< Ozeasza 13 >
1 Gdy Efraim przemawiał, [panował] strach, bo był wywyższony w Izraelu; ale gdy zgrzeszył przy Baalu, wtedy umarł.
௧எப்பிராயீம் பேசினபோது நடுக்கமுண்டாயிற்று; அவன் இஸ்ரவேலிலே மேன்மைபெற்றான்; அவன் பாகாலின் விஷயத்தில் குற்றம் செய்து இறந்துபோனான்.
2 A teraz dodają do swego grzechu, bo czynią sobie odlane posągi ze swego srebra i straszne bożki według swego pomysłu, a to wszystko jest dziełem rzemieślnika; [jednak] sami o nich mówią: Ludzie, którzy składają ofiary, niech całują cielce.
௨இப்போதும் அவர்கள் அதிகமதிகமாகப் பாவம் செய்து, தங்கள் வெள்ளியினால் செய்த சிலைகளையும், தங்கள் அறிவுக்கேற்ப உருவங்களையும் தங்களுக்கு செய்துகொள்கிறார்கள்; இவைகளெல்லாம் தட்டாருடைய வேலை; மனிதர்களில் பலியிடுகிறவர்கள் கன்றுக்குட்டிகளை முத்தமிடலாமென்று இவைகளைக்குறித்துச் சொல்கிறார்கள்.
3 Dlatego staną się jak obłok poranny, jak przemijająca rosa poranna, jak plewy przez wicher porwane z klepiska i jak dym z komina.
௩ஆகையால் அவர்கள் காலையில் காணும் மேகத்தைப்போலவும், விடியற்காலையில் ஒழிந்துபோகிற பனியைப்போலவும், பெருங்காற்று களத்திலிருந்து பறக்கடிக்கிற பதரைப்போலவும், புகைக்கூண்டில் ஏறிப்போகிற புகையைப்போலவும் இருப்பார்கள்.
4 Ale ja jestem PAN, twój Bóg, [od wyjścia] z ziemi Egiptu, a nie będziesz znał [innego] Boga oprócz mnie. I nie ma [innego] zbawiciela oprócz mnie.
௪நான் உன்னை எகிப்து தேசத்திலிருந்து அழைத்துவந்ததுமுதல் உன் தேவனாகிய கர்த்தராயிருக்கிறேன்; ஆகையால் நீ என்னையன்றி வேறே தேவனை அறியவேண்டாம்; என்னையன்றி இரட்சகர் ஒருவரும் இல்லை.
5 Ja cię poznałem na pustyni, w ziemi bardzo suchej.
௫நான் உன்னை மகா வறட்சியான தேசமாகிய வனாந்திரத்திலே அறிந்துகொண்டேன்.
6 Byli nasyceni dobrymi pastwiskami, ale gdy się nasycili, ich serce się wywyższyło; dlatego zapomnieli o mnie.
௬தங்களுக்கு இருந்த மேய்ச்சலினால் திருப்தியானார்கள்; திருப்தியானபின்பு அவர்களுடைய இருதயம் மேட்டிமையானது; அதினால் என்னை மறந்தார்கள்.
7 Będę więc dla nich jak lew, jak lampart przy drodze [będę] czyhał.
௭ஆகையால் நான் அவர்களுக்குச் சிங்கத்தைப்போல் இருப்பேன்; சிவிங்கியைப்போல் வழியருகே பதுங்கியிருப்பேன்.
8 Napadnę na nich jak niedźwiedzica, której zabrano młode, rozerwę powłokę ich serca i pożrę ich tam jak lew, dziki zwierz ich rozszarpie.
௮குட்டிகளைப் பறிகொடுத்த கரடியைப்போல நான் அவர்களை எதிர்த்து, அவர்கள் ஈரலைக் கிழித்து, அவர்களை அங்கே சிங்கம் கொன்றுபோடுகிறதுபோல் கொன்றுபோடுவேன்; காட்டுமிருகங்கள் அவர்களைப் பீறிப்போடும்.
