< Izajasza 54 >
1 Śpiewaj niepłodna! która nie rodzisz, śpiewaj głośno, a krzycz, która w porodzeniu nie pracujesz; bo więcej będzie synów opuszczonej, niż synów tej, która ma męża, mówi Pan.
௧பிள்ளைபெறாத மலடியே, மகிழ்ந்துபாடு; கர்ப்பவேதனைப்படாதவளே, கெம்பீரமாகப் பாடி ஆனந்த சத்தமிடு; வாழ்க்கைப்பட்டவளுடைய பிள்ளைகளைப் பார்க்கிலும், தனியாக இருக்கும் பெண்ணுடைய பிள்ளைகள் அதிகம் என்று யெகோவா சொல்கிறார்.
2 Rozprzestrzeń miejsce namiotu swego, a opon przybytków swych nie zabraniaj rozciągnąć: wyciągnij powrozy twoje, a kołki twoje utwierdź.
௨உன் கூடாரத்தின் இடத்தை விசாலமாக்கு; உன் குடியிருப்புகளின் திரைகள் விரிவாகட்டும்; தடைசெய்யாதே; உன் கயிறுகளை நீளமாக்கி, உன் முளைகளை உறுதிப்படுத்து.
3 Bo się na prawo i na lewo rozsilisz, a nasienie twoje narody odziedziczy, i miasta spustoszone osadzi.
௩நீ வலதுபுறத்திலும் இடதுபுறத்திலும் இடங்கொண்டு பெருகுவாய்; உன் சந்ததியார் தேசங்களைச் சொந்தமாக்கிக்கொண்டு, பாழாய்க்கிடந்த பட்டணங்களைக் குடியேற்றுவிப்பார்கள்.
4 Nie bój się, bo pohańbiona nie będziesz; a nie zapalaj się, bo nie przyjdziesz na posromocenie; owszem na zelżywość młodości twojej zapomnisz, a na pohańbienie wdowstwa twego więcej nie wspomnisz.
௪பயப்படாதே, நீ வெட்கப்படுவதில்லை; வெட்கப்படாதே, நீ அவமானமடைவதில்லை; உன் வாலிபத்தின் வெட்கத்தை நீ மறந்து, உன் விதவையிருப்பின் நிந்தையை இனி நினைக்காமலிருப்பாய்.
5 Albowiem małżonkiem twoim jest stworzycie twój, Pan zastępów imię jego, a odkupiciel twój, Święty Izraelski, Bogiem wszystkiej ziemi zwany będzie.
௫உன் சிருஷ்டிகரே உன் நாயகர்; சேனைகளின் யெகோவா என்பது அவருடைய நாமம், இஸ்ரவேலின் பரிசுத்தர் உன் மீட்பர், அவர் சர்வபூமியின் தேவன் என்னப்படுவார்.
6 Bo cię jako żony opuszczonej i strapionej w duchu, Pan powoła, a jako żony młodej, gdy odrzuconą będziesz, mówi Bóg twój.
௬கைவிடப்பட்டு மனம்நொந்தவளான பெண்ணைப்போலவும், இளம்பிராயத்தில் திருமணம்செய்து விவாகரத்து செய்யப்பட்ட மனைவியைப்போலவும் இருக்கிற உன்னைக் யெகோவா அழைத்தார் என்று உன் தேவன் சொல்கிறார்.
7 Na małą chwilkę opuściłem cię; ale zaś w litościach wielkich zgromadzę cię.
௭இமைப்பொழுது உன்னைக் கைவிட்டேன்; ஆனாலும் உருக்கமான இரக்கங்களால் உன்னைச் சேர்த்துக்கொள்வேன்.
8 W maluczkim gniewie skryłem maluczko twarz swoję przed tobą; ale w miłosierdziu wiecznem zlituję się nad tobą, mówi Pan, odkupiciel twój.
௮அற்பகாலம் மூண்ட கோபத்தினால் என் முகத்தை இமைப்பொழுது உனக்கு மறைத்தேன்; ஆனாலும் நித்திய கிருபையுடன் உனக்கு இரங்குவேன் என்று யெகோவாவாகிய உன் மீட்பர் சொல்கிறார்.
9 Bo to jest u mnie, co przy potopie Noego; jakom przysiągł, że się więcej nie będą rozlewać wody Noego po ziemi: takem przysiągł, że się nie rozgniewam na cię, ani cię zgromię.
