< Psalmów 49 >
1 Przedniejszemu śpiewakowi z synów Korego psalm. Słuchajcie tego wszystkie narody; bierzcie to w uszy wszyscy mieszkający na okręgu ziemi!
கோராகின் மகன்களிலுள்ள பாடகர் குழுத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட சங்கீதம். மக்களே, நீங்கள் எல்லோரும் இதைக் கேளுங்கள், இந்த உலகத்தில் வாழ்கிறவர்களே,
2 Tak z ludu pospolitego, jako z ludzi zacnych, tak bogaty jako ubogi!
தாழ்ந்தோரே, உயர்ந்தோரே, செல்வந்தரே, ஏழைகளே, எல்லோரும் ஒருமித்துச் செவிகொடுங்கள்:
3 Usta moje będą opowiadały mądrość, a myśl serca mego roztropność.
என் வாய் ஞானமுள்ள வார்த்தைகளைப் பேசும்; என் இருதயத்திலிருந்து வரும் தியானம் விளங்கிக்கொள்ளும் ஆற்றலைக் கொடுக்கும்.
4 Nakłonię do przypowieści ucha mego, wyłożę przy harfie zagadkę moję.
நான் பழமொழிக்கு என் செவியைச் சாய்ப்பேன்; விடுகதையை யாழ் இசைத்து விவரிப்பேன்:
5 Przeczże się mam bać we złe dni, aby mię nieprawość tych, którzy mię depczą, miała ogarnąć?
தீங்கு நாட்கள் வரும்போதும், கொடிய ஏமாற்றுக்காருடைய அக்கிரமம் என்னைச் சூழ்ந்துகொள்ளும்போதும் நான் ஏன் பயப்படவேண்டும்?
6 Którzy ufają bogactwom swoim, a w mnóstwie dostatków swoich chlubią się.
அவர்கள் தங்கள் செல்வத்தில் நம்பிக்கை வைத்து, தங்கள் மிகுதியான உடைமைகளில் பெருமை பாராட்டுகிறார்கள்.
7 Gdyż brata swego nikt żadnym sposobem nie odkupi, ani może dać Bogu okupu jego zań.
ஒருவனாலும் இன்னொருவனுடைய உயிரை மீட்கமுடியாது; அவனுக்கான மீட்பின் பதிலீட்டை இறைவனுக்குக் கொடுக்கவும் முடியாது.
8 (Albowiem drogi jest okup duszy ich, i nie może się ostać na wieki.)
ஏனெனில் உயிருக்கான மீட்பின் பதிலீடு விலையுயர்ந்தது; எந்த விலை கொடுத்தும் மீட்கமுடியாது.
9 Aby żył na wieki, a nie oglądał grobu.
அவர்கள் அழிவைக் காணாமல் என்றென்றும் வாழும்படி எப்படிப்பட்ட விலையும் கொடுக்க முடியாது.
10 Bo widzimy, iż i mądrzy umierają, głupi i szalony zarówno giną, a zostawiają, obcym bogactwa swoje.
ஞானிகள் சாவதையும், மூடரும் புத்தியற்றவர்களும் அழிவதையும் எல்லோராலும் காணமுடியும்; அவர்கள் தங்கள் செல்வத்தை மற்றவர்களுக்கு விட்டுச் செல்வதைக் காணலாம்.
11 Myślą, że domy ich są wieczne, a przybytki ich trwają od narodu do narodu; przetoż je nazywają od imion swych na ziemi.
தங்கள் பெயர்களையே அவர்கள் நிலங்களுக்கு வைத்தாலும், அவர்களுடைய கல்லறைகளே என்றென்றைக்கும் அவர்கள் வீடாகவும் முடிவற்ற தலைமுறைகளுக்கு அவர்களுடைய தங்குமிடமாகவும் நிலைத்திருக்கும்.
12 Ale człowiek we czci nie zostaje, podobnym będąc bydlętom, które giną.
ஆனாலும் மக்கள் நன்மதிப்பிலே நிலைத்திருக்கிறதில்லை; அவர்கள் அழிந்துபோகும் மிருகங்களைப்போலவே இருக்கிறார்கள்.
13 Takowa myśl ich głupstwem ich jest, a przecież potomkowie ich pochwalają to usty swemi. (Sela)
தங்களிலேயே நம்பிக்கை வைக்கிறவர்களின் முடிவு இதுவே; இவர்கள் சொல்வதையெல்லாம் கேட்டுப் பின்பற்றுகிறவர்களின் நிலையும் அதுவே.
14 Jako owce w grobie złożeni będą, śmierć ich strawi; ale sprawiedliwi panować będą nad nimi z poranku, a kształt ich zniszczony będzie w grobie, gdy ustąpią z mieszkania swego. (Sheol )
அவர்கள் செம்மறியாடுகளைப்போல சாவுக்கென்றே நியமிக்கப்பட்டுள்ளார்கள்; மரணம் அவர்களின் மேய்ப்பனாயிருக்கும். நீதிமான்கள் காலையில் அவர்களை ஆளுகை செய்வார்கள்; அவர்கள் அரண்மனையில் நிலைத்திராமல், கல்லறை அவர்களுடைய உருவத்தை அழித்துவிடும். (Sheol )
15 Ale Bóg wykupi duszę moję z mocy grobu, gdy mię przyjmie. (Sela) (Sheol )
ஆனால், இறைவனோ என் உயிரைப் பாதாளத்திலிருந்து மீட்டுக்கொள்வார்; அவர் நிச்சயமாக என்னைத் தம்மிடத்தில் ஏற்றுக்கொள்வார். (Sheol )
16 Nie bójże się, gdy się kto zbogaci, a gdy się rozmnoży sława domu jego.
பிறர் செல்வந்தர்களாகி, அவர்கள் வீட்டின் செழிப்பு அதிகரிக்கும்போது, திடுக்கிடாதே;
17 Bo umierając nie weźmie nic z sobą, ani za nim zstąpi sława jego.
ஏனெனில் அவர்கள் சாகும்போது, தம்முடன் ஒன்றையும் கொண்டுபோகமாட்டார்கள்; அவர்களுடைய செழிப்பும் அவர்களைப் பின்தொடராது.
18 A choć duszy swej za żywota swego pobłaża i chwalono go, gdy sobie dobrze czynił:
அவர்கள் உயிரோடிருந்தபோது, தங்களை ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் என்று எண்ணினார்கள். அவர்கள் செழிப்படைந்து இருக்கும்போது மனிதர் அவர்களைப் புகழ்ந்தார்கள்.
19 Przecież musi iść za rodziną ojców swych, a na wieki nie ogląda światłości.
ஆனால் அவர்கள் தங்களுடைய முன்னோர்களைப் போலவே மரிப்பார்கள்; வாழ்வின் ஒளியை இனி ஒருபோதும் காணமாட்டார்கள்.
20 Owóż człowiek, który jest we czci, a nie zrozumiewa tego, podobny jest bydlętom, które giną.
செல்வந்தராயிருந்தும் அறிவு இல்லாதிருந்தால் அவர்கள் அழிந்துபோகும் மிருகத்தைப் போல் இருக்கிறார்கள்.