< Jozuego 15 >
1 I był los pokolenia synów Judowych według domów ich przy granicach Edom, i przy puszczy Syn na południe od ostatecznej granicy południowej.
௧யூதா கோத்திரத்திற்கு அவர்களுடைய வம்சங்களின்படி உண்டான பங்குவீதமாவது: ஏதோமின் எல்லைக்கு அருகே உள்ள சீன்வனாந்திரமே தென்பகுதியின் கடைசி எல்லை.
2 A była ich granica od południa, od końca morza słonego, i od skały, która jest ku południowi.
௨தென்பகுதியான அவர்களுடைய எல்லை சவக்கடலின் கடைசியில் தெற்கு நோக்கி இருக்கிற முனைதுவங்கி,
3 I wychodzi ku południowi, ku pagórkowi niedźwiadkowemu, a ciągnie się aż do Syn; a idąc od południa do Kades Barny bieży aż ku Efronowi, i ciągnie się aż do Adar, obtaczając Karkaa.
௩தென்பகுதியில் இருக்கிற அக்ராபீமின் மேடுகளுக்கும், அங்கேயிருந்து சீனுக்கும் போய், தெற்கே இருக்கிற காதேஸ்பர்னேயாவுக்கு ஏறி, எஸ்ரோனைக் கடந்து, ஆதாருக்கு ஏறி, கர்க்காவைச் சுற்றிப் போய்,
4 Stamtąd idąc do Asemona idzie ku rzece Egipskiej, a idzie koniec tych granic na zachód; tać będzie granica na południu.
௪அஸ்மோனுக்கும், அங்கேயிருந்து எகிப்தின் ஆற்றுக்கும் சென்று, மத்திய தரைக் கடல்வரைக்கும் போய் முடியும்; இதுவே உங்களுடைய தென்பகுதிக்கு எல்லையாக இருக்கும் என்றான்.
5 Granica zasię od wschodu słońca jest morze słone aż do końca Jordanu, a granica z strony północnej jest od skały morskiej, od końca Jordanu.
௫கிழக்கு எல்லையானது, யோர்தான் நதியின் ஆரம்பம்வரை இருக்கிற சவக்கடல். வடபுறமான எல்லை, யோர்தான் நதியின் ஆரம்பம் இருக்கிற கடலின் முனைதுவங்கி,
6 A ciągnie się ta granica do Betaglu, i bieży od północy aż do Betaraba; a stamtąd idzie ta granica aż do kamienia Boen, syna Rubenowego.
௬பெத்ஓக்லாவுக்கு ஏறி, வடக்கே இருக்கிற பெத் அரபாவைக் கடந்து, ரூபனின் மகனாகிய போகனின் கல்லுக்கு ஏறிப்போய்,
7 Idzie także ta granica do Dabir od doliny Achor, a ku północy się udawa do Galgal, które jest przeciw górze, gdzie wstępują do Adommim, która jest na południe od rzeki, a idzie ta granica do wód Ensemes, a kończy się u studnicy Rogiel.
௭பிறகு ஆகோர் பள்ளத்தாக்கைவிட்டுத் தெபீருக்கு ஏறி, வடக்கே ஆற்றின் தென்புறமான அதும்மீமின் மேட்டுக்கு முன்பாக இருக்கிற கில்காலுக்கு நேராகவும், அங்கேயிருந்து என்சேமேசின் நீரூற்றுவரைக்கும் போய், என்ரோகேல் என்னும் கிணற்றுக்குச் சென்று,
8 Bieży też ta granica przez dolinę syna Hennomowego po bok Jebuzejczyka od południa, co jest Jeruzalem. Stamtąd bieży ta granica na wierzch góry, która jest przeciwko dolinie Hennom na zachód, a która jest na końcu doliny Refaimitów na północy.
௮பிறகு எபூசியர்கள் குடியிருக்கிற எருசலேமுக்குத் தென்புறமாக இன்னோமுடைய மகனின் பள்ளத்தாக்கைக் கடந்து, வடக்கே இருக்கிற இராட்சதர்களுடைய பள்ளத்தாக்கின் கடைசியில் மேற்காக இன்னோம் பள்ளத்தாக்கின் முன்னிருக்கிற மலையின் உச்சிவரை ஏறிப்போய்,
9 Obtacza też ta granica od wierzchu góry aż do źródła wody Neftoa, i bieży aż do miast góry Hefron; potem się ciągnie ta granica ku Baala, które jest Karyjatyjarym.
