< Przysłów 14 >
1 Mądra niewiasta buduje dom swój; ale go głupia rękami swemi rozwala.
௧புத்தியுள்ள பெண் தன்னுடைய வீட்டைக் கட்டுகிறாள்; புத்தியில்லாத பெண்ணோ தன்னுடைய கைகளினால் அதை இடித்துப்போடுகிறாள்.
2 Kto chodzi w szczerości swojej, boi się Pana; ale przewrotny w drogach swoich gardzi nim.
௨நிதானமாக நடக்கிறவன் யெகோவாவுக்குப் பயப்படுகிறான்; தன்னுடைய வழிகளில் தாறுமாறானவனோ அவரை அலட்சியம்செய்கிறான்.
3 W ustach głupiego jest rózga hardości; ale wargi mądrych strzegą ich.
௩மூடன் வாயிலே அவனுடைய அகந்தைக்கு ஏற்ற கோல் உண்டு; ஞானவான்களின் உதடுகளோ அவர்களைக் காப்பாற்றும்.
4 Gdzie niemasz wołów, żłób jest próżny; ale siłą wołów mnoży się obfitość zboża.
௪எருதுகள் இல்லாத இடத்தில் களஞ்சியம் வெறுமையாக இருக்கும்; காளைகளின் பெலத்தினாலோ மிகுந்த வரத்துண்டு.
5 Świadek prawdziwy nie kłamie; ale świadek fałszywy mówi kłamstwo.
௫மெய்ச்சாட்சிக்காரன் பொய்சொல்லமாட்டான்; பொய்ச்சாட்சிக்காரனோ பொய்களை ஊதுகிறான்.
6 Naśmiewca szuka mądrości, a nie znajduje; ale umiejętność roztropnemu jest snadna.
௬பரியாசக்காரன் ஞானத்தைத் தேடியும் கண்டுபிடிக்கமாட்டான்; புத்தியுள்ளவனுக்கோ அறிவு லேசாகவரும்.
7 Idź precz od oblicza męża głupiego, gdyż nie znajdziesz przy nim warg umiejętności.
௭மூடனுடைய முகத்தைவிட்டு விலகிப்போ; அறிவுள்ள உதடுகளை அங்கே காணமாட்டாய்.
8 Mądrość ostrożnego jest rozumieć drogę swoję, ale głupstwo głupich jest zdrada.
௮தன்னுடைய வழியைச் சிந்தித்துக்கொள்வது விவேகியின் ஞானம்; மூடர்களுடைய வஞ்சனையோ மூடத்தனம்.
9 Każdy głupi nakrywa grzech, a między uprzejmymi mieszka przyjaźń.
௯மூடர்கள் பாவத்தைக்குறித்துப் பரியாசம்செய்கிறார்கள்; நீதிமான்களுக்குள்ளே தயவு உண்டு.
10 Serce każdego uznaje gorzkość duszy swojej, a do wesela jego nie przymięsza się obcy.
௧0இருதயத்தின் கசப்பு இருதயத்திற்கே தெரியும்; அதின் மகிழ்ச்சிக்கு அந்நியன் உடந்தை ஆகமாட்டான்.
11 Dom niezbożnych zgładzony będzie; ale przybytek cnotliwych zakwitnie.
௧௧துன்மார்க்கனுடைய வீடு அழியும்; செம்மையானவனுடைய கூடாரமோ செழிக்கும்.
12 Zda się pod czas droga być prosta człowiekowi; wszakże dokończenie jej jest drogą na śmierć.
௧௨மனிதனுக்குச் செம்மையாகத் தோன்றுகிற வழி உண்டு; அதின் முடிவோ மரணவழிகள்.
13 Także i w śmiechu boleje serce, a koniec wesela bywa smutek.
௧௩சிரிப்பிலும் மனதிற்குத் துக்கமுண்டு; அந்த மகிழ்ச்சியின் முடிவு சஞ்சலம்.
14 Drogami swemi nasyci się człowiek przewrotnego serca; ale się go chroni mąż dobry.
௧௪பின்வாங்கும் இருதயமுள்ளவன் தன்னுடைய வழிகளிலேயும், நல்ல மனிதனோ தன்னிலே தானும் திருப்தியடைவான்.
15 Prostak wierzy każdemu słowu; ale ostrożny zrozumiewa postępki swoje.
௧௫பேதையானவன் எந்த வார்த்தையையும் நம்புவான்; விவேகியோ தன்னுடைய நடையின்மேல் கவனமாக இருக்கிறான்.
16 Mądry się boi, i odstępuje od złego; ale głupi dociera, i śmiałym jest.
௧௬ஞானமுள்ளவன் பயந்து தீமைக்கு விலகுகிறான்; மதியீனனோ கடுங்கோபம்கொண்டு துணிகரமாக இருக்கிறான்.
17 Porywczy człowiek dopuszcza się głupstwa, a mąż złych myśli w nienawiści bywa.
௧௭முன்கோபி மதிகேட்டைச் செய்வான்; கெட்டச்சிந்தனைக்காரன் வெறுக்கப்படுவான்.
18 Głupstwo prostacy dziedzicznie trzymają; ale ostrożni bywają koronowani umiejętnością.
௧௮பேதையர்கள் புத்தியீனத்தைச் சுதந்தரிக்கிறார்கள்; விவேகிகளோ அறிவினால் முடிசூட்டப்படுகிறார்கள்.
