< I Samuela 4 >

1 I słowo Samuela dotarło do całego Izraela. W tym czasie Izrael wyruszył przeciwko Filistynom do walki i rozbili obóz koło Ebenezer. Filistyni zaś rozbili obóz w Afek.
சாமுவேலின் வார்த்தை இஸ்ரவேலுக்கெல்லாம் வந்தது. இஸ்ரவேலர்கள்: பெலிஸ்தர்களுக்கு விரோதமாக யுத்தம்செய்யப்புறப்பட்டு, எபெனேசருக்கு அருகில் முகாமிட்டார்கள்; பெலிஸ்தர்களோ ஆப்பெக்கிலே முகாமிட்டிருந்தார்கள்.
2 Wtedy Filistyni ustawili się w szyku bojowym przeciwko Izraelowi. Gdy walka rozgorzała, Izrael został pobity przez Filistynów, którzy zabili na polu bitwy około czterech tysięcy ludzi.
பெலிஸ்தர்கள் இஸ்ரவேலர்களுக்கு எதிராக அணிவகுத்து நின்றார்கள்; யுத்தம் அதிகரித்து, இஸ்ரவேலர்கள் பெலிஸ்தர்களுக்கு முன்பாக முறியடிக்கப்பட்டார்கள்; அவர்கள் படையில் போர்க்களத்திலே ஏறக்குறைய நான்காயிரம்பேர் வெட்டப்பட்டு இறந்தார்கள்.
3 I kiedy lud wrócił do obozu, starsi Izraela powiedzieli: Dlaczego PAN pobił nas dziś przed Filistynami? Sprowadźmy do siebie z Szilo arkę przymierza PANA, by weszła między nas i wybawiła nas z rąk naszych wrogów.
மக்கள் திரும்ப முகாமிற்கு வந்தபோது, இஸ்ரவேலின் மூப்பரானவர்கள், இன்று யெகோவா பெலிஸ்தர்களுக்கு முன்பாக நம்மை முறியடித்ததென்ன? சீலோவிலிருக்கிற யெகோவாவுடைய உடன்படிக்கைப்பெட்டியைக் கொண்டுவருவோம்; அது நம்மை நம்முடைய எதிரியின் கைக்கு விலக்கி இரட்சிக்கும்படி, நம்முடைய நடுவில் வரவேண்டும் என்றார்கள்.
4 Posłał więc lud do Szilo, by sprowadzić stamtąd arkę przymierza PANA zastępów, który zasiada między cherubinami. Byli tam też z arką przymierza Boga dwaj synowie Helego, Chofni i Pinchas.
அப்படியே கேருபீன்களின் மத்தியில் இருக்கிற சேனைகளின் யெகோவாவுடைய உடன்படிக்கைப்பெட்டியை எடுத்துவர, மக்கள் சீலோவுக்குச் சொல்லியனுப்பினார்கள்; அங்கே ஏலியின் இரண்டு மகன்களான ஒப்னியும் பினெகாசும் தேவனுடைய உடன்படிக்கைப் பெட்டியின் அருகில் இருந்தார்கள்.
5 A gdy arka przymierza PANA przybyła do obozu, cały Izrael zawołał wielkim głosem, że aż ziemia zadrżała.
யெகோவாவுடைய உடன்படிக்கைப்பெட்டி முகாமிலே வருகிறபோது, இஸ்ரவேலர்கள் எல்லோரும் பூமி அதிரத்தக்கதாக அதிக சத்தமாக ஆர்ப்பரித்தார்கள்.
6 Kiedy Filistyni usłyszeli ten okrzyk, pytali: Cóż to za wielki okrzyk w obozie Hebrajczyków? I dowiedzieli się, że arka PANA przybyła do obozu.
அவர்கள் ஆர்ப்பரிக்கிற சத்தத்தைப் பெலிஸ்தர்கள் கேட்டபோது: எபிரெயர்களுடைய முகாமில் இந்த மகா ஆர்ப்பரிப்பின் சத்தம் என்ன என்றார்கள்; பின்பு யெகோவாவின் பெட்டி முகாமில் வந்தது என்று அறிந்துகொண்டார்கள்.
7 I Filistyni zlękli się, gdyż mówiono: Bóg przybył do ich obozu. I mówili: Biada nam, bo czegoś takiego nigdy przedtem nie było.