9 Zniszczyłeś się sam, Izraelu, ale we mnie jest twoja pomoc.
௯இஸ்ரவேலே, நீ உனக்குக் கேடு உண்டாக்கிக்கொண்டாய்; ஆனால் யார் உனக்குச் சகாயம் செய்வார்?
10 Ja jestem twoim królem. Gdzież jest ten, który ma cię wybawić we wszystkich twoich miastach? I twoi sędziowie, o których mówiłeś: Daj mi króla i książąt.
௧0எனக்கு ராஜாவையும் அதிபதிகளையும் ஏற்படுத்தவேண்டும் என்றாயே; இப்போதும் உன்னுடைய எல்லாப் பட்டணங்களிலும் உன்னை விரும்பும் ராஜா எங்கே? உன் நியாயாதிபதிகள் எங்கே?
11 Dałem ci [więc] króla w swoim gniewie i odebrałem [go] w swojej zapalczywości.
௧௧நான் கோபத்திலே உனக்கு ராஜாவைக் கொடுத்தேன்; என் உக்கிரத்திலே அவனை எடுத்துக்கொண்டேன்.
12 Nieprawość Efraima [jest] związana, jego grzech jest ukryty.
௧௨எப்பிராயீமின் அக்கிரமம் கட்டிவைத்திருக்கிறது; அவன் பாவம் பத்திரப்படுத்தப்பட்டிருக்கிறது.
13 Ogarną go bóle rodzącej. On jest niemądrym synem, bo inaczej nie zostałby tak długo w łonie matki.
௧௩பிரசவிக்கும் பெண்ணின் வேதனை அவனுக்கு வரும்; அவன் விவேகமில்லாத பிள்ளை; பிரசவநேரம் வரை அவன் நிற்கவில்லை.
14 Wybawię ich z mocy grobu, wykupię ich od śmierci. O śmierci, będę twoją śmiercią! O grobie, będę twoim zniszczeniem! Żal się ukryje przed moimi oczami. (Sheol )
௧௪அவர்களை நான் பாதாளத்தின் வல்லமைக்கு நீங்கலாக்கி மீட்பேன்; அவர்களை மரணத்திற்கு நீங்கலாக்கி விடுவிப்பேன்; மரணமே, உன் வாதைகள் எங்கே? பாதாளமே, உன் சங்காரம் எங்கே? மனமாறுதல் என் கண்களுக்கு மறைவானதாக இருக்கும். (Sheol )
15 Choćby on wśród braci przyniósł owoc, przyjdzie [jednak] wiatr ze wschodu, wiatr PANA wyruszy z pustyni i wysuszy jego źródło, i wysuszy jego zdrój. On zagarnie skarby wszelkich kosztownych naczyń.
௧௫இவன் சகோதரர்களுக்குள்ளே மக்கள் பெருத்தவனாயிருந்தாலும், யெகோவாவுடைய காற்றாகிய கீழ்க்காற்று வனாந்தரத்திலிருந்து எழும்பிவரும்; அதனால் அவனுடைய ஊற்றுகள் வற்றிப்போகும்; அவனுடைய கிணறு சுரக்காமல் வற்றிப்போகும்; அது விரும்பப்படத்தக்க சகல பொருட்களுள்ள விலையுயர்ந்த பொருட்களையும் கொள்ளையடித்துக்கொண்டுபோகும்.
16 Samaria będzie spustoszona, ponieważ sprzeciwiła się swemu Bogu. Padną od miecza, jej niemowlęta będą roztrzaskane, a jej brzemienne będą rozprute.
௧௬சமாரியா தன் தேவனுக்கு விரோதமாகக் கலகம்செய்தபடியால், குற்றம் சுமத்தப்பட்டதாயிருக்கும்; அவர்கள் பட்டயத்தால் விழுவார்கள்; அவர்களுடைய குழந்தைகள் மோதியடிக்கப்படும்; அவர்களுடைய கர்ப்பவதிகளின் வயிறுகள் கிழிக்கப்படும்.