< I Królewska 19 >
1 Wtedy Achab opowiedział Jezabel o wszystkim, co Eliasz uczynił, oraz o tym, jak zabił mieczem wszystkich proroków.
௧எலியா செய்த எல்லாவற்றையும், அவன் தீர்க்கதரிசிகள் எல்லோரையும் பட்டயத்தாலே கொன்றுபோட்ட செய்தி அனைத்தையும், ஆகாப் யேசபேலுக்கு அறிவித்தான்.
2 Jezabel wysłała więc posłańca do Eliasza ze słowami: Niech to mi uczynią bogowie i tamto dorzucą, jeśli jutro o tym czasie twojego życia nie uczynię takim jak życie jednego z nich.
௨அப்பொழுது யேசபேல் எலியாவிடம் ஆள் அனுப்பி: அவர்களிலே ஒவ்வொருவனுடைய உயிருக்கும் செய்யப்பட்டதுபோல, நான் நாளை இந்த நேரத்தில் உன்னுடைய உயிருக்குச் செய்யாமற்போனால், தெய்வங்கள் அதற்குச் சரியாகவும் அதற்கு அதிகமாகவும் எனக்குச் செய்யக்கடவர்கள் என்று சொல்லச் சொன்னாள்.
3 Kiedy to zrozumiał, wstał i odszedł, aby [ocalić] swoje życie. Przybył do Beer-Szeby, która należy do Judy, i zostawił tam swego sługę.
௩அவனுக்கு அது தெரிந்தபோது எழுந்து, தன்னுடைய உயிரைக் காப்பாற்ற யூதாவைச்சேர்ந்த பெயெர்செபாவுக்குப் புறப்பட்டுப்போய், தன்னுடைய வேலைக்காரனை அங்கே நிறுத்திவிட்டான்.
4 A sam poszedł na pustynię na jeden dzień drogi, a gdy tam doszedł, usiadł pod jałowcem i życzył sobie śmierci, mówiąc: Dosyć już, PANIE. Zabierz moją duszę, bo nie jestem lepszy od swoich ojców.
௪அவன் வனாந்திரத்தில் ஒருநாள் பயணம் போய், ஒரு சூரைச்செடியின் கீழ் உட்கார்ந்து, தான் சாகவேண்டும் என்று சொல்லி: போதும் யெகோவாவே, என்னுடைய ஆத்துமாவை எடுத்துக்கொள்ளும்; நான் என்னுடைய முன்னோர்களைவிட நல்லவன் இல்லை என்று சொல்லி,
5 Potem położył się i zasnął pod tym jałowcem. A wtedy Anioł dotknął go i powiedział mu: Wstań i jedz.
௫ஒரு சூரைச்செடியின்கீழேப் படுத்துத் தூங்கினான்; அப்பொழுது ஒரு தூதன் அவனைத் தட்டி எழுப்பி: எழுந்து சாப்பிடு என்றான்.
6 A gdy spojrzał, oto przy jego głowie leżał placek pieczony na węgielkach i dzban wody. Jadł więc i pił, i znowu się położył.
௬அவன் விழித்துப் பார்த்தபோது, இதோ, நெருப்பில் சுடப்பட்ட அப்பமும், ஒரு பாத்திரத்தில் தண்ணீரும் அவனுடைய தலைமாட்டில் இருந்தது; அப்பொழுது அவன், சாப்பிட்டுக் குடித்துத் திரும்பவும் படுத்துக்கொண்டான்.
7 Anioł PANA wrócił ponownie, dotknął go i powiedział: Wstań i jedz, bo masz przed sobą daleką drogę.
௭யெகோவாவுடைய தூதன் திரும்ப இரண்டாவதுமுறையும் வந்து அவனைத் தட்டியெழுப்பி: எழுந்து சாப்பிடு; நீ போகவேண்டிய பயணம் வெகுதூரம் என்றான்.
8 Wstał więc i jadł, i pił, i szedł dzięki mocy tego pokarmu czterdzieści dni i czterdzieści nocy aż do Horebu, góry Boga.
௮அப்பொழுது அவன் எழுந்து சாப்பிட்டுக் குடித்து, அந்த உணவின் பெலத்தினால் 40 நாட்கள் இரவும் பகலும் ஓரேப் என்னும் தேவனுடைய மலைவரையும் நடந்துபோனான்.
