< Amosa 2 >
1 Tak mówi Pan: Dla trzech występków Moaba, owszem, dla czterech, nie przepuszczę mu, przeto, iż spalił kości króla Edomskiego na popiół;
௧யெகோவா சொல்லுகிறது என்னவென்றால்: மோவாபின் மூன்று பாவங்களுக்காகவும், நான்கு பாவங்களுக்காகவும், நான் அவனுடைய தண்டனையைத் திருப்பமாட்டேன்; அவன் ஏதோமுடைய ராஜாவின் எலும்புகளைச் சுட்டு சாம்பலாக்கிப் போட்டானே.
2 Ale poślę ogień na Moaba, który pożre pałace Karyjot; i umrze Moab w huku, w krzyku i w głosie trąby.
௨மோவாப் தேசத்தில் தீக்கொளுத்துவேன்; அது கீரியோத்தின் அரண்மனைகளை அழிக்கும்; மோவாபியர்கள் இரைச்சலோடும் ஆர்ப்பரிப்போடும் எக்காள சத்தத்தோடும் சாவார்கள்.
3 I wygładzę sędziów z pośrodku jego, i wszystkich książąt jego pobiję z nim, mówi Pan.
௩நியாயாதிபதியை அவர்களுடைய நடுவில் இல்லாமல் நான் அழித்து, அவனோடு அவர்களுடைய பிரபுக்களையெல்லாம் கொன்றுபோடுவேன் என்று யெகோவா சொல்லுகிறார்.
4 Tak mówi Pan: Dla trzech występków Judzkich, owszem, dla czterech, nie przepuszczę mu, przeto, że odrzucają zakon Pański, i ustaw jego nie przestrzegają, a dadzą się zwodzić kłamstwom swoim, których naśladowali ojcowie ich;
௪மேலும்: யூதாவின் மூன்று பாவங்களுக்காகவும், நான்கு பாவங்களுக்காகவும், நான் அவர்களுடைய தண்டனையைத் திருப்பமாட்டேன்; அவர்கள் யெகோவாவுடைய வேதத்தை வெறுத்து, அவருடைய கட்டளைகளைக் கைக்கொள்ளாமல், தங்களுடைய முற்பிதாக்கள் பின்பற்றின பொய்களினால் மோசம்போனார்களே.
5 Ale poślę ogień na Judę, który pożre pałace Jeruzalemskie.
௫யூதாவிலே நான் தீக்கொளுத்துவேன்; அது எருசலேமின் அரண்மனைகளை அழிக்கும் என்று யெகோவா சொல்லுகிறார்.
6 Tak mówi Pan: Dla trzech występków Izraelskich, owszem, dla czterech, nie przepuszczę mu, przeto, że sprawiedliwego za pieniądze sprzedawają, a ubogiego za parę trzewików;
௬மேலும்: இஸ்ரவேலின் மூன்று பாவங்களுக்காகவும், நான்கு பாவங்களுக்காகவும், நான் அவர்களுடைய தண்டனையைத் திருப்பமாட்டேன்; அவர்கள் நீதிமானைப் பணத்திற்கும், எளியவனை ஒரு ஜோடி காலணிகளுக்கும் விற்றுப்போட்டார்களே.
7 Którzy usiłują, aby na proch potarli głowy ubogich, a drogę pokornych podwracają; nadto syn i ojciec jego wchodzą do jednejże dziewki, aby splugawili imię świętobliwości mojej;
௭அவர்கள் தரித்திரர்களுடைய தலையின்மேல் மண்ணைவாரி இறைத்து, சிறுமையானவர்களின் வழியைப் புரட்டுகிறார்கள்; என்னுடைய பரிசுத்த நாமத்தைக் கெடுக்கும்படி மகனும் தகப்பனும் ஒரு பெண்ணிடத்தில் உறவுகொள்ளுகிறார்கள்.
8 I na szatach zastawionych kłaniają się przy każdym ołtarzu, a wino tych, co podpadli pod kaźń, piją w domu bogów swoich.
