< Ezechiela 30 >

1 I doszło do mnie słowo PANA mówiące:
யெகோவாவுடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:
2 Synu człowieczy, prorokuj i mów: Tak mówi Pan BÓG: Zawódźcie, [mówiąc]: Ach, jakiż to dzień!
மனிதகுமாரனே, நீ தீர்க்கதரிசனம் சொல்லு: யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால், ஐயோ, ஆபத்துநாள் வருகிறதென்று அலறுங்கள்.
3 Bliski bowiem jest dzień, bliski jest dzień PANA; będzie to dzień pochmurny i czas pogan.
நாள் அருகில் இருக்கிறது; ஆம், யெகோவாவுடைய நாள் அருகில் இருக்கிறது; அது மந்தாரமான நாள், அது அந்நியஜாதிகளுக்கு வரும் காலம்.
4 I spadnie miecz na Egipt, i będzie wielka trwoga w Etiopii, gdy polegną zabici w Egipcie, gdy zabiorą jego dostatek i jego fundamenty będą zburzone.
வாள் எகிப்திலே வரும்; எகிப்திலே கொலை செய்யப்படுகிறவர்கள் விழும்போது எத்தியோப்பியாவிலே மகாவேதனை உண்டாயிருக்கும்; அதின் ஏராளமான மக்களைப் பிடித்துக்கொண்டுபோவார்கள்; அதின் அஸ்திபாரங்கள் பாழாக்கப்படும்.
5 Etiopia, Put i Lud, cała różnorodna ludność, Kub i mieszkańcy sprzymierzonej ziemi padną [razem] z nimi od miecza.
எத்தியோப்பியர்களும், பூத்தியர்களும், லூதியர்களும், கலந்த கூட்டமாகிய அனைவரும், லிபியர்களும், உடன்படிக்கைக்குள்ளான தேசத்தின் மக்களும் அவர்களுடன் கூட வாளால் விழுவார்கள்.
6 Tak mówi PAN: Upadną ci, którzy wspierają Egipt, i runie pycha jego mocy. Od wieży Sewene padną w niej od miecza, mówi Pan BÓG.
எகிப்தை ஆதரிக்கிறவர்களும் விழுவார்கள்; அதினுடைய பலத்தின் முக்கியமும் தாழ்ந்துபோகும் என்று யெகோவா சொல்லுகிறார்; அதிலே மிக்தோல் முதல் செவெனேவரைக்கும் வாளினால் விழுவார்களென்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
7 I będą spustoszeni wśród spustoszonych ziem, a ich miasta znajdą się wśród zburzonych miast.
பாழாய்ப்போன தேசங்களின் நடுவிலே பாழாய்ப்போவார்கள்; அழிக்கப்பட்ட பட்டணங்களில் அவர்கள் பட்டணங்களும் அழிக்கப்படும்.
8 I poznają, że ja jestem PANEM, gdy rozpalę ogień w Egipcie, i wszyscy jego pomocnicy zostaną skruszeni.
நான் எகிப்திலே தீக்கொளுத்தும்போதும், உனக்குத் துணைநின்ற யாவரும் முறிக்கப்படும்போதும், நான் யெகோவா என்று அறிந்துகொள்வார்கள்.
9 W tym dniu posłańcy wyruszą ode mnie w okrętach na postrach spokojnej ziemi Etiopii; i ogarnie ich wielka trwoga, jaka była w dniu [porażki] Egiptu. Oto bowiem nadchodzi.
இருமாப்புள்ள எத்தியோப்பியரைத் தத்தளிக்கச்செய்து அந்த நாளிலே என்னுடைய கட்டளையினால் தூதுவர்கள் கப்பல்களிலே போவார்கள்; அப்பொழுது எகிப்தின் நாளிலே உண்டானதுபோல அவர்களுக்குள்ளே மகா வேதனை உண்டாயிருக்கும்; இதோ, அது வருகிறது.
