< Psalmów 8 >
1 Przewodnikowi chóru, na Gittyt. Psalm Dawida. O PANIE, nasz Panie, jak sławne jest twoje imię na całej ziemi! Ty, który swoją chwałę wyniosłeś nad niebiosa.
௧கித்தீத் என்ற இசைக் கருவியில் வாசிக்க இராகத் தலைவனுக்குத் தந்த தாவீதின் பாடல். எங்கள் ஆண்டவராகிய யெகோவாவே, உம்முடைய பெயர் பூமியெங்கும் எவ்வளவு மேன்மையுள்ளதாக இருக்கிறது! உம்முடைய மகத்துவத்தை வானங்களுக்கு மேலாக வைத்தீர்.
2 Przez usta niemowląt i ssących ugruntowałeś [swą] potęgę z powodu twoich wrogów, aby poskromić nieprzyjaciela i mściciela.
௨விரோதியையும், பழிகாரனையும் அடக்கிப்போட, தேவனே நீர் உம்முடைய எதிரிகளுக்காக குழந்தைகள் பாலகர்கள் வாயினால் பெலன் உண்டாக்கினீர்.
3 Gdy przypatruję się twoim niebiosom, dziełu twoich palców, księżycowi i gwiazdom, które utwierdziłeś;
௩உமது விரல்களின் செயல்களாகிய உம்முடைய வானங்களையும், நீர் அமைத்த சந்திரனையும் நட்சத்திரங்களையும் நான் பார்க்கும்போது,
4 [Wtedy mówię]: Czymże jest człowiek, że o nim pamiętasz, albo syn człowieczy, że troszczysz się o niego?
௪மனிதனை நீர் நினைக்கிறதற்கும், மனுக்குலத்தை நீர் விசாரிக்கிறதற்கும் அவன் எம்மாத்திரம் என்கிறேன்.
5 Uczyniłeś go bowiem niewiele mniejszym od aniołów, chwałą i czcią go ukoronowałeś.
௫நீர் அவனைத் தேவதூதரிலும் சற்றுச் சிறியவனாக்கினீர்; மகிமையினாலும், மரியாதையினாலும் அவனை முடிசூட்டினீர்.
6 Dałeś mu panowanie nad dziełami twoich rąk, wszystko poddałeś pod jego stopy:
௬உம்முடைய கைகளின் செயல்களின்மேல் நீர் அவனுக்கு ஆளுகை தந்து.
7 Owce i wszelkie bydło, a także zwierzęta polne;
௭ஆடுமாடுகள் எல்லாவற்றையும், காட்டுமிருகங்களையும்,
8 Ptactwo niebieskie i ryby morskie, [i] wszystko, co przemierza szlaki mórz.
௮ஆகாயத்துப் பறவைகளையும், கடலின் மீன்களையும், கடல்களில் வாழ்கிறவைகளையும் அவனுடைய பாதங்களுக்குக் கீழ்ப்படுத்தினீர்.
9 O PANIE, nasz Panie, jak sławne jest twoje imię na całej ziemi!
௯எங்கள் ஆண்டவராகிய யெகோவாவே, உம்முடைய பெயர் பூமியெங்கும் எவ்வளவு மேன்மையுள்ளதாக இருக்கிறது!