௮அவர்கள் எல்லா பீடங்களின் அருகிலும் அடைமானமாக வாங்கின ஆடைகளின்மேல் படுத்துக்கொண்டு, பிணையமாக பிடிக்கப்பட்டவர்களுடைய மதுபானத்தைத் தங்களுடைய தெய்வங்களின் கோவிலிலே குடிக்கிறார்கள் என்று யெகோவா சொல்லுகிறார்.
9 Chociażem Ja wytracił Amorejczyka od oblicza ich, którego wysokość była jako wysokość cedrów, aczkolwiek warownie stał jako dąb, wszakżem skaził owoc jego z wierzchu, a korzenie jego ze spodku.
௯நானோ: கேதுருமரங்களைப்போல் உயரமும், கர்வாலி மரங்களைப்போல் வைரமுமாக இருந்த எமோரியனை அவர்களுக்கு முன்பாக அழித்தேன்; உயர இருந்த அவனுடைய கனியையும், தாழ இருந்த அவனுடைய வேர்களையும் அழித்துப்போட்டு,
10 A was wywiodłem z ziemi Egipskiej, i prowadziłem was po puszczy czterdzieści lat, żebyście posiedli ziemię Amorejczyka.
௧0நீங்கள் எமோரியனுடைய தேசத்தைக் கைப்பற்றும்படி உங்களை நான் எகிப்து தேசத்திலிருந்து வரவழைத்து, உங்களை நாற்பது வருடங்களாக வனாந்திரத்திலே வழிநடத்தி,
11 Nadto wzbudzałem z synów waszych proroków, a z młodzieńców waszych Nazarejczyków; izali nie tak jest, o synowie Izraelowi? mówi Pan.
௧௧உங்களுடைய மகன்களில் சிலரை தீர்க்கதரிசிகளாகவும், உங்களுடைய வாலிபர்களில் சிலரை நசரேயர்களாகவும் எழும்பச்செய்தேன்; இஸ்ரவேல் மக்களே, இப்படி நான் செய்யவில்லையா என்று யெகோவா கேட்கிறார்.
12 Aleście wy napawali Nazarejczyków winem, a prorokom zakazywaliście, mówiąc: Nie prorokujcie.
௧௨நீங்களோ நசரேயர்களுக்குத் திராட்சைரசம் குடிக்கக் கொடுத்து, தீர்க்கதரிசிகளை நோக்கி: நீங்கள் தீர்க்கதரிசனம் சொல்லவேண்டாம் என்று கற்பித்தீர்கள்.
13 Oto Ja ścisnę ziemię waszę, tak jako ciśnie wóz napełniony snopami.
௧௩இதோ, கோதுமைக்கட்டுகள் பாரமாக ஏற்றப்பட்ட வண்டியில் நெருக்குகிறதுபோல, நான் உங்களை நீங்கள் இருக்கிற இடத்தில் நெருக்குவேன்.
14 I zginie ucieczka od prędkiego, a mocarz nie pokrzepi mocy swojej, i duży nie wybawi duszy swojej;
௧௪அப்பொழுது வேகமானவன் ஓடியும் புகலிடமில்லை; பலவான் தன் பலத்தினால் பலப்படுவதுமில்லை; பலசாலி தன் உயிரை காப்பாற்றுவதுமில்லை.
15 A ten, który trzyma łuk, nie ostoi się, i prędki na nogi swe nie uciecze, a ten, który jeździ na koniu, nie zachowa duszy swej,
௧௫வில்லைப் பிடிக்கிறவன் நிற்பதுமில்லை; வேகமானவன் தன்னுடைய கால்களால் தப்பிப்போவதுமில்லை; குதிரையின்மேல் ஏறுகிறவன் தன்னுடைய உயிரை காப்பாற்றிக்கொள்வதுமில்லை.
16 Ale i rycerz serca zmężałego między mocarzami nago uciecze w on dzień, mówi Pan.
௧௬பலசாலிகளுக்குள்ளே தைரியமானவன் அந்த நாளிலே நிர்வாணியாக ஓடிப்போவான் என்று யெகோவா சொல்லுகிறார்.