< Psalmów 84 >

1 Przewodnikowi chóru, na Gittyt. Psalm dla synów Korego. O, jak miłe [są] twoje przybytki, PANIE zastępów!
கித்தீத் என்னும் இசையில் வாசிக்கக் கோராகின் மகன்களிலுள்ள பாடகர் குழுத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட சங்கீதம். சர்வ வல்லமையுள்ள யெகோவாவே, உமது தங்குமிடம் எவ்வளவு அழகானது!
2 Moja dusza wzdycha i omdlewa z tęsknoty do przedsionków PANA; moje serce i ciało wołają radośnie do Boga żywego.
என் ஆத்துமா யெகோவாவினுடைய ஆலய முற்றங்களுக்காக ஏங்கித் தவிக்கிறது; என் உடலும் உள்ளமும் உயிருள்ள இறைவனை நோக்கி மகிழ்ச்சியுடன் ஆர்ப்பரிக்கிறது.
3 Oto nawet wróbel znalazł sobie dom i jaskółka gniazdo, gdzie składa swe pisklęta, u twoich ołtarzy, PANIE zastępów, mój Królu i mój Boże!
என் அரசரும் என் இறைவனுமாய் இருக்கிற சர்வ வல்லமையுள்ள யெகோவாவே, உம்முடைய பீடத்தினருகே அடைக்கலான் குருவிக்கு வீடும், இரட்டைவால் குருவிக்குத் தன் குஞ்சுகளை வைத்துக்கொள்ள கூடும் கிடைத்ததே.
4 Błogosławieni ci, którzy mieszkają w twoim domu, nieustannie będą cię chwalić. (Sela)
உம்முடைய வீட்டில் வசிக்கிறவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்; அவர்கள் எப்பொழுதும் உம்மைத் துதித்துக்கொண்டே இருப்பார்கள்.
5 Błogosławiony człowiek, którego siła [jest] w tobie, w którego sercu są twoje drogi;
உம்மில் பெலன் கொள்கிறவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள், தங்கள் உள்ளத்தை சீயோனுக்குச் செல்லும் நெடுஞ்சாலைகள்மேல் பதித்துள்ளார்கள்.
6 Ci, którzy przechodząc przez dolinę Baka, zmieniają ją w źródło, a deszcz okrywa [ją] błogosławieństwem.
அவர்கள் பாக்கா என்னும் வறண்ட பள்ளத்தாக்கைக் கடந்து போகையில், அதை நீரூற்றுகளின் இடமாக்குகிறார்கள்; முன்மாரி மழையும் அதை நீர்நிலைகளால் நிரப்புகின்றது.
7 I idą z mocy w moc, i ukażą się przed Bogiem na Syjonie.
அவர்கள் ஒவ்வொருவரும் சீயோனின் இறைவனுக்கு முன்பாக வரும்வரைக்கும், பலத்தின்மேல் பலம் அடைகிறார்கள்.
8 O PANIE, Boże zastępów, wysłuchaj mojej modlitwy, nakłoń ucha, Boże Jakuba. (Sela)
சர்வ வல்லமையுள்ள இறைவனாகிய யெகோவாவே, என் மன்றாட்டைக் கேளும்; யாக்கோபின் இறைவனே, எனக்குச் செவிகொடும்.
9 Spójrz, Boże, nasza tarczo, i wejrzyj na oblicze twego pomazańca.
எங்கள் கேடயமாகிய இறைவனே, எங்களை நோக்கிப்பாரும்; நீர் அபிஷேகம் பண்ணியவரின் முகத்தை தயவுடன் பாரும்.
10 Lepszy bowiem jest jeden dzień w twoich przedsionkach niż tysiąc gdzie indziej; wolę raczej stać w progu domu mego Boga, niż mieszkać w namiotach niegodziwców.
உமது ஆலய முற்றங்களில் ஒரு நாளைக் கழிப்பது, வேறெங்காவது ஆயிரம் நாட்களைக் கழிப்பதைவிட சிறந்தது; கொடியவர்களின் கூடாரங்களில் குடியிருப்பதைவிட, என் இறைவனுடைய வீட்டில் வாசல் காவலனாக இருப்பதை நான் அதிகமாய் விரும்புவேன்.
11 PAN Bóg bowiem jest słońcem i tarczą, PAN obdarza łaską i chwałą, nie odmawia dobra tym, którzy postępują nienagannie.
ஏனெனில் இறைவனாகிய யெகோவா சூரியனும் கேடயமுமாய் இருக்கிறார்; யெகோவா கிருபையையும் மகிமையையும் கொடுப்பார்; குற்றமற்றோராய் நடப்போருக்கு அவர் நன்மையானவற்றைக் கொடாமல் இருப்பதில்லை.
12 PANIE zastępów, błogosławiony człowiek, który ufa tobie.
சர்வ வல்லமையுள்ள யெகோவாவே, உம்மில் நம்பிக்கையாயிருக்கிற மனிதர் ஆசீர்வதிக்கப்பட்டவர்.

< Psalmów 84 >