< II Królewska 20 >
1 W tych dniach Ezechiasz śmiertelnie zachorował. Przyszedł do niego prorok Izajasz, syn Amosa, i powiedział mu: Tak mówi PAN: Rozporządź swym domem, bo umrzesz i nie będziesz żył.
௧அந்நாட்களில் எசேக்கியா வியாதிப்பட்டு மரணத்தருவாயில் இருந்தான்; அப்பொழுது ஆமோத்சின் மகனாகிய ஏசாயா என்னும் தீர்க்கதரிசி அவனிடத்தில் வந்து, அவனை நோக்கி: நீர் உமது வீட்டுக்காரியத்தை ஒழுங்குப்படுத்தும்; நீர் பிழைக்கமாட்டீர், இறந்துபோவீர் என்று யெகோவ சொல்லுகிறார் என்றான்.
2 Wtedy [Ezechiasz] odwrócił swoją twarz do ściany i modlił się do PANA:
௨அப்பொழுது எசேக்கியா தன் முகத்தைச் சுவர்ப்புறமாகத் திருப்பிக்கொண்டு, யெகோவவை நோக்கி:
3 O PANIE, proszę cię, wspomnij teraz, że postępowałem wobec ciebie w prawdzie i z doskonałym sercem, czyniąc to, co dobre w twoich oczach. I płakał Ezechiasz rzewnie.
௩ஆ யெகோவவே, நான் உமக்கு முன்பாக உண்மையும் மனஉத்தமமுமாக நடந்து, உமது பார்வைக்கு நலமானதைச் செய்தேன் என்பதை நினைத்தருளும் என்று விண்ணப்பம்செய்தான். எசேக்கியா மிகவும் அழுதான்.
4 Ale zanim Izajasz wyszedł do środkowego dziedzińca, doszło do niego słowo PANA:
௪ஏசாயா பாதி முற்றத்தைவிட்டு அப்புறம் போகிறதற்குமுன்னே, யெகோவவுடைய வார்த்தை அவனுக்கு உண்டாகி, அவர் சொன்னது:
5 Wróć i powiedz Ezechiaszowi, wodzowi mego ludu: Tak mówi PAN, Bóg Dawida, twego ojca: Wysłuchałem twojej modlitwy [i] widziałem twoje łzy. Oto uzdrawiam cię: trzeciego dnia wejdziesz do domu PANA.
௫நீ திரும்பிப்போய், என் மக்களின் அதிபதியாகிய எசேக்கியாவை நோக்கி: உன் தகப்பனாகிய தாவீதின் தேவனாயிருக்கிற யெகோவ சொல்லுகிறது என்னவென்றால்: உன் விண்ணப்பத்தைக் கேட்டேன், உன் கண்ணீரைக் கண்டேன்; இதோ, நான் உன்னைக் குணமாக்குவேன்; மூன்றாம் நாளிலே நீ யெகோவவுடைய ஆலயத்திற்குப் போவாய்.
6 Dodam też do twoich dni piętnaście lat i wybawię ciebie i to miasto z ręki króla Asyrii. I będę bronić tego miasta ze względu na siebie i ze względu na Dawida, swego sługę.
௬உன் நாட்களோடே பதினைந்து வருடங்களைக் கூட்டுவேன்; உன்னையும் இந்த நகரத்தையும் அசீரியா ராஜாவின் கைக்குத் தப்புவித்து, என்னிமித்தமும் என் தாசனாகிய தாவீதின்நிமித்தமும் இந்த நகரத்திற்கு ஆதரவாக இருப்பேன் என்று சொல் என்றார்.
7 Następnie Izajasz powiedział: Przynieście garstkę suchych fig. Gdy wzięli [je] i położyli na wrzód, wyzdrowiał.
௭பின்பு ஏசாயா: அத்திப்பழ அடையைக் கொண்டுவாருங்கள் என்றான்; அதை அவர்கள் கொண்டுவந்து, புண்ணின்மேல் பற்றுப்போட்டபோது அவன் பிழைத்தான்.
