< II Samuela 18 >
1 Tedy obliczył Dawid lud, który miał z sobą, a postanowił nad nimi hetmany, i rotmistrze.
௧தாவீது தன்னோடு இருந்த மக்களைக் கணக்கிட்டுப்பார்த்து, அவர்கள்மேல் 1,000 பேருக்கு தலைவர்களையும், 100 பேருக்கு தலைவர்களையும் ஏற்படுத்தி,
2 I poruczył Dawid ludu trzecią część pod rękę Joabowę, a trzecią część pod rękę Abisaja, syna Sarwii, brata Joabowego, a trzecią część pod rękę Itaja Gietejczyka; i rzekł król do ludu: Wynijdę i ja także z wami.
௨பின்பு தாவீது படைகளில் மூன்றில் ஒரு பிரிவை யோவாபின் கையிலும், மூன்றில் ஒரு பிரிவைச் செருயாவின் மகனும் யோவாபின் சகோதரனுமான அபிசாயின் கையிலும், மூன்றில் ஒரு பிரிவைக் கித்தியனான ஈத்தாயின் கையிலுமாக அனுப்பி: நானும் உங்களோடு புறப்பட்டு வருவேன் என்று ராஜா இராணுவங்களுக்குச் சொன்னான்.
3 Ale lud rzekł: Nie wynijdziesz; bo jeźlibyśmy my tył podali, oni mało dbać o nas będą, choć by też nas poległa połowa, mało dbać o nas będą; albowiemeś ty sam jako nas dziesięć tysięcy. Przetoż teraz lepiej, abyś nam był w mieście na pomocy.
௩மக்களோ: நீர் புறப்படவேண்டாம்; நாங்கள் ஓடிப்போனாலும், அவர்கள் எங்கள் காரியத்தை ஒரு பொருட்டாக நினைக்கமாட்டார்கள்; எங்களில் பாதிப்பேர் இறந்துபோனாலும், எங்கள் காரியத்தைப்பற்றிக் கவலைப்படமாட்டார்கள்; நீரோ, எங்களில் பத்தாயிரம்பேருக்கு சமமானவர்; நீர் பட்டணத்தில் இருந்துகொண்டு, எங்களுக்கு உதவி செய்கிறது எங்களுக்கு நலமாக இருக்கும் என்றார்கள்.
4 I rzekł do nich król: Co się wam zda dobrego, to uczynię. Tedy stał król przy bramie, a wszystek lud wychodził po stu i po tysiącu.
௪அப்பொழுது ராஜா அவர்களைப் பார்த்து: உங்களுக்கு நலமாகத் தோன்றுகிறதைச் செய்வேன் என்று சொல்லி, ராஜா நகர வாசலின் ஓரத்திலே நின்றான்; மக்கள் எல்லோரும் நூறு நூறாகவும், ஆயிரம் ஆயிரமாகவும் புறப்பட்டார்கள்.
5 I rozkazał król Joabowi, i Abisajowi, i Itajowi, mówiąc: Łaskawie mi się obchodźcie z synem moim Absalomem. A wszystek lud słyszł, gdy przykazywał król wszystkim hetmanom o Absalomie.
௫ராஜா யோவாபையும், அபிசாயையும், ஈத்தாயையும் நோக்கி: வாலிபனான அப்சலோமை எனக்காக மெதுவாக நடத்துங்கள் என்று கட்டளையிட்டான்; இப்படி ராஜா அப்சலோமைக் குறித்து தலைவர்களுக்கெல்லாம் கட்டளையிட்டதை மக்கள் எல்லோரும் கேட்டிருந்தார்கள்.
6 A tak wyciągnął lud w pole przeciw Izraelowi, i zwiedli bitwę w lesie Efraim.
௬மக்கள் வெளியே இஸ்ரவேலர்களுக்கு எதிராகப் புறப்பட்டபின்பு, எப்பிராயீம் காட்டிலே யுத்தம் நடந்தது.
7 Tamże porażon jest lud Izraelski od sług Dawidowych; i stała się tam porażka wielka dnia onego, a poległo ich dwadzieścia tysięcy.