10 Tak mówi Pan BÓG: Położę kres mnóstwu Egiptu przez rękę Nabuchodonozora, króla Babilonu.
௧0யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரைக் கொண்டு எகிப்தின் சந்ததியை ஒழியச்செய்வேன்.
11 On i z nim jego lud, najsrożsi z narodów, będą sprowadzeni, aby zniszczyć tę ziemię. Dobędą swe miecze przeciw Egiptowi i napełnią ziemię pobitymi.
௧௧இவனும் இவனோடு கூடத் தேசங்களில் மகா பலசாலிகளான இவனுடைய மக்களும் தேசத்தை அழிப்பதற்காக தூண்டப்பட்டு வந்து, தங்களுடைய வாள்களை எகிப்திற்கு விரோதமாக உருவி, கொலை செய்யப்பட்டு இறந்தவர்களாலே தேசத்தை நிரப்புவார்கள்.
12 Wysuszę rzeki i sprzedam ziemię w ręce niegodziwych. Ręką cudzoziemców spustoszę ziemię wraz ze wszystkim, co ją napełnia. Ja, PAN, [to] powiedziałem.
௧௨அப்பொழுது நான் நதிகளை வற்றிப்போகச்செய்து, தேசத்தைப் பொல்லாதவர்களின் கையிலே விற்று, தேசத்தையும் அதிலுள்ள யாவையும் அந்நிய தேசத்தாரின் கையால் பாழாக்கிப்போடுவேன்; யெகோவாகிய நான் இதைச் சொன்னேன்.
13 Tak mówi Pan BÓG: Zniszczę bożki i usunę posągi z Nof, i nie będzie już księcia w ziemi Egiptu. Ześlę strach na ziemię Egiptu.
௧௩யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: நான் அசுத்தமான சிலைகளை அழித்து, நோப்பின் சிலைகளை ஒழியச்செய்வேன்; இனி எகிப்துதேசத்தில் ஒரு அதிபதியும் இருக்கமாட்டான்; நான் எகிப்துதேசத்தில் பயமுண்டாக்கி,
14 Spustoszę Patros, rozniecę ogień w Soan i wykonam sąd w No.
௧௪பத்ரோசைப் பாழாக்கி, சோவானிலே தீக்கொளுத்தி, நோ பட்டணத்தைத் தண்டித்து,
15 Wyleję swoją zapalczywość na Sin, twierdzę Egiptu, i wytracę tłumy z No.
௧௫எகிப்தின் பெலனாகிய சீனின்மேல் என்னுடைய கடுங்கோபத்தை ஊற்றி, நோ பட்டணத்தின் ஏராளமான மக்களை வெட்டிப்போடுவேன்.
16 Rozniecę ogień w Egipcie, Sin będzie cierpieć z bólu, No zostanie zniszczone i Nof będzie codziennie dręczone.
௧௬எகிப்தில் தீக்கொளுத்துவேன்; சீன் மகா வேதனை அடையும்; நோ பட்டணம் தகர்ந்து இடிந்துபோகும்; நோப்புக்கு அனுதினமும் நெருக்கங்கள் உண்டாகும்.
17 Młodzieńcy z Awen i Pibeset polegną od miecza, te [miasta] pójdą do niewoli.
௧௭ஆவென், பிபேசெத் என்கிற பட்டணங்களின் வேலைக்காரர்கள் வாளால் விழுவார்கள்; அவைகளின் குடிகள் சிறையிருப்புக்குப் போவார்கள்.
18 W Tachpanches dzień ogarną ciemności, gdy złamię tam jarzma Egiptu, i ustanie w nim pycha jego mocy. Okryje go chmura i jego córki pójdą do niewoli.
௧௮எகிப்தின் நுகங்களை நான் முறிக்கும்போதும், அதினுடைய பெலத்தின் முக்கியம் அதிலே ஓயும்போதும், இருள் அதை மூடும்; தகபானேசிலே பகல் இருண்டுபோகும்; அதின் மகள்கள் சிறைப்பட்டுப்போவார்கள்.
