< II Kronik 11 >
1 Kiedy Roboam przybył do Jerozolimy, zebrał spośród domu Judy i Beniamina sto osiemdziesiąt tysięcy [mężczyzn] – wyborowych wojowników – aby walczyć z Izraelem i przywrócić królestwo Roboamowi.
௧ரெகொபெயாம் எருசலேமுக்கு வந்தபோது, இஸ்ரவேலோடு போர்செய்யவும், ராஜ்ஜியத்தைத் தன்னிடமாகத் திருப்பிக்கொள்ளவும், யூதா வம்சத்தாரும் பென்யமீன் வம்சத்தாருமாகிய தெரிந்துகொள்ளப்பட்ட போர்வீரரான ஒருலட்சத்து எண்பதாயிரம்பேரைக் கூட்டினான்.
2 Lecz słowo PANA doszło do Szemajasza, męża Bożego:
௨தேவனுடைய மனிதனாகிய செமாயாவுக்குக் யெகோவாவுடைய வார்த்தை உண்டாகி. அவர் சொன்னது:
3 Powiedz Roboamowi, synowi Salomona, królowi Judy, i całemu Izraelowi w Judzie i Beniaminie:
௩நீ யூதாவின் ராஜாவாகிய ரெகொபெயாம் என்னும் சாலொமோனின் மகனையும், யூதாவிலும் பென்யமீனிலும் இருக்கிற அனைத்து இஸ்ரவேலரையும் நோக்கி:
4 Tak mówi PAN: Nie wyruszajcie ani nie walczcie ze swoimi braćmi. Niech każdy wróci do swego domu, bo ta rzecz wyszła ode mnie. I posłuchali słowa PANA, i zawrócili z drogi przeciw Jeroboamowi.
௪நீங்கள் போகாமலும், உங்கள் சகோதரரோடு போர்செய்யாமலும், அவரவர் தம்தம் வீட்டுக்குத் திரும்புங்கள்; என்னாலே இந்தக் காரியம் நடந்தது என்று யெகோவா உரைக்கிறார் என்று சொல் என்றார்; அப்பொழுது அவர்கள் யெகோவாவுடைய வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிந்து, யெரொபெயாமுக்கு விரோதமாக போர்செய்வதைத் தவிர்த்துத் திரும்பிப் போய்விட்டார்கள்.
5 I Roboam zamieszkał w Jerozolimie, i odbudował miasta obronne w Judzie.
௫ரெகொபெயாம் எருசலேமில் குடியிருந்து, யூதாவிலே பாதுகாப்பான பட்டணங்களைக் கட்டினான்.
6 Odbudował Betlejem, Etam i Tekoa;
௬அவன் பெத்லெகேமும், ஏத்தாமும், தெக்கோவாவும்,
7 Bet-Sur, Soko i Adullam;
௭பெத்சூரும், சோக்கோவும், அதுல்லாமும்,
௮காத்தும், மரேஷாவும், சீப்பும்,
9 Adoraim, Lakisz i Azekę;
௯அதோராயீமும், லாகீசும், அசேக்காவும்,
10 Sorea, Ajjalon i Hebron, warowne miasta w Judzie i Beniaminie.
௧0சோராவும், ஆயலோனும், எப்ரோனும் ஆகிய யூதாவிலும் பென்யமீனிலும் இருக்கிற பாதுகாப்பான பட்டணங்களைக் கட்டி,
11 A gdy wzmocnił te twierdze, ustanowił w nich dowódców i [zaopatrzył] w składy zboża, oliwy i wina.
௧௧அந்தப் பாதுகாப்புகளைப் பலப்படுத்தி, அவைகளிலே தலைவரையும், ஆகாரமும் எண்ணெயும் திராட்சைரசமும் உள்ள சேமிப்பு அறைகளையும்,
12 A w każdym mieście [złożył] tarcze i włócznie i bardzo je umocnił. Tak należały do niego Juda i Beniamin.
௧௨யூதாவும் பென்யமீனும் அவன் கட்டுப்பாட்டிலிருக்க, ஒவ்வொரு பட்டணத்திலும் கேடயங்களையும் ஈட்டிகளையும் வைத்து, அவைகளை மிகுதியும் பலப்படுத்தினான்.
13 Kapłani też i Lewici, którzy [byli] w całym Izraelu, zebrali się u niego, [przybywszy] ze wszystkich swoich granic.
௧௩இஸ்ரவேலெங்கும் இருக்கிற ஆசாரியர்களும் லேவியர்களும் தங்கள் எல்லா எல்லைகளிலுமிருந்து அவனிடத்திற்கு வந்தார்கள்.
14 Lewici bowiem opuścili swoje pastwiska i posiadłości i przyszli do Judy i do Jerozolimy, gdyż Jeroboam i jego synowie odsunęli ich od pełnienia służby kapłańskiej dla PANA.