௭அங்கே இஸ்ரவேல் மக்கள் தாவீதின் வீரர்களுக்கு முன்பாக தோற்கடிக்கப்பட்டார்கள்; அங்கே அந்த நாளிலே இருபதாயிரம்பேர் சாகத்தக்கதாக பேரழிவு உண்டானது.
8 Bo gdy była bitwa rozproszona po wszystkiej ziemi, więcej las pogubił ludu, niż ich miecz pożarł dnia onego.
௮யுத்தம் அந்த தேசம் எங்கும் பரவியது; அந்த நாளில் பட்டயத்தால் இறந்த மக்களைவிட, காடு பட்சித்துப்போட்ட மக்கள் அதிகம்.
9 I napadł Absalom na sługi Dawidowe; a Absalom jechał na mule, i wbieżał z nim muł pod gęsty a wielki dąb, i uwięzła głowa jego na dębie, i zawisł między niebem i między ziemią; ale muł, który był pod nim, wybiegł.
௯அப்சலோம் தாவீதின் வீரர்களை சந்திக்க நேர்ந்தது; அப்சலோம் கோவேறு கழுதையின்மேல் ஏறிவரும்போது, அந்தக் கோவேறு கழுதை பின்னலான ஒரு பெரிய கர்வாலிமரத்தின்கீழ் வந்ததினால், அவனுடைய தலை கர்வாலி மரத்தில் மாட்டிக்கொண்டு, அவன் வானத்திற்கும் பூமிக்கும் நடுவே தொங்கினான்; அவன் ஏறியிருந்த கோவேறு கழுதை தள்ளிப்போனது.
10 Co ujrzawszy mąż niektóry, oznajmił Joabowi, mówiąc: Otom widzał Absaloma wiszącego na dębie.
௧0அதை ஒருவன் கண்டு, யோவாபுக்கு அறிவித்து: இதோ, அப்சலோமை ஒரு கர்வாலி மரத்திலே தொங்குவதைப் பார்த்தேன் என்றான்.
11 Tedy rzekł Joab mężowi, który mu to oznajmił: Jeźliś widział, a czmużeś go tam nie zabił i nie zrzucił na ziemię? A ja bym ci był powinien dać dziesięć srebników i jeden pas rycerski.
௧௧அப்பொழுது யோவாப் தனக்கு அதை அறிவித்தவனை நோக்கி: நீ அதைப் பார்த்தாயே; பின்பு ஏன் அவனை அங்கேயே வெட்டி, நிலத்தில் விழும்படி செய்யவில்லை? நான் உனக்குப் பத்து வெள்ளிக்காசையும் ஒரு வாரையும் கொடுக்கக் கடமையுள்ளவனாக இருப்பேனே என்றான்.
12 I odpowiedział on mąż Joabowi: A ja choćbym miał odważonych na rękach mych tysiąc srebników, nie podniósłbym ręki mojej na syna królewskiego; bośmy słyszeli, gdy przykazał król tobie i Abisajowi i Itajowi, mówiąc: Ochraniajcie wszyscy syna mego Absaloma.
௧௨அந்த மனிதன் யோவாபை நோக்கி: என்னுடைய கைகளில் ஆயிரம் வெள்ளிக்காசு நிறுத்துக் கொடுக்கப்பட்டாலும், நான் ராஜாவுடைய மகன்மேல் என்னுடைய கையை நீட்டமாட்டேன்; வாலிபனான அப்சலோமை நீங்களே காப்பாற்றுங்கள் என்று ராஜா உமக்கும் அபிசாய்க்கும் ஈத்தாய்க்கும் எங்கள் காதுகள் கேட்கக் கட்டளையிட்டாரே.
13 Chyba, żebym chciał wdać duszę moję w niebezpieczeństwo; bo nie bywa nic zatajono przed królem; i ty sam byłbyś przeciwko mnie.