9 Tam wszedł do jaskini, gdzie przenocował. A oto słowo PANA doszło do niego: Co tu robisz, Eliaszu?
௯அங்கே அவன் ஒரு குகைக்குள் போய்த் தங்கினான்; இதோ, யெகோவாவுடைய வார்த்தை அவனுக்கு உண்டாகி, அவர்: எலியாவே, இங்கே நீ என்ன செய்கிறாய் என்றார்.
10 Odpowiedział: Byłem bardzo gorliwy względem PANA, Boga zastępów. Synowie Izraela bowiem porzucili twoje przymierze, zburzyli twoje ołtarze i pomordowali mieczem twoich proroków. Ja sam tylko pozostałem i szukają mojej duszy, aby mi ją odebrać.
௧0அதற்கு அவன்: சேனைகளின் தேவனாகிய யெகோவாக்காக மிகவும் பக்திவைராக்கியமாக இருந்தேன்; இஸ்ரவேல் மக்கள் உமது உடன்படிக்கையைத் தள்ளிவிட்டார்கள்; உம்முடைய பலிபீடங்களை இடித்து, உம்முடைய தீர்க்கதரிசிகளைப் பட்டயத்தினால் கொன்றுபோட்டார்கள்; நான் ஒருவன் மட்டும் மீதியாக இருக்கிறேன்; என்னுடைய உயிரையும் எடுக்கத் தேடுகிறார்கள் என்றான்.
11 Wtedy on powiedział: Wyjdź, stań na górze przed PANEM. A oto PAN przechodził, a potężny i gwałtowny wiatr rozrywał góry i kruszył skały przed PANEM, [ale] PAN nie był w tym wietrze. Po wietrze było trzęsienie ziemi, [ale] PAN nie był i w tym trzęsieniu ziemi.
௧௧அப்பொழுது அவர்: நீ வெளியே வந்து யெகோவாவுக்கு முன்பாக மலையின்மேல் நில் என்றார்; அப்பொழுது, இதோ, யெகோவா கடந்துபோனார்; யெகோவாவுக்கு முன்பாகப் மலைகளைப் பிளக்கிறதும் பாறைகளை உடைக்கிறதுமான பலத்த பெருங்காற்று உண்டானது; ஆனாலும் அந்தக் காற்றிலே யெகோவா இருக்கவில்லை; காற்றுக்குப்பின்பு பூமி அதிர்ச்சி உண்டானது; பூமி அதிர்ச்சியிலும் யெகோவா இருக்கவில்லை.
12 Po trzęsieniu ziemi był ogień, [ale] PAN nie był w ogniu. A po tym ogniu był cichy i delikatny głos.
௧௨பூமி அதிர்ச்சிக்குப் பின்பு அக்கினி உண்டானது; அக்கினியிலும் யெகோவா இருக்கவில்லை; அக்கினிக்குப்பின்பு அமைதியான மெல்லிய சத்தம் உண்டானது.
13 Gdy Eliasz go usłyszał, zasłonił płaszczem swoją twarz, wyszedł i stanął u wejścia do jaskini. A oto głos przemówił do niego: Co tu robisz, Eliaszu?
௧௩அதை எலியா கேட்டபோது, தன்னுடைய சால்வையால் தன்னுடைய முகத்தை மூடிக்கொண்டு வெளியே வந்து, குகையின் வாசலில் நின்றான். அப்பொழுது, இதோ, எலியாவே, இங்கே நீ என்ன செய்கிறாய் என்கிற சத்தம் அவனுக்கு உண்டானது.
14 A on odpowiedział: Byłem bardzo gorliwy względem PANA, Boga zastępów. Synowie Izraela bowiem porzucili twoje przymierze, zburzyli twoje ołtarze i pomordowali mieczem twoich proroków. Ja sam tylko pozostałem i szukają mojej duszy, aby mi ją odebrać.
௧௪அதற்கு அவன்: சேனைகளின் தேவனாகிய யெகோவாவுக்காக மிகவும் பக்திவைராக்கியமாக இருந்தேன்; இஸ்ரவேல் மக்கள் உமது உடன்படிக்கையைத் தள்ளிவிட்டார்கள்; உம்முடைய பலிபீடங்களை இடித்து, உம்முடைய தீர்க்கதரிசிகளைப் பட்டயத்தால் கொன்றுபோட்டார்கள், நான் ஒருவன் மட்டும் மீதியாக இருக்கிறேன்; என்னுடைய உயிரையும் எடுக்கத் தேடுகிறார்கள் என்றான்.