௯அந்த மலையின் உச்சியிலிருந்து நெப்தோவாவின் நீரூற்றுக்குப் போய், எப்பெரோன் மலையின் பட்டணங்களுக்குச் சென்று, கீரியாத்யெயாரீமாகிய பாலாவுக்குப் போய்,
10 Potem kołem bieży ta granica od Baala na zachód do góry Seir, a stamtąd przechodzi po bok góry Jarym od północy, która jest Cheslon, i spuszcza się do Betsemes, i przychodzi do Tamna.
௧0பாலாவிலிருந்து மேற்கே சேயீர் மலைக்குத் திரும்பி, வடக்கே இருக்கிற கெசலோனாகிய யெயாரீம் மலைக்குப் பக்கமாகப் போய், பெத்ஷிமேசுக்கு இறங்கி, திம்னாவுக்குப் போய்,
11 I wychodzi ta granica po bok Akaronu na północy, a idzie kołem ta granica, aż do Sechronu, i bieży przez górę Baala; stamtąd wychodzi do Jabneel, i kończą się te granica u morza.
௧௧1 பின்பு வடக்கே இருக்கிற எக்ரோனுக்குப் பக்கமாகச் சென்று, சிக்ரோனுக்கு ஓடி, பாலாமலையைக் கடந்து, யாப்னியேலுக்குச் சென்று, மத்திய தரைக் கடலிலே முடியும்.
12 A granica zachodnia jest przy morzu wielkiem, i przy granicach jego; tać jest granica synów Juda w okrąg podług domów ich.
௧௨மேற்கு எல்லை, பெரிய மத்திய தரைக் கடலே; இது யூதா கோத்திரத்தார்களுக்கு அவர்களுடைய வம்சங்களின்படி சுற்றிலுமிருக்கும் எல்லை.
13 Ale Kalebowi synowi Jefunowemu, dał Jozue dział między syny Juda, jak Pan powiedział Jozuemu, miasto Arba, ojca olbrzymów, to jest Hebron.
௧௩எப்புன்னேயின் மகனாகிய காலேபுக்கு, யோசுவா, யெகோவா தனக்குக் கட்டளையிட்டபடி, ஏனாக்கின் தகப்பனாகிய அர்பாவின் பட்டணமான எபிரோனை யூதா கோத்திரத்தின் நடுவே பங்காகக் கொடுத்தான்.
14 I wypędził stamtąd Kaleb trzech synów Enakowych: Sesaja, i Ahymana, i Talmaja, syny Enakowe.
௧௪அங்கேயிருந்த சேசாய், அகீமான், தல்மாய் என்னும் ஏனாக்கின் மூன்று மகன்களையும் காலேப் துரத்திவிட்டு,
15 A wyszedł stamtąd do mieszkających w Dabir, które zwano przedtem Karyjatsefer.
௧௫அங்கேயிருந்து தெபீரின் குடிகளிடத்திற்குப் போனான்; முற்காலத்திலே தெபீரின் பெயர் கீரியாத்செப்பேர்.
16 I rzekł Kaleb: Kto by dobył Karyjatsefer, a wziął je, tedy mu dam Achsę, córkę swoję, za żonę.
௧௬கீரியாத்செப்பேரை அழித்துக் கைப்பற்றுகிறவனுக்கு, என் மகளாகிய அக்சாளைத் திருமணம் செய்துகொடுப்பேன் என்று காலேப் சொன்னான்.
17 I dobył go Otonijel, syn Keneza, brata Kalebowego; i dał mu Achsę, córkę swoję, za żonę.
௧௭அப்பொழுது காலேபின் சகோதரனாகிய கேனாசின் மகன் ஒத்னியேல் அதைக் கைப்பற்றினான்; எனவே, தன் மகள் அக்சாளை அவனுக்குத் திருமணம் செய்துகொடுத்தான்.
18 I stało się, gdy ona przyszła do niego, namawiała go, aby prosił ojca jej o pole; przetoż zsiadła z osła, i rzekł do niej Kaleb: Cóż ci?
௧௮அவள் புறப்படும்போது, என் தகப்பனிடத்தில் ஒரு வயல்வெளியைக் கேட்கவேண்டும் என்று அவனிடம் அனுமதி பெற்றுக்கொண்டு, கழுதையின்மேலிருந்து இறங்கினாள். காலேப் அவளைப் பார்த்து: உனக்கு என்னவேண்டும் என்றான்.
19 A ona odpowiedziała: Daj mi błogosławieństwo; gdyżeś mi dał ziemię suchą, przydaj mi też źródła wód. I dał jej źródła wyższe, i źródła dolne.
௧௯அப்பொழுது அவள்: எனக்கு ஒரு ஆசீர்வாதம் தரவேண்டும்; எனக்கு வறட்சியான நிலத்தைத் தந்தீர்; நீர்ப்பாய்ச்சலான நிலத்தையும் எனக்குத் தரவேண்டும் என்றாள்; அப்பொழுது அவளுக்கு மேற்புறத்திலும் கீழ்ப்புறத்திலும் நீர்ப்பாய்ச்சலான நிலங்களைக் கொடுத்தான்.