௧௩ராஜாவுக்கு ஒரு காரியமும் மறைவானது இல்லை; ஆதலால், நான் அதைச்செய்தால், என்னுடைய உயிருக்கே எதிராக செய்பவனாவேன், நீரும் எனக்கு எதிராக இருப்பீர் என்றான்.
14 Tedy rzekł Joab: Nie będęć się ja tu bawił z tobą; przetoż wziąwszy trzy drzewca w rękę swoję, wraził je w serce Absalomowe, gdy jeszcze żyw był na dębie.
௧௪பின்பு யோவாப்: நான் இப்படி உன்னோடு பேசி, தாமதிக்கமாட்டேன் என்று சொல்லி, தன்னுடைய கையிலே மூன்று ஈட்டிகளை எடுத்துக்கொண்டு, அப்சலோம் இன்னும் கர்வாலி மரத்தின் நடுவிலே உயிரோடு தொங்கிக்கொண்டிருக்கும்போது, அவனுடைய மார்பிலே குத்தினான்.
15 A obskoczywszy Absaloma dziesięć sług, którzy nosili broń Joabowę, bili, i zbili go.
௧௫அப்பொழுது யோவாபின் ஆயுதம் ஏந்தினவர்களான பத்து வீரர்கள் அப்சலோமைச் சூழ்ந்து அவனை அடித்துக் கொன்று போட்டார்கள்.
16 Wtem zatrąbił Joab w trąbę, i wrócił się lud z pogoni za Izraelem; bo Joab zatrzymał lud.
௧௬அப்பொழுது யோவாப் எக்காளம் ஊதி இராணுவத்தை நிறுத்தியதால், இராணுவம் இஸ்ரவேலர்களைப் பின்தொடர்வதைவிட்டுத் திரும்பினார்கள்.
17 A wziąwszy Absaloma wrzucili go w tymże lesie w dół wielki, i nanosili nań bardzo wielką kupę kamienia. Ale wszystek Izrael uciekł, każdy do namiotów swoich.
௧௭அவர்கள் அப்சலோமை எடுத்து, அவனைக் காட்டிலுள்ள ஒரு பெரிய குழியிலே போட்டு, அவன்மேல் மிகப் பெரிய கற்குவியலைக் குவித்தார்கள்; இஸ்ரவேலர்கள் எல்லோரும் அவரவர் தங்கள் வீடுகளுக்கு ஓடிப்போனார்கள்.
18 A Absalom wziął był, i wystawił sobie za żywota swego słup, który jest w dolinie królewskiej; bo mówił: Niemam syna; jednak zostawię pamiątkę imienia mego. Przetoż nazwał on słup imieniem swojem, który zowią miejsce Absalomowe aż do dzisiejszego dnia.
௧௮அப்சலோம் உயிரோடு இருக்கும்போது: என்னுடைய பெயரை நினைக்கச்செய்யும்படியாக எனக்கு மகன் இல்லை என்று சொல்லி, ராஜாவின் பள்ளத்தாக்கிலே தனக்கென்று ஒரு தூணை நிறுத்தி, அந்தத் தூணுக்குத் தன்னுடைய பெயரை சூட்டினான்; அது இந்த நாள்வரைக்கும் அப்சலோமின் அடையாளம் என்று சொல்லப்படும்.
19 Tedy Achimaas, syn Sadoka, rzekł: Proszę niech idę a oznajmię królowi nowinę, iż go wybawił Pan z ręki nieprzyjaciół jego.
௧௯சாதோக்கின் மகனான அகிமாஸ்: யெகோவா ராஜாவை அவர்களுடைய எதிரிகளின் கைக்கு விலக்கி நியாயம் செய்தார் என்னும் செய்தியை அவருக்குக் கொண்டுபோக, நான் வேகமாக ஓடட்டும் என்றான்.
20 Ale mu rzekł Jaob: Nie byłbyś wdzięcznym posłem dzisiaj; lecz to opowiesz dnia drugiego, a dziś nie dawaj o tem znać, przeto iż syn królewski zginął.
