< Ezechiela 25 >
1 I stało się słowo Pańskie do mnie, mówiąc:
௧யெகோவாவுடைய வார்த்தை எனக்கு உண்டாகி அவர்:
2 Synu człowieczy! obróć twarz twoję przeciwko synom Ammonowym, a prorokuj przeciwko nim.
௨மனிதகுமாரனே, நீ அம்மோனியர்களுக்கு எதிராக உன்னுடைய முகத்தைத் திருப்பி, அவர்களுக்கு விரோதமாகத் தீர்க்கதரிசனம் சொல்லி,
3 I rzecz synom Ammonowym: Słuchajcie słowa panującego Pana. Tak mówi panujący Pan: Przeto, żeś wykrzykał mówiąc: Hej, hej! nad świątnicą moją, gdy była splugawiona, i nad ziemią Izraelską, i gdy była spustoszona, i nad domem Judzkim, i gdy szedł w niewolę;
௩அம்மோனியர்களுக்கு சொல்லவேண்டியது என்னவென்றால்: யெகோவாகிய ஆண்டவருடைய வார்த்தையைக் கேளுங்கள்; யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார்: என்னுடைய பரிசுத்த ஸ்தலம் பரிசுத்தக்குலைச்சலாக்கப்படுகிறபோதும், இஸ்ரவேல் தேசம் பாழாக்கப்படுகிறபோதும், யூதமக்கள் சிறையிருப்பிற்கு போகிறபோதும், நீ அவர்களுக்கு விரோதமாக ஆ ஆ, என்று நிந்தித்தபடியினால்,
4 Przetoż oto Ja cię też podam narodom wschodnim w dziedzictwo i pobudują pałace swoje w tobie, a wystawią mieszkanie swoje w tobie, one będą jeść urodzaje twoje, oni też będą pić mleko twoje.
௪இதோ, நான் உன்னைக் கிழக்குத்தேசத்தாருக்குச் சொந்தமாக ஒப்புக்கொடுப்பேன், அவர்கள் உன்னில் தங்களுடைய கோட்டைகளைக் கட்டி, உன்னில் தங்களுடைய கூடாரங்களை உண்டாக்குவார்கள்; அவர்கள் உன்னுடைய பழங்களைச் சாப்பிட்டு, உன்னுடைய பாலைக் குடிப்பார்கள்.
5 I dam Rabbę na mieszkanie wielbłądom, a miasta synów Ammonowych na legowisko trzodom; i dowiecie się, żem Ja Pan.
௫நான் ரப்பாவை ஒட்டகங்களின் கொட்டகையும், அம்மோனியர்களின் தேசத்தை ஆட்டுதொழுவமுமாக்குவேன்; அப்பொழுது நான் யெகோவா என்று அறிந்து கொள்வீர்கள்.
6 Bo tak mówi panujacy Pan: Przeto, iżeś klaskał ręką, a tąpał nogą, i weseliłeś się z serca, żeś cale spustoszył ziemię Izraelską:
௬யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: இஸ்ரவேல் தேசத்திற்கு விரோதமாக நீ கை தட்டி, உன்னுடைய காலால் தட்டி, வஞ்சம் வைத்து, தீங்கு செய்ததினால்,
7 Przetoż oto Ja wyciągnę rękę swą przeciwko tobie, a dam cię w rozchwycenie narodom, i wytnę cię z narodów, a wytracę cię z ziem, i wygładzę cię, a dowiesz się, żem Ja Pan.
௭இதோ, உனக்கு விரோதமாக நான் என்னுடைய கையை நீட்டி, உன்னை தேசங்களுக்குக் கொள்ளையாக ஒப்புக்கொடுத்து, உன்னை மக்களுக்குள்ளே நிலையற்றவளாக்கி, உன்னை தேசங்களுக்குள்ளே அழித்து, உன்னை அழிப்பேன்; அப்பொழுது நான் யெகோவா என்று அறிந்துகொள்வாய்.
