< Rodzaju 20 >
1 I ruszył się stamtąd Abraham do ziemi południowej, a mieszkał między Kades i między Sur, i był gościem w Gerar.
௧ஆபிரகாம் அந்த இடத்தைவிட்டு, தென்தேசத்திற்குப் பயணம் செய்து, காதேசுக்கும் சூருக்கும் நடுவாகக் குடியேறி, கேராரிலே தங்கினான்.
2 Tam powiedział Abraham o Sarze, żonie swej: Siostra moja jest; przetoż posłał Abimelech, król Gerary, i wziął Sarę.
௨அங்கே ஆபிரகாம் தன் மனைவியாகிய சாராளைத் “தன் சகோதரி” என்று சொன்னதால், கேராரின் ராஜாவாகிய அபிமெலேக்கு ஆள் அனுப்பி சாராளை வரவழைத்தான்.
3 Ale Bóg przyszedł do Abimelecha we śnie w nocy, i rzekł mu: Oto ty umrzesz dla niewiasty, którąś wziął, bo ona ma męża.
௩தேவன் இரவிலே அபிமெலேக்குக்குக் கனவிலே தோன்றி: “நீ வரவழைத்த பெண்ணால் நீ செத்தாய்; அவள் ஒருவனுடைய மனைவியாக இருக்கிறாளே” என்றார்.
4 Ale Abimelech nie przybliżył się był do niej, i rzekł: Panie, izali też lud sprawiedliwy zabijesz?
௪அபிமெலேக்கு அவளுடன் இணையாதிருந்தான். ஆகையால் அவன்: “ஆண்டவரே, நீதியுள்ள மக்களை அழிப்பீரோ?
5 Azaż mi on sam nie powiadał, siostra moja jest? a ona też sama nie mówiła, brat mój jest? w prostości serca mojego, i w niewinności rąk moich uczyniłem to.
௫இவள் தன் சகோதரி” என்று அவன் என்னிடம் சொல்லவில்லையா? அவன் தன் சகோதரன் என்று இவளும் சொன்னாளே; உத்தம இருதயத்தோடும் சுத்தமான கைகளோடும் இதைச் செய்தேன் என்று சொன்னான்.
6 Tedy mu rzekł Bóg we śnie: Wiemci ja, żeś to w prostości serca swego uczynił; i dla tegom cię zawściągnął, abyś nie zgrzeszył przeciwko mnie, i nie dopuściłem ci, abyś się jej dotknął.
௬அப்பொழுது தேவன்: “உத்தம இருதயத்தோடு நீ இதைச் செய்தாய் என்று நான் அறிந்திருக்கிறேன்; நீ எனக்கு விரோதமாகப் பாவம் செய்யாமலிருக்க உன்னைத் தடுத்தேன்; ஆகையால், நீ அவளைத் தொட நான் உனக்கு இடங்கொடுக்கவில்லை.
7 Teraz tedy wróć żonę mężowi, bo prorokiem jest; i będzie się modlił za cię, a będziesz żył; a jeźliż jej nie wrócisz, wiedz, iż śmiercią umrzesz, ty, i wszystko, co twego jest.
௭அந்த மனிதனுடைய மனைவியை அவனிடத்திற்கு அனுப்பிவிடு; அவன் ஒரு தீர்க்கதரிசி; நீ பிழைப்பதற்கு அவன் உனக்காக வேண்டுதல் செய்வான்; நீ அவளை அனுப்பிவிடாதிருந்தால், நீயும் உன்னைச் சார்ந்த அனைவரும் சாகவே சாவீர்கள் என்று அறிந்துகொள்” என்று கனவிலே அவனுக்குச் சொன்னார்.
8 Tedy Abimelech wstawszy rano, zwołał wszystkich sług swoich, i opowiedział im to wszystko; co usłyszawszy, polękali się mężowie oni bardzo.
௮அபிமெலேக்கு அதிகாலையில் எழுந்து, தன் வேலைக்காரரையெல்லாம் வரவழைத்து, இந்தச் செய்திகளையெல்லாம் அவர்கள் கேட்கும்படி சொன்னான்; அந்த மனிதர் மிகவும் பயந்தார்கள்.
9 Potem wezwał Abimelech Abrahama, i rzekł mu: Coś nam uczynił? a com zgrzeszył przeciwko tobie? iżeś przywiódł na mię i na królestwo moje grzech wielki? uczyniłeś mi, czegoś czynić nie miał.
