< Rodzaju 33 >
1 Potem Jakub podniósł oczy i zobaczył, że Ezaw nadchodzi, a z nim czterystu mężczyzn. Podzielił więc dzieci między Leę, Rachelę a dwie służące.
௧யாக்கோபு தன் கண்களை ஏறெடுத்து, இதோ, ஏசாவும் அவனோடுகூட நானூறு மனிதர்களும் வருகிறதைக் கண்டு, பிள்ளைகளை லேயாளிடத்திலும் ராகேலிடத்திலும் இரண்டு மறுமனையாட்டிகளிடத்திலும் தனிக்குழுக்களாகப் பிரித்துவைத்து,
2 I postawił na przodzie służące i ich dzieci, za nimi Leę i jej dzieci, a na końcu Rachelę z Józefem.
௨மறுமனையாட்டிகளையும் அவர்களுடைய பிள்ளைகளையும் முதலிலும், லேயாளையும் அவளுடைய பிள்ளைகளையும் மத்தியிலும், ராகேலையும் யோசேப்பையும் கடைசியிலும் நிறுத்தி:
3 Sam zaś wyszedł przed nich i pokłonił się siedem razy aż do ziemi, zanim doszedł do swego brata.
௩தான் அவர்களுக்கு முன்பாக நடந்து போய், ஏழுமுறை தரைவரைக்கும் குனிந்து வணங்கி, தன் சகோதரன் அருகில் போனான்.
4 Ale Ezaw wybiegł mu naprzeciw, objął go, rzucił mu się na szyję i całował go. I płakali.
௪அப்பொழுது ஏசா எதிர்கொண்டு ஓடிவந்து, அவனைத் தழுவி, அவனுடைய கழுத்தைக் கட்டிக்கொண்டு முத்தம்செய்தான்; இருவரும் அழுதார்கள்.
5 Potem podniósł oczy, zobaczył żony i dzieci i zapytał: [A] kim [są] ci przy tobie? I odpowiedział: [To są] dzieci, które Bóg w swej łaskawości dał twemu słudze.
௫அவன் தன் கண்களை ஏறெடுத்து, பெண்களையும் பிள்ளைகளையும் கண்டு: “உன்னோடிருக்கிற இவர்கள் யார்?” என்றான். அதற்கு அவன்: “தேவன் உமது அடியானுக்கு அருளின பிள்ளைகள்” என்றான்.
6 Wtedy przybliżyły się służące ze swoimi dziećmi i pokłoniły się.
௬அப்பொழுது மறுமனையாட்டிகளும் அவர்களுடைய பிள்ளைகளும் சேர்ந்துவந்து வணங்கினார்கள்.
7 Przybliżyła się też Lea ze swoimi dziećmi i pokłoniły się. Potem przybliżyli się Józef i Rachela i pokłonili się.
௭லேயாளும் அவளுடைய பிள்ளைகளும் சேர்ந்துவந்து வணங்கினார்கள்; பின்பு யோசேப்பும் ராகேலும் சேர்ந்துவந்து வணங்கினார்கள்.
8 I [Ezaw] zapytał: Co znaczy cały ten obóz, z którym się spotkałem? [Jakub] odpowiedział: Abym znalazł łaskę w oczach mego pana.
௮அப்பொழுது ஏசா: “எனக்கு எதிர்கொண்டுவந்த அந்த மந்தையெல்லாம் எதற்கு என்றான். அதற்கு யாக்கோபு: “என் ஆண்டவனுடைய கண்களில் எனக்கு தயவு கிடைப்பதற்காக” என்றான்.
9 Wtedy Ezaw powiedział: Ja mam dosyć, mój bracie, zatrzymaj to, co twoje.
௯அதற்கு ஏசா: “என் சகோதரனே, எனக்குப் போதுமானது இருக்கிறது; உன்னுடையதை நீயே வைத்துக்கொள்” என்றான்.
10 I Jakub powiedział: Nie, proszę, jeśli znalazłem teraz łaskę w twoich oczach, przyjmij dar z mojej ręki, bo gdy zobaczyłem twoje oblicze, to jakbym widział oblicze Boga, i ty łaskawie mnie przyjąłeś.
௧0அதற்கு யாக்கோபு: “அப்படி அல்ல, உம்முடைய கண்களில் எனக்குத் தயவு கிடைத்ததேயானால், என் வெகுமதியை ஏற்றுக்கொள்ளும்; நீர் என்மேல் பிரியமானீர், நான் உம்முடைய முகத்தைக் கண்டது தேவனுடைய முகத்தைக் கண்டதுபோல இருக்கிறது.
