< Izajasza 38 >
1 W tych dniach Ezechiasz śmiertelnie zachorował. Przyszedł do niego prorok Izajasz, syn Amosa, i powiedział do niego: Tak mówi PAN: Uporządkuj swój dom, bo umrzesz i nie będziesz żył.
௧அந்நாட்களில் எசேக்கியா வியாதிப்பட்டு மரணத்தருவாயிலிருந்தான்; அப்பொழுது ஆமோத்சின் மகனாகிய ஏசாயா என்னும் தீர்க்கதரிசி அவனிடத்தில் வந்து, அவனை நோக்கி: நீர் உமது வீட்டுக்காரியத்தை ஒழுங்குபடுத்தும், நீர் பிழைக்கமாட்டீர், மரணமடைவீர் என்று யெகோவா சொல்கிறார் என்றான்.
2 Wtedy Ezechiasz odwrócił swoją twarz do ściany i modlił się do PANA;
௨அப்பொழுது எசேக்கியா தன் முகத்தைச் சுவர்ப்புறமாகத் திருப்பிக்கொண்டு, யெகோவாவை நோக்கி:
3 I powiedział: O PANIE, proszę cię, wspomnij teraz, że postępowałem wobec ciebie w prawdzie i z doskonałym sercem, czyniąc to, co dobre w twoich oczach. I Ezechiasz płakał bardzo rzewnie.
௩ஆ யெகோவாவே, நான் உமக்கு முன்பாக உண்மையும் மன உத்தமமுமாக நடந்து, உமது பார்வைக்கு நலமானதைச் செய்தேன் என்பதை நினைத்தருளும் என்று விண்ணப்பம்செய்து, எசேக்கியா மிகவும் அழுதான்.
4 Wtedy doszło do Izajasza słowo PANA:
௪அப்பொழுது ஏசாயாவுக்கு உண்டான யெகோவாவுடைய வார்த்தையாவது:
5 Idź i powiedz Ezechiaszowi: Tak mówi PAN, Bóg Dawida, twego ojca: Wysłuchałem twojej modlitwy, widziałem twoje łzy. Oto dodam do twoich dni piętnaście lat;
௫நீ போய் எசேக்கியாவை நோக்கி: உன் தகப்பனாகிய தாவீதின் தேவனாயிருக்கிற யெகோவா சொல்கிறது என்னவென்றால், உன் விண்ணப்பத்தைக் கேட்டேன்; உன் கண்ணீரைக் கண்டேன்; இதோ, உன் நாட்களுடன் பதினைந்து வருடங்கள் கூட்டுவேன்.
6 Wybawię cię i to miasto z ręki króla Asyrii i będę bronić tego miasta.
௬நான் உன்னையும் இந்த நகரத்தையும் அசீரியா ராஜாவின் கைக்குத் தப்புவித்து, இந்த நகரத்திற்கு ஆதரவாயிருப்பேன்.
7 A taki będzie znak dla ciebie od PANA, że PAN uczyni to, o czym mówił:
௭இதோ, ஆகாசுடைய சூரியக்கடிகாரத்தில் பாகைக்குப் பாகை இறங்கின சாயையைப் பத்துப்பாகை பின்னிட்டுத் திருப்புவேன் என்றார்.
8 Oto cofnę cień o dziesięć stopni w stopniach, po których przesunął się na zegarze słonecznym Achaza. I cofnęło się słońce o dziesięć stopni w tych stopniach, po których przesunęło się.
௮தாம் சொன்ன இந்த வார்த்தையின்படி யெகோவா செய்வார் என்பதற்கு இது கர்த்தரால் உனக்கு அடையாளமாயிருக்கும் என்று சொல் என்றார்; அப்படியே கடிகாரத்தில் இறங்கியிருந்த சூரியசாயை பத்துக்கோடுகள் திரும்பிற்று.
9 (Oto pismo Ezechiasza, króla Judy, gdy zachorował i wyzdrowiał:
௯யூதாவின் ராஜாவாகிய எசேக்கியா வியாதிப்பட்டு, தன் வியாதி நீங்கி சுகமாமானபோது எழுதிவைத்ததாவது:
10 Mówiłem, gdy skrócono moje dni: Zejdę do bram grobu, zostanę pozbawiony reszty swoich lat. (Sheol )
௧0நான் என் பூரண ஆயுளின் வருடங்களுக்குச் சேராமல் பாதாளத்தின் வாசல்களுக்குட்படுவேன் என்று என் நாட்கள் அறுப்புண்கிறபோது சொன்னேன். (Sheol )
11 Powiedziałem: Nie ujrzę PANA, PANA w ziemi żyjących. Już nie zobaczę człowieka pośród mieszkańców świata.
௧௧யெகோவாவை, நான் இனி உயிரோடிருக்கிறவர்களின் தேசத்திலே தரிசிப்பதில்லை; இனி பூலோகக்குடிகளுடன் இருந்து மனிதர்களை நான் காண்பதில்லை.
12 Moje życie przeminęło i przenoszone jest ode mnie jak namiot pasterski. Odciąłem swoje życie jak tkacz, on mnie odetnie od krosien. Dziś, zanim noc nadejdzie, zakończysz mnie.