20 Toć jest dziedzictwo pokolenia synów Judowych według domów ich.
௨0யூதா கோத்திரத்தார்களுக்கு அவர்களுடைய வம்சங்களின்படி உண்டான பங்கு என்னவென்றால்:
21 I były miasta w granicach pokolenia synów Judowych podle granicy Edom ku południowi: Kabseel, i Eder, i Jagur.
௨௧தென்புறத்தின் கடைசியான ஏதோமின் எல்லைக்கு நேராக, யூதா கோத்திரத்திற்குக் கிடைத்த பட்டணங்களாவன: கப்செயேல், ஏதேர், யாகூர்,
22 I Cyna, i Dymona, i Adada;
௨௨கீனா. திமோனா, ஆதாதா,
23 I Kades, i Hasor, i Jetnan;
௨௩கேதேஸ், ஆத்சோர், இத்னான்,
24 I Zyf, i Telem, i Balot;
௨௪சீப், தேலெம், பெயாலோத்,
25 I Hasor Hadata, i Karyjot Chesron, toć jest Hasor;
௨௫ஆத்சோர், அதாத்தா, கீரியோத், எஸ்ரோன் என்னும் ஆத்சோர்,
26 Amam, i Sama, i Molada;
௨௬ஆமாம், சேமா, மொலாதா,
27 I Asorgadda, i Hessemon, i Betfalet;
௨௭ஆத்சார்காதா, எஸ்மோன், பெத்பெலேத்,
28 I Hasersual, i Beersaba, i Bazotyja;
௨௮ஆசார்சூவால், பெயர்செபா, பிஸ்யோத்யா,
29 Baala, i Ijim, i Esem;
௨௯பாலா, ஈயிம், ஏத்சேம்,
30 I Eltolad, i Kesyl, i Horma;
௩0எல்தோலாத், கெசீல், ஓர்மா,
31 I Syceleg, i Medemena, i Sensenna;
௩௧சிக்லாக், மத்மன்னா, சன்சன்னா,
32 I Lebaot, i Selim, Ain, i Remmon; wszystkich miast dwadzieścia i dziewięć, i wsi ich.
௩௨லெபாயோத், சில்லீம், ஆயீன், ரிம்மோன் என்பவைகள்; எல்லாப் பட்டணங்களும் அவைகளுடைய கிராமங்களும் உட்பட இருபத்தொன்பது.
33 W równinach zaś Estaol, i Sarea, i Asena;
௩௩பள்ளத்தாக்கு நாட்டில் எஸ்தாவோல், சோரியா, அஷ்னா,
34 I Zanoe, i Engannim, Tepnach, i Enaim;
௩௪சனோகா, என்கன்னீம், தப்புவா, ஏனாம்,
35 Jerymot, i Adullam, Socho, i Aseka;
௩௫யர்மூத், அதுல்லாம், சோக்கோ, அசேக்கா,
36 I Saraim, i Adytaim, i Gedera, i Gederotaim, miast czternaście, i wsi ich.
௩௬சாராயீம், அதித்தாயீம், கெதேரா, கேதெரொத்தாயீம்; இந்தப் பட்டணங்களும் அவைகளுடைய கிராமங்களும் உட்பட பதினான்கு.
37 Sanany, i Hadasa, i Mygdalgad;
௩௭சேனான், அதாஷா, மிக்தால்காத்,
38 I Delean, i Mesfa, i Jektel;
௩௮திலியான், மிஸ்பே, யோக்தெயேல்,
39 Lachys, i Bassekat, i Eglon;
௩௯லாகீஸ், போஸ்காத், எக்லோன்,
40 I Chabbon, i Lachmas, i Chytlis;
௪0காபோன், லகமாம், கித்லீஷ்,
41 I Kiederot, Bet Dagon, i Naama, i Maceda, miast szesnaście, i wsi ich.
௪௧கெதெரோத், பெத்டாகோன், நாமா, மக்கெதா; இந்தப் பட்டணங்களும் அவைகளுடைய கிராமங்களும் உட்பட பதினாறு.
42 Labana, i Eter, i Asan;
௪௨லிப்னா, ஏத்தேர், ஆசான்,
43 I Iftach, i Esna, i Nesyb;
௪௩இப்தா, அஸ்னா, நெசீப்,
44 I Ceila, i Achzyb, i Maresa, miast dziewięć, i wsi ich;
௪௪கேகிலா, அக்சீப், மரேஷா; இந்தப் பட்டணங்களும் அவைகளுடைய கிராமங்களும் உட்பட ஒன்பது.