௧௪லேவியர்கள் யெகோவாவுக்கு ஆசாரிய ஊழியம் செய்யாமலிருக்க யெரொபெயாமும் அவன் மகன்களும் அவர்களைத் தள்ளிப்போட்டதால், தங்கள் வெளிநிலங்களையும் தங்கள் சொத்துக்களையும்விட்டு, யூதா தேசத்திற்கும் எருசலேமுக்கும் வந்தார்கள்.
15 I ustanowił sobie kapłanów na wyżynach dla [kultu] demonów i cielców, które sporządził.
௧௫அவன் மேடைகளுக்கென்றும், பேய்களுக்கென்றும், தான் உண்டாக்கின கன்றுக்குட்டிகளுக்கென்றும் ஆசாரியர்களை ஏற்படுத்தினான்.
16 A za nimi przybywali do Jerozolimy ze wszystkich pokoleń Izraela ci, którzy zwrócili swoje serca ku szukaniu PANA, Boga Izraela, aby składać ofiary PANU, Bogu swoich ojców.
௧௬அந்த லேவியர்களின் பின்னே இஸ்ரவேலின் கோத்திரங்களிலெல்லாம் இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவாவை தேடுகிறதற்கு, தங்கள் இருதயத்தை நேராக்கினவர்கள் தங்கள் முற்பிதாக்களின் தேவனாகிய யெகோவாவுக்குப் பலியிடுவதற்காக எருசலேமுக்கு வந்தார்கள்.
17 I tak przez trzy lata umocnili królestwo Judy, i utwierdzili Roboama, syna Salomona. Trzy lata bowiem chodzili drogą Dawida i Salomona.
௧௭இப்படி மூன்று வருடங்கள்வரை யூதாவின் ராஜ்ஜியத்தைப் பலப்படுத்தி, சாலொமோனின் மகனாகிய ரெகொபெயாமைத் திடப்படுத்தினார்கள்; தாவீதும் சாலொமோனும் நடந்த வழியிலே மூன்று வருடங்கள்வரை நடந்தார்கள்.
18 Potem Roboam wziął sobie za żonę Machalat, córkę Jerimota, syna Dawida, [oraz] Abihail, córkę Eliaba, syna Jessego;
௧௮ரெகொபெயாம் தாவீதின் மகனாகிய எரிமோத்தின் மகள் மகலாத்தையும், ஈசாயின் மகனாகிய எலியாபின் மகள் அபியாயேலையும் திருமணம்செய்தான்.
19 Która mu urodziła synów: Jeusza, Szemariasza i Zahama.
௧௯இவள் அவனுக்கு ஏயூஸ், செமரியா, சாகாம் என்னும் மகன்களைப் பெற்றாள்.
20 A po niej wziął za żonę Maakę, córkę Absaloma, która urodziła mu Abiasza, Attaja, Zizę i Szelomita.
௨0அவளுக்குப்பிறகு அப்சலோமின் மகளாகிய மாகாளைத் திருமணம்செய்தான்; அவள் அவனுக்கு அபியாவையும், அத்தாயியையும், சீசாவையும். செலோமித்தையும் பெற்றாள்.
21 Roboam ukochał Maakę, córkę Absaloma, najbardziej ze wszystkich swoich żon i nałożnic. Pojął bowiem osiemnaście żon i sześćdziesiąt nałożnic i spłodził dwudziestu ośmiu synów i sześćdziesiąt córek.
௨௧ரெகொபெயாம் தன்னுடைய மனைவிகள் மறுமனையாட்டிகள் எல்லோரிலும், அப்சலோமின் மகளாகிய மாகாளைச் சிநேகித்தான்; பதினெட்டு மனைவிகளையும் அறுபது மறுமனையாட்டிகளையும் திருமணம்செய்து, இருபத்தெட்டு மகன்களையும் அறுபது மகள்களையும் பெற்றான்.
22 I Roboam ustanowił na czele Abiasza, syna Maaki, aby był wodzem wśród jego braci. [Zamierzał] bowiem uczynić go królem.
௨௨ரெகொபெயாம் மாகாளின் மகனாகிய அபியாவை அவன் சகோதரர்களுக்குள்ளே தலைவனும் பெரியவனுமாக ஏற்படுத்தினான்; அவனை ராஜாவாக்க நினைத்தான்.
23 A postępując roztropnie, rozesłał wszystkich [pozostałych] swoich synów po wszystkich krainach Judy i Beniamina, po wszystkich miastach warownych, i zaopatrzył ich w zapasy żywności. I pragnął wielu żon.
௨௩அவன் புத்தியாக நடந்து, யூதா பென்யமீனுடைய எல்லா தேசங்களிலுமுள்ள பாதுகாப்பான சகல பட்டணங்களிலும் தன் மகன்கள் அனைவரையும் பிரித்துவைத்து, அவர்களுக்கு வேண்டிய ஆகாரத்தைக் கொடுத்து, அவர்களுக்கு அநேகம் பெண்களைத் தேடினான்.