< II Królewska 6 >
1 I synowie proroków powiedzieli do Elizeusza: Oto miejsce, w którym mieszkamy wraz z tobą, jest zbyt ciasne dla nas.
௧தீர்க்கதரிசிகளின் கூட்டத்தார் எலிசாவை நோக்கி: இதோ, நாங்கள் உம்முடன் குடியிருக்கிற இந்த இடம் எங்களுக்கு நெருக்கமாக இருக்கிறது.
2 Pozwól, że pójdziemy aż nad Jordan, weźmiemy stamtąd każdy po jednej belce i zbudujemy tam sobie miejsce na mieszkanie. Odpowiedział: Idźcie.
௨நாங்கள் யோர்தான்வரை சென்று அவ்விடத்தில் ஒவ்வொருவர் ஒவ்வொரு மரத்தை வெட்டி, குடியிருக்க அங்கே எங்களுக்கு ஒரு இடத்தை உண்டாக்குவோம் என்றார்கள். அதற்கு அவன்: போங்கள் என்றான்.
3 Jeden z nich powiedział: Racz, proszę, pójść ze swoimi sługami. Odpowiedział: Pójdę.
௩அவர்களில் ஒருவன்: நீர் தயவுசெய்து உமது அடியார்களாகிய எங்களுடன் வரவேண்டும் என்றான். அதற்கு அவன்: நான் வருகிறேன் என்று சொல்லி,
4 I poszedł z nimi. Kiedy przybyli nad Jordan, zaczęli ścinać drzewa.
௪அவர்களோடேகூடப் போனான்; அவர்கள் யோர்தான் நதியருகில் வந்தபோது மரங்களை வெட்டினார்கள்.
5 I zdarzyło się, że jednemu z nich przy ścinaniu drzewa [siekierą] żelazo wpadło do wody. Zawołał wtedy: Ach, mój panie! Ta [była] pożyczona.
௫ஒருவன் ஒரு மரத்தை வெட்டி வீழ்த்தும்போது கோடரி தண்ணீரில் விழுந்தது; அவன்: ஐயோ என் ஆண்டவனே, அது இரவலாக வாங்கப்பட்டதே என்று சத்தமிட்டான்.
6 Mąż Boży zapytał: Gdzie wpadło? I wskazał mu miejsce. A on uciął drewno, wrzucił tam i żelazo wypłynęło.
௬தேவனுடைய மனிதன் அது எங்கே விழுந்தது என்று கேட்டான்; அவன் அந்த இடத்தைக் காண்பித்தபோது, ஒரு கிளையை வெட்டி, அதை அங்கே எறிந்து, அந்த இரும்பை மிதக்கச் செய்து,
7 I powiedział: Weź [je] sobie. Wyciągnął więc rękę i wziął je.
௭அதை எடுத்துக்கொள் என்றான்; அப்படியே அவன் தன் கையை நீட்டி அதை எடுத்துக்கொண்டான்.
8 Potem, gdy król Syrii prowadził wojnę z Izraelem, naradzał się ze swoimi sługami, mówiąc: W tym a w tym miejscu będzie mój obóz.
௮அக்காலத்தில் சீரியாவின் ராஜா இஸ்ரவேலுக்கு விரோதமாக போர்செய்து, இந்த இந்த இடத்திலே பாளயமிறங்குவேன் என்று தன் வேலைக்காரர்களோடு ஆலோசனைசெய்தான்.
9 Wtedy mąż Boży posłał do króla Izraela wiadomość: Strzeż się przechodzić przez to miejsce, bo tam Syryjczycy zrobili zasadzkę.
௯ஆகிலும் தேவனுடைய மனிதன் இஸ்ரவேலின் ராஜாவினிடத்தில் ஆள் அனுப்பி: இன்ன இடத்திற்குப் போகாதபடி எச்சரிக்கையாயிரும்; சீரியர்கள் அங்கே வருவார்கள் என்று சொல்லச்சொன்னான்.
10 Posłał więc król Izraela na to miejsce, o którym mu powiedział mąż Boży, ostrzegając go, i [król] uratował się nie raz i nie dwa.
௧0அப்பொழுது இஸ்ரவேலின் ராஜா தேவனுடைய மனிதன் தன்னை எச்சரித்து, தனக்குக் குறித்துச்சொன்ன இடத்திற்கு மனிதர்களை அனுப்பிப்பார்த்து எச்சரிக்கையாயிருந்து, இப்படி அநேக முறை தன்னைக் காத்துக்கொண்டான்.
11 Serce króla Syrii zatrwożyło się z tego powodu. Zwołał więc swoje sługi i zapytał ich: Czemu mi nie powiecie, kto z nas [donosi] królowi Izraela?