8 Ezechiasz zapytał Izajasza: Jaki [będzie] znak [tego], że PAN mnie uzdrowi i że na trzeci dzień pójdę do domu PANA?
௮எசேக்கியா ஏசாயாவை நோக்கி: யெகோவ என்னைக் குணமாக்குவதற்கும், மூன்றாம் நாளிலே நான் யெகோவவுடைய ஆலயத்திற்குப் போவதற்கும் அடையாளம் என்ன என்றான்.
9 Izajasz odpowiedział: To [będzie] znakiem od PANA, że uczyni PAN tę rzecz, którą obiecał: Czy cień ma się posunąć o dziesięć stopni, czy ma się cofnąć o dziesięć stopni?
௯அதற்கு ஏசாயா: யெகோவ தாம் சொன்ன வார்த்தையின்படியே செய்வார் என்பதற்கு, யெகோவாவால் உனக்கு உண்டாகும் அடையாளமாக நிழல் பத்துகோடுகள் முன்னோக்கிப் போகவேண்டுமோ, பத்துகோடுகள் பின்னோக்கித் திரும்ப வேண்டுமோ என்று கேட்டான்.
10 Ezechiasz odpowiedział: Łatwo cieniowi posunąć się o dziesięć stopni. Nie – niech cień cofnie się o dziesięć stopni.
௧0அதற்கு எசேக்கியா: நிழல் பத்துகோடுகள் முன்னோக்கிப்போவது எளிதான காரியம்; அப்படி வேண்டாம்; நிழல் பத்துகோடுகள் பின்னோக்கித் திரும்பவேண்டும் என்றான்.
11 Wtedy prorok Izajasz zawołał do PANA. I on cofnął cień o dziesięć stopni, po których przesunął się na zegarze słonecznym Achaza.
௧௧அப்பொழுது ஏசாயா தீர்க்கதரிசி யெகோவாவை நோக்கிக் கூப்பிடும்போது, அவர் ஆகாசுடைய சூரிய கடிகாரத்தில் கோட்டுக்கு கோடு முன்னோக்கிச் சென்ற நிழல் பத்துகோடுகள் பின்னோக்கித் திரும்பும்படி செய்தார்.
12 W tym czasie Berodach-Baladan, syn Baladana, król Babilonu, posłał listy i dar do Ezechiasza. Usłyszał bowiem, że Ezechiasz chorował.
௧௨அக்காலத்திலே பலாதானின் மகனாகிய பெரோதாக்பலாதான் என்னும் பாபிலோனின் ராஜா எசேக்கியா வியாதிப்பட்டிருக்கிறதைக் கேட்டு, அவனிடத்திற்கு கடிதங்களையும் வெகுமானத்தையும் அனுப்பினான்.
13 I Ezechiasz wysłuchał [posłańców], i pokazał im cały skarbiec swoich kosztowności, srebro, złoto, wonności, drogocenne olejki oraz swoją zbrojownię, a także wszystko, co się znajdowało w jego składach. Nie było nic, czego Ezechiasz by im nie pokazał w swoim domu i w całym swoim państwie.
௧௩எசேக்கியா அவர்களை அங்கீகரித்து, பின்பு அவர்களுக்குத் தன் பொக்கிஷசாலை அனைத்தையும், வெள்ளியையும், பொன்னையும், கந்தவர்க்கங்களையும், நல்ல பரிமளதைலத்தையும், தன் ஆயுதசாலை அனைத்தையும் தன் பொக்கிஷசாலைகளிலுள்ள எல்லாவற்றையும் காண்பித்தான்; தன் அரண்மனையிலும் தன் ராஜ்ஜியத்தில் எங்கும் எசேக்கியா அவர்களுக்குக் காண்பிக்காத பொருள் ஒன்றும் இல்லை.
14 Wtedy prorok Izajasz przyszedł do króla Ezechiasza i zapytał go: Co powiedzieli ci mężczyźni i skąd przybyli do ciebie? Ezechiasz odpowiedział: Przybyli z dalekiej ziemi, z Babilonu.
