< Hioba 12 >
1 Potem Hiob odpowiedział:
பின்பு யோபு மறுமொழியாக சொன்னது:
2 Doprawdy jesteście ludem i wraz z wami zginie mądrość.
“நீங்கள் பெரியவர்கள், சந்தேகம் இல்லை. ஞானமும் உங்களுடனே செத்துவிடும்!
3 Ale ja również mam rozum, jak [i] wy, i nie jestem od was gorszy. Kto nie zna tych rzeczy?
எனக்கும் உங்களைப்போல் ஒரு மனம் உண்டு; நான் உங்களுக்குக் குறைந்தவனல்ல; இவற்றையெல்லாம் அறியாதவன் யார்?
4 Jestem pośmiewiskiem dla swojego przyjaciela; ja, który wołam do Boga, a on odpowiada; sprawiedliwy [i] doskonały [jest] pośmiewiskiem.
“நான் இறைவனை நோக்கிக் கூப்பிடுவேன், அவர் பதிலளிப்பார்; நான் நீதிமானும், குற்றமற்றவனுமாய் இருந்தபோதிலும், என் நண்பர்களின் சிரிப்பிற்கு ஆளாகிவிட்டேன்.
5 Ten, który jest bliski upadku, to pochodnia wzgardzona w umyśle [tego], który żyje w pokoju.
சுகவாழ்வுள்ள மனிதர்கள் அவலத்தை வெறுக்கிறார்கள்; அவர்கள் அது, கால் இடறுகிறவர்களின் விதி என்று எண்ணுகிறார்கள்.
6 Namioty łupieżców są spokojne i bezpieczni są ci, którzy drażnią Boga, a którym Bóg [obficie] daje w ręce.
திருடர்களுடைய கூடாரங்கள் குழப்பமின்றி இருக்கின்றன; தெய்வத்தைத் தங்கள் கைகளிலேந்திச் செல்கிறவர்களும், இறைவனைக் கோபமூட்டுகிறவர்களும் பாதுகாப்பாயிருக்கிறார்கள்.
7 Ale zapytaj zwierząt, a one cię pouczą, i ptaków nieba, a powiedzą tobie.
“ஆனால் மிருகங்களைக் கேளுங்கள்; அவை உங்களுக்குப் போதிக்கும், ஆகாயத்துப் பறவைகளைக் கேளுங்கள்; அவை உங்களுக்குச் சொல்லித் தரும்.
8 Albo rozmawiaj z ziemią, a ona cię nauczy, i opowiedzą ci ryby morskie.
பூமியுடன் பேசுங்கள், அது உங்களுக்குப் போதிக்கும். அல்லது கடல் மீன்களே உங்களுக்கு அறிவிக்கட்டும்.
9 Któż spośród nich wszystkich nie wie, że ręka PANA to wykonała?
யெகோவாவின் கரமே இதைச் செய்தது என்பதை இவற்றுள் எது அறியாதிருக்கிறது?
10 W jego ręku jest dusza wszelkiej istoty żywej i duch wszelkiego człowieka.
ஒவ்வொரு உயிரினங்களின் உயிரும், எல்லா மனிதரின் சுவாசமும் அவரின் கையிலேயே இருக்கின்றன.
11 Czy ucho nie bada mowy, a podniebienie nie smakuje pokarmu?
நாவு உணவை ருசிப்பதுபோல, காது சொற்களைச் சோதிக்கிறது அல்லவோ?
12 U starców jest mądrość, a w długości dni roztropność.
முதியோரிடத்தில் ஞானம் இருக்கும். வயது சென்றவர்களிடத்தில் புத்தியும் இருக்குமே.
13 [Ale] u niego jest mądrość i siła, u niego rada i roztropność.
“ஞானமும் வல்லமையும் இறைவனுக்கு உரியன; ஆலோசனையும், விளங்கும் ஆற்றலும் அவருடையனவே.
14 Oto on burzy, [a] nikt nie może odbudować, zamyka człowieka, a nikt nie może otworzyć.
அவர் இடித்தால் கட்டமுடியாது; அவர் சிறைப்படுத்தும் மனிதனை விடுவிக்கவும் முடியாது.
15 Oto gdy zatrzyma wody, wysychają, gdy je wypuści, wywracają ziemię.
தண்ணீரை அவர் தடுத்தால், அங்கு வறட்சி உண்டாகிறது; அவர் தண்ணீரைத் திறந்துவிடும்போது அது நாட்டை அழிக்கிறது.
16 U niego jest moc i mądrość. Do niego należy zwiedziony i zwodziciel.
பெலமும் வெற்றியும் அவருக்குரியன; ஏமாற்றுகிறவனும், ஏமாறுகிறவனுமான இருவருமே அவருடையவர்கள்.
17 Pozbawia radców [mądrości] i sędziów czyni głupcami.
அவர் ஆலோசகர்களின் ஞானத்தை அகற்றி அனுப்பி விடுகிறார்; நீதிபதிகளையும் மூடராக்குகிறார்.
18 Rozwiązuje więzy królów i przepasuje ich biodra pasem.
அரசர்களுடைய கட்டுகளை அவர் அவிழ்த்து, அவர்கள் இடுப்புகளில் துணியைக் கட்டுகிறார்.
19 Odprowadza złupionych książąt i wywraca mocarzy.
அவர் ஆசாரியர்களை நீக்கி, நீண்டகால அதிகாரிகளைக் கவிழ்க்கிறார்.
20 Odbiera mowę prawdomównym i zabiera starcom rozsądek.
அவர் நம்பிக்கைக்குரிய ஆலோசகர்களின் உதடுகளை மவுனமாக்குகிறார்; முதியோரின் நிதானத்தையும் எடுத்துப் போடுகிறார்.
21 Wylewa pogardę na książąt i osłabia siły mocarzy.
அவர் உயர்குடி மக்கள்மேல் இகழ்ச்சியை ஊற்றி பலவானைப் பலமிழக்கச் செய்கிறார்.
22 [On] odsłania głębokie rzeczy z ciemności i wyprowadza na światło cień śmierci.
அவர் இருளின் ஆழ்ந்த செயல்களை வெளிப்படுத்துகிறார்; இருளின் ஆழத்தை வெளிச்சத்திற்குக் கொண்டுவருகிறார்.
23 Rozmnaża narody i wytraca je, rozszerza narody i pomniejsza je.
அவர் மக்களைப் பெரிதாக்கி, அவர்களை அழிக்கிறார்; மக்களை விரிவாக்கி அவர்களைச் சிதறப்பண்ணுகிறார்.
24 On zabiera serca przełożonym ludu ziemi i sprawia, że błądzą po pustyni bezdrożnej;
பூமியின் தலைவர்களின் சிந்திக்கும் ஆற்றலை இழக்கப்பண்ணுகிறார்; பாதையில்லாத பாழிடங்களில் அவர்களை அலையப்பண்ணுகிறார்.
25 I chodzą po omacku w ciemności bez światła, i sprawia, że zataczają się jak pijani.
அவர்கள் வெளிச்சமில்லாமல் இருளில் தடவித் திரிகிறார்கள்; வெறியரைப்போல் அவர்களைத் தள்ளாட வைக்கிறார்.