< I Kronik 26 >

1 Co do zmiany odźwiernych: z Korachitów był Meszelemiasz, syn Koracha, z synów Asafa.
ஆலயத்தின் வாசல்காக்கிறவர்களின் பிரிவுகளாவன: கோராகியர்கள் சந்ததியான ஆசாபின் சந்ததியிலே கோரேயின் மகன் மெஷெலேமியா என்பவன்,
2 A z synów Meszelemiasza: pierworodny Zachariasz, drugi Jediael, trzeci Zebadiasz, czwarty Jatniel;
மெஷெலேமியாவின் மகன்கள் மூத்தவனாகிய சகரியாவும்,
3 Piąty Elam, szósty Jehochanan, siódmy Elioenaj.
யெதியாயேல், செபதியா, யதனியேல், ஏலாம், யோகனான், எலியோனாய் என்னும் இரண்டாம் மூன்றாம் நான்காம் ஐந்தாம் ஆறாம் ஏழாம் மகன்களும்,
4 A z synów Obed-Edoma: pierworodny Szemajasz, drugi Jehozabad, trzeci Joach, czwarty Sakar, piąty Netaneel;
ஓபேத்ஏதோமின் மகன்கள் மூத்தவனாகிய செமாயாவும்,
5 Szósty Ammiel, siódmy Issachar, ósmy Peulletaj. Bóg bowiem mu błogosławił.
யோசபாத், யோவாக், சாக்கார், நெதனெயேல், அம்மியேல், இசக்கார், பெயுள்தாயி என்னும் இரண்டாம் மூன்றாம் நான்காம் ஐந்தாம் ஆறாம் ஏழாம் எட்டாம் மகன்களுமே; தேவன் அவனை ஆசீர்வதித்திருந்தார்.
6 Również jego synowi Szemajaszowi urodzili się synowie, którzy rządzili swoim rodem. [Byli] bowiem bardzo dzielnymi ludźmi.
அவனுடைய மகனாகிய செமாயாவுக்கும் மகன்கள் பிறந்து, அவர்கள் பெலசாலிகளாக இருந்து, தங்களுடைய தகப்பன் குடும்பத்தார்களை ஆண்டார்கள்.
7 Synowie Szemajasza: Otni, Rafael, Obed, Elzabad i ich bracia, ludzie mocni – Elihu i Semakiasz.
செமாயாவுக்கு இருந்த மகன்கள் ஒத்னியும், பெலசாலிகளாகிய ரெப்பாயேல், ஓபேத், எல்சபாத் என்னும் அவனுடைய சகோதரர்களும், எலிகூவும் செமகியாவுமே.
8 Wszyscy ci byli z synów Obed-Edoma, oni, ich synowie i bracia, mężczyźni bardzo mocni i zdolni do służby, razem sześćdziesięciu dwóch z Obed-Edoma.
ஓபேத்ஏதோமின் சந்ததிகளும் அவர்களுடைய மகன்களும், சகோதரர்களுமாகிய ஊழியத்திற்குப் பலத்த பெலசாலிகளான அவர்களெல்லோரும் அறுபத்திரண்டுபேர்.
9 I Meszelemiasz miał synów i braci, ludzi mocnych – osiemnastu.
மெஷெலேமியாவின் மகன்களும், சகோதரர்களுமான பெலசாலிகள் பதினெட்டுபேர்.
10 Również Chosa, [który był] z synów Merariego, miał synów: Szimri zwierzchnik, bo chociaż nie był pierworodnym, jego ojciec ustanowił go zwierzchnikiem;
௧0மெராரியின் மகன்களில் ஓசா என்பவனுடைய மகன்கள்: சிம்ரி என்னும் தலைவன்; இவன் மூத்தவனாக இல்லாவிட்டாலும் இவனுடைய தகப்பன் இவனைத் தலைவனாக வைத்தான்.
11 Drugi Chilkiasz, trzeci Tebaliasz, czwarty Zachariasz. Wszystkich synów i braci Chosy [było] trzynastu.
௧௧இல்க்கியா, தெபலியா, சகரியா என்னும் இரண்டாம் மூன்றாம் நான்காம் மகன்களானவர்கள்; ஓசாவின் மகன்களும் சகோதரர்களும் எல்லாம் பதின்மூன்றுபேர்.
12 Spośród nich wyznaczono zmiany odźwiernych, spośród naczelników, którzy [pełnili] straż na przemian ze swoimi braćmi przy służbie w domu PANA.
௧௨காவல்காரர்களான தலைவரின்கீழ்த் தங்கள் சகோதரர்களுக்கு ஒத்த முறையாகக் யெகோவாவுடைய ஆலயத்தில் வாசல்காக்கிறவர்களாக பணிவிடை செய்ய இவர்கள் பிரிக்கப்பட்டு,
13 I rzucali losy o każdą bramę, tak mały, jak i wielki, według swoich rodów.
௧௩தங்கள் பிதாக்களின் குடும்பத்தார்களாகிய சிறியவர்களும், பெரியவர்களுமாக இன்ன வாசலுக்கு இன்னாரென்று சீட்டுப்போட்டுக்கொண்டார்கள்.