௯அப்பொழுது அபிமெலேக்கு ஆபிரகாமை வரவழைத்து: “நீ எங்களுக்கு என்ன காரியம் செய்தாய், நீ என்மேலும், என்னுடைய ராஜ்ஜியத்தின்மேலும் பெரும்பாவம் சுமரச் செய்வதற்கு உனக்கு நான் என்ன குற்றம் செய்தேன்? செய்யத்தகாத காரியங்களை என்னிடத்தில் செய்தாயே என்றான்.
10 I rzekł po wtóre Abimelech do Abrahama: Cóżeś upatrywał, żeś tę rzecz uczynił?
௧0பின்னும் அபிமெலேக்கு ஆபிரகாமை நோக்கி: “எதைக் கண்டு நீ இந்தக் காரியத்தைச் செய்தாய்” என்றான்.
11 I odpowiedział Abraham: Myśliłem sobie: Podobno nie masz bojaźni Bożej na tem miejscu, i zabiją mię dla żony mojej.
௧௧அதற்கு ஆபிரகாம்: “இந்த இடத்தில் தெய்வபயம் இல்லையென்றும், என் மனைவியின்பொருட்டு என்னைக் கொன்றுபோடுவார்கள் என்றும் நான் நினைத்தேன்.
12 A wszakże prawdziwie siostra moja jest, córka ojca mego, choć nie córka matki mojej; pojąłem ją za żonę.
௧௨அவள் என்னுடைய சகோதரி என்பதும் உண்மைதான்; அவள் என் தகப்பனுக்கு மகள், என் தாய்க்கு மகளல்ல; அவள் எனக்கு மனைவியானாள்.
13 I stało się, gdy mię wyprawił Bóg na pielgrzymowanie z domu ojca mego, żem rzekł do niej: To miłosierdzie twoje będzie, które uczynisz ze mną: Na każdem miejscu, do którego przyjdziemy, powiesz o mnie: Brat to mój jest.
௧௩என் தகப்பன் வீட்டைவிட்டு தேவன் என்னைத் நாடோடியாகத் திரியச்செய்தபோது, நான் அவளை நோக்கி: நாம் போகும் இடமெங்கும், நீ என்னைச் சகோதரன் என்று சொல்வது நீ எனக்குச் செய்யவேண்டிய தயை என்று அவளிடத்தில் சொல்லியிருந்தேன்” என்றான்.
14 Tedy nabrawszy Abimelech owiec, i wołów, i sług, i służebnic, dał Abrahamowi, i wrócił mu Sarę, żonę jego.
௧௪அப்பொழுது அபிமெலேக்கு ஆடுமாடுகளையும், வேலைக்காரரையும், வேலைக்காரிகளையும் ஆபிரகாமுக்குக் கொடுத்து, அவனுடைய மனைவியாகிய சாராளையும் அவனிடத்தில் திரும்ப ஒப்புவித்தான்.
15 I rzekł Abimelech: Oto ziemia moja przed obliczem twojem; gdzieć się kolwiek podoba, mieszkaj.
௧௫பின்னும் அபிமெலேக்கு: இதோ, “என் தேசம் உனக்கு முன்பாக இருக்கிறது; உன் பார்வைக்கு விருப்பமான இடத்தில் குடியிரு” என்று சொன்னான்.
16 A do Sary rzekł: Otom dał tysiąc srebrników bratu twemu, onci jest zasłoną oczu twoich u wszystkich, którzy są z tobą; a tem wszystkiem Sara wyuczona była.
௧௬பின்பு சாராளை நோக்கி: “உன் சகோதரனுக்கு ஆயிரம் வெள்ளிக்காசு கொடுத்தேன்; இதோ, உன்னோடிருக்கிற எல்லோருக்கும் முன்பாகவும், மற்ற அனைவருக்கும் முன்பாகவும், இது உன் முகத்தின் முக்காட்டுக்காக” என்றான்; இப்படி அவள் கடிந்துகொள்ளப்பட்டாள்.
17 I modlił się Abraham Bogu, a uzdrowił Bóg Abimelecha, i żonę jego, i służebnice jego, i rodziły.
௧௭ஆபிரகாமுடைய மனைவியாகிய சாராளுக்காக யெகோவா அபிமெலேக்குடைய வீட்டாரின் கர்ப்பங்களையெல்லாம் அடைத்திருந்ததால்,
18 Zawarł bowiem był Pan cale każdy żywot domu Abimelechowego dla Sary, żony Abrahamowej.
௧௮ஆபிரகாம் தேவனை நோக்கி வேண்டிக்கொண்டான்; அப்பொழுது தேவன் அபிமெலேக்கையும், அவனுடைய மனைவியையும், வேலைக்காரிகளையும் குணமாக்கி, குழந்தைபெறும்படி தயவு செய்தார்.