< Księga Sędziów 12 >

1 Potem zebrali się mężczyźni Efraimici i wyruszyli na północ, po czym powiedzieli do Jeftego: Dlaczego poszedłeś walczyć przeciwko synom Ammona, a nas nie wezwałeś, abyśmy poszli z tobą? Spalimy ogniem twój dom nad tobą.
எப்பிராயீம் மனிதர்கள் ஒன்றாகக் கூடி யோர்தான் நதியை கடந்து வடக்கே உள்ள சாபோன் ஊருக்குப் போய், யெப்தாவை நோக்கி: நீ எங்களை உன்னோடு வரும்படி அழைக்காமல் அம்மோனியர்கள்மேல் யுத்தம்செய்யப்போனதென்ன? உன்னுடைய வீட்டையும் உன்னையும் அக்கினியால் சுட்டுப்போடுவோம் என்றார்கள்.
2 I Jefte powiedział im: Ja i mój lud mieliśmy niemały spór z synami Ammona; i wzywałem was, lecz nie wybawiliście mnie z ich rąk.
அதற்கு யெப்தா: எனக்கும் என்னுடைய மக்களுக்கும் அம்மோனியர்களோடு பெரிய வழக்கு இருக்கும்போது, நான் உங்களைக் கூப்பிட்டேன்; நீங்கள் என்னை அவர்கள் கைக்கு விலக்கி காப்பாற்றவில்லை.
3 A widząc, że nie chcieliście mnie wybawić, naraziłem swoje życie i wyruszyłem na synów Ammona, a PAN wydał ich w moje ręce. Dlaczego więc przyszliście dziś do mnie, by walczyć ze mną?
நீங்கள் என்னை காப்பாற்றவில்லை என்று நான் பார்த்தபோது, நான் என்னுடைய ஜீவனை என்னுடைய கையிலே பிடித்துக்கொண்டு, அம்மோன் மக்களுக்கு எதிராகப்போனேன்; யெகோவா அவர்களை என்னுடைய கையில் ஒப்புக்கொடுத்தார்; இப்படியிருக்க, நீங்கள் என்மேல் யுத்தம்செய்ய, இன்று என்னிடத்திற்கு வரவேண்டியது என்ன என்று சொன்னான்.
4 Zebrał więc Jefte wszystkich mężczyzn z Gileadu i walczył z Efraimem. I mężczyźni z Gileadu pobili Efraima, gdyż ci mówili: Wy, Gileadczycy, [którzy mieszkacie] między Efraimitami a Manassesytami, jesteście zbiegami z Efraima.
பின்பு யெப்தா கீலேயாத் மனிதர்களையெல்லாம் கூட்டி, எப்பிராயீமர்களோடு யுத்தம்செய்தான்; எப்பிராயீமுக்கும் மனாசேக்கும் நடுவே குடியிருக்கிற கீலேயாத்தியர்களான நீங்கள் எப்பிராயீமைவிட்டு ஓடிப்போனவர்கள் என்று எப்பிராயீமர்கள் சொன்னபடியினால், கீலேயாத் மனிதர்கள் அவர்களை முறியடித்தார்கள்.
5 I Gileadczycy odebrali brody Jordanu Efraimowi. A gdy uciekający Efraimita mówił: Pozwólcie mi przejść, wtedy mężczyźni Gileadu pytali: Czy jesteś Efraimitą? A jeśli odpowiadał: Nie;
கீலேயாத்தியர்கள் எப்பிராயீமர்களை முந்தி யோர்தானின் துறைமுகங்களைப் பிடித்தார்கள்; அப்பொழுது எப்பிராயீமர்களிலே தப்பினவர்களில் யாராவது வந்து: நான் அக்கரைக்குப் போகட்டும் என்று சொல்லும்போது, கீலேயாத் மனிதர்கள்: நீ எப்பிராயீமனா என்று அவனைக் கேட்பார்கள்; அவன் அல்ல என்றால்,
6 Wtedy mówili do niego: Wymów teraz: szibbolet, a ten mówił: sibbolet, bo inaczej nie mógł wymówić. Wtedy chwytali go i zabijali przy brodach Jordanu. I poległo w tym czasie z Efraima czterdzieści dwa tysiące.