௧௪அப்பொழுது ஏசாயா தீர்க்கதரிசி எசேக்கியா ராஜாவினிடத்தில் வந்து: அந்த மனிதர்கள் என்ன சொன்னார்கள், எங்கேயிருந்து உம்மிடத்தில் வந்தார்கள் என்று கேட்டான். அதற்கு எசேக்கியா: பாபிலோன் என்னும் தூரதேசத்திலிருந்து வந்தார்கள் என்றான்.
15 Znowu zapytał: Co widzieli w twoim domu? Ezechiasz odpowiedział: Widzieli wszystko, co jest w moim domu. Nie było nic, czego bym im nie pokazał w swoich skarbcach.
௧௫அப்பொழுது அவன்: உம்முடைய வீட்டில் எவைகளைப் பார்த்தார்கள் என்று கேட்டான். அதற்கு எசேக்கியா: என் வீட்டிலுள்ள எல்லாவற்றையும் பார்த்தார்கள்; என் பொக்கிஷங்களில் நான் அவர்களுக்குக் காண்பிக்காத பொருள் ஒன்றும் இல்லை என்றான்.
16 Wtedy Izajasz powiedział do Ezechiasza: Słuchaj słowa PANA.
௧௬அப்பொழுது ஏசாயா எசேக்கியாவை நோக்கி: யெகோவாவுடைய வார்த்தையைக் கேளும்.
17 Oto przyjdą dni, kiedy wszystko, co jest w twoim domu i co zgromadzili twoi ojcowie aż do tego dnia, zostanie zabrane do Babilonu. Nic nie pozostanie, mówi PAN.
௧௭இதோ, நாட்கள் வரும்; அப்பொழுது உமது வீட்டில் உள்ளதிலும், உமது முன்னோர்கள் இந்நாள்வரைக்கும் சேர்த்ததிலும் ஒன்றும் மீதியாக வைக்கப்படாமல் எல்லாம் பாபிலோனுக்குக் கொண்டுபோகப்படும்.
18 Z twoich synów, którzy będą pochodzić od ciebie i których spłodzisz, zabiorą [niektórych] i będą eunuchami w pałacu króla Babilonu.
௧௮நீர் பெறப்போகிற உமது சந்ததியாகிய உமது மகன்களிலும் சிலர் பாபிலோன் ராஜாவின் அரண்மனையிலே அரண்மனை வேலைக்காரர்களாக இருப்பார்கள் என்று யெகோவ சொல்லுகிறார் என்றான்.
19 Wtedy Ezechiasz powiedział do Izajasza: Dobre jest słowo PANA, które wypowiedziałeś. I dodał: Czyż [ono] nie jest [dobre], jeśli za moich dni będzie pokój i prawda?
௧௯அப்பொழுது எசேக்கியா ஏசாயாவை நோக்கி: நீர் சொன்ன யெகோவவுடைய வார்த்தை நல்லதுதான் என்று சொல்லி, என் நாட்களிலாவது சமாதானமும் உண்மையும் இருக்குமே என்றான்.
20 A pozostałe dzieje Ezechiasza, cała jego potęga i [to], jak zbudował sadzawkę i kanał, którymi sprowadził wodę do miasta, czy nie są zapisane w księdze kronik królów Judy?
௨0எசேக்கியாவின் மற்ற செயல்பாடுகளும், அவனுடைய எல்லா வல்லமையும், அவன் ஒரு குளத்தையும் வாய்க்காலையும் உண்டாக்கினதினாலே தண்ணீரை நகரத்திற்குள்ளே வரச்செய்ததும், யூதாவுடைய ராஜாக்களின் நாளாகமப் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறது.
21 I Ezechiasz zasnął ze swoimi ojcami, a jego syn Manasses królował w jego miejsce.
௨௧எசேக்கியா இறந்தபின், அவனுடைய மகனாகிய மனாசே அவனுடைய இடத்தில் ராஜாவானான்.