< Ezechiela 37 >

1 Była nademną ręka Pańska, i wywiódł mię Pan w duchu, i postawił mię w pośrodku pola, które było pełne kości;
யெகோவாவுடைய கை என்மேல் அமர்ந்து, யெகோவா என்னை ஆவிக்குள்ளாக்கி வெளியே கொண்டுபோய், எலும்புகள் நிறைந்த ஒரு பள்ளத்தாக்கின் நடுவில் நிறுத்தி,
2 I przewiódł mię przez nie w około a w około, a oto było ich bardzo wiele na onem polu, a oto były bardzo suche.
என்னை அவைகளின் அருகே சுற்றி நடக்கச்செய்தார்; இதோ, பள்ளத்தாக்கின் வெட்டவெளியிலே அந்த எலும்புகள் மகா திரளாகக் கிடந்தது; அவைகள் மிகவும் உலர்ந்ததுமாக இருந்தது.
3 I rzekł do mnie: Synu człowieczy! ożyjąli te kości? I rzekłem: Panujący Panie! ty wiesz.
அவர் என்னை நோக்கி: மனிதகுமாரனே, இந்த எலும்புகள் உயிரடையுமா என்று கேட்டார்; அதற்கு நான்: யெகோவாகிய ஆண்டவரே, தேவரீர் அதை அறிவீர் என்றேன்.
4 W tem rzekł do mnie: Prorokuj o tych kościach, a mów do nich: Kości suche, słuchajcie słowa Pańskiego!
அப்பொழுது அவர்: நீ இந்த எலும்புகளைக்குறித்துத் தீர்க்கதரிசனம் சொல்லி, அவைகளைப் பார்த்துச் சொல்லவேண்டியது என்னவென்றால்: உலர்ந்த எலும்புகளே, யெகோவாவுடைய வார்த்தையைக் கேளுங்கள்.
5 Tak mówi panujący Pan o tych kościach: Oto ja wprowadzę w was ducha, a ożyjecie;
யெகோவாகிய ஆண்டவர் இந்த எலும்புகளை நோக்கி: இதோ, நான் உங்களுக்குள் உயிரை நுழையச்செய்வேன், அப்பொழுது உயிரடைவீர்கள்.
6 A włożę na was żyły, i uczynię, że porośnie na was mięso, i powlekę was skórą, a dam wam ducha, i ożyjecie, i poznacie, żem Ja Pan.
நான் உங்கள்மேல் நரம்புகளைச் சேர்த்து, உங்கள்மேல் சதையை உண்டாக்கி, உங்களைத் தோலினால் மூடி, உங்களில் ஆவியைக் கட்டளையிடுவேன்; அப்பொழுது நீங்கள் உயிரடைந்து, நான் யெகோவா என்று அறிந்துகொள்வீர்களென்று சொல்லுகிறார் என்று சொல் என்றார்.
7 Prorokowałem tedy, jako mi rozkazano; i stał się szum, gdym ja prorokował, a oto poruszenie; i przystąpiły kości, kość do kości swojej.
எனக்குக் கட்டளையிட்டபடியே நான் தீர்க்கதரிசனம் சொன்னேன்; நான் தீர்க்கதரிசனம் சொல்லும்போது ஒரு இரைச்சல் உண்டானது; இதோ, அசைவுண்டாகி, ஒவ்வொரு எலும்பும் தன்தன் எலும்புடன் சேர்ந்துகொண்டது.
8 I ujrzałem, a oto na nich żyły, i mięso porosło, i powleczone były skórą po wierzchu; ale ducha nie było w nich.
நான் பார்த்துக்கொண்டிருக்கும்போது, இதோ, அவைகள்மேல் நரம்புகளும் சதையும் உண்டானது, மேற்புறமெங்கும் தோலினால் மூடப்பட்டது; ஆனாலும் அவைகளில் உயிர் இல்லாமலிருந்தது.