தேவன் முகாமில் வந்தார் என்று சொல்லப்பட்டதினால், பெலிஸ்தர்கள் பயந்து, ஐயோ, நமக்கு மோசம் வந்தது; இதற்குமுன்பு ஒருபோதும் இப்படி நடக்கவில்லையே.
8 Biada nam! Któż nas wybawi z rąk tych potężnych bogów? To są ci bogowie, którzy porazili Egipt wszelką plagą na pustyni.
ஐயோ, அந்த மகத்துவமான தேவர்களின் கைக்கு நம்மைத் தப்புவிப்பவர் யார்? எகிப்தியரைச் சகலவித வாதைகளினாலும் வனாந்திரத்திலே அடித்த தேவர்கள் இவர்கள்தானே.
9 Umacniajcie się i bądźcie mężni, o Filistyni, abyście nie służyli Hebrajczykom, tak jak [oni] wam służyli. Bądźcie więc mężni i walczcie!
பெலிஸ்தர்களே, திடன் கொண்டு ஆண்களைப்போல நடந்துகொள்ளுங்கள்; எபிரெயர் உங்களுக்கு அடிமைகளாக இருந்ததுபோல நீங்களும் அவர்களுக்கு அடிமைகளாகாதபடி ஆண்களாக இருந்து யுத்தம்செய்யுங்கள் என்று சொல்லிக்கொண்டார்கள்.
10 Wtedy Filistyni walczyli, a Izrael został pokonany i każdy uciekał do swego namiotu. Była to wielka klęska, gdyż poległo trzydzieści tysięcy z piechoty Izraela.
௧0அப்பொழுது பெலிஸ்தர்கள் யுத்தம்செய்தார்கள்; இஸ்ரவேலர்கள் விழுந்து, அவரவர் தங்கள் கூடாரங்களுக்கு ஓடிப்போனார்கள்; மகா பெரிய அழிவு உண்டானது; இஸ்ரவேலிலே 30,000 காலாட்படையினர் மடிந்தார்கள்.
11 I arka Boga została zabrana, a dwaj synowie Heliego, Chofni i Pinchas, polegli.
௧௧தேவனுடைய பெட்டி பிடிக்கப்பட்டது; ஏலியின் இரண்டு மகன்களான ஒப்னியும் பினெகாசும் இறந்தார்கள்.
12 A pewien Beniaminita uciekł z bitwy i przyszedł do Szilo tego samego dnia w podartej szacie i z prochem na swojej głowie.
௧௨பென்யமீன் கோத்திரத்தானாகிய ஒருவன் படையிலிருந்து ஓடி, தன்னுடைய ஆடைகளைக் கிழித்து, தன்னுடைய தலையின்மேல் புழுதியை வாரிப்போட்டுக்கொண்டு, அன்றையதினமே சீலோவுக்கு வந்தான்.
13 Kiedy przyszedł, oto Heli siedział na krześle przy drodze i wyczekiwał, bo jego serce drżało o arkę Boga. Gdy ten człowiek przyszedł do miasta i opowiedział o tym, całe miasto podniosło krzyk.
௧௩அவன் வந்தபோது: ஏலி ஒரு இருக்கையின்மேல் உட்கார்ந்து வழியைப் பார்த்துக்கொண்டிருந்தான்; தேவனுடைய பெட்டிக்காக அவனுடைய இருதயம் தத்தளித்துக்கொண்டிருந்தது, ஊரிலே செய்தியை அறிவிக்க அந்த மனிதன் வந்தபோது, ஊரெங்கும் அழுகை உண்டானது.
14 I kiedy Heli usłyszał ten krzyk, powiedział: Cóż to za zgiełk? A ten człowiek śpiesznie przyszedł i oznajmił o tym Heliemu.
௧௪அழுகிற இந்தச் சத்தத்தை ஏலி கேட்டபோது: இந்த கூச்சலின் சத்தம் என்ன என்று கேட்டான்; அப்பொழுது அந்த மனிதன் விரைவாக வந்து, ஏலிக்கு அறிவித்தான்.
15 A Heli miał już dziewięćdziesiąt osiem lat i jego oczy tak zasłabły, że nie mógł [nic] widzieć.
௧௫ஏலி 98 வயதுள்ளவனாக இருந்தான்; அவன் பார்க்க முடியாதபடி அவனுடைய கண்கள் மங்கலாக இருந்தது.
