< Rodzaju 5 >
1 Teć są księgi rodzajów Adamowych. W dzień, którego stworzył Bóg człowieka, na podobieństwo Boże uczynił go.
௧ஆதாமின் வம்சவரலாறு: தேவன் மனிதனை உருவாக்கின நாளிலே அவனை தேவசாயலாக உண்டாக்கினார்.
2 Mężczyznę i niewiastę stworzył je; i błogosławił im, i nazwał imię ich, człowiek, w dzień, którego są stworzeni.
௨அவர்களை ஆணும் பெண்ணுமாக உருவாக்கினார், அவர்களை ஆசீர்வதித்து, அவர்களை உருவாக்கின நாளிலே அவர்களுக்கு மனிதர்கள் என்று பெயரிட்டார்.
3 I żył Adam sto i trzydzieści lat, i spłodził syna na podobieństwo swoje, i na wyobrażenie swoje, i nazwał imię jego Set.
௩ஆதாம் 130 வயதானபோது, தன் சாயலாகத் தன் உருவத்தைப்போல ஒரு மகனைப் பெற்றெடுத்து, அவனுக்கு சேத் என்று பெயரிட்டான்.
4 I było dni Adamowych po spłodzeniu Seta osiem set lat, i spłodził syny i córki.
௪ஆதாம் சேத்தைப் பெற்றபின், 800 வருடங்கள் உயிரோடிருந்து, மகன்களையும் மகள்களையும் பெற்றெடுத்தான்.
5 A tak było wszystkich dni Adamowych, których żył, dziewięć set lat i trzydzieści, lat i umarł.
௫ஆதாம் உயிரோடிருந்த நாட்களெல்லாம் 930 வருடங்கள்; அவன் இறந்தான்.
6 A Set żył sto lat i pięć lat, i spłodził Enosa.
௬சேத் 105 வயதானபோது, ஏனோசைப் பெற்றெடுத்தான்.
7 I żył Set po spłodzeniu Enosa, osiem set lat, i siedem lat, i spłodził syny i córki.
௭சேத் ஏனோசைப் பெற்றபின், 807 வருடங்கள் உயிரோடிருந்து, மகன்களையும் மகள்களையும் பெற்றெடுத்தான்.
8 I było wszystkich dni Setowych dziewięć set lat, i dwanaście lat, i umarł.
௮சேத்துடைய நாட்களெல்லாம் 912 வருடங்கள்; அவன் இறந்தான்.
9 A Enos żył dziewięćdziesiąt lat, i spłodził Kenana.
௯ஏனோஸ் 90 வயதானபோது, கேனானைப் பெற்றெடுத்தான்.
10 I żył Enos po spłodzeniu Kenana, osiem set lat, i piętnaście lat, i spłodził syny i córki.
௧0ஏனோஸ் கேனானைப் பெற்றபின்பு, 815 வருடங்கள் உயிரோடிருந்து, மகன்களையும் மகள்களையும் பெற்றெடுத்தான்.
11 Było tedy wszystkich dni Enosowych dziewięć set lat, i pięć lat, i umarł.
௧௧ஏனோசுடைய நாட்களெல்லாம் 905 வருடங்கள், அவன் இறந்தான்.
12 Kenan też żył siedemdziesiąt lat, i spłodził Mahalaleela.
௧௨கேனான் 70 வயதானபோது, மகலாலெயேலைப் பெற்றெடுத்தான்.
13 I żył Kenan po spłodzeniu Mahalaleela osiem set lat, i czterdzieści lat, i spłodził syny i córki.
௧௩கேனான் மகலாலெயேலைப் பெற்றபின், 840 வருடங்கள் உயிரோடிருந்து, மகன்களையும் மகள்களையும் பெற்றெடுத்தான்.
14 Było tedy wszystkich dni Kenanowych dziewięć set i dziesięć lat, i umarł.
௧௪கேனானுடைய நாட்களெல்லாம் 910 வருடங்கள்; அவன் இறந்தான்.
15 A Mahalaleel żył sześćdziesiąt i pięć lat, i spłodził Jareda.
௧௫மகலாலெயேல் 65 வயதானபோது, யாரேதைப் பெற்றெடுத்தான்.
16 A po spłodzeniu Jareda, żył Mahalaleel osiem set lat i trzydzieści lat, i spłodził syny i córki.
௧௬மகலாலெயேல் யாரேதைப் பெற்றபின், 830 வருடங்கள் உயிரோடிருந்து, மகன்களையும், மகள்களையும் பெற்றெடுத்தான்.