8 Tak mówi panujący Pan: Dlatego, że Moab i Seir mówił: Oto dom Judzki podobny jest wszystkim innym narodom.
௮யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, யூதமக்கள் எல்லா தேசங்களுக்கும் ஒத்தவர்களென்று மோவாபும் சேயீரும் சொல்லுகிறபடியினால்,
9 Dlatego oto Ja otworzę stronę Moabczyków od miast, od miast mówię ich, i od granic ich, ozdobę ziemi Betiesymot, Baalmeon, i Karyjataim,
௯இதோ, அம்மோனியர்கள் பெயர் தேசங்களுக்குள் இல்லாதபடி நான் அம்மோனியர்களின் தேசத்தைக் கிழக்குத் தேசத்தாருக்குத் திறந்துவைத்து, சொந்தமாக ஒப்புக்கொடுக்கிறவிதமாக,
10 Narodom wschodnim z ziemią synów Ammonowych; bom ją dał w dziedzictwo, aby nie było pamiątki synów Ammonowych między narodami.
௧0நான் மோவாப் தேசத்தின் பக்கத்திலுள்ள அதின் கடைசி ஊர்களாகிய பட்டணங்கள் முதற்கொண்டுள்ள தேசத்தின் அலங்காரமாகிய பெத்யெசிமோத்தையும், பாகால்மெயோனையும், கீரியாத்தாயீமையும் அவர்களுக்குத் திறந்துவைத்து,
11 A tak nad Moabem sądy wykonam, iż poznają, żem Ja Pan.
௧௧மோவாபிலே நியாயங்களைச் செய்வேன், அப்பொழுது நான் யெகோவா என்று அறிந்துகொள்வார்கள்.
12 Tak mówi panujący Pan: Przetoż, iż się Edomczycy srodze mścili nad domem Judzkim, i przywiedli na się winę wielką, mszcząc się nad nimi;
௧௨யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: ஏதோம் யூதா மக்களிடத்தில் கோபத்தைத்தணிக்க, பழிவாங்கி, பெரிய குற்றம்செய்ததால்,
13 Przetoż tak mówi panujący Pan: Wyciągnę też rękę moję na ziemię Edomczyków, a wytrcę z niej ludzi i bydło, i uczynię ją pustynią; od Teman aż do Dedan od miecza polegną.
௧௩யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார்: நான் ஏதோம் தேசத்திற்கு விரோதமாக என்னுடைய கையை நீட்டி அதில் மனிதர்களையும், மிருகங்களையும் இல்லாதபடி அழித்து, அதைத் தேமான் துவங்கித் தேதான்வரை வனாந்திரமாக்குவேன்; வாளினால் விழுவார்கள்.
14 A tak wykonam pomstę moję nad Edomczykami przez ręce ludu mojego Izraelskiego, a obejdą się z Edomczykami według popędliwości mojej, i według gniewu mego; i poznają pomstę moję, mówi panujacy Pan.
௧௪நான் இஸ்ரவேலாகிய என்னுடைய மக்களின் கையினால் ஏதோமியர்களிடத்தில் பழிவாங்குவேன்; அவர்கள் என்னுடைய கோபத்தையும், கடுங்கோபத்தையும் ஏதோமுக்கு காட்டுவார்கள்; அப்பொழுது நான் பழிவாங்குவது இன்னதென்று அறிந்துகொள்வார்கள் என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
15 Tak mówi panujący Pan: Przeto, iż się Filistyńczycy mścili, i pomstę wykonywali, pustosząc ich z serca, a do zginienia przywodząc z nieprzyjaźni starodawnej;
௧௫யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: பெலிஸ்தியர்கள் பழிவாங்கிறவர்களாக இருந்து, பழைய விரோதத்தால் கெடுதல்செய்யவேண்டுமென்று, மனதில் வைத்துப் பழிவாங்கினதால்,
16 Dlatego tak mówi panujący Pan: Oto Ja wyciągnę rękę moję na Filistyńczyków, i wykorzenię Cheretejczyków, i wytracę ostatek krainy pomorskiej.
௧௬இதோ, நான் பெலிஸ்தியர்களுக்கு விரோதமாக என்னுடைய கையை நீட்டி, கிரேத்தியர்களை அழித்து, மத்திய தரைக் கடற்கரையில் மீதியானவர்களை அழித்து,
17 A tak uczynię nad nimi pomsty wielkie, karząc ich w zapalczywości; i dowiedzą się, żem Ja Pan, gdy wykonam pomstę moję nad nimi.
௧௭கடுங்கோபமான தண்டனைகளினால் அவர்களைக் கொடூரமாகப் பழிவாங்குவேன்; நான் அவர்களைப் பழிவாங்கும்போது நான் யெகோவா என்று அறிந்துகொள்வார்கள் என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார்.