< Psalmów 102 >

1 Modlitwa strapionego, gdy uciśniony wylewa przed PANEM swoją skargę. PANIE, wysłuchaj mojej modlitwy i niech przyjdzie do ciebie moje wołanie.
துயரப்படுகிறவன் துக்கத்தில் மூழ்கி யெகோவாவிடத்தில் தன் மனவேதனையை தெரியப்படுத்தும் விண்ணப்பம். யெகோவாவே, என்னுடைய விண்ணப்பத்தைக் கேளும்; என்னுடைய ஜெபம் உம்மிடத்தில் சேர்வதாக.
2 Nie ukrywaj przede mną swego oblicza, w dniu mego ucisku nakłoń ku mnie swego ucha; w dniu, w którym cię wzywam, szybko mnie wysłuchaj.
என்னுடைய ஆபத்துநாளிலே உமது முகத்தை எனக்கு மறைக்காமல் இரும்; உமது செவியை என்னிடத்தில் சாயும்; நான் கூப்பிடுகிற நாளிலே எனக்கு விரைவாக பதில் சொல்லும்.
3 Moje dni bowiem nikną jak dym, a moje kości są rozpalone jak ognisko.
என்னுடைய நாட்கள் புகையைப்போல் ஒழிந்தது; என்னுடைய எலும்புகள் ஒரு கொள்ளியைப்போல் எரிந்தது.
4 Moje serce jest porażone i usycha jak trawa, [tak] że zapomniałem jeść chleb.
என்னுடைய இருதயம் புல்லைப்போல் வெட்டப்பட்டு உலர்ந்தது; என்னுடைய ஆகாரத்தைச் சாப்பிட மறந்தேன்.
5 Od głosu mego wołania moje kości przylgnęły mi do ciała.
என்னுடைய பெருமூச்சின் சத்தத்தினால், என்னுடைய எலும்புகள் என்னுடைய சரீரத்தோடு ஒட்டிக்கொள்ளுகிறது.
6 Jestem podobny do pelikana na pustyni, jestem jak sowa na pustkowiu.
வனாந்தர நாரைக்கு ஒப்பானேன்; பாழான இடங்களில் தங்கும் ஆந்தையைப் போலானேன்.
7 Czuwam i jestem jak samotny wróbel na dachu.
நான் தூக்கம் இல்லாமல் வீட்டின்மேல் தனித்திருக்கும் குருவியைப்போல இருக்கிறேன்.
8 Przez cały dzień znieważają mnie moi wrogowie i przeklinają mnie ci, którzy szaleją przeciwko mnie.
நாள்தோறும் என்னுடைய எதிரிகள் என்னை நிந்திக்கிறார்கள்; என்மேல் மூர்க்கவெறிகொண்டவர்கள் எனக்கு விரோதமாகச் சாபம் இடுகிறார்கள்.
9 Jadam bowiem popiół jak chleb, a mój napój mieszam ze łzami;
நீர் என்னை உயரத்தூக்கி, கீழேத் தள்ளினீர், உமது கோபத்திற்கும், கடுங்கோபத்திற்கும் உள்ளானேன்.
10 Z powodu twego gniewu i zapalczywości, bo podniosłeś mnie i strąciłeś.
௧0ஆதலால், நான் சாம்பலை அப்பமாகச் சாப்பிட்டு, என்னுடைய பானங்களைக் கண்ணீரோடு கலக்கிறேன்.
11 Moje dni są jak chylący się cień, a ja usycham jak trawa.
௧௧என்னுடைய ஆயுசு நாட்கள் சாய்ந்துபோகிற நிழலைப்போலிருக்கிறது; புல்லைப்போல் உலர்ந்துபோகிறேன்.
12 Ale ty, PANIE, trwasz na wieki, a twoja pamięć z pokolenia na pokolenie.
௧௨யெகோவாவாகிய நீரோ என்றென்றைக்கும் இருக்கிறீர்; உம்முடைய பெயரின் புகழ் தலைமுறை தலைமுறையாக நிற்கும்.
13 Powstaniesz i zmiłujesz się nad Syjonem, bo czas, byś się nad nim zlitował, gdyż nadszedł czas wyznaczony.
௧௩தேவனே நீர் எழுந்தருளி சீயோனுக்கு இரங்குவீர்; அதற்கு தயவு செய்யும் காலமும், அதற்காகக் குறித்த நேரமும் வந்தது.