௨0யோவாப் அவனை நோக்கி: இன்றையதினம் நீ செய்தியைக் கொண்டுபோகக்கூடாது; இன்னொரு நாளிலே நீ செய்தியைக் கொண்டுபோகலாம்; ராஜாவின் மகன் இறந்ததால், இன்றைக்கு நீ செய்தியைக் கொண்டுபோகவேண்டாம் என்று சொல்லி,
21 Potem Joab rzekł do Chusego: Idź oznajmij królowi, coś widział. A tak ukłoniwszy się Chusy Joabowi, bieżał.
௨௧யோவாப் கூஷியை நோக்கி: நீ போய், பார்த்ததை ராஜாவுக்கு அறிவிப்பாயாக என்றான்; கூஷி யோவாபை வணங்கி ஓடினான்.
22 I mówił powtóre Achimaas, syn Sadoka, i rzekł do Joaba: Bądź co bądź, proszę niech i ja bieżę za Chusym. I rzekł Joab: Przeczbyś ty miał bieżeć synu mój, gdyż niemasz, cobyś dobrego zwiastował?
௨௨சாதோக்கின் மகனான அகிமாஸ் இன்னும் யோவாபை நோக்கி: எப்படியானாலும் கூஷியின் பின்பாக நானும் ஓடுகிறேன் என்று திரும்பக் கேட்டதற்கு, யோவாப்: என் மகனே, சொல்லும்படி உனக்கு நல்ல செய்தி இல்லாதிருக்கும்போது, நீ ஓடவேண்டியது என்ன என்றான்.
23 I rzekł: Bądź co bądź, pobieżę. I rzekł mu Joab: Bieżże. A tak bieżał Achimaas prostszą drogą, i uprzedził Chusego.
௨௩அதற்கு அவன்: எப்படியானாலும் நான் ஓடுவேன் என்றான்; அப்பொழுது யோவாப்: ஓடு என்றான்; அப்படியே அகிமாஸ் சமவெளி நிலத்தின் வழியாக ஓடி கூஷிக்கு முந்திப்போனான்.
24 A Dawid siedział między dwiema bramami. I wyszedł stróż na dach bramy na mur, a podniósłszy oczy swe, ujrzał męża jednego bieżącego.
௨௪தாவீது உள் மற்றும் வெளி வாசலின் நடுவாக உட்கார்ந்திருந்தான்; இரவு காவலன் மதில் வாசலின் மேற்கூரையின்மேல் நடந்து, தன்னுடைய கண்களை உயர்த்தி, இதோ, ஒரு மனிதன் தனியே ஓடிவருகிறதைப் பார்த்து,
25 Tedy zawoławszy stróż, opowiedział to królowi. I rzekł król: Jeźliżeć sam jest, dobre poselstwo w ustach jego. A gdy ten spiesznie szedł, i przybliżał się,
௨௫கூப்பிட்டு ராஜாவுக்கு அறிவித்தான். அப்பொழுது ராஜா: அவன் ஒருவனாக வந்தால், அவனுடைய வாயிலே நல்ல செய்தி இருக்கும் என்றான்; அவன் அருகே ஓடிவரும்போது,
26 Ujrzał stróż i drugiego męża bieżącego, i zawołał stróż na wrotnego, mówiąc: Oto i drugi mąż bieży sam. I rzekł król: I ten dobre poselstwo niesie.
௨௬இரவு காவலன், வேறொருவன் ஓடிவருகிறதைப் பார்த்து: அதோ இன்னொரு மனிதன் தனியே ஓடிவருகிறான் என்று வாயிற்காவலனைக் கூப்பிட்டுச் சொன்னான்; அப்பொழுது ராஜா: அவனும் நல்ல செய்தி கொண்டுவருகிறவன் என்றான்.
27 Nadto rzekł stróż: Zda mi się bieg pierwszego, jako bieg Achimaasa, syna Sadokowego. I rzekł król: Mąż to dobry, i z dobrem poselstwem idzie.