9 I rzekł do mnie: Prorokuj do ducha, prorokuj, synu człowieczy! i rzecz do ducha: Tak mówi panujący Pan: Od czterech wiatrów przyjdź, duchu! i natchnij te pobite, a niech ożyją.
அப்பொழுது அவர் என்னைப் பார்த்து: நீ உயிரை நோக்கித் தீர்க்கதரிசனம் சொல்; மனிதகுமாரனே, நீ தீர்க்கதரிசனம் சொல்லி, உயிரைநோக்கி: யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால், உயிரே, நீ காற்றுத்திசை நான்கிலுமிருந்து வந்து, கொலை செய்யப்பட்ட இவர்கள் உயிரடையும்படி இவர்கள்மேல் ஊது என்கிறார் என்று சொல் என்றார்.
10 Prorokowałem tedy jako mi był rozkazał, i wstąpił w nie duch, a ożyły, i stanęły na nogach swoich, wojsko nader bardzo wielkie.
௧0எனக்குக் கற்பிக்கப்பட்டபடி நான் தீர்க்கதரிசனம் சொன்னேன்; அப்பொழுது உயிர் அவர்களுக்குள் நுழைய, அவர்கள் உயிரடைந்து, காலூன்றி, மகா பெரிய படையாக நின்றார்கள்.
11 I rzekł do mnie: Synu człowieczy! te kości są wszystek dom Izraelski. Oto mówią: Wyschły kości nasze, i zginęła nadzieja nasza, wygładzeni jesteśmy.
௧௧அப்பொழுது அவர் என்னை நோக்கி: மனிதகுமாரனே, இந்த எலும்புகள் இஸ்ரவேல் மக்கள் அனைவருமே; இதோ, அவர்கள் எங்களுடைய எலும்புகள் உலர்ந்துபோனது; எங்களுடைய நம்பிக்கை அற்றுப்போனது; நாங்கள் அறுப்புண்டுபோகிறோம் என்கிறார்கள்.
12 Dlategoż prorokuj, a mów do nich: Tak mówi panujący Pan: Oto Ja otworzę groby wasze, i wywiodę was z grobów waszych, ludu mój! i przywiodę was do ziemi Izraelskiej!
௧௨ஆகையால் நீ தீர்க்கதரிசனம் சொல்லி, அவர்களுடன் சொல்லவேண்டியது என்னவென்றால்: யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார், இதோ, என்னுடைய மக்களே, நான் உங்களுடைய பிரேதக்குழிகளைத் திறந்து, உங்களை உங்களுடைய பிரேதக்குழிகளிலிருந்து வெளிப்படவும், உங்களை இஸ்ரவேல் தேசத்திற்கு வரவும் செய்வேன்.
13 I dowiecie się, żem Ja Pan, gdy Ja otworzę groby wasze, a wywiodę was z grobów waszych, ludu mój!
௧௩என்னுடைய மக்களே, நான் உங்களுடைய பிரேதக்குழிகளைத் திறந்து, உங்களை உங்களுடைய பிரேதக்குழிகளிலிருந்து வெளிப்படச்செய்யும்போது, நான் யெகோவா என்று அறிந்துகொள்வீர்கள்.
14 I dam w was ducha mego, a ożyjecie, i dam wam odpocząć w ziemi waszej; i dowiecie się, że Ja Pan mówię to i uczynię, mówi Pan.
௧௪என்னுடைய ஆவியை உங்களுக்குள் வைப்பேன்; நீங்கள் உயிரடைவீர்கள்; நான் உங்களை உங்களுடைய தேசத்தில் வைப்பேன்; அப்பொழுது நான் யெகோவா என்று அறிந்துகொள்வீர்கள்; இதைச் சொன்னேன், இதைச் செய்வேன் என்று யெகோவா சொல்லுகிறார் என்று சொல் என்றார்.
15 I stało się słowo Pańskie do mnie, mówiąc:
௧௫பின்னும் யெகோவாவுடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:
16 A ty, synu człowieczy! weźmij sobie jedno drewno, i napisz na niem: Judzie i synom Izraelskim, towarzyszom jego. Weźmij też i drugie drewno, a napisz na niem: Józefowi drewnu Efraimowemu, i wszystkiemu domowi Izraelskiemu, towarzyszom jego!