14 Twoi słudzy bowiem miłują jego kamienie i litują się nad jego prochem;
௧௪உம்முடைய ஊழியக்காரர்கள் அதின் கல்லுகள்மேல் வாஞ்சைவைத்து, அதின் மண்ணுக்குப் பரிதபிக்கிறார்கள்.
15 A poganie będą się bać imienia PANA i wszyscy królowie ziemi – twojej chwały;
௧௫யெகோவா சீயோனைக் கட்டி, தமது மகிமையில் வெளிப்படுவார்.
16 Gdy PAN odbuduje Syjon i ukaże się w swojej chwale;
௧௬திக்கற்றவர்களுடைய ஜெபத்தை அலட்சியம்செய்யாமல், அவர்கள் விண்ணப்பத்தை அங்கீகரிப்பார்.
17 Przychyli się do modlitwy opuszczonych i nie pogardzi ich modlitwą.
௧௭அப்பொழுது தேசங்கள் யெகோவாவுடைய பெயருக்கும், பூமியிலுள்ள ராஜாக்களெல்லோரும் உம்முடைய மகிமைக்கும் பயப்படுவார்கள்.
18 Zapiszą to dla przyszłego pokolenia, a lud, który ma być stworzony, będzie chwalić PANA.
௧௮பின்சந்ததிக்காக இது எழுதப்படும்; உருவாக்கப்படும் மக்கள் யெகோவாவை துதிப்பார்கள்.
19 Spojrzał bowiem z wysokości swojej świątyni; PAN popatrzył z nieba na ziemię;
௧௯யெகோவா கட்டுண்டவர்களின் பெருமூச்சைக் கேட்கவும், கொலைக்கு நியமிக்கப்பட்டவர்களை விடுதலையாக்கவும்,
20 Aby wysłuchać jęku więźniów i uwolnić skazanych na śmierć;
௨0தம்முடைய உயர்ந்த பரிசுத்த ஸ்தலத்திலிருந்து பார்த்து, வானங்களிலிருந்து பூமியின்மேல் கண்ணோக்கமானார்.
21 Aby głosili na Syjonie imię PANA i jego chwałę w Jeruzalem;
௨௧யெகோவாவுக்கு ஆராதனைசெய்ய, மக்களும் ராஜ்ஜியங்களும் ஒன்றாகக் கூடிக்கொள்ளும்போது,
22 Gdy się zgromadzą razem narody i królestwa, aby służyć PANU.
௨௨சீயோனில் யெகோவாவுடைய பெயரையும், எருசலேமில் அவருடைய துதியையும் பறைசாற்றுவார்கள்.
23 Osłabił w drodze moją siłę, skrócił moje dni.
௨௩பாதி வயதில் என்னுடைய பெலனை அவர் ஒடுக்கி, என்னுடைய நாட்களைக் குறுகச்செய்தார்.
24 Powiedziałem: Mój Boże, nie zabieraj mnie w połowie moich dni; twoje lata bowiem [trwają] z pokolenia na pokolenie.
௨௪அப்பொழுது நான்: என் தேவனே, பாதி வயதில் என்னை எடுத்துக்கொள்ளாமல் இரும்; உம்முடைய வருடங்கள் தலைமுறை தலைமுறையாக இருக்கும்.
25 Ty dawno założyłeś [fundamenty] ziemi i niebiosa są dziełem twoich rąk.
௨௫நீர் ஆரம்பத்திலே பூமியை அஸ்திபாரப்படுத்தினீர்; வானங்கள் உம்முடைய கரத்தின் செயல்களாக இருக்கிறது.
26 One przeminą, ale ty pozostajesz; wszystkie jak szata się zestarzeją, zmienisz je jak płaszcz i będą odmienione.
௨௬அவைகள் அழிந்துபோகும், நீரோ நிலைத்திருப்பீர்; அவைகளெல்லாம் ஆடையைப்போல் பழமையாகப்போகும்; அவைகளை ஒரு சால்வையைப்போல் மாற்றுவீர், அப்பொழுது மாறிப்போகும்.
27 Ale ty [zawsze jesteś] ten sam, a twoje lata nigdy się nie skończą.
௨௭நீரோ மாறாதவராக இருக்கிறீர்; உமது ஆண்டுகள் முடிந்துபோவதில்லை.
28 Synowie twoich sług będą trwać [u ciebie], a ich potomstwo zostanie przed tobą utwierdzone.
௨௮உமது அடியாரின் பிள்ளைகள் வாழ்ந்திருப்பார்கள்; அவர்களுடைய சந்ததி உமக்கு முன்பாக நிலைபெற்றிருக்கும் என்று சொன்னேன்.

< Psalmów 102 >