< Izajasza 35 >
1 Weselić się z tego będzie pustynia i miejsce leśne, a rozraduje się i zakwitnie jako róża.
௧வனாந்திரமும் வறண்ட நிலமும் மகிழ்ந்து, பாலைவனம் மகிழ்ந்து, மலரைப்போல செழிக்கும்.
2 Ślicznie zakwitnie, i radując się weselić się będzie z wykrzykaniem; chwała Libanu będzie jej dana, i ozdoba Karmelu i Saronu. One ujrzą chwałę Pańską i ozdobę Boga naszego.
௨அது மிகுதியாகச் செழித்து பூரித்து ஆனந்தக்களிப்புடன் பாடும்; லீபனோனின் மகிமையும், கர்மேல் சாரோன் என்பவைகளின் அலங்காரமும் அதற்குக் கொடுக்கப்படும்; அவர்கள் யெகோவாவுடைய மகிமையையும், நமது தேவனுடைய மகத்துவத்தையும் காண்பார்கள்.
3 Umacniajcie ręce osłabiałe, a kolana zemdlałe posilajcie.
௩தளர்ந்த கைகளைத் திடப்படுத்தி, தள்ளாடுகிற முழங்கால்களைப் பலப்படுத்துங்கள்.
4 Mówcie do zatrwożonych w sercu: Zmocnijcie się, nie bójcie się; oto Bóg wasz z pomstą przyjdzie; z nagrodą Bóg sam przyjdzie, i zbawi was.
௪மனம் பதறுகிறவர்களைப் பார்த்து: நீங்கள் பயப்படாதிருங்கள், திடன் கொள்ளுங்கள்; இதோ, உங்கள் தேவன் நீதியைச் சரிக்கட்டவும், உங்கள் தேவன் பதிலளிக்கவும் வருவார்; அவர் வந்து உங்களைக் காப்பாற்றுவார் என்று சொல்லுங்கள்.
5 Tedy się otworzą oczy ślepych, a uszy głuchych tworzone będą.
௫அப்பொழுது குருடரின் கண்கள் திறக்கப்பட்டு, செவிடரின் செவிகள் திறவுண்டுபோகும்.
6 Tedy poskoczy chromy jako jeleń, a niemych język śpiewać będzie; albowiem wody na puszczy wynikną, a potoki na pustyniach.
௬அப்பொழுது முடவன் மானைப்போல் குதிப்பான்; ஊமையன் நாவும் கெம்பீரிக்கும்; வனாந்திரத்திலே தண்ணீர்களும், பாலைவனத்திலே ஆறுகளும் பாய்ந்தோடும்.
7 I stanie się miejsce suche jeziorem, a bezwodne źródłami wód; w łożyskach smoków, kędy legali, trawa, trzcina, i sitowie rość będzie.
௭வெட்டாந்தரை தண்ணீர் குளமும், வறண்ட நிலம் நீரூற்றுகளுமாகும், வலுசர்ப்பங்கள் இருந்த இடங்களிலே புல்லும் கோரையும் நாணலும் உண்டாகும்.
8 I będzie tam droga i ścieszka, która drogą świętą słynąć będzie; nie pójdzie po niej nieczysty, ale będzie dla onych samych. Którzy tą drogą pójdą, i głupi nawet, nie zbłądzą.
௮அங்கே பெரும்பாதையான வழியும் இருக்கும்; அது பரிசுத்த வழி என்னப்படும்; தீட்டுள்ளவன் அதிலே நடந்துவருவதில்லை; அந்த வழியில் நடக்கிறவர்கள் பேதையராயிருந்தாலும் திசைகெட்டுப் போவதில்லை.
9 Nie będzie tam lwa, a okrutny zwierz nie będzie chodził po niej, ani się tam znajdzie; ale wybawieni po niej chodzić będą.
௯அங்கே சிங்கம் இருப்பதில்லை; கொடியமிருகம் அங்கே போவதுமில்லை, அங்கே காணப்படவுமாட்டாது; மீட்கப்பட்டவர்களே அதில் நடப்பார்கள்.
10 Odkupieni, mówię, Pańscy nawrócą się, i przyjdą na Syon z śpiewaniem, a wesele wieczne będzie na głowie ich; radość i wesele otrzymają, a żałość i smutek uciecze.
௧0யெகோவாவால் மீட்கப்பட்டவர்கள் திரும்பி, ஆனந்தக்களிப்புடன் பாடி, சீயோனுக்கு வருவார்கள்; நித்திய மகிழ்ச்சி அவர்கள் தலையின்மேலிருக்கும்; சந்தோஷமும் மகிழ்ச்சியும் அடைவார்கள்; சஞ்சலமும் தவிப்பும் ஓடிப்போகும்.