19 źli się kłaniają przed dobrymi, a niepobożni stoją u drzwi sprawiedliwego.
௧௯தீயோர்கள் நல்லவர்களுக்கு முன்பாகவும், துன்மார்க்கர்கள் நீதிமான்களுடைய வாசற்படிகளிலும் குனிவதுண்டு.
20 Ubogi bywa i u przyjaciela swego w nienawiści; ale wiele jest tych, którzy bogatego miłują.
௨0தரித்திரன் தன்னைச் சேர்ந்தவனாலும் பகைக்கப்படுகிறான்; செல்வந்தனுக்கோ அநேக நண்பர்கள் உண்டு.
21 Bliźnim swym grzesznik pogardza; ale kto ma litość nad ubogimi, błogosławionym jest.
௨௧பிறனை அவமதிக்கிறவன் பாவம்செய்கிறான்; தரித்திரனுக்கு இரங்குகிறவனோ பாக்கியமடைவான்.
22 Izali nie błądzą, którzy wymyślają złe? a miłosierdzie i prawda należy tym, którzy wymyślają dobre.
௨௨தீமையை யோசிக்கிறவர்கள் தவறுகிறார்களல்லவோ? நன்மையை யோசிக்கிறவர்களுக்கோ கிருபையும் சத்தியமும் உண்டு.
23 W każdej pracy bywa pożytek; ale gołe słowo warg tylko do nędzy służy.
௨௩எல்லா உழைப்பினாலும் பயனுண்டு; உதடுகளின் பேச்சோ வறுமையை மட்டும் தரும்.
24 Bogactwo mądrych jest koroną ich; ale głupstwo głupich zostaje głupstwem.
௨௪ஞானிகளுக்கு முடி அவர்களுடைய செல்வம்; மூடர்களின் மதியீனம் மூடத்தனமே.
25 Świadek prawdziwy wyzwala duszę; ale fałszywy kłamstwo mówi.
௨௫மெய்ச்சாட்சி சொல்லுகிறவன் உயிர்களைக் காப்பாற்றுகிறான்; வஞ்சனைக்காரனோ பொய்களை ஊதுகிறான்.
26 Kto się boi Pana, ma ufanie mocne; a synowie jego ucieczkę mieć będą.
௨௬யெகோவாவுக்குப் பயப்படுகிறவனுக்குத் திடநம்பிக்கை உண்டு; அவனுடைய பிள்ளைகளுக்கும் அடைக்கலம் கிடைக்கும்.
27 Bojaźń Pańska jest źródło żywota ku uchronieniu się sideł śmierci.
௨௭யெகோவாவுக்குப் பயப்படுதல் வாழ்வு தரும் ஊற்று; அதினால் மரணக்கண்ணிகளுக்குத் தப்பலாம்.
28 W mnóstwie ludu jest zacność królewska; ale w trosze ludu zniszczenie hetmana.
௨௮மக்கள் கூட்டம் ராஜாவின் மகிமை; மக்கள்குறைவு தலைவனின் முறிவு.
29 Nierychły do gniewu jest bogaty w rozum; ale porywczy pokazuje głupstwo.
௨௯நீடிய சாந்தமுள்ளவன் மகாபுத்திமான்; முன்கோபியோ புத்தியீனத்தை விளங்கச்செய்கிறான்.
30 Serce zdrowe jest żywotem ciała; ale zazdrość jest zgniłością w kościach.
௩0சமாதானத்துடன் இருப்பது உடலுக்கு வாழ்வு; பொறாமையோ எலும்புருக்கி.
31 Kto ciemięży ubogiego, uwłacza stworzycielowi jego; ale go czci, kto ma litość nad ubogim.
௩௧தரித்திரனை ஒடுக்குகிறவன் அவனை உண்டாக்கினவரை நிந்திக்கிறான்; தரித்திரனுக்குத் தயவு செய்கிறவனோ அவரை மேன்மைப்படுத்துகிறான்;
32 Dla złości swojej wygnany bywa niepobożny; ale sprawiedliwy nadzieję ma i przy śmierci swojej.
௩௨துன்மார்க்கன் தன்னுடைய தீமையிலே வாரிக்கொள்ளப்படுவான்; நீதிமானோ தன்னுடைய மரணத்திலே நம்பிக்கையுள்ளவன்.
33 W sercu mądrego odpoczywa mądrość, ale wnet poznać, co jest w sercu głupich.
௩௩புத்திமானுடைய இருதயத்தில் ஞானம் தங்கும்; மதியீனர்களிடத்தில் உள்ளதோ வெளிப்படும்.
34 Sprawiedliwość wywyższa naród; ale grzech jest ku pohańbieniu narodów.
௩௪நீதி மக்களை உயர்த்தும்; பாவமோ எந்த மக்களுக்கும் இகழ்ச்சி.
35 Król łaskaw bywa na sługę roztropnego; ale się gniewa na tego, który mu hańbę czyni.
௩௫ராஜாவின் தயவு விவேகமுள்ள பணிவிடைக்காரன்மேல் இருக்கும்; அவனுடைய கோபமோ அவமானத்தை உண்டாக்குகிறவன்மேல் இருக்கும்.