௯இது எனக்கு நோவாவின் காலத்திலுண்டான வெள்ளம்போல் இருக்கும்; நோவாவின் காலத்திலுண்டான வெள்ளம் இனி பூமியின்மேல் புரண்டுவருவதில்லை என்று நான் ஆணையிட்டதுபோல, உன்மேல் நான் கோபம்கொள்வதில்லையென்றும், உன்னை நான் கடிந்துகொள்வதில்லையென்றும் ஆணையிட்டேன்.
10 A choćby się i góry poruszyły, i pagórki się zachwiały: jednak miłosierdzie moje od ciebie nie odstąpi, a przymierze pokoju mego nie wzruszy się, mówi twój miłościwy Pan.
௧0மலைகள் விலகினாலும், மலைகள் நிலைபெயர்ந்தாலும், என் கிருபை உன்னைவிட்டு விலகாமலும், என் சமாதானத்தின் உடன்படிக்கை நிலைபெயராமலும் இருக்கும் என்று, உன்மேல் மனதுருகுகிற யெகோவா சொல்கிறார்.
11 O utrapiona, wichrem rozmiotana, z pociechy obrana! oto Ja położę na karbunkułach kamienie twoje, a na szafirach założę cię.
௧௧சிறுமைப்பட்டவளே, பெருங்காற்றில் அடிபட்டவளே, தேற்றரவு இல்லாதவளே, இதோ, நான் உன் கற்களைப் பிரகாசிக்கும்படி வைத்து, நீலரத்தினங்களை உன் அஸ்திபாரமாக்கி,
12 I uczynię z kryształu okna twoje, a bramy twoje z kamienia rubinowego, i wszystkie granice twoje z kamienia kosztownego.
௧௨உன் பலகணிகளைப் பளிங்கும், உன் வாசல்களை மாணிக்கக் கற்களும், உன் மதில்களையெல்லாம் விலையுயர்ந்த கற்களுமாக்குவேன்.
13 A wszyscy synowie twoi będą wyuczeni od Pana, i obfitość pokoju będą mieli synowie twoi.
௧௩உன் பிள்ளைகளெல்லோரும் யெகோவாவால் போதிக்கப்பட்டிருப்பார்கள்; உன் பிள்ளைகளுடைய சமாதானம் பெரிதாயிருக்கும்.
14 Na sprawiedliwości ugruntowana będziesz; od ucisku się oddalisz, przetoż się go bać nie będziesz; i od starcia; bo się nie przybliży do ciebie.
௧௪நீதியினால் உறுதியாக்கப்பட்டிருப்பாய்; கொடுமைக்குத் தூரமாவாய்; பயமில்லாதிருப்பாய்; திகிலுக்குத் தூரமாவாய், அது உன்னை அணுகுவதில்லை.
15 Oto nie jeden mieszkać będzie z tobą, który nie jest mój; ale ktoby mieszkając z tobą, był przeciwnym tobie, upadnie.
௧௫இதோ, உனக்கு விரோதமாகக் கூட்டங்கூடினால், அது என்னாலே கூடுகிற கூட்டமல்ல; எவர்கள் உனக்கு விரோதமாகக் கூடுகிறார்களோ, அவர்கள் உன் ஆளுகைக்குள்ளாக வருவார்கள்.
16 Otom ja stworzył kowala poddymającego węgle w ogniu, a wyjmującego naczynie ku robocie swojej: Jam też stworzył pustoszyciela, aby wytracał.
௧௬இதோ, கரிநெருப்பை ஊதி, தன் வேலைக்கான ஆயுதத்தை உண்டாக்குகிற கொல்லனையும் நான் படைத்தேன்; கெடுத்து நாசமாக்குகிறவனையும் நான் படைத்தேன்.
17 Żadne naczynie urobione przeciw tobie nie zdarzy się, a każdy język powstawający przeciw tobie na sądzie potępisz. Toć jest dziedzictwo sług Pańskich, a sprawiedliwość ich odemnie, mówi Pan.
௧௭உனக்கு விரோதமாக உருவாக்கப்படும் எந்த ஆயுதமும் வாய்க்காமல்போகும்; உனக்கு விரோதமாக நியாயத்தில் எழும்பும் எந்த நாவையும் நீ குற்றப்படுத்துவாய்; இது யெகோவாவுடைய ஊழியக்காரரின் உரிமையும், என்னாலுண்டான அவர்களுடைய நீதியுமாயிருக்கிறதென்று யெகோவா சொல்கிறார்.