௧௧இந்தக் காரியத்தால் சீரிய ராஜாவின் இருதயம் குழம்பி, அவன் தன் இராணுவ அதிகாரிகளை அழைத்து: நம்முடையவர்களில் இஸ்ரவேலின் ராஜாவிற்கு உளவாளியாக இருக்கிறவன் யார் என்று நீங்கள் எனக்கு அறிவிக்கமாட்டீர்களா என்று கேட்டான்.
12 Jeden z jego sług odpowiedział: Nikt, mój panie, królu. To prorok Elizeusz, który jest w Izraelu, oznajmia królowi Izraela słowa, które wypowiadasz w swoim pokoju sypialnym.
௧௨அப்பொழுது அவனுடைய அதிகாரிகளில் ஒருவன்: அப்படியில்லை; என் எஜமானாகிய ராஜாவே, நீர் உம்முடைய படுக்கையறையிலே பேசுகிற வார்த்தைகளையும் இஸ்ரவேலிலிருக்கிற தீர்க்கதரிசியாகிய எலிசா இஸ்ரவேலின் ராஜாவிற்கு அறிவிப்பான் என்றான்.
13 [On] odpowiedział: Idźcie i dowiedzcie się, gdzie on jest, abym posłał [po niego] i pojmał go. I doniesiono mu: Oto jest w Dotan.
௧௩அப்பொழுது அவன்: நான் மனிதர்களை அனுப்பி அவனைப் பிடிக்கும்படி, நீங்கள் போய் அவன் எங்கே இருக்கிறான் என்று பாருங்கள் என்றான்; அவன் தோத்தானில் இருக்கிறான் என்று அவனுக்கு அறிவிக்கப்பட்டது.
14 Posłał więc tam konie i rydwany, i znaczny [oddział] wojska. Wyruszyli w nocy i oblegli miasto.
௧௪அப்பொழுது அவன் அங்கே குதிரைகளையும் இரதங்களையும் பலத்த இராணுவத்தையும் அனுப்பினான்; அவர்கள் இரவிலே வந்து பட்டணத்தை சூழ்ந்துகொண்டார்கள்.
15 Kiedy sługa męża Bożego wstał wcześnie rano i wyszedł, oto wojsko otoczyło miasto razem z końmi i rydwanami. Jego sługa powiedział do niego: Ach, mój panie! Cóż mamy czynić?
௧௫தேவனுடைய மனிதனின் வேலைக்காரன் அதிகாலையில் எழுந்து வெளியே புறப்படும்போது, இதோ, இராணுவமும் குதிரைகளும் இரதங்களும் பட்டணத்தைச் சூழ்ந்துகொண்டிருக்கக் கண்டான்; அப்பொழுது வேலைக்காரன் அவனை நோக்கி: ஐயோ, என் ஆண்டவனே, என்னசெய்வோம் என்றான்.
16 Odpowiedział: Nie bój się, bo więcej jest tych, którzy [są] z nami, niż tych, którzy [są] z nimi.
௧௬அதற்கு அவன்: பயப்படாதே; அவர்களோடு இருக்கிறவர்களைவிட நம்மோடு இருக்கிறவர்கள் அதிகம் என்றான்.
17 Wtedy modlił się Elizeusz: PANIE, otwórz, proszę, jego oczy, aby widział. PAN otworzył oczy tego sługi i ten zobaczył: oto góra była pełna koni i ognistych rydwanów wokół Elizeusza.
௧௭அப்பொழுது எலிசா விண்ணப்பம்செய்து: யெகோவாவே, இவன் பார்க்கும்படி இவனுடைய கண்களைத் திறந்தருளும் என்றான்; உடனே யெகோவா அந்த வேலைக்காரனுடைய கண்களைத் திறந்தார்; இதோ, எலிசாவைச்சுற்றிலும் அக்கினிமயமான குதிரைகளாலும் இரதங்களாலும் அந்த மலை நிறைந்திருக்கிறதை அவன் கண்டான்.
18 A gdy [Syryjczycy] zeszli do niego, Elizeusz modlił się do PANA i powiedział: Proszę, dotknij ten lud ślepotą. I [PAN] dotknął go ślepotą według słowa Elizeusza.
௧௮அவர்கள் அவனிடத்தில் வரும்போது, எலிசா யெகோவாவை நோக்கி விண்ணப்பம்செய்து: இந்த மக்களுக்குக் கண்மயக்கம் உண்டாகும்படிச் செய்யும் என்றான்; எலிசாவுடைய வார்த்தையின்படியே அவர்களுக்குக் கண்மயக்கம் உண்டாகச் செய்தார்.