17 I było wszystkich dni Mahalaleelowych osiem set dziewięćdziesiąt i pięć lat, i umarł.
௧௭மகலாலெயேலுடைய நாட்களெல்லாம் 895 வருடங்கள்; அவன் இறந்தான்.
18 Żył też Jared sto sześćdziesiąt i dwa lata, i spłodził Enocha.
௧௮யாரேத் 162 வயதானபோது, ஏனோக்கைப் பெற்றெடுத்தான்.
19 I żył Jared po spłodzeniu Enocha osiem set lat, i spłodził syny i córki.
௧௯யாரேத் ஏனோக்கைப் பெற்றபின், 800 வருடங்கள் உயிரோடிருந்து, மகன்களையும் மகள்களையும் பெற்றெடுத்தான்.
20 I było wszystkich dni Jaredowych dziewięć set sześćdziesiąt i dwa lat, i umarł.
௨0யாரேதுடைய நாட்களெல்லாம் 962 வருடங்கள்; அவன் இறந்தான்.
21 A Enoch żył sześćdziesiąt lat, i pięć, i spłodził Matuzalema.
௨௧ஏனோக்கு 65 வயதானபோது, மெத்தூசலாவைப் பெற்றெடுத்தான்.
22 I chodził Enoch z Bogiem po spłodzeniu Matuzalema trzy sta lat, i spłodził syny i córki.
௨௨ஏனோக்கு மெத்தூசலாவைப் பெற்றபின், 300 வருடங்கள் தேவனோடு நெருங்கி உறவாடிக்கொண்டிருந்து, மகன்களையும், மகள்களையும் பெற்றெடுத்தான்.
23 I było wszystkich dni Enochowych trzy sta sześćdziesiąt i pięć lat.
௨௩ஏனோக்குடைய நாட்களெல்லாம் 365 வருடங்கள்.
24 I chodził Enoch z Bogiem, a nie było go więcej, bo go wziął Bóg.
௨௪ஏனோக்கு தேவனோடு நெருங்கி உறவாடிக்கொண்டிருக்கும்போது, காணப்படாமற்போனான்; தேவன் அவனை எடுத்துக்கொண்டார்.
25 I żył Matuzalem sto osiemdziesiąt i siedem lat, i spłodził Lamecha.
௨௫மெத்தூசலா 187 வயதானபோது, லாமேக்கைப் பெற்றெடுத்தான்.
26 I żył Matuzalem po spłodzeniu Lamecha siedem set osiemdziesiąt lat, i dwa lata, i spłodził syny i córki.
௨௬மெத்தூசலா லாமேக்கைப் பெற்றபின், 782 வருடங்கள் உயிரோடிருந்து, மகன்களையும் மகள்களையும் பெற்றெடுத்தான்.
27 I było wszystkich dni Matuzalemowych dziewięć set sześćdziesiąt i dziewięć lat, i umarł.
௨௭மெத்தூசலாவுடைய நாட்களெல்லாம் 969 வருடங்கள்; அவன் இறந்தான்.
28 A Lamech żył sto osiemdziesiąt i dwa lat, i spłodził syna.
௨௮லாமேக்கு 182 வயதானபோது, ஒரு மகனைப் பெற்றெடுத்து,
29 I nazwał imię jego Noe, mówiąc: Ten nas pocieszy z pracy naszej, i z roboty rąk naszych, z strony ziemi, którą Pan przeklął.
௨௯“யெகோவா சபித்த பூமியிலே நமக்கு உண்டான வேலையிலும், நம்முடைய கைகளின் பிரயாசத்திலும், இவன் நம்மைத் தேற்றுவான்” என்று சொல்லி, அவனுக்கு நோவா என்று பெயரிட்டான்.
30 Potem żył Lamech po spłodzeniu Noego, pięć set dziewięćdziesiąt lat i pięć, i spłodził syny i córki.
௩0லாமேக்கு நோவாவைப் பெற்றபின், 595 வருடங்கள் உயிரோடிருந்து, மகன்களையும், மகள்களையும் பெற்றெடுத்தான்.
31 I było wszystkich dni Lamechowych siedem set siedemdziesiąt i siedem lat, i umarł.
௩௧லாமேக்குடைய நாட்களெல்லாம் 777 வருடங்கள்; அவன் இறந்தான்.
32 A gdy było Noemu pięć set lat, spłodził Noe Sema, Chama, i Jafeta.
௩௨நோவா 500 வயதானபோது சேம், காம், யாப்பேத் என்பவர்களைப் பெற்றெடுத்தான்.