< Psalmów 139 >

1 Przedniejszemu śpiewakowi psalm Dawidowy. Panie! doświadczyłeś i doznałeś mię.
இராகத்தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட தாவீதின் பாடல். யெகோவாவே, நீர் என்னை ஆராய்ந்து, அறிந்திருக்கிறீர்.
2 Tedy znasz siedzenie moje, i powstanie moje, wyrozumiewasz myśli moje z daleka.
என்னுடைய உட்காருதலையும் என்னுடைய எழுந்திருக்குதலையும் நீர் அறிந்திருக்கிறீர்; என்னுடைய நினைவுகளைத் தூரத்திலிருந்து அறிகிறீர்.
3 Tyś chodzenie moje i leżenie moje ogarnął, świadomeś wszystkich dróg moich.
நான் நடந்தாலும் படுத்திருந்தாலும் என்னைச் சூழ்ந்திருக்கிறீர்; என்னுடைய வழிகளெல்லாம் உமக்குத் தெரியும்.
4 Nim przyjdzie słowo na język mój, oto Panie! ty to wszystko wiesz.
என்னுடைய நாவில் சொல் உருவாகுமுன்னே, இதோ, யெகோவாவே, அதையெல்லாம் நீர் அறிந்திருக்கிறீர்.
5 Z tyłu i z przodku otoczyłeś mię, a położyłeś na mię rękę twoję.
முற்புறத்திலும் பிற்புறத்திலும் நீர் என்னை நெருக்கி, உமது கரத்தை என்மேல் வைக்கிறீர்.
6 Dziwniejsza umiejętność twoja nad dowcip mój; wysoka jest, nie mogę jej pojąć.
இந்த அறிவு எனக்கு மிகுந்த ஆச்சரியமும், எனக்கு எட்டாத உயரமுமாக இருக்கிறது.
7 Dokąd ujdę przed duchem twoim? a dokąd przed obliczem twojem uciekę?
உம்முடைய ஆவிக்கு மறைவாக எங்கே போவேன்? உம்முடைய சமுகத்தைவிட்டு எங்கே ஓடுவேன்?
8 Jeźlibym wstąpił do nieba, jesteś tam; i jeźlibym sobie posłał w grobie, i tameś przytomny. (Sheol h7585)
நான் வானத்திற்கு ஏறினாலும், நீர் அங்கே இருக்கிறீர்; நான் பாதாளத்தில் படுக்கை போட்டாலும், நீர் அங்கேயும் இருக்கிறீர். (Sheol h7585)
9 Wziąłlibym skrzydła rannej zorzy, abym mieszkał na końcu morza,
நான் விடியற்காலத்துச் இறக்கைகளை எடுத்து, கடலின் கடைசி எல்லைகளிலே போய்த் தங்கினாலும்,
10 I tamby mię ręka twoja prowadziła, a dosięgłaby mię prawica twoja.
௧0அங்கேயும் உமது கை என்னை நடத்தும், உமது வலதுகரம் என்னைப் பிடிக்கும்.
11 Albo rzekłlibym: Wżdyć ciemności zakryją mię; aleć i noc jest światłem około mnie,
௧௧இருள் என்னை மூடிக்கொள்ளுமென்றாலும், இரவும் என்னைச் சுற்றி வெளிச்சமாக இருக்கும்.
12 Gdyż i ciemności nic nie zakryją przed tobą; owszem tobie noc jako dzień świeci; ciemnościć są jako światłość.
௧௨உமக்கு மறைவாக இருளும் இருளாக இருக்காது; இரவும் பகலைப்போல வெளிச்சமாக இருக்கும்; உமக்கு இருளும் வெளிச்சமும் ஒன்றானது.
13 Ty zaiste w nocy masz nerki moje; okryłeś mię w żywocie matki mojej.
௧௩நீர் என்னுடைய சிந்தையைக் கைக்கொண்டிருக்கிறீர்; என்னுடைய தாயின் கர்ப்பத்தில் என்னைக் காப்பாற்றினீர்.
