< Liczb 17 >
1 Potem rzekł Pan do Mojżesza, mówiąc:
௧பின்பு யெகோவா மோசேயை நோக்கி:
2 Mów do synów Izraelskich, a weźmij od nich po lasce według domów ojców ich, to jest, od wszystkich książąt ich według domów ojców ich, dwanaście lasek, a każdego imię napiszesz na lasce jego;
௨“நீ இஸ்ரவேல் மக்களோடு பேசி, அவர்களுடைய பிதாக்களின் வம்சங்களாகிய ஒவ்வொரு வம்சத்தினுடைய பிரபுவினிடத்தில், ஒவ்வொரு கோலாகப் பன்னிரண்டு கோலை வாங்கி, அவனவன் கோலில் அவனவன் பெயரை எழுது.
3 Ale imię Aaronowe napiszesz na lasce Lewiego; bo każda laska będzie od każdego książęcia z domu ojców ich.
௩லேவியினுடைய கோலின்மேல் ஆரோனின் பெயரை எழுதவேண்டும்; அவர்களுடைய பிதாக்களின் ஒவ்வொரு வம்சத்தலைவனுக்காகவும் ஒவ்வொரு கோல் இருக்கவேண்டும்.
4 I zostawisz je w namiocie zgromadzenia przed świadectwem, gdzie się z wami schodzę.
௪அவைகளை ஆசரிப்புக் கூடாரத்திலே நான் உங்களைச் சந்திக்கும் இடமாகிய சாட்சிப்பெட்டிக்கு முன்னே வைக்கவேண்டும்.
5 I stanie się, kogo obiorę, tego laska zakwitnie; i uśmierzę przed sobą szemrania synów Izraelskich, któremi szemrzą przeciwko wam.
௫அப்பொழுது நான் தெரிந்துகொள்ளுகிறவனுடைய கோல் துளிர்க்கும்; இப்படி இஸ்ரவேல் மக்கள் உங்களுக்கு விரோதமாக முறுமுறுக்கிற அவர்கள் முறுமுறுப்பை என்னைவிட்டு ஒழியச்செய்வேன்” என்றார்.
6 To gdy Mojżesz mówił do synów Izraelskich, oddali mu wszyscy książęta ich laski swoje, każdy książę laskę z domu ojca swego, dwanaście lasek; a laska Aaronowa była między laskami ich.
௬இதை மோசே இஸ்ரவேல் மக்களோடு சொன்னான்; அப்பொழுது அவர்களுடைய பிரபுக்கள் எல்லோரும் தங்கள் பிதாக்களுடைய வம்சத்தின்படி ஒவ்வொரு பிரபுவுக்கு ஒவ்வொரு கோலாகப் பன்னிரண்டு கோல்களை அவனிடத்தில் கொடுத்தார்கள்; ஆரோனின் கோலும் அவர்களுடைய கோல்களுடனே இருந்தது.
7 I postawił mojżesz laski one przed Panem w namiocie świadectwa.
௭அந்தக் கோல்களை மோசே சாட்சியின் கூடாரத்திலே யெகோவாவுடைய சமுகத்தில் வைத்தான்.
8 A gdy nazajutrz przyszedł Mojżesz do namiotu świadectwa, oto się zazieleniła laska Aaronowa z domu Lewiego, i wypuściła listki i wydała kwiat, i zrodziła dojrzałe migdały.
௮மறுநாள் மோசே சாட்சியின் கூடாரத்திற்குள் நுழைந்தபோது, இதோ, லேவியின் குடும்பத்தாருக்கு இருந்த ஆரோனின் கோல் துளிர்த்திருந்தது; அது துளிர்விட்டு, பூப்பூத்து, வாதுமைப் பழங்களைக் கொடுத்தது.
9 I wyniósł Mojżesz one wszystkie laski od obliczności Pańskiej do wszystkich synów Izraelskich; które gdy ujrzeli, wziął każdy laskę swą.
௯அப்பொழுது மோசே யெகோவாவுடைய சமுகத்திலிருந்த அந்தக் கோல்களையெல்லாம் எடுத்து, இஸ்ரவேல் மக்கள் எல்லோரும் காண வெளியே கொண்டுவந்தான்; அவர்கள் கண்டு, அவரவர் தங்கள் தங்கள் கோல்களை வாங்கிக்கொண்டார்கள்.
10 I rzekł Pan do Mojżesza: Odnieś laskę Aaronową przed świadectwo, aby była zachowana na znak synom odpornym, a zahamujesz szemranie ich przeciwko mnie, aby nie pomarli.
௧0அப்பொழுது யெகோவா மோசேயை நோக்கி: “ஆரோனின் கோல் அந்தக் கலகக்காரர்களுக்கு விரோதமான அடையாளமாவதற்காக, அதைத் திரும்பவும் சாட்சிப்பெட்டிக்கு முன்னே கொண்டு போய் வை; இப்படி அவர்கள் எனக்கு விரோதமாக முறுமுறுப்பதை ஒழியச்செய்வாய், அப்பொழுது அவர்கள் சாகமாட்டார்கள்” என்றார்.
11 I uczynił Mojżesz; jako mu Pan rozkazał, tak uczynił.
௧௧யெகோவா தனக்குக் கட்டளையிட்டபடியே மோசே செய்தான்.
12 I rzekli synowie Izraelscy do Mojżesza, mówiąc: Oto umieramy, niszczejemy, wszyscy giniemy;
௧௨அப்பொழுது இஸ்ரவேல் புத்திரர் மோசேயை நோக்கி: “இதோ, செத்து அழிந்துபோகிறோம்; நாங்கள் எல்லோரும் அழிந்துபோகிறோம்.
13 Każdy, ktokolwiek przystępuje do przybytku Pańskiego, umiera; izali do szczętu wytraceni być mamy?
௧௩யெகோவாவின் வாசஸ்தலத்தின் அருகில் வருகிற எவனும் சாகிறான்; நாங்கள் எல்லோரும் சாகத்தான் வேண்டுமோ” என்றார்கள்.