11 Przyjmij, proszę, mój dar, który ci przyniosłem, bo Bóg hojnie mi błogosławił, a mam dość wszystkiego. I tak nalegał na niego, że to przyjął.
௧௧தேவன் எனக்கு அநுக்கிரகம் செய்திருக்கிறார்; வேண்டியதெல்லாம் எனக்கு உண்டு; ஆகையால் உமக்குக் கொண்டுவரப்பட்ட என் காணிக்கையை ஏற்றுக்கொள்ளும்” என்று சொல்லி, அவனை வருந்திக் கேட்டுக்கொண்டான்; அப்பொழுது அவன் அதை ஏற்றுக்கொண்டான்.
12 [Ezaw] powiedział: Ruszajmy w drogę i chodźmy, a ja pójdę przed tobą.
௧௨பின்பு ஏசா: “நாம் புறப்பட்டுப்போவோம் வா, நான் உனக்கு முன்னே நடப்பேன்” என்றான்.
13 I [Jakub] mu odpowiedział: Mój pan wie, że mam ze sobą dzieci wątłe, a owce i krowy karmią młode. Jeśli popędzi się je przez cały dzień, zginie całe stado.
௧௩அதற்கு யாக்கோபு: “பிள்ளைகள் இளவயதுள்ளவர்கள் என்றும், பால்கொடுக்கும் ஆடுமாடுகள் என்னிடத்தில் இருக்கிறது என்றும் என் ஆண்டவனுக்குத் தெரியும்; அவைகளை ஒரு நாளாவது வேகமாக ஓட்டினால், மந்தையெல்லாம் இறந்துபோகும்.
14 Niech mój pan, proszę, idzie przed swoim sługą, a ja będę szedł powoli, jak nadąży stado, które jest przede mną, i jak nadążą dzieci, aż przyjdę do mego pana do Seiru.
௧௪என் ஆண்டவனாகிய நீர் உமது அடியானுக்கு முன்னே போம்; நான் சேயீருக்கு என் ஆண்டவனிடத்திற்கு வரும்வரைக்கும், எனக்குமுன் நடக்கிற மந்தைகளின் நடைக்கும் பிள்ளைகளின் நடைக்கும் ஏற்றபடி, மெதுவாக அவைகளை நடத்திக்கொண்டு வருகிறேன்” என்றான்.
15 Wtedy Ezaw powiedział: Zostawię więc przy tobie [część] ludzi, którzy są ze mną. A on odpowiedział: A na cóż to? Obym znalazł łaskę w oczach mego pana.
௧௫அப்பொழுது ஏசா: “என்னிடத்திலிருக்கிற மனிதர்களில் சிலரை நான் உன்னிடத்தில் நிறுத்திவிட்டுப் போகட்டுமா என்றான். அதற்கு அவன்: “அது எதற்கு, என் ஆண்டவனுடைய கண்களில் எனக்கு தயவுகிடைத்தால் மாத்திரம் போதும்” என்றான்.
16 I tego dnia Ezaw wrócił swą drogą do Seiru.
௧௬அன்றைத்தினம் ஏசா திரும்பித் தான் வந்த வழியே சேயீருக்குப்போனான்.
17 A Jakub wyruszył do Sukkot i zbudował sobie dom, i zrobił szałasy dla swoich stad. Dlatego nazwał to miejsce Sukkot.
௧௭யாக்கோபு சுக்கோத்திற்குப் பயணம்செய்து, தனக்கு ஒரு வீடு கட்டி, தன் மிருகஜீவன்களுக்குக் கூடாரங்களைப் போட்டான்; அதனால் அந்த இடத்திற்கு சுக்கோத் என்று பெயரிட்டான்.
18 I Jakub przyszedł szczęśliwie do miasta Sychem, które było w ziemi Kanaan, gdy wrócił z Paddan-Aram, i rozbił obóz przed miastem.
௧௮யாக்கோபு பதான் அராமிலிருந்து வந்தபின் கானான்தேசத்திலிருக்கிற சாலேம் என்னும் சீகேமுடைய பட்டணத்திற்கு அருகே சென்று கூடாரம்போட்டான்.
19 I za sto monet kupił od synów Hemora, ojca Sychema, część pola, na którym rozbił swój namiot.
௧௯தான் கூடாரம்போட்ட நிலத்தைச் சீகேமின் தகப்பனாகிய ஏமோரின் மகன்களிடம் 100 வெள்ளிக்காசுக்கு வாங்கி,
20 Tam też postawił ołtarz i nazwał go: Mocny Bóg Izraela.
௨0அங்கே ஒரு பலிபீடத்தைக் கட்டி, அதற்கு ஏல்எல்லோகே இஸ்ரவேல் என்று பெயரிட்டான்.