< Hioba 12 >

1 Zatem odpowiedział Ijob i, rzekł:
யோபு மறுமொழியாக:
2 Wieraście wy sami ludźmi? i z wamiż umrze mądrość?
“ஆம், நீங்களே ஞானமுள்ள மக்கள்; உங்களுடனே ஞானம் சாகும்.
3 Teżci ja mam serce jako i wy, anim jest podlejszym niżeli wy; a któż i tego nie wie, co i wy?
உங்களைப்போல எனக்கும் புத்தியுண்டு; உங்களைவிட நான் தாழ்ந்தவன் அல்ல; இப்படிப்பட்டவைகளை அறியாதவன் யார்?
4 Pośmiewiskiem jestem przyjacielowi memu, który gdy woła do Boga, ozywa mu się; naśmiewiskiem jest sprawiedliwy i doskonały.
என் நண்பர்களால் நான் நிந்திக்கப்பட்டு, தேவனை நோக்கிக் கூப்பிடுவேன்; அவர் எனக்குத் திரும்ப பதில் அருளுவார்; உத்தமனாகிய நீதிமான் கேலிசெய்யப்படுகிறான்.
5 Ten, co jest upadku bliski, jest pochodnią wzgardzoną człowiekowi, według myśli pokoju zażywającemu.
ஆபத்திற்குள்ளானவன் சுகமாயிருக்கிறவனுடைய நினைவில் இகழ்ச்சியடைகிறான்; கால் தடுமாறினவர்களுக்கு இது சம்பவிக்கும்.
6 Spokojne i bezpieczne są namioty zbójców tych, którzy draźnią Boga, którym Bóg daje w ręce dobre rzeczy.
திருடர்களுடைய கூடாரங்களில் செல்வமுண்டு; தேவனைக் கோபப்படுத்துகிறவர்களுக்கு பாதுகாப்புண்டு; அவர்கள் கையிலே தேவன் கொண்டுவந்து கொடுக்கிறார்.
7 A nawet pytaj się proszę bydląt, a one cię nauczą; i ptastwa niebieskiego, a oznajmi tobie.
இப்போதும் நீ மிருகங்களைக் கேட்டுப்பார், அவைகள் உனக்குப் போதிக்கும் ஆகாயத்துப் பறவைகளைக் கேள், அவைகள் உனக்கு அறிவிக்கும்.
8 Albo się rozmów z ziemią, a ona cię nauczy, i rozpowiedząć ryby morskie.
அல்லது பூமியை விசாரித்துக் கேள், அது உனக்குப் போதிக்கும்; சமுத்திரத்தின் மீன்களைக் கேள், அவைகள் உனக்கு விவரிக்கும்.
9 Któż nie wie z tych wszystkich rzeczy, że to ręka Pańska sprawiła?
யெகோவாவுடைய கரம் இதைச் செய்ததென்று இவைகள் எல்லாவற்றினாலும் அறியாதவன் யார்?
10 W którego ręku jest dusza wszelkiej rzeczy żywej, i duch wszelkiego ciała ludzkiego.
௧0எல்லா உயிரினங்களின் உயிரும், மாம்சமான எல்லா மனிதரின் ஆவியும் அவர் கையிலிருக்கிறது.
11 Azaż nie ucho mowy doświadcza, jako usta pokarmu smakują?
௧௧வாயானது ஆகாரத்தை ருசிபார்க்கிறதுபோல, காதானது வார்த்தைகளைச் சோதித்துப்பார்க்கிறதல்லவா?
12 W ludziach starych jest mądrość, a w długich dniach roztropność.
௧௨முதியோரிடத்தில் ஞானமும் வயது சென்றவர்களிடத்தில் புத்தியும் இருக்குமே.
13 Dopieroż u Pana jest mądrość, i siła, i rada, i umiejętność.
௧௩அவரிடத்தில் ஞானமும் வல்லமையும் எத்தனை அதிகமாக இருக்கும்? அவருக்குத்தான் ஆலோசனையும் புத்தியும் உண்டு.
14 Oto on burzy, a nikt nie zbuduje; zamknie człowieka, a nikt mu nie otworzy.
௧௪இதோ, அவர் இடித்தால் கட்டமுடியாது; அவர் மனிதனை அடைத்தால் விடுவிக்கமுடியாது.
15 On gdy zatrzyma wody, wyschną; a gdy je wypuści, podwracają ziemię.
௧௫இதோ, அவர் தண்ணீர்களை அடக்கினால் எல்லாம் உலர்ந்துபோகும்; அவர் அவைகளை வரவிட்டால், பூமியைத் தலைகீழாக மாற்றும்.
16 U niego jest moc i mądrość. Jego jest błądzący, i w błąd zawodzący.
௧௬அவரிடத்தில் பெலனும் ஞானமுமுண்டு; மோசம் போகிறவனும் மோசம் போக்குகிறவனும், அவர் கையின் கீழிருக்கிறார்கள்.
17 On obiera radców z mądrości, a sędziów przywodzi do głupstwa.
௧௭அவர் ஆலோசனைக்காரரைச் சிறைபிடித்து, நியாயாதிபதிகளின் புத்தியை மயக்குகிறார்.
18 On pas królów rozwiązuje, i znowu przepasuje pasem biodra ich.
௧௮அவர் ராஜாக்களுடைய கட்டுகளை அவிழ்த்து, அவர்கள் இடுப்புகளில் துணியைக்கட்டுகிறார்.
19 Podaje książęta na łup, a mocarze podwraca.
௧௯அவர் மந்திரிகளைச் சிறைபிடித்துக் கொண்டுபோய், பெலவான்களைக் கவிழ்த்துப்போடுகிறார்.
20 Odejmuje usta krasomówcom, a rozsądek starym odbiera.
௨0அவர் நம்பிக்கையுள்ளவர்களுடைய வார்த்தையை அகற்றி, முதிர்வயதுள்ளவர்களின் ஆலோசனையைத் தள்ளிப்போடுகிறார்.
21 Wylewa wzgardę na książęta, a mdli siły mocarzów.
௨௧அவர் பிரபுக்களின்மேல் இகழ்ச்சி வரச்செய்கிறார்; பலவான்களின் வார்க்கச்சையைத் தளர்ந்துபோகச் செய்கிறார்.
22 On odkrywa głębokie rzeczy z ciemności, a wywodzi na jaśnię cień śmierci.
௨௨அவர் மறைவிடத்திலிருக்கிற ஆழங்களை வெளியரங்கமாக்கி, மரண இருளை வெளிச்சத்தில் கொண்டுவருகிறார்.
23 Rozmnaża narody, i wytraca je; rozszerza lud, i umniejsza go.
௨௩அவர் தேசங்களைப் பெருகவும் அழியவும் செய்கிறார்; அவர் தேசங்களைப் பரவவும் குறுகவும் செய்கிறார்.
24 On odejmuje serca przełożonym ludu ziemi, a czyni, że błądzą po pustyni bezdrożnej;
௨௪அவர் பூமியிலுள்ள தேசத்தின் அதிபதிகளின் நெஞ்சை அகற்றிப்போட்டு, அவர்களை வழியில்லாத வனாந்திரத்திலே அலையச்செய்கிறார்.
25 Że macają w ciemnościach, gdzie nie masz światłości, a sprawuje, że błądzą jako pijani.
௨௫அவர்கள் வெளிச்சமில்லாத இருளிலே தடவித்திரிகிறார்கள்; வெறித்தவர்களைப்போல அவர்களைத் தடுமாறி அலையவைக்கிறார்.

< Hioba 12 >