15 Ale PAN powiedział do niego: Idź, wróć tą samą drogą na pustynię Damaszku. A kiedy [tam] przybędziesz, namaścisz Chazaela na króla nad Syrią.
௧௫அப்பொழுது யெகோவா அவனைப் பார்த்து: நீ தமஸ்குவின் வழியாக வனாந்திரத்திற்குத் திரும்பிப்போய், ஆசகேலைச் சீரியாவின்மேல் ராஜாவாக அபிஷேகம்செய்து,
16 A Jehu, syna Nimsziego, namaścisz na króla nad Izraelem. Elizeusza zaś, syna Szafata, z Abel-Mechola, namaścisz na proroka po tobie.
௧௬பின்பு நிம்சியின் மகனாகிய யெகூவை இஸ்ரவேலின்மேல் ராஜாவாக அபிஷேகம்செய்து, ஆபேல் மெகொலா ஊரானான சாப்பாத்தின் மகனாகிய எலிசாவை உன்னுடைய இடத்திலே தீர்க்கதரிசியாக அபிஷேகம்செய்.
17 I stanie się tak, że ktokolwiek uniknie miecza Chazaela, tego zabije Jehu, a ktokolwiek uniknie miecza Jehu, [tego] zabije Elizeusz.
௧௭சம்பவிப்பதாவது: ஆசகேலின் பட்டயத்திற்குத் தப்பினவனை யெகூ கொன்றுபோடுவான்; யெகூவின் பட்டயத்திற்குத் தப்பினவனை எலிசா கொன்றுபோடுவான்.
18 Jednak zachowałem sobie w Izraelu siedem tysięcy, których kolana nie zginały się przed Baalem i których usta nie całowały go.
௧௮ஆனாலும் பாகாலுக்கு முடங்காதிருக்கிற முழங்கால்களையும், அவனை முத்தம்செய்யாமலிருக்கிற வாய்களையும் உடைய ஏழாயிரம்பேரை இஸ்ரவேலிலே மீதியாக வைத்திருக்கிறேன் என்றார்.
19 Odszedł więc stamtąd i znalazł Elizeusza, syna Szafata, gdy orał. Dwanaście zaprzęgów [wołów szło] przed nim, a on [był] przy dwunastym. Eliasz przeszedł obok niego i wrzucił na niego swój płaszcz.
௧௯அப்படியே அவன் அந்த இடத்தைவிட்டுப் புறப்பட்டுப்போய், பன்னிரண்டு ஏர்களைப்பூட்டி உழுத சாப்பாத்தின் மகனாகிய எலிசாவைக் கண்டான்; அவன் 12 ஆம் ஏரை ஓட்டிக்கொண்டிருந்தான்; எலியா அவன் இருக்கும் இடம்வரை போய், அவன்மேல் தன்னுடைய சால்வையைப் போட்டான்.
20 Wtedy opuścił woły, pobiegł za Eliaszem i powiedział: Pozwól mi ucałować swego ojca i swoją matkę, a pójdę za tobą. Odpowiedział: Idź, wróć. Cóż bowiem ci uczyniłem?
௨0அப்பொழுது அவன் மாடுகளைவிட்டு, எலியாவின் பின்னே ஓடி: நான் என்னுடைய தகப்பனையும் என்னுடைய தாயையும் முத்தம்செய்ய உத்திரவு கொடும், அதற்குப்பின்பு உம்மைப் பின்தொடர்வேன் என்றான். அதற்கு அவன்: போய்த் திரும்பிவா; நான் உனக்குச் செய்ததை நினைத்துக்கொள் என்றான்.
21 Odszedł więc od niego, wziął zaprzęg wołów i zabił je. A na sprzęcie tych wołów ugotował ich mięso i dał ludowi, a oni jedli. Potem wstał i poszedł za Eliaszem, i służył mu.
௨௧அப்பொழுது அவன் இவனை விட்டுப் போய், ஒரு ஏர் மாடுகளைப் பிடித்து அடித்து, ஏரின் மரங்களால் அவைகளின் இறைச்சியைச் சமைத்து மக்களுக்குக் கொடுத்தான்; அவர்கள் சாப்பிட்டபிறகு, அவன் எழுந்து, எலியாவுக்குப் பின்னேசென்று அவனுக்கு பணிவிடைசெய்தான்.