௨௭மேலும் இரவு காவலன்; முந்தினவனுடைய ஓட்டம் சாதோக்கின் மகன் அகிமாசுடைய ஓட்டம்போலிருக்கிறது என்று எனக்குத் தோன்றுகிறது என்றான்; அப்பொழுது ராஜா: அவன் நல்ல மனிதன்; அவன் நல்ல செய்தி சொல்ல வருகிறான் என்றான்.
28 Tedy zawołał Achimaas, i rzekł do króla: Pokój; i ukłonił się królowi twarzą swoją ku ziemi i rzekł: Błogosławiony Pan Bóg twój, któryć podał te męże, co podnieśli ręce swe przeciw królowi, panu memu.
௨௮அகிமாஸ் வந்து ராஜாவை நோக்கி: சமாதானம் என்று சொல்லி, முகங்குப்புற விழுந்து, ராஜாவை வணங்கி, ராஜாவான என்னுடைய ஆண்டவனுக்கு எதிராகத் தங்கள் கைகளை எடுத்த மனிதர்களை ஒப்புக்கொடுத்திருக்கிற உம்முடைய தேவனான யெகோவாவுக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக என்றான்.
29 I rzekł król: Jakoli się ma syn mój Absalom? Tedy Achimaas odpowiedział: Widziałem zamięszanie wielkie, gdy posyłał sługę królewskiego Joab, i mnie, sługę twego; ale nie wiem co było.
௨௯அப்பொழுது ராஜா: வாலிபனான அப்சலோம் சுகமாக இருக்கிறானா என்று கேட்டதற்கு, அகிமாஸ் யோவாப் ராஜாவின் வேலைக்காரனையும் உம்முடைய அடியானையும் அனுப்புகிறபோது, ஒரு பெரிய குழப்பம் இருந்தது; ஆனாலும் அது இன்னதென்று தெரியாது என்றான்.
30 Potem rzekł król: Odstąp, a stań tam; a on odstąpiwszy stanął.
௩0அப்பொழுது ராஜா: நீ அங்கே போய் நில் என்றான்; அவன் ஒரு பக்கத்தில் போய் நின்றான்.
31 A wtem Chusy przyszedł i rzekł: Opowiada się królowi, panu memu, że cię wybawił Pan dzisiaj z ręki wszystkich, którzy powstali przeciwko tobie.
௩௧இதோ, கூஷி வந்து: ராஜாவான என்னுடைய ஆண்டவனே, நற்செய்தி, இன்று யெகோவா உமக்கு எதிராக எழும்பின எல்லோடைய கைக்கும் உம்மை விலக்கி நியாயம் செய்தார் என்றான்.
32 I rzekł król do Chusego: A jakoli się ma syn mój Absalom? Odpowiedział Chusy: Bodaj tak byli nieprzyjaciele króla, pana mego, i wszyscy, którzy powstawają przeciw tobie na złe, jako syn twój!
௩௨அப்பொழுது ராஜா கூஷியைப் பார்த்து: வாலிபனான அப்சலோம் சுகமாக இருக்கிறானா என்று கேட்டதற்கு, கூஷி என்பவன்: அந்த வாலிபனுக்கு நடந்ததுபோல, ராஜாவான என் ஆண்டவனுடைய எதிரிகளுக்கும், தீங்கு செய்ய உமக்கு விரோதமாக எழும்புகிற யாவருக்கும் நடக்கட்டும் என்றான்.
33 Tedy się zasmucił król, i wstąpił na salę onej bramy, a płakał, i tak mówił idąc: Synu mój Absalomie, synu mój! Synu mój Absalomie! obym ja był umarł miasto ciebie! Absalomie, synu mój, synu mój!
௩௩அப்பொழுது ராஜா மிகவும் கலங்கி, நகர வாசலின் மேல்வீட்டிற்குள் ஏறிப்போய் அழுதான்; அவன் ஏறிப்போகும்போது: என் மகனான அப்சலோமே, என் மகனே, என் மகனான அப்சலோமே, நான் உனக்குப் பதிலாக இறந்துபோனால் நலமாயிருக்கும்; அப்சலோமே, என் மகனே, என் மகனே, என்று சொல்லி அழுதான்.