நீ ஷிபோலேத் என்று சொல் என்பார்கள்; அப்பொழுது அவன் அப்படி உச்சரிக்க முடியாமல், சிபோலேத் என்பான்; அப்பொழுது அவனைப் பிடித்து, யோர்தான் துறைமுகத்திலே வெட்டிப்போடுவார்கள்; அக்காலத்திலே எப்பிராயீமில் 42,000 பேர் இறந்தார்கள்.
7 A Jefte Gileadczyk sądził Izraela przez sześć lat. Potem umarł Jefte Gileadczyk i został pogrzebany w [jednym] z miast Gileadu.
யெப்தா இஸ்ரவேலை ஆறு வருடங்கள் நியாயம் விசாரித்தான்; பின்பு கீலேயாத்தியனான யெப்தா இறந்து, கீலேயாத்திலுள்ள ஒரு பட்டணத்தில் அடக்கம் செய்யப்பட்டான்.
8 Po nim sądził Izraela Ibsan z Betlejem.
அவனுக்குப்பின்பு பெத்லெகேம் ஊரானாகிய இப்சான் இஸ்ரவேலை நியாயம் விசாரித்தான்.
9 A miał trzydziestu synów i trzydzieści córek, które powydawał z domu [za mąż], a spoza domu sprowadził trzydzieści żon dla swoich synów. I sądził Izraela przez siedem lat.
அவனுக்கு 30 மகன்களும் 30 மகள்களும் இருந்தார்கள்; 30 மகள்களையும் வேறு இனத்திலே திருமணம் செய்துகொடுத்து, தன்னுடைய மகன்களுக்கு 30 பெண்களை வேறு இனத்திலிருந்து எடுத்தான்; அவன் இஸ்ரவேலை ஏழு வருடங்கள் நியாயம் விசாரித்தான்.
10 Potem Ibsan umarł i został pogrzebany w Betlejem.
௧0பின்பு இப்சான் இறந்து, பெத்லெகேமிலே அடக்கம் செய்யப்பட்டான்.
11 A po nim sądził Izraela Elon Zebulonita. Sądził on Izraela przez dziesięć lat.
௧௧அவனுக்குப் பின்பு செபுலோனியனாகிய ஏலோன் இஸ்ரவேலை நியாயம் விசாரித்தான்; அவன் பத்து வருடங்கள் இஸ்ரவேலை நியாயம் விசாரித்தான்.
12 Potem Elon Zebulonita umarł i został pogrzebany w Ajjalonie, w ziemi Zebulona.
௧௨பின்பு செபுலோனியனாகிய ஏலோன் இறந்து, செபுலோன் தேசமான ஆயலோன் ஊரில் அடக்கம் செய்யப்பட்டான்.
13 A po nim sądził Izraela Abdon, syn Hillela, Piratończyk.
௧௩அவனுக்குப்பின்பு இல்லேலின் மகனான பிரத்தோனியனான அப்தோன் இஸ்ரவேலை நியாயம் விசாரித்தான்.
14 Miał on czterdziestu synów i trzydziestu wnuków, którzy jeździli na siedemdziesięciu oślętach. Sądził on Izraela przez osiem lat.
௧௪அவனுக்கு 40 மகன்களும் 30 பேரப்பிள்ளைகளும் இருந்தார்கள்; அவர்கள் 70 கழுதைகளின்மேல் ஏறுவார்கள்; அவன் இஸ்ரவேலை எட்டு வருடங்கள் நியாயம் விசாரித்தான்.
15 Potem umarł Abdon, syn Hillela, Piratończyk, i został pogrzebany w Piratonie, w ziemi Efraima, na górze Amalekitów.
௧௫பின்பு பிரத்தோனியனான இல்லேலின் மகனான அப்தோன் இறந்து, எப்பிராயீம் தேசத்தில் அமலேக்கியர் மலையிலிருக்கிற பிரத்தோனிலே அடக்கம் செய்யப்பட்டான்.

< Księga Sędziów 12 >