< Wyjścia 18 >
1 A gdy usłyszał Jetro, kapłan Madyjański, świekier Mojżesza, wszystko, co uczynił Bóg Mojżeszowi, i Izraelowi, ludowi swemu, że wywiódł Pan Izraela z Egiptu;
௧தேவன் மோசேக்கும் தமது மக்களாகிய இஸ்ரவேலர்களுக்கும் செய்த யாவையும், யெகோவா இஸ்ரவேலர்களை எகிப்திலிருந்து புறப்படச்செய்ததையும், மீதியானில் ஆசாரியனாக இருந்த மோசேயின் மாமனாகிய எத்திரோ கேள்விப்பட்டபோது,
2 Tedy wziął Jetro, świekier Mojżesza, Zeforę, żonę Mojżeszowę, którą był odesłał.
௨மோசேயின் மாமனாகிய எத்திரோ, மோசேயினால் திரும்பி அனுப்பிவிடப்பட்டிருந்த அவனுடைய மனைவியாகிய சிப்போராளையும்,
3 I dwu synów jej, z których imię jednemu Gerson; bo był powiedział Mojżesz: Byłem przychodniem w ziemi cudzej.
௩அவளுடைய இரண்டு மகன்களையும் அழைத்துக்கொண்டு பயணப்பட்டான். “நான் அந்நிய தேசத்திலே பரதேசியானேன்” என்று மோசே சொல்லி, ஒரு மகனுக்குக் கெர்சோம் என்று பெயரிட்டிருந்தான்.
4 A imię drugiego Eliezer; iż mówił: Bóg ojca mego był mi ku pomocy, i wyrwał mię od miecza Faraonowego.
௪“என்னுடைய பிதாவின் தேவன் எனக்குத் துணைநின்று பார்வோனின் பட்டயத்திற்கு என்னைத் தப்புவித்தார்” என்று சொல்லி, மற்றவனுக்கு எலியேசர் என்று பெயரிட்டிருந்தான்.
5 I przyszedł Jetro, świekier Mojżesza, z synami jego i z żoną jego do Mojżesza na puszczą, gdzie się był obozem położył przy górze Bożej.
௫மோசேயின் மாமனாகிய எத்திரோ மோசேயின் மகன்களோடும் அவனுடைய மனைவியோடும், அவன் முகாமிட்டிருந்த தேவனுடைய மலையினிடத்தில் வனாந்திரத்திற்கு வந்து:
6 I wskazał do Mojżesza: Ja świekier twój Jetro idę do ciebie, i żona twoja, i jej dwa synowie z nią.
௬“எத்திரோ என்னும் உம்முடைய மாமனாகிய நானும், உம்முடைய மனைவியும், அவளுடன் அவளுடைய இரண்டு மகன்களும் உம்மிடம் வந்திருக்கிறோம்” என்று மோசேக்குச் சொல்லி அனுப்பினான்.
7 Zatem Mojżesz wyszedł przeciwko świekrowi swemu, a ukłoniwszy się całował go; i przywitawszy jeden drugiego, potem weszli do namiotu.
௭அப்பொழுது மோசே தன்னுடைய மாமனுக்கு எதிராகப்போய், அவனை வணங்கி, முத்தம்செய்தான்; ஒருவரை ஒருவர் சுகசெய்தி விசாரித்துக்கொண்டு, கூடாரத்திற்குள் நுழைந்தார்கள்.
8 I rozpowiadał Mojżesz świekrowi swemu wszystko, co uczynił Pan Faraonowi i Egipczanom za przyczyną Izraela; i wszystkę trudność, która je spotykała w drodze, i jako je Pan wybawił.
௮பின்பு மோசே யெகோவா இஸ்ரவேலுக்காக பார்வோனுக்கும் எகிப்தியர்களுக்கும் செய்த எல்லாவற்றையும், வழியிலே தங்களுக்கு சம்பவித்த எல்லா வருத்தத்தையும், யெகோவா தங்களை விடுவித்து இரட்சித்ததையும் தன்னுடைய மாமனுக்கு விவரித்துச் சொன்னான்.
9 I radował się Jetro ze wszystkiego dobrego, które uczynił Pan Izraelowi, iż go wyrwał z ręki Egipczanów.
௯யெகோவா இஸ்ரவேலர்களை எகிப்தியர்களின் கைக்குத் தப்புவித்து, அவர்களுக்குச் செய்த எல்லா நன்மைகளையும்குறித்து எத்திரோ சந்தோஷப்பட்டு:
10 I rzekł Jetro: Błogosławiony Pan, który was wyrwał z ręki Egipczanów i z ręki Faraonowej, który wyrwał lud z niewoli Egipskiej.
