< I Kronik 20 >
1 I stało się po roku tego czasu, gdy królowie zwykli wyjeżdżać na wojnę, iż wywiódł Joab co mężniejsze rycerstwo, i pustoszył ziemię synów Ammonowych, a przyciągnąwszy obległ Rabbę; (lecz Dawid zostawał w Jeruzalemie) i dobył Joab Rabby, i zburzył ją.
௧அடுத்த வருடம், ராஜாக்கள் யுத்தத்திற்குப் புறப்படும் காலம் வந்தபோது, யோவாப் இராணுவ பலத்தைக் கூட்டிக்கொண்டுபோய், அம்மோனியர்களின் தேசத்தை அழித்து ரப்பாவுக்கு வந்து அதை முற்றுகையிட்டான்; தாவீதோ எருசலேமில் இருந்துவிட்டான்; யோவாப் ரப்பாவைத் தாக்கி அதைத் தோற்கடித்தான்.
2 I wziął Dawid koronę króla ich z głowy jego, a znalazł w niej talent złota, i kamienie bardzo drogie. I włożono ją na głowę Dawidową, i wywiózł łupów z miasta bardzo wiele.
௨தாவீது வந்து, அவர்கள் ராஜாவுடைய தலையின்மேல் இருந்த கிரீடத்தை எடுத்துக்கொண்டான்; அது ஒரு தாலந்து எடையுள்ள பொன்னும் இரத்தினங்கள் பதித்ததுமாகவும் இருந்தது; அது தாவீதின் தலையில் வைக்கப்பட்டது; பட்டணத்திலிருந்து ஏராளமான கொள்ளைப் பொருட்களையும் கொண்டுபோனான்.
3 Lud też, który był w nim, wywiódł, i dał ich potrzeć piłami i wozami żelaznemi, i porąbać siekierami. Takci uczynił Dawid wszystkim miastom synów Ammonowych