< Psalmów 57 >
1 Przedniejszemu śpiewakowi, jako: Nie zatracaj, złoty psalm Dawidowy, kiedy uciekał przed Saulem do jaskini. Zmiłuj się nademną, o Boże! zmiłuj się nademną; albowiem w tobie ufa dusza moja, a do cienia skrzydeł twoich uciekam się; aż przeminie utrapienie.
௧தாவீது அளித்த பாடல்களில் ஒன்று. எனக்கு இரங்கும், தேவனே, எனக்கு இரங்கும்; உம்மை என்னுடைய ஆத்துமா சார்ந்துகொள்கிறது; பிரச்சனைகள் கடந்துபோகும்வரை உமது சிறகுகளின் நிழலிலே வந்து அடைவேன்.
2 Będę wołał do Boga najwyższego, do Boga, który wykonywa sprawę moję.
௨எனக்காக யாவையும் செய்து முடிக்கப்போகிற தேவனாகிய உன்னதமான தேவனை நோக்கிக் கூப்பிடுவேன்.
3 On pośle z nieba, i wybawi mię od pohańbienia tego, który mię chce pochłonąć. (Sela) Pośle mi Bóg miłosierdzie swoje i prawdę swą.
௩என்னை விழுங்கப்பார்க்கிறவன் என்னை சபிக்கும்போது, அவர் பரலோகத்திலிருந்து ஒத்தாசை அனுப்பி, என்னைக் காப்பாற்றுவார்: (சேலா) தேவன் தமது கிருபையையும் தமது சத்தியத்தையும் அனுப்புவார்.
4 Dusza moja jest w pośród lwów; leżę miedzy palącymi, między synami ludzkimi, których zęby jako włócznie i strzały, i język ich miecz ostry.
௪என்னுடைய ஆத்துமா சிங்கங்களின் நடுவில் இருக்கிறது; தீயை இறைக்கிற மனிதர்களுக்குள்ளே கிடக்கிறேன்; அவர்கள் பற்கள் ஈட்டிகளும் அம்புகளும், அவர்கள் நாவு கூர்மையான வாளாக இருக்கிறது.
5 Wywyżże się nad niebiosa, o Boże! a nade wszystką ziemią chwała twoja.
௫தேவனே, வானங்களுக்கு மேலாக உயர்ந்தருளும்; உமது மகிமை பூமியனைத்தின்மேலும் உயர்ந்திருப்பதாக.
6 Sieci zastawili na nogi moje, nachylili duszę moję, wykopali dół przed obliczem mojem; ale sami wpadli weń. (Sela)
௬என்னுடைய கால்களுக்குக் கண்ணியை வைத்திருக்கிறார்கள்; என்னுடைய ஆத்துமா தவிக்கிறது; எனக்கு முன்பாகக் குழியை வெட்டி, அதின் நடுவிலே விழுந்தார்கள் (சேலா)
7 Gotowe jest serce moje, Boże! gotowe jest serce moje; śpiewać i wychwalać cię będę.
௭என்னுடைய இருதயம் ஆயத்தமாக இருக்கிறது, தேவனே, என்னுடைய இருதயம் ஆயத்தமாக இருக்கிறது; நான் பாடிப் புகழுவேன்.
8 Ocuć się chwało moja! ocuć się, lutnio i harfo! gdy na świtaniu powstaję.
௮என்னுடைய மனமே, விழி; வீணையே, சுரமண்டலமே, விழியுங்கள்; அதிகாலையில் விழித்துக்கொள்வேன்.
9 Będę cię wysławiał między ludem, Panie! a będęć śpiewał między narodami.
௯ஆண்டவரே, மக்களுக்குள்ளே உம்மைத் துதிப்பேன்; தேசங்களுக்குள்ளே உம்மைப் புகழ்ந்து பாடுவேன்.
10 Albowiem wielkie jest aż do niebios miłosierdzie twoje, i aż pod obłoki prawda twoja.
௧0உமது கிருபை வானம்வரையும், உமது சத்தியம் மேகமண்டலங்கள்வரையும் எட்டுகிறது.
11 Wywyżże się nad niebiosa, o Boże! a nade wszystką ziemię wywyż chwałę twoję.
௧௧தேவனே, வானங்களுக்கு மேலாக உயர்ந்தருளும்; உமது மகிமை பூமியனைத்தின்மேலும் உயர்ந்திருப்பதாக.