< Ezechiela 19 >
1 A ty podnieś lament nad książętami Izraela;
௧நீ இஸ்ரவேல் பிரபுக்களின்பேரில் ஒரு புலம்பல் பாடி,
2 I mów: Czym była twoja matka? Lwicą leżącą między lwami, która karmiła swoje szczenięta wśród lwiąt.
௨சொல்லவேண்டியது என்னவென்றால்: உன்னுடைய தாய் எப்படிப்பட்டவள்? அவள் ஒரு பெண்சிங்கம், அவள் சிங்கங்களுக்குள்ளே படுத்திருந்து, பாலசிங்கங்களின் நடுவிலே தன்னுடைய குட்டிகளை வளர்த்தாள்.
3 A gdy odchowała jedno ze swoich szczeniąt, stało się [młodym] lwem, który się nauczył chwytać łup; pożerał też ludzi.
௩தன்னுடைய குட்டிகளில் ஒன்று வளர்ந்து, பாலசிங்கமாகி, இரைதேடப் பழகி, மனிதர்களை அழித்தது.
4 Narody o nim usłyszały, został schwytany w ich dół i zaprowadzony w łańcuchach do ziemi Egiptu.
௪அந்நியதேசங்களும் அதின் செய்தியைக் கேட்டார்கள், அது அவர்களுடைய படுகுழியில் அகப்பட்டது; அதைச் சங்கிலிகளினால் கட்டி, எகிப்துதேசத்திற்குக் கொண்டுபோனார்கள்.
5 Gdy [lwica] zobaczyła, że daremnie czeka i że jej nadzieja przepadła, wzięła inne ze swoich szczeniąt i uczyniła je [młodym] lwem;
௫தாய்ச்சிங்கம் காத்திருந்து, தன்னுடைய நம்பிக்கை பொய்யாகப் போனது என்று கண்டு, அது தன்னுடைய குட்டிகளில் வேறொன்றை எடுத்து, அதை பாலசிங்கமாக வைத்தது.
6 Chodziło w środku lwów i stało się [młodym] lwem, który nauczył się chwytać łup; pożerał też ludzi.
௬அது சிங்கங்களுக்குள்ளே வசித்து, பாலசிங்கமாகி, இரைதேடப் பழகி, மனிதர்களைச் சாப்பிட்டது.
7 Burzył ich pałace i pustoszył ich miasta tak, że ziemia i to, co ją napełnia, stały się spustoszone od jego głośnego ryku.
௭அவர்களுடைய பாழான அரண்மனைகளில் திரிந்து, அவர்களுடைய பட்டணங்களைப் பாழாக்கியது; அதினுடைய கெர்ச்சிப்பின் சத்தத்திற்கு தேசமும் அதிலுள்ள அனைத்தும் பயந்தது.
8 Wtedy zebrały się przeciwko niemu narody z okolicznych krain i zarzuciły na niego swoją sieć. Został schwytany w ich dół.
௮அப்பொழுது சுற்றிலுள்ள தேசங்கள் அதற்கு எதிராக எழும்பிவந்து, தங்களுடைய வலையை அதின்மேல் வீசினார்கள்; அது அவர்களுடைய படுகுழியிலே அகப்பட்டது.
9 I wsadziły go do klatki w łańcuchach, i przyprowadziły do króla Babilonu. Wprowadziły go do ciężkiego więzienia, aby jego głos nie był więcej słyszany na górach Izraela.
௯அவர்கள் அதைச் சங்கிலிகளினால் கட்டி, ஒரு கூட்டுக்கு உட்படுத்தி, அதைப் பாபிலோன் ராஜாவினிடம் கொண்டுபோனார்கள்; இனி அதின் சத்தம் இஸ்ரவேலின் மலைகளின்மேல் கேட்கப்படாதபடி அதை கோட்டைகளில் கொண்டுபோய் அடைத்தார்கள்.
10 Twoja matka [była] jak winorośl w twojej krwi, zasadzona przy wodach. Była płodna i gałęzista dzięki obfitości wód.
௧0நீ அமைதியாக இருக்கும்போது உன்னுடைய தாய் தண்ணீர் ஓரமாக நாட்டப்பட்டதும், மிகுதியான நீர்ப்பாய்ச்சலால் பழம்தருகிறதும் தழைத்திருக்கிறதுமான திராட்சைச்செடியாக இருந்தாள்.
11 I miała potężne rózgi na berła dla panujących, a jej wzrost górował nad gęstymi gałęziami tak, że była widoczna z powodu swej wysokości dzięki mnóstwu swoich gałęzi.
௧௧ஆளுகிறவர்களின் செங்கோலுக்கேற்ற பலத்தகிளைகள் அதற்கு இருந்தது; அதின் வளர்த்தி அடர்த்தியான கிளைகளுக்குள்ளே உயர ஓங்கி, தன்னுடைய உயரத்தால் தன்னுடைய திரளான கொடிகளோடுங்கூடத் தோன்றியது.
12 Ale w gniewie została wyrwana i rzucona na ziemię, a wschodni wiatr wysuszył jej owoc. Jej potężne rózgi zostały złamane i uschły, ogień je strawił.
௧௨ஆனாலும் அது கோபமாகப் பிடுங்கப்பட்டு, தரையிலே தள்ளுண்டது; கீழ்காற்றினால் அதின் பழம் காய்ந்துபோனது; அதின் பலத்த கிளைகள் முறிந்து, பட்டுப்போயின; நெருப்பு அவைகளைச் சுட்டெரித்தது.
13 A teraz została zasadzona na pustyni, na ziemi suchej i spragnionej.
௧௩இப்பொழுது அது வறண்டதும் தண்ணீர் இல்லாததுமான வனாந்திர பூமியிலே நடப்பட்டிருக்கிறது.
14 Nadto ogień wyszedł z rózgi jej gałęzi i pochłonął jej owoc tak, że nie ma na niej potężnej rózgi na berła dla panującego. Jest to lament i będzie to lamentem.
௧௪அதின் கொடிகளிலுள்ள ஒரு கொப்பிலிருந்து நெருப்பு புறப்பட்டு, அதின் பழத்தைச் சுட்டெரித்தது; ஆளுகிற செங்கோலுக்கு ஏற்ற பலத்த கிளை இனி அதில் இல்லையென்று சொல்; இதுவே புலம்பல், இதுவே புலம்பலாக இருக்கும் என்றார்.