16 Człowiek ten powiedział do Heliego: Przychodzę z bitwy, bo dziś z niej uciekłem. On zaś zapytał: Cóż [tam] się stało, mój synu?
௧௬அந்த மனிதன் ஏலியைப் பார்த்து: படையிலிருந்து வந்தவன் நான்தான்; இன்றுதான் படையிலிருந்து ஓடிவந்தேன் என்றான். அப்பொழுது அவன்: என் மகனே, நடந்த காரியம் என்ன என்று கேட்டான்.
17 Posłaniec odpowiedział: Izrael uciekł przed Filistynami i lud poniósł wielką klęskę. Zginęli także twoi dwaj synowie, Chofni i Pinchas, a arka Boga została zabrana.
௧௭செய்தி கொண்டுவந்தவன் பதிலாக: இஸ்ரவேலர்கள் பெலிஸ்தர்களுக்கு முன்பாக முறிந்தோடிப்போனார்கள்; மக்களுக்குள்ளே பெரிய அழிவு உண்டானது; உம்முடைய மகன்களான ஒப்னி பினெகாஸ் என்னும் இருவரும் இறந்துபோனார்கள்; தேவனுடைய பெட்டியும் பிடிபட்டது என்றான்.
18 A gdy wspomniał o arce Boga, [Heli] spadł z krzesła na wznak obok bramy, złamał sobie kark i umarł. [Był] bowiem człowiekiem starym i ociężałym, a sądził Izraela przez czterdzieści lat.
௧௮அவன் தேவனுடைய பெட்டியைக் குறித்துச் சொன்னவுடனே, ஏலி இருக்கையிலிருந்து வாசலின் பக்கமாய் மல்லாந்து விழுந்தான்; அவன் முதிர்வயதானவனும் அதிக பருமனானவனுமாக இருந்தபடியால், அவன் பிடரி முறிந்து இறந்துபோனான். அவன் இஸ்ரவேலை 40 வருடங்கள் நியாயம் விசாரித்தான்.
19 Jego synowa, żona Pinchasa, była brzemienna i bliska porodu, a gdy usłyszała wieści o zabraniu arki Bożej i o śmierci jej teścia i męża, skuliła się i urodziła. Dosięgły ją bowiem bóle [porodowe].
௧௯பினெகாசின் மனைவியான அவனுடைய மருமகள் நிறைகர்ப்பிணியாக இருந்தாள்; அவள் தேவனுடைய பெட்டி பிடிபட்ட செய்தியையும், தன்னுடைய மாமனும் தன்னுடைய கணவனும் இறந்து போனதையும் கேள்விப்பட்டபோது, அவள் கர்ப்பவேதனைப்பட்டு குனிந்து பிரசவித்தாள்.
20 Gdy umierała, [kobiety], które były przy niej, powiedziały: Nie bój się, bo urodziłaś syna. Lecz ona nic nie odpowiedziała ani nie zwróciła [na to] uwagi.
௨0அவள் மரணமடையப்போகிற நேரத்தில் அவள் அருகே நின்ற பெண்கள்: நீ பயப்படாதே, ஆண்பிள்ளையைப் பெற்றாய் என்றார்கள்; அவளோ அதற்கு ஒன்றும் சொல்லவுமில்லை, அதின்மேல் சிந்தைவைக்கவுமில்லை.
21 I nazwała dziecko Ikabod, mówiąc: Odeszła chwała od Izraela – z powodu zabrania arki Boga i z powodu jej teścia i męża.
௨௧தேவனுடைய பெட்டி பிடிபட்டு, அவளுடைய மாமனும் அவளுடைய கணவனும் மரித்தபடியால், அவள்: மகிமை இஸ்ரவேலை விட்டுப் போயிற்று என்று சொல்லி, அந்தப் பிள்ளைக்கு இக்கபோத் என்று பெயரிட்டாள்.
22 Dlatego powiedziała: Odeszła chwała od Izraela, gdyż arka Boga została zabrana.
௨௨தேவனுடைய பெட்டி பிடிபட்டுப்போனபடியால், மகிமை இஸ்ரவேலை விட்டு விலகிப்போனது என்றாள்.

< I Samuela 4 >