19 Tak wykonam sądy nad Egiptem. I poznają, że ja jestem PANEM.
௧௯இப்படி எகிப்திலே நியாயத்தீர்ப்புகளைச் செய்வேன்; அப்பொழுது நான் யெகோவா என்று அறிந்துகொள்வார்கள் என்கிறார் என்று சொல் என்றார்.
20 W roku jedenastym, w pierwszym miesiącu, siódmego [dnia miesiąca], doszło do mnie słowo PANA mówiące:
௨0பதினோராம் வருடம் முதலாம் மாதம் ஏழாம் நாளிலே, யெகோவாவுடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:
21 Synu człowieczy, złamałem ramię faraona, króla Egiptu, i oto nie będzie ono obwiązane w celu uleczenia ani nie zostanie owinięte bandażami, ani nie będzie związane, by je wzmocnić, aby mogło trzymać miecz.
௨௧மனிதகுமாரனே, எகிப்தின் ராஜாவாகிய பார்வோனுடைய கையை முறித்துப்போடுவேன்; இதோ, அது குணமாவதற்காகக் கட்டப்படுவதில்லை; அது வாளைப் பிடிக்கும் அளவுக்கு பெலன்பெற பத்தை வைத்துக் கட்டப்படுவதுமில்லை.
22 Dlatego tak mówi Pan BÓG: Oto jestem przeciwko faraonowi, królowi Egiptu, skruszę mu ramiona, zarówno to mocne, jak i to złamane, i wytrącę miecz z jego ręki.
௨௨ஆகையால் யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, நான் எகிப்தின் ராஜாவாகிய பார்வோனுக்கு விரோதமாக வந்து, பெலனுள்ளதும் முறிந்ததுமாகிய அவனுடைய புயங்களை முறித்துப்போடுவேன்; வாளை நான் அவன் கையிலிருந்து விழச்செய்து,
23 I rozproszę Egipcjan między narodami, i rozrzucę ich po ziemiach.
௨௩எகிப்தியர்களைத் தேசங்களுக்குள்ளே சிதறடித்து, அவர்களைத் தேசங்களில் தூற்றிவிடுவேன்.
24 Wzmocnię ramiona króla Babilonu i włożę swój miecz w jego ręce, a ramiona faraona złamię i będzie przed nim stękał, jak stęka śmiertelnie zraniony.
௨௪பாபிலோன் ராஜாவின் கைகளைப் பெலப்படுத்தி, அவனுடைய கையிலே என்னுடைய வாளைக் கொடுத்து, பார்வோனின் கைகளை முறித்துவிடுவேன்; அப்பொழுது அவன் கொலை செய்யப்பட்டு தவிக்கிறதுபோல அவனுக்கு முன்பாகத் தவிப்பான்.
25 Wzmocnię – mówię – ramiona króla Babilonu, a ramiona faraona upadną; i poznają, że ja jestem PANEM, gdy włożę swój miecz w ręce króla Babilonu, aby go wyciągnął na ziemię Egiptu.
௨௫பாபிலோன் ராஜாவின் கைகளைப் பெலப்படுத்துவேன்; பார்வோனின் கைகளோ விழுந்துபோகும்; என்னுடைய வாளை நான் பாபிலோன் ராஜாவின் கையில் கொடுக்கும்போதும், அவன் அதை எகிப்து தேசத்தின்மேல் நீட்டும்போதும், நான் யெகோவா என்று அறிந்துகொள்வார்கள்.
26 I rozproszę Egipcjan między narodami, i rozrzucę ich po ziemiach. I poznają, że jestem PANEM.
௨௬நான் எகிப்தியர்களைத் தேசங்களுக்குள்ளே சிதறடித்து, அவர்களைத் தேசங்களில் தூற்றிப்போடுவேன்; அப்பொழுது நான் யெகோவா என்று அறிந்துகொள்வார்கள்.

< Ezechiela 30 >