௧0“உங்களை எகிப்தியர்களின் கைக்கும் பார்வோனின் கைக்கும் தப்புவித்து, எகிப்தியர்களுடைய கையின் கீழ் இருந்த மக்களை விடுவித்த யெகோவாவுக்கு ஸ்தோத்திரம்.
11 Terazem doznał, że większy jest Pan nad wszystkie bogi; albowiem czem oni hardzie powstawali przeciwko niemu, tem poginęli.
௧௧யெகோவா எல்லா தெய்வங்களையும்விட பெரியவர் என்பதை இப்பொழுது அறிந்திருக்கிறேன்; அவர்கள் ஆணவமாக செய்த காரியத்தில் அவர்களை மேற்கொண்டார்” என்று சொல்லி;
12 I wziął Jetro, świekier Mojżesza, całopalenie i ofiary Bogu. Przyszedł też Aaron i wszyscy starsi Izraelscy, aby jedli chleb z świekrem Mojżeszowym przed Bogiem.
௧௨மோசேயின் மாமனாகிய எத்திரோ சர்வாங்கதகனபலியையும் மற்ற பலிகளையும் தேவனுக்குக் கொண்டுவந்து செலுத்தினான். பின்பு ஆரோனும் இஸ்ரவேல் மூப்பர்கள் அனைவரும் வந்து, மோசேயின் மாமனுடனே தேவசமுகத்தில் சாப்பிட்டார்கள்.
13 I stało się nazajutrz, że usiadł Mojżesz, aby sądził lud, i stał lud przed Mojżeszem od poranku aż do wieczora.
௧௩மறுநாள் மோசே மக்களை நியாயம் விசாரிக்க உட்கார்ந்தான்; மக்கள் காலை துவங்கி மாலைவரை மோசேக்கு முன்பாக நின்றார்கள்.
14 A widząc świekier Mojżesza wszystko, co on czynił z ludem, rzekł: Cóż to jest, co ty czynisz z ludem? czemuż ty sam siedzisz, a lud wszystek stoi przed tobą od poranku aż do wieczora?
௧௪மக்களுக்கு அவன் செய்த யாவையும் மோசேயின் மாமன் கண்டு: “நீர் மக்களுக்குச் செய்கிற இந்தக் காரியம் என்ன? நீர் தனியாக உட்கார்ந்திருக்கவும், மக்கள் எல்லோரும் காலை துவங்கி மாலைவரை உமக்கு முன்பாக நிற்கவும் வேண்டியது ஏன்” என்றான்.
15 Tedy Mojżesz odpowiedział świekrowi swemu: Iż przychodzi lud do mnie, aby się radził Boga.
௧௫அப்பொழுது மோசே தன்னுடைய மாமனை நோக்கி: “தேவனிடம் விசாரிக்கும்படி மக்கள் என்னிடம் வருகிறார்கள்.
16 Gdy sprawę jaką mają, przychodzą do mnie, a rozsądzam między nimi, oznajmując ustawy Boże i prawa jego.
௧௬அவர்களுக்கு ஏதாவது காரியம் உண்டானால், என்னிடத்தில் வருகிறார்கள்; நான் அவர்களுக்குள்ள வழக்கைத் தீர்த்து, தேவகட்டளைகளையும் அவருடைய பிரமாணங்களையும் தெரிவிக்கிறேன்” என்றான்.
17 Zatem rzekł świekier Mojżesza do niego: Nie dobra rzecz, którą ty czynisz.
௧௭அதற்கு மோசேயின் மாமன்: “நீர் செய்கிற காரியம் நல்லதல்ல;
18 Pewnie ustaniesz, i ty i lud ten, który jest z tobą, bo cięższa to rzecz nad siły twoje; nie będziesz jej mógł ty sam podołać.
௧௮நீரும் உம்மோடே இருக்கிற மக்களும் களைத்துப்போவீர்கள்; இது உமக்கு மிகவும் பாரமான காரியம்; நீர் ஒருவராக அதைச் செய்ய உம்மாலே முடியாது.
