< Psalmów 13 >
1 Przewodnikowi chóru. Psalm Dawida. Jak długo, PANIE? Zapomnisz o mnie na wieki? Jak długo będziesz ukrywał przede mną swoje oblicze?
௧சங்கீத தலைவரிடம் கொடுக்கப்பட்ட தாவீதின் சங்கீதம். யெகோவாவே, எதுவரைக்கும் என்னை மறந்திருப்பீர், எதுவரைக்கும் உம்முடைய முகத்தை எனக்கு மறைப்பீர்?
2 Jak długo będę szukał rady w swojej duszy i codziennie trapił się w sercu? Jak długo mój wróg będzie się nade mnie wynosił?
௨என்னுடைய இருதயத்திலே சஞ்சலத்தை எல்லா நாளும் வைத்து, எதுவரைக்கும் என்னுடைய ஆத்துமாவிலே ஆலோசனை செய்துகொண்டிருப்பேன்? எதுவரைக்கும் என்னுடைய எதிரி என்மேல் தன்னை உயர்த்துவான்?
3 Spójrz i wysłuchaj mnie, PANIE, mój Boże! Oświeć moje oczy, bym nie zasnął w śmierci;
௩என் தேவனாகிய யெகோவாவே, நீர் நோக்கிப்பார்த்து, எனக்குப் பதில் தாரும்; நான் மரணமாகிய தூக்கம் அடையாதபடி என்னுடைய கண்களைத் தெளிவாக்கும்.
4 By nie powiedział mój wróg: Pokonałem go! Niech się nie cieszą moi nieprzyjaciele, gdy się zachwieję.
௪அவனை மேற்கொண்டேன் என்று என்னுடைய எதிரி சொல்லாதபடி, நான் தள்ளாடுகிறதினால் என்னுடைய எதிரி சந்தோஷப்படாதபடி இப்படிச் செய்தருளும்.
5 Lecz ja zaufałem twemu miłosierdziu; moje serce rozraduje się twoim zbawieniem.
௫நான் உம்முடைய கிருபையின்மேல் நம்பிக்கையாக இருக்கிறேன்; உம்முடைய இரட்சிப்பினால் என்னுடைய இருதயம் சந்தோஷப்படும்.
6 Będę śpiewał PANU, bo obdarzył mnie dobrem.
௬யெகோவா எனக்கு நன்மைசெய்தபடியால் அவரைப் பாடுவேன்.