௧௨என் ஆயுள் மேய்ப்பனுடைய கூடாரத்தைப்போல என்னைவிட்டுப் பெயர்ந்து போகிறது; நெய்கிறவன் பாவை அறுக்கிறதுபோல என் ஜீவனை அறுக்கக் கொடுக்கிறேன்; என்னைப் பாவிலிருந்து அறுத்துவிடுகிறார்; இன்று இரவுக்குள்ளே என்னை முடிவடையச்செய்வீர்.
13 Rozmyślałem sobie o poranku, że jak lew on zmiażdży wszystkie moje kości. Dziś, zanim noc nadejdzie, wykończysz mnie.
௧௩விடியற்காலம்வரை நான் சிந்தித்துக்கொண்டிருந்தேன்; அவர் சிங்கத்தைப்போல என் எலும்புகளையெல்லாம் நொறுக்குவார்; இன்று இரவுக்குள்ளே என்னை முடிவடையச்செய்வீர் என்று சொல்லி,
14 Jak żuraw i jaskółka kwiliłem, gruchałem jak gołąb. Moje oczy słabną, patrzą w górę. PANIE, cierpię w udręce, przedłuż mi życie.
௧௪நாரையைப்போலவும், தகைவிலான் குருவியைப்போலவும் கூவினேன், புறாவைப்போல் புலம்பினேன்; என் கண்கள் உயரப் பார்க்கிறதினால் பூத்துப்போயின; யெகோவாவே, ஒடுங்கிப்போகிறேன்; என் காரியத்தை பொறுப்பெடுத்துக்கொள்ளும் என்றேன்.
15 Cóż powiem? On przemówił do mnie i sam to uczynił. Będę kroczyć przez wszystkie swoje lata z goryczą w swojej duszy.
௧௫நான் என்ன சொல்வேன்? அவர் எனக்கு வாக்கு அருளினார்; அந்தப் பிரகாரமே செய்தார்; என் ஆயுளின் வருடங்களிலெல்லாம் என் ஆத்துமாவின் கசப்பை நினைத்து நடந்துகொள்வேன்.
16 Panie, przez te rzeczy [ludzie] żyją i w nich wszystkich jest życie mego ducha. Przecież przywróciłeś mi zdrowie i zachowałeś mnie przy życiu.
௧௬ஆண்டவரே, இவைகளினால் மனிதர்கள் பிழைக்கிறார்கள்; இவைகளெல்லாம் என் உயிர்க்கு உயிராயிருக்கிறது; என்னை சுகமடையவும் பிழைக்கவும்செய்தீர்.
17 Oto w czasie pokoju zaznałem ciężkiej goryczy, ale z miłości do mojej duszy wyrwałeś ją z dołu zniszczenia, gdyż rzuciłeś za siebie wszystkie moje grzechy.
௧௭இதோ, சமாதானத்திற்குப் பதிலாக மகா கசப்பு வந்திருந்தது, தேவரீரோ என் ஆத்துமாவை நேசித்து அழிவின் குழிக்கு விலக்கினீர்; என் பாவங்களையெல்லாம் உமது முதுகுக்குப் பின்னாக எறிந்துவிட்டீர்.
18 Grób bowiem nie wysławia cię ani śmierć cię nie chwali. Ci, którzy w dół zstępują, nie oczekują twojej prawdy. (Sheol )
௧௮பாதாளம் உம்மைத் துதிக்காது, மரணம் உம்மைப் போற்றாது; குழியில் இறங்குகிறவர்கள் உம்முடைய சத்தியத்தை தியானிப்பதில்லை. (Sheol )
19 Żywy, żywy będzie cię wysławiać jak ja dzisiaj. Ojciec oznajmi dzieciom twoją prawdę.
௧௯நான் இன்று செய்கிறதுபோல, உயிரோடிருக்கிறவன், உயிரோடிருக்கிறவனே, உம்மைத் துதிப்பான், தகப்பன் பிள்ளைகளுக்கு உமது சத்தியத்தைத் தெரிவிப்பான்.
20 PAN [zechciał] mnie wybawić. Dlatego będziemy śpiewać moje pieśni [przy dźwiękach strun] po wszystkie dni naszego życia w domu PANA).
௨0யெகோவா என்னை காப்பாற்ற வந்தார்; ஆகையால் எங்கள் உயிருள்ள நாட்களெல்லாம் யெகோவாவுடைய ஆலயத்திலே என் கீதவாத்தியங்களை வாசித்துப் பாடுவோம் என்று எழுதிவைத்தான்.
21 Izajasz bowiem powiedział: Niech wezmą bryłę suchych fig i przyłożą na wrzód, a będzie uzdrowiony.
௨௧அத்திப்பழத்து அடையைக் கொண்டுவந்து, புண்ணின்மேல் பற்றுப்போடுங்கள்; அப்பொழுது பிழைப்பார் என்று ஏசாயா சொல்லியிருந்தான்.
22 Ezechiasz zaś powiedział: Jaki jest znak, że wejdę do domu PANA?
௨௨அப்பொழுது எசேக்கியா: நான் யெகோவாவுடைய ஆலயத்திற்குப் போவதற்கு அடையாளம் என்னவென்று கேட்டிருந்தான்.