19 Wtedy Elizeusz powiedział do nich: To nie ta droga ani nie to miasto. Pójdźcie za mną, a zaprowadzę was do człowieka, którego szukacie. I zaprowadził ich do Samarii.
௧௯அப்பொழுது எலிசா அவர்களை நோக்கி: இது வழி அல்ல; இது பட்டணமும் அல்ல; என் பின்னே வாருங்கள்; நீங்கள் தேடுகிற மனிதனிடத்திற்கு நான் உங்களை வழிநடத்துவேன் என்று சொல்லி, அவர்களைச் சமாரியாவுக்கு அழைத்துக் கொண்டுபோனான்.
20 A gdy weszli do Samarii, Elizeusz powiedział: PANIE, otwórz im oczy, aby przejrzeli. PAN otworzył im oczy i zobaczyli, że [są] w środku Samarii.
௨0அவர்கள் சமாரியாவிற்கு வந்தபோது, எலிசா: யெகோவாவே, இவர்கள் பார்க்கும்படி இவர்களுடைய கண்களைத் திறந்தருளும் என்றான்; பார்க்கும்படிக் யெகோவா அவர்களுடைய கண்களைத் திறக்கும்போது, இதோ, இவர்கள் சமாரியாவின் நடுவே இருந்தார்கள்.
21 Gdy król Izraela zobaczył ich, zapytał Elizeusza: Czy mam ich zabić, mój ojcze?
௨௧இஸ்ரவேலின் ராஜா அவர்களைக் கண்டபோது, எலிசாவைப் பார்த்து: என் தகப்பனே, நான் அவர்களை வெட்டிப்போடலாமா என்று கேட்டான்.
22 Odpowiedział: Nie zabijaj. Czy zabijasz tych, których pojmałeś swoim mieczem i swoim łukiem? Połóż przed nimi chleb i wodę, aby jedli i pili, i wrócili do swego pana.
௨௨அதற்கு அவன்: நீர் வெட்டவேண்டாம்; நீர் உம்முடைய பட்டயத்தாலும், உம்முடைய வில்லினாலும் சிறைபிடித்தவர்களை வெட்டுகிறீரோ? இவர்கள் சாப்பிட்டுக் குடித்து, தங்கள் எஜமானிடத்திற்குப் போகும்படி, அப்பமும் தண்ணீரும் அவர்களுக்கு முன்பாக வையும் என்றான்.
23 Przygotował więc dla nich wielką ucztę. A gdy jedli i pili, odprawił ich i poszli do swego pana. Odtąd bandy Syryjczyków już nie wpadały do ziemi Izraela.
௨௩அப்பொழுது அவர்களுக்குப் பெரிய விருந்துசெய்து, அவர்கள் சாப்பிட்டுக் குடித்தபின்பு, அவர்களை அனுப்பிவிட்டான்; அவர்கள் தங்களுடைய ஆண்டவனிடத்திற்குப் போய்விட்டார்கள்; சீரியர்களின் படைகள் இஸ்ரவேல் தேசத்திலே அதற்குப் பிறகு வரவில்லை.
24 Potem Ben-Hadad, król Syrii, zebrał całe swoje wojsko, wyruszył i obległ Samarię.
௨௪இதற்குப்பின்பு சீரியாவின் ராஜாவாகிய பெனாதாத் தன் இராணுவத்தையெல்லாம் கூட்டிக்கொண்டுவந்து சமாரியாவை முற்றுகையிட்டான்.
25 I nastał wielki głód w Samarii. Tak bowiem ją oblegali, że głowa osła [kosztowała] osiemdziesiąt srebrników, a ćwierć kaba gołębiego gnoju – pięć srebrników.
௨௫அதனால் சமாரியாவிலே கொடிய பஞ்சம் ஏற்பட்டது; ஒரு கழுதையின் தலை எண்பது வெள்ளிக்காசுக்கும், புறாக்களுக்குப் போடுகிற காற்படி பயறு ஐந்து வெள்ளிக்காசுக்கும் விற்கப்படும்வரை அதை முற்றுகையிட்டார்கள்.
26 A gdy król Izraela przechodził po murze, [pewna] kobieta zawołała do niego: Ratuj mnie, mój panie, królu!
௨௬இஸ்ரவேலின் ராஜா மதிலின்மேல் நடந்துபோகும்போது, ஒரு பெண் அவனைப்பார்த்துக் கூப்பிட்டு, ராஜாவாகிய என் ஆண்டவனே, உதவி செய்யும் என்றாள்.
