல். சேனைகளின் யெகோவாவே, உமது வாசஸ்தலங்கள் எவ்வளவு இன்பமானவைகள்!
2 Moja dusza wzdycha i omdlewa z tęsknoty do przedsionków PANA; moje serce i ciało wołają radośnie do Boga żywego.
௨என்னுடைய ஆத்துமா யெகோவாவுடைய ஆலயமுற்றங்களின்மேல் வாஞ்சையும் ஆவலுமாக இருக்கிறது; என்னுடைய இருதயமும் என்னுடைய சரீரமும் உயிருள்ள தேவனை நோக்கிக் கெம்பீர சத்தமிடுகிறது.
3 Oto nawet wróbel znalazł sobie dom i jaskółka gniazdo, gdzie składa swe pisklęta, u twoich ołtarzy, PANIE zastępów, mój Królu i mój Boże!
௩என்னுடைய ராஜாவும் என் தேவனுமாகிய சேனைகளின் யெகோவாவே, உம்முடைய பீடங்களின் அருகில் அடைக்கலான் குருவிக்கு வீடும், தகைவிலான் குருவிக்குத் தன்னுடைய குஞ்சுகளை வைக்கும் கூடும் கிடைத்ததே.
4 Błogosławieni ci, którzy mieszkają w twoim domu, nieustannie będą cię chwalić. (Sela)
௪உம்முடைய வீட்டில் தங்கி இருக்கிறவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் எப்பொழுதும் உம்மைத் துதித்துக்கொண்டிருப்பார்கள் (சேலா)
5 Błogosławiony człowiek, którego siła [jest] w tobie, w którego sercu są twoje drogi;
௫உம்மிலே பெலன்கொள்ளுகிற மனிதனும், தங்களுடைய இருதயங்களில் செவ்வையான வழிகளைக் கொண்டிருக்கிறவர்களும் பாக்கியவான்கள்.
6 Ci, którzy przechodząc przez dolinę Baka, zmieniają ją w źródło, a deszcz okrywa [ją] błogosławieństwem.
௬அழுகையின் பள்ளத்தாக்கை உருவ நடந்து அதை நீரூற்றாக்கிக் கொள்ளுகிறார்கள்; மழையும் குளங்களை நிரப்பும்.
7 I idą z mocy w moc, i ukażą się przed Bogiem na Syjonie.
௭அவர்கள் பலத்தின்மேல் பலம் அடைந்து, சீயோனிலே தேவசந்நிதியில் வந்து காணப்படுவார்கள்.
8 O PANIE, Boże zastępów, wysłuchaj mojej modlitwy, nakłoń ucha, Boże Jakuba. (Sela)
௮சேனைகளின் தேவனாகிய யெகோவாவே, என்னுடைய விண்ணப்பத்தைக் கேளும்; யாக்கோபின் தேவனே, செவிகொடும். (சேலா)
9 Spójrz, Boże, nasza tarczo, i wejrzyj na oblicze twego pomazańca.
௯எங்கள் கேடகமாகிய தேவனே, கண்ணோக்கமாக இரும்; நீர் அபிஷேகம் செய்தவரின் முகத்தைப் பாரும்.
10 Lepszy bowiem jest jeden dzień w twoich przedsionkach niż tysiąc gdzie indziej; wolę raczej stać w progu domu mego Boga, niż mieszkać w namiotach niegodziwców.
௧0ஆயிரம் நாளைவிட உமது முற்றங்களில் செல்லும் ஒரே நாள் நல்லது; துன்மார்க்கர்களின் கூடாரங்களில் தங்கியிருப்பதைவிட என் தேவனுடைய ஆலயத்தின் வாசற்படியில் காத்திருப்பதையே தெரிந்துகொள்ளுவேன்.
11 PAN Bóg bowiem jest słońcem i tarczą, PAN obdarza łaską i chwałą, nie odmawia dobra tym, którzy postępują nienagannie.
௧௧தேவனாகிய யெகோவா சூரியனும் கேடகமுமானவர்; யெகோவா கிருபையையும் மகிமையையும் அருளுவார்; உத்தமமாக நடக்கிறவர்களுக்கு நன்மையை வழங்காமல் இருக்கமாட்டார்.
12 PANIE zastępów, błogosławiony człowiek, który ufa tobie.
௧௨சேனைகளின் யெகோவாவே, உம்மை நம்பியிருக்கிற மனிதன் பாக்கியவான்.