14 Wysławiam cię dlatego, że się zdumiewam strasznym i dziwnym sprawom twoim, a dusza moja zna je wybornie.
௧௪நான் பிரமிக்கத்தக்க அதிசயமாக உண்டாக்கப்பட்டதால், உம்மைத் துதிப்பேன்; உமது செயல்கள் அதிசயமானவைகள்; அது என்னுடைய ஆத்துமாவுக்கு நன்றாகத் தெரியும்.
15 Nie zataiła się żadna kość moja przed tobą, chociażem był uczyniony w skrytości, i misternie złożony w niskościach ziemi.
௧௫நான் ஒளிப்பிடத்திலே உண்டாக்கப்பட்டு, பூமியின் தாழ்விடங்களிலே விசித்திர விநோதமாக உருவாக்கப்பட்டபோது, என்னுடைய எலும்புகள் உமக்கு மறைவாக இருக்கவில்லை.
16 Niedoskonały płód ciała mego widziały oczy twoje; w księgi twoje wszystkie członki moje wpisane są, i dni, w których kształtowane były, gdy jeszcze żadnego z nich nie było.
௧௬என்னுடைய கருவை உம்முடைய கண்கள் கண்டது; என்னுடைய உறுப்புகளில் ஒன்றாகிலும் இல்லாதபோதே அவைகள் அனைத்தும், அவைகள் உருவேற்படும் நாட்களும், உமது புத்தகத்தில் எழுதியிருந்தது.
17 Przetoż o jako drogie są u mnie myśli twoje, Boże! a jako ich jest wielka liczba.
௧௭தேவனே, உமது ஆலோசனைகள் எனக்கு எத்தனை அருமையானவைகள்; அவைகளின் அளவு எவ்வளவு அதிகம்.
18 Jeźlibym je chciał zliczyć, nad piasek rozmnożyły się; ocucęli się, jeszczem ci ja z tobą.
௧௮அவைகளை நான் எண்ணப்போனால், மணலைவிட அதிகமாம்; நான் விழிக்கும்போது இன்னும் உம்மருகில் இருக்கிறேன்.
19 Zabiłlibyś, o Boże! niezbożnika, tedyćby mężowie krwawi odstąpili odemnie;
௧௯தேவனே, நீர் துன்மார்க்கனை அழித்தீரானால் நலமாக இருக்கும்; இரத்தப்பிரியர்களே, நீங்கள் என்னை விட்டு அகன்றுபோங்கள்.
20 Którzy mówią przeciwko tobie obrzydłości, którzy próżno wynoszą nieprzyjaciół twoich.
௨0அவர்கள் உம்மைக் குறித்துத் துன்மார்க்கமாகப் பேசுகிறார்கள்; உம்முடைய எதிரிகள் உமது பெயரை வீணாக வழங்குகிறார்கள்.
21 Izali tych, którzy cię w nienawiści mają, o Panie! niemam w nienawiści? a ci, którzy przeciwko tobie powstawają, izaż mi nie omierzli?
௨௧யெகோவாவே, உம்மைப் பகைக்கிறவர்களை நான் பகைக்காமலும், உமக்கு விரோதமாக எழும்புகிறவர்களை அருவருக்காமலும் இருப்பேனோ?
22 Główną nienawiścią nienawidzę ich, a mam ich za nieprzyjaciół.
௨௨முழுப்பகையாக அவர்களைப் பகைக்கிறேன்; அவர்களை எனக்குப் பகைவர்களாக நினைக்கிறேன்.
23 Wyszpieguj mię, Boże! a poznaj serce moje; doświadcz mię, a poznaj myśli moje,
௨௩தேவனே, என்னை ஆராய்ந்து, என்னுடைய இருதயத்தை அறிந்துகொள்ளும்; என்னைச் சோதித்து, என்னுடைய சிந்தனைகளை அறிந்துகொள்ளும்.
24 I obacz, jeźli droga odporności jest we mnie, a prowadź mię drogą wieczną.
௨௪வேதனை உண்டாக்கும் வழி என்னிடத்தில் உண்டோ என்று பார்த்து, நித்திய வழியிலே என்னை நடத்தும்.

< Psalmów 139 >