27 Odpowiedział: Jeśli PAN cię nie uratuje, jakże [ja] ciebie uratuję? Czy z klepiska lub z tłoczni?
௨௭அதற்கு அவன்: யெகோவா உனக்கு உதவி செய்யாதிருந்தால் நான் எதிலிருந்து எடுத்து உனக்கு உதவி செய்ய முடியும்? களஞ்சியத்திலிருந்தா, ஆலையிலிருந்தா என்று சொல்லி,
28 Następnie król zapytał ją: Co ci jest? Odpowiedziała: Ta oto kobieta powiedziała mi: Daj swojego syna, abyśmy go zjadły dzisiaj, a jutro zjemy mojego syna.
௨௮ராஜா மேலும் அவளைப் பார்த்து: உனக்கு என்னவேண்டும் என்று கேட்டான். அதற்கு அவள்: இந்தப் பெண் என்னை நோக்கி: உன் மகனைத் தா, அவனை இன்று சாப்பிடுவோம்; நாளைக்கு என் மகனைச் சாப்பிடுவோம் என்றாள்.
29 Ugotowałyśmy więc mojego syna i zjadłyśmy go. Potem powiedziałam jej na drugi dzień: Daj swojego syna, abyśmy go zjadły. Lecz ona ukryła swojego syna.
௨௯அப்படியே என் மகனை வேகவைத்துச் சாப்பிட்டோம்; மறுநாளில் நான் இவளை நோக்கி: நாம் உன் மகனைச் சாப்பிட அவனைத் தா என்றேன்; அவள் தன் மகனை ஒளித்துவைத்துவிட்டாள் என்றாள்.
30 A gdy król usłyszał słowa tej kobiety, rozdarł swoje szaty. I kiedy przechodził po murze, lud zobaczył, że pod spodem nosił wór na swoim ciele.
௩0அந்தப் பெண்ணின் வார்த்தைகளை ராஜா கேட்டவுடனே, மதிலின்மேல் நடந்துபோகிற அவன் தன் உடைகளைக் கிழித்துக்கொண்டான்; அவன் உள்ளே சணல் ஆடையை அணிந்திருக்கிறதை மக்கள் கண்டார்கள்.
31 Wtedy [król] powiedział: Niech mi to uczyni Bóg i tamto dorzuci, jeśli głowa Elizeusza, syna Szafata, ostoi się na nim dzisiaj.
௩௧அவன்: சாப்பாத்தின் மகனாகிய எலிசாவின் தலை இன்றைக்கு அவன்மேல் இருந்தால், தேவன் அதற்குச் சரியாகவும் அதற்கு அதிகமாகவும் எனக்குச் செய்யக்கடவர் என்று சொன்னான்.
32 Elizeusz zaś siedział w swoim domu i starsi siedzieli razem z nim. I [król] wysłał przed sobą człowieka. Lecz zanim posłaniec przyszedł do niego, powiedział do starszych: Czy widzicie, że ten syn mordercy posłał, aby mi ucięto głowę? Uważajcie, gdy ten posłaniec przyjdzie, zamknijcie drzwi i zatrzymajcie go przed drzwiami. Czy za nim nie słychać kroków mego pana?
௩௨எலிசா தன் வீட்டில் உட்கார்ந்திருந்தான்; மூப்பர்களும் அவனோடு உட்கார்ந்திருந்தார்கள். அப்பொழுது ராஜா: ஒரு மனிதனைத் தனக்கு முன்னே அனுப்பினான்; இந்த ஆள் எலிசாவினிடத்திற்கு வருவதற்குமுன்னே, அவன் அந்த மூப்பர்களை நோக்கி: என் தலையை வெட்ட, அந்தக் கொலைபாதகனுடைய மகன் ஆள் அனுப்பினான்; பார்த்தீர்களா? அந்த ஆள் வரும்போது, நீங்கள் அவனை உள்ளே வரவிடாமல் கதவைப் பூட்டிப்போடுங்கள்; அவனுக்குப் பின்னாக அவனுடைய எஜமானின் காலின் சத்தம் கேட்கிறது அல்லவா என்றான்.
33 A gdy jeszcze z nimi rozmawiał, oto posłaniec przybył do niego i powiedział: To nieszczęście jest od PANA. Czego mam jeszcze oczekiwać od PANA?
௩௩அவர்களோடே அவன் பேசிக்கொண்டிருக்கும்போது, அந்த ஆள் அவனிடத்தில் வந்து: இதோ, இந்தப் பொல்லாப்பு யெகோவாவால் உண்டானது; நான் இனிக் யெகோவாவுக்காக ஏன் காத்திருக்கவேண்டும் என்று ராஜா சொல்லுகிறார் என்றான்.