19 Przetoż usłuchaj teraz głosu mego, poradzęć, a będzie Bóg z tobą; stój ty za lud przed Bogiem, a odnoś sprawy do Boga;
௧௯இப்பொழுது என்னுடைய சொல்லைக்கேளும், உமக்கு ஒரு ஆலோசனை சொல்லுகிறேன்; தேவனும் உம்மோடு இருப்பார், நீர் தேவசந்நிதியிலே மக்களுக்காக இரும்; விசேஷித்தவைகளைத் தேவனிடம் கொண்டுபோய்;
20 A onych też nauczaj ustaw i praw, oznajmując im drogę, którą by chodzić, i dzieło, które by czynić mieli.
௨0கட்டளைகளையும் பிரமாணங்களையும் அவர்களுக்கு வெளிப்படுத்தி; அவர்கள் நடக்கவேண்டிய வழியையும், அவர்கள் செய்யவேண்டிய காரியத்தையும் அவர்களுக்குத் தெரியப்படுத்தும்.
21 Ty też upatrz ze wszystkiego ludu męże stateczne, bojące się Boga, męże prawdomówne, którzy by nienawidzili łakomstwa, a postanów z nich przełożone, tysiączniki, setniki, pięćdziesiątniki i dziesiątniki.
௨௧மக்கள் எல்லோருக்குள்ளும் தேவனுக்குப் பயந்தவர்களும் உண்மையுள்ளவர்களும் பொருளாசையை வெறுக்கிறவர்களுமான திறமையுள்ள மனிதர்களைத் தெரிந்துகொண்டு, அவர்களை ஆயிரம்பேருக்குத் தலைவர்களாகவும், நூறுபேருக்குத் தலைவர்களாகவும், ஐம்பதுபேருக்குத் தலைவர்களாகவும், பத்துபேருக்குத் தலைவர்களாகவும் ஏற்படுத்தும்.
22 Którzy na każdy czas lud sądzić będą; a gdy będzie rzecz wielka, odniosą do ciebie, a każdą rzecz małą sądzić będą sami; tedy ulżysz sobie, gdy poniosą ciężar z tobą.
௨௨அவர்கள் எப்பொழுதும் மக்களை நியாயம் விசாரித்து, பெரிய காரியங்கள் எல்லாவற்றையும் உம்மிடம் கொண்டுவரட்டும், சிறிய காரியங்கள் யாவையும் தாங்களே தீர்க்கட்டும்; இப்படி அவர்கள் உம்மோடு இந்தப் பாரத்தைச் சுமந்தால், உமக்கு இலகுவாக இருக்கும்.
23 To jeźli uczynisz, a rozkażeć Bóg, ostoisz się, i ten wszystek lud na miejsca swoje wracać się będzie w pokoju.
௨௩இப்படி நீர் செய்வதும், இப்படி தேவன் உமக்குக் கட்டளையிடுவதும் உண்டானால், உம்மாலே சுமக்கமுடியும்; இந்த மக்கள் எல்லோரும் தாங்கள் போகும் இடத்திற்குச் சுகமாகப் போய்ச் சேரலாம்” என்றான்.
24 I usłuchał Mojżesz rady świekra swojego, a uczynił wszystko, jako mu powiedział.
௨௪மோசே தன்னுடைய மாமனுடைய சொல்லைக்கேட்டு, அவன் சொன்னபடியெல்லாம் செய்தான்.
25 I wybrał Mojżesz męże stateczne ze wszystkiego Izraela, i postanowił je przełożonymi nad ludem, tysiączniki, setniki, pięćdziesiątniki i dziesiątniki.
௨௫மோசே இஸ்ரவேலர்கள் எல்லோரிலும் திறமையுள்ள மனிதர்களைத் தெரிந்துகொண்டு, அவர்களை ஆயிரம்பேருக்குத் தலைவர்களாகவும், நூறுபேருக்குத் தலைவர்களாகவும், ஐம்பதுபேருக்குத் தலைவர்களாகவும், பத்துபேருக்குத் தலைவர்களாகவும் மக்கள்மேல் தலைவர்களாக்கினான்.
26 Którzy sądzili lud każdego czasu; trudne rzeczy odnosili do Mojżesza, a każdą rzecz mniejszą sami sądzili.
௨௬அவர்கள் எப்பொழுதும் மக்களை நியாயம் விசாரித்தார்கள்; வருத்தமான காரியங்களைமட்டும் மோசேயிடம் கொண்டுவந்தார்கள்; சிறிய காரியங்களையெல்லாம் தாங்களே தீர்த்தார்கள்.
27 Zatem puścił od siebie Mojżesz świekra swego, który odszedł do ziemi swej.
௨௭பின்பு மோசே தன்னுடைய மாமனை அனுப்பிவிட்டான்; அவன் திரும்பத் தன்னுடைய தேசத்திற்குப் போய்விட்டான்.