௧௬மனிதகுமாரனே, நீ ஒரு கோலை எடுத்து, அதிலே யூதாவுக்கும் அதைச் சேர்ந்த இஸ்ரவேல் மக்களுக்கும் உரியது என்று எழுதி; பின்பு வேறொரு கோலை எடுத்து, அதிலே எப்பிராயீமுக்கும் அதைச்சேர்ந்த இஸ்ரவேல் மக்கள் அனைவருக்கும் உரிய யோசேப்பின் கோலென்று எழுதி,
17 I złóż je sobie jedno do drugiego w jedno drewno, aby były jako jedno w ręce twojej.
௧௭அவைகளை ஒரே கோலாகும்படி ஒன்றோடொன்று இணையச்செய், அவைகள் உன்னுடைய கையில் ஒன்றாகும்.
18 A gdy rzekną do ciebie synowie ludu twego, mówiąc: Izali nam nie oznajmisz, co przez to rozumiesz?
௧௮இவைகளின் பொருள் இன்னதென்று எங்களுக்கு அறிவிக்கமாட்டீரோ என்று உன்னுடைய மக்கள் உன்னிடத்தில் கேட்டால்,
19 Rzeczesz im: Tak mówi panujący Pan: Oto Ja wezmę drewno Józefowe, które jest w ręce Efraimowej i pokolenia Izraelskie, towarzyszów jego, i przyłożę je z nim do drewna Judowego, i uczynię je jednem drewnem, a będą jednem w ręce mojej.
௧௯நீ அவர்களை நோக்கி: யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால், இதோ, எப்பிராயீமுக்கும் அதைச் சேர்ந்த இஸ்ரவேல் கோத்திரங்களுக்கும் உரிய யோசேப்பின் கோலை எடுத்து, அதை யூதாவின் கோலோடு சேர்த்து, அவைகளை ஒரே கோலாக்குவேன்; அவைகள் என்னுடைய கையில் ஒன்றாகும் என்கிறார் என்று சொல்.
20 A gdy będą one drewna, na których napiszesz, w ręce twojej przed oczyma ich,
௨0சொல்லும்போது, நீ எழுதின கோல்கள் அவர்களுடைய கண்களுக்கு முன்பாக உன்னுடைய கையில் இருக்கவேண்டும்.
21 Tedy rzecz do nich: Tak mówi panujący Pan: Oto Ja wezmę synów Izraelskich z pośrodku tych narodów, do których byli zaszli, i zgromadzę ich zewsząd, a przywiodę ich do ziemi ich;
௨௧நீ அவர்களை நோக்கி: யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால் இதோ, நான் இஸ்ரவேல் வீட்டாரை அவர்கள் போயிருக்கும் தேசங்களிடத்திலிருந்து அழைத்து, சுற்றிலுமிருந்து அவர்களைச் சேர்த்து, அவர்களை அவர்கள் சொந்த தேசத்திலே வரச்செய்து,
22 I uczynię ich narodem jednym w ziemi, na górach Izraelskich, i będzie król jeden nad onymi wszystkimi za króla; a nie będą więcej dwa narody, nie rozdzielą się nigdy więcej na dwoje królestw;
௨௨அவர்களை இஸ்ரவேலின் மலைகளாகிய தேசத்திலே ஒரே தேசமாக்குவேன்; ஒரே ராஜா அவர்கள் எல்லோருக்கும் ராஜாவாக இருப்பார்; அவர்கள் இனி இரண்டு தேசங்களாக இருப்பதில்லை; அவர்கள் இனி இரண்டு ராஜ்ஜியங்களாகப் பிரிவதுமில்லை.
23 Nie splugwią się więcej plugawemi bałwanami swemi, i obrzydliwościami swemi, ani jakiemi przestępstwy swemi; i wybawię ich z każdego mieszkania ich, gdzie zgrzeszyli, i oczyszczę ich, i będą ludem moim, a Ja będę Bogiem ich.