45 Akkaron, i miasteczka jego, i wioski jego;
௪௫எக்ரோனும் அதின் வெளிநிலங்களும் கிராமங்களும்,
46 Od Akkaronu aż do morza wszystko, co leży po bok Asotu, i ze wsiami ich;
௪௬எக்ரோன் துவங்கிச் மத்திய தரைக் கடல் வரை, அஸ்தோத்தின் பகுதியில் இருக்கிற எல்லா ஊர்களும், அவைகளின் கிராமங்களும்,
47 Azot, miasteczka jego, i wsi jego; Gaza, miasteczka jego, i wsi jego, aż do potoku Egipskiego, i morze wielkie za granicą jego.
௪௭அஸ்தோத்தும், அதின் வெளிநிலங்களும் கிராமங்களும், காசாவும் எகிப்தின் ஆறு வரையிருக்கிற அதின் வெளிநிலங்களும் கிராமங்களுமே; மத்திய தரைக் கடலே எல்லை.
48 A na górze leżą Sam, i Jeter, i Soko;
௪௮மலைகளில் சாமீர், யாத்தீர், சோக்கோ,
49 I Danna, i Karyjatsenna, które jest Dabir;
௪௯தன்னா, தெபீர் என்னப்பட்ட கீரியாத்சன்னா,
50 I Anab, i Istemo, i Anim;
௫0ஆனாப், எஸ்தெமொ, ஆனீம்,
51 I Gosen, i Holon, i Gilo, miast jedenaście, i wsi ich;
௫௧கோசேன், ஓலோன், கிலோ; இந்தப் பட்டணங்களும் அவைகளுடைய கிராமங்களும் உட்பட பதினொன்று.
52 Arab, i Duma, i Esaan;
௫௨அராப், தூமா, எஷியான்,
53 I Janum, i Bet Tafua, i Afeka;
௫௩யானூம், பெத்தப்புவா, ஆப்பெக்கா,
54 I Chumta, i Karyjat Arbe, toć jest Hebron, i Syjor, miast dziewięć, i wsi ich.
௫௪உம்தா, எபிரோனாகிய கீரியாத் அர்பா, சீயோர்; இந்தப் பட்டணங்களும் அவைகளுடைய கிராமங்களும் உட்பட ஒன்பது.
55 Maon, Karmel, i Zyf, i Juta.
௫௫மாகோன், கர்மேல், சீப், யுத்தா,
56 I Jezrael, i Jukiedam, i Zanoe;
௫௬யெஸ்ரயேல், யொக்தெயாம், சனோகா,
57 Kain, Gabaa, i Tamna, miast dziesięć, i wsi ich.
௫௭காயின், கிபியா, திம்னா; இந்தப் பட்டணங்களும் அவைகளுடைய கிராமங்களும் உட்படப் பத்து.
58 Halhul, Betsur i Giedor;
௫௮அல்கூல், பெத்சூர், கேதோர்,
59 I Maret, i Bet Anot, i Eltekon, miast sześć, i wsi ich.
௫௯மாராத், பெதானோத், எல்தெகோன்; இந்தப் பட்டணங்களும் அவைகளுடைய கிராமங்களும் உட்பட ஆறு.
60 Karyjat Baal, które jest Karyjatyjarym, i Rabba, miasta dwa, i wsi ich.
௬0கீரியாத்யெயாரீமாகிய கீரியாத்பாகால், ரபா; இந்தப் பட்டணங்களும் அவைகளுடைய கிராமங்களும் உட்பட இரண்டு.
61 A na puszczy: Bet Araba, Meddyn, i Sechacha;
௬௧வனாந்திரத்தில், பெத் அரபா, மித்தீன், செக்காக்கா,
62 I Nebsan, i miasto Soli, i Engaddy, miast sześć, i wsi ich.
௬௨நிப்சான், உப்புப்பட்டணம், என்கேதி; இந்தப் பட்டணங்களும் அவைகளுடைய கிராமங்களும் உட்பட ஆறு.
63 Ale Jebuzejczyka, obywatela Jeruzalemskiego, nie mogli synowie Judowi wypędzić; przetoż mieszkał Jebuzejczyk z syny Juda w Jeruzalemie aż do dnia tego.
௬௩எருசலேமிலே குடியிருந்த எபூசியர்களை யூதா கோத்திரத்தார்கள் துரத்திவிடமுடியாமல்போனது; ஆகவே இந்த நாள்வரை எபூசியர்கள் யூதா கோத்திரத்தார்களோடு எருசலேமிலே குடியிருக்கிறார்கள்.