14 Los dla Szelemiasza padł na stronę wschodnią. Potem rzucili los dla jego syna Zachariasza, mądrego doradcy, i jego los padł na stronę północną;
௧௪கீழ்ப்புறத்திற்கு செலேமியாவுக்கு சீட்டு விழுந்தது; விவேகமுள்ள ஆலோசனைக்காரனாகிய சகரியா என்னும் அவனுடைய மகனுக்கு சீட்டு போட்டபோது, அவனுடைய சீட்டு வடபுறத்திற்கென்று விழுந்தது.
15 Dla Obed-Edoma – na południową, a jego synom [przypadła] składnica.
௧௫ஓபேத்ஏதோமுக்குத் தென்புறத்திற்கும், அவனுடைய மகன்களுக்கு அசுப்பீம் வீட்டிற்கும்,
16 Dla Szuppima i Chosy – na stronę zachodnią wraz z bramą Szalleket, przy drodze wiodącej ku górze, straż naprzeciw straży.
௧௬சூப்பீமுக்கும், ஓசாவுக்கும் மண்போட்டு உயர்த்தப்பட்ட வழியும் காவலுக்கு எதிர்காவலும் இருக்கிற மேற்புறமான வாசலுக்கும் சீட்டு விழுந்தது.
17 Od wschodu [było] sześciu Lewitów, od północy czterech na dzień, od południa czterech na dzień i przy składnicy po dwóch.
௧௭கிழக்கே லேவியர்களான ஆறுபேரும், வடக்கே பகலிலே நான்குபேர்களும், தெற்கே பகலிலே நான்குபேர்களும், அசுப்பீம் வீட்டின் அருகில் இரண்டிரண்டுபேர்களும்,
18 Przy Parbar na zachodzie: czterech przy drodze, [a] dwóch przy Parbar.
௧௮வெளிப்புறமான வாசல் அருகில் மேற்கே இருக்கிற உயர்ந்த வழிக்கு நான்குபேர்களும், வெளிப்புறமான வழியில் இரண்டுபேர்களும் வைக்கப்பட்டார்கள்.
19 Takie [są] zmiany odźwiernych spośród synów Koracha i spośród synów Merariego.
௧௯கோராகின் சந்ததிகளுக்குள்ளும், மெராரியின் சந்ததிகளுக்குள்ளும், வாசல் காக்கிறவர்களின் பிரிவுகள் இவைகளே.
20 A z [pozostałych] Lewitów Achiasz [postawiony był] nad skarbcami domu Bożego i nad skarbcami rzeczy poświęconych.
௨0மற்ற லேவியர்களில் அகியா என்பவன் தேவனுடைய ஆலயத்துப் பொக்கிஷங்களையும், பிரதிஷ்டையாக்கப்பட்ட பொருள்களின் பொக்கிஷங்களையும் கவனிக்கிறவனுமாக.
21 Synowie Ladana, [którzy byli] z synów Gerszonity: z Ladana Gerszonity naczelnicy rodów, Jechiel.
௨௧லாதானின் மகன்கள் யாரென்றால், கெர்சோனியனான அவனுடைய மகன்களில் தலைமையான குடும்பத்தலைவர்களாக இருந்த யெகியேலியும்,
22 Synowie Jechiela: Zetam i jego brat Joel; [oni byli postawieni] nad skarbcami domu PANA.
௨௨யெகியேலியின் மகன்களாகிய சேத்தாமும், அவனுடைய சகோதரனாகிய யோவேலுமே; இவர்கள் யெகோவாவுடைய ஆலயத்துப் பொக்கிஷங்களை கவனிக்கிறவர்களாக இருந்தார்கள்.
23 Spośród Amramitów, Isharytów, Chebronitów i Uzzielitów:
௨௩அம்ராமியர்களிலும், இத்சாரியர்களிலும், எப்ரோனியர்களிலும், ஊசியேரியர்களிலும், சிலர் அப்படியே விசாரிக்கிறவர்களாக இருந்தார்கள்.
24 Szebuel, syn Gerszoma, syna Mojżesza, przełożony nad skarbcami.
௨௪மோசேயின் மகனாகிய கெர்சோமின் சந்ததியான செபுவேல் பொக்கிஷக் கண்காணியாக இருந்தான்.
25 A jego bracia, od strony Eliezera, to: jego syn Rechabiasz, jego syn Jeszajasz, jego syn Joram, jego syn Zikri i jego syn Szelomit.
௨௫எலியேசர் மூலமாக அவனுக்கு இருந்த சகோதரர்களானவர்கள், இவனுடைய மகன் ரெகபியாவும், இவனுடைய மகன் எஷாயாவும், இவனுடைய மகன் யோராமும், இவனுடைய மகன் சிக்ரியும், இவனுடைய மகன் செலோமித்துமே.
26 Szelomit i jego bracia [byli postawieni] nad wszystkimi skarbcami rzeczy poświęconych, które poświęcił król Dawid, naczelnicy rodów, tysiącznicy, setnicy i dowódcy wojska.
௨௬ராஜாவாகிய தாவீதும், ஆயிரம்பேருக்கு அதிபதிகளும், நூறுபேருக்கு அதிபதிகளுமான குடும்பத்தலைவர்களும், தளபதிகளும் யுத்தத்தில் அகப்பட்ட கொள்ளைகளில் எடுத்து,
27 [To, co] zdobyli z wojen i łupów, poświęcali na utrzymanie domu PANA.
௨௭யெகோவாவுடைய ஆலயத்தைப் பழுது பார்க்கும்படி பரிசுத்தம் என்று நேர்ந்துகொண்ட பொருள்களின் பொக்கிஷங்களையெல்லாம் அந்த செலோமித்தும் அவனுடைய சகோதரர்களும் கவனித்தார்கள்.
28 I wszystko, co poświęcił Samuel, widzący, [a także] Saul, syn Kisza, Abner, syn Nera, i Joab, syn Serui, oraz wszystko, co zostało poświęcone, [było] pod opieką Szelomita i jego braci.
௨௮தீர்க்கதரிசியாகிய சாமுவேலும், கீசின் மகனாகிய சவுலும், நேரின் மகனாகிய அப்னேரும், செருயாவின் மகனாகிய யோவாபும், அவரவர் பரிசுத்தம் என்று நேர்ந்துகொண்ட அனைத்தும் செலோமித்தின் கையின்கீழும் அவனுடைய சகோதரர்கள் கையின்கீழும் இருந்தது.
29 Spośród Isharytów: Kenaniasz i jego synowie [zajmowali się] sprawami zewnętrznymi Izraela jako urzędnicy i sędziowie.
௨௯இத்சாரியர்களில் கெனானியாவும் அவனுடைய மகன்களும் தேசகாரியங்களைப் பார்க்கும்படி வைக்கப்பட்டு, இஸ்ரவேலின்மேல் விசாரிப்புக்காரர்களும் அலுவலர்களுமாகவும் இருந்தார்கள்.
30 Spośród Chebronitów: Chaszabiasz i jego bracia, ludzie dzielni, [było ich] tysiąc siedemset przełożonych nad Izraelem po zachodniej stronie Jordanu, odpowiadali za każdą sprawę PANA i służbę dla króla.
௩0எப்ரோனியர்களில் அஷபியாவும் அவனுடைய சகோதரர்களுமாகிய ஆயிரத்து எழுநூறு பெலசாலிகள் யோர்தானுக்கு இந்தப்பக்கம் மேற்கே இருக்கிற இஸ்ரவேலின்மேல் யெகோவாவுடைய எல்லா ஊழியத்திற்கும் ராஜாவின் வேலைக்கும் வைக்கப்பட்டார்கள்.
31 Spośród Chebronitów [pochodził] Jeriasz, naczelnik Chebronitów, według rodowodów jego ojców. W czterdziestym roku panowania Dawida szukano i znaleziono pośród nich bardzo dzielnych ludzi w Jazer w Gileadzie.
௩௧எப்ரோனியர்களில் எரியாவும் இருந்தான்; அவனுடைய குடும்பத்தார்களின் வம்சங்களான எப்ரோனியரில் தலைவனாக இருந்தவன்; தாவீது அரசாண்ட நாற்பதாம் வருடத்திலே அவர்கள் தேடப்பட்டபோது அவர்களுக்குள்ளே கீலேயாத்தேசத்து யாசேரிலே மிகுந்த பலமுள்ள வீரர்கள் காணப்பட்டார்கள்.
32 A jego braci, ludzi dzielnych, [było] dwa tysiące siedmiuset naczelników rodów, których król Dawid ustanowił zwierzchnikami nad Rubenitami, nad Gadytami i nad połową pokolenia Manassesa, by byli odpowiedzialni za wszystkie sprawy Boże i sprawy króla.
௩௨பெலசாலிகளாகிய அவனுடைய சகோதரர்கள் இரண்டாயிரத்து எழுநூறு முதன்மை தலைவர்களாக இருந்தார்கள்; அவர்களைத் தாவீது ராஜா தேவனுடைய எல்லாக் காரியத்திற்காகவும், ராஜாவின் காரியத்திற்காகவும், ரூபனியர்கள்மேலும், காத்தியர்கள்மேலும், மனாசேயின் பாதிக்கோத்திரத்தின்மேலும் வைத்தான்.

< I Kronik 26 >