௨௩அவர்கள் இனித் தங்களுடைய அசுத்தமான சிலைகளினாலும் தங்களுடைய அருவருப்புகளினாலும் தங்களுடைய எல்லா மீறுதல்களினாலும் தங்களைத் தீட்டுப்படுத்துவதுமில்லை; அவர்கள் குடியிருந்து பாவம்செய்த எல்லா இடங்களிலிருந்தும் நான் அவர்களை விளக்கி இரட்சித்து, அவர்களைச் சுத்தம் செய்வேன்; அப்பொழுது அவர்கள் என்னுடைய மக்களாக இருப்பார்கள், நான் அவர்களுடைய தேவனாக இருப்பேன்.
24 A sługa mój Dawid będzie królem nad nimi, i pasterza jednego wszyscy mieć będą, aby w sądach moich chodzili, i ustaw moich przestrzegali, i czynili je.
௨௪என்னுடைய ஊழியனாகிய தாவீது என்பவர் அவர்கள்மேல் ராஜாவாக இருப்பார்; அவர்கள் எல்லோருக்கும் ஒரே மேய்ப்பர் இருப்பார்; அப்பொழுது அவர்கள் என்னுடைய நியாயங்களில் நடந்து, என்னுடைய கட்டளைகளைக் கைக்கொண்டு, அவைகளின்படி செய்து,
25 I będą mieszkać w onej ziemi, którąm był dał słudze memu Jakóbowi, w której mieszkali ojcowie wasi; będą, mówię, w niej mieszkali oni i synowie ich, i synowie synów ich aż na wieki, a Dawid, sługa mój, będzie książęciem ich na wieki.
௨௫நான் என்னுடைய ஊழியனாகிய யாக்கோபுக்குக் கொடுத்ததும், உங்களுடைய தகப்பன்மார்கள் குடியிருந்ததுமான தேசத்திலே குடியிருப்பார்கள்; அவர்களும் அவர்கள் பிள்ளைகளும் அவர்களுடைய பிள்ளைகளின் பிள்ளைகளும் அதிலே என்றென்றைக்கும் குடியிருப்பார்கள்; என்னுடைய ஊழியனாகிய தாவீது என்பவர் என்றென்றைக்கும் அவர்களுக்கு அதிபதியாக இருப்பார்.
26 I uczynię też z nimi przymierze pokoju, a przymierze wieczne będzie z nimi; i osadzę ich i rozmnożę ich, i założę świątnicę moję w pośrodku ich na wieki.
௨௬நான் அவர்களுடன் சமாதான உடன்படிக்கை செய்வேன்; அது அவர்களுக்கு நிரந்தர உடன்படிக்கையாக இருக்கும்; நான் அவர்களை நிலைப்படுத்தி, அவர்களை பெருகச்செய்து, அவர்கள் நடுவிலே என்னுடைய பரிசுத்த ஸ்தலத்தை என்றென்றைக்கும் நிலைநிறுத்துவேன்.
27 I będzie przybytek mój między nimi, i będę Bogiem ich, a oni będą ludem moim.
௨௭என்னுடைய இருப்பிடம் அவர்களிடத்தில் இருக்கும், நான் அவர்களுடைய தேவனாக இருப்பேன், அவர்கள் என்னுடைய மக்களாக இருப்பார்கள்.
28 I dowiedzą się narody, żem Ja Pan, który poświęcam Izraela, gdy będzie świątnica moja w pośrodku ich na wieki.
௨௮அப்படியே என்னுடைய பரிசுத்த ஸ்தலம் அவர்கள் நடுவிலே என்றென்றைக்கும் இருக்கும்போது, நான் இஸ்ரவேலைப் பரிசுத்தம்செய்கிற யெகோவா என்று தேசங்கள் அறிந்துகொள்வார்கள் என்கிறார் என்று சொல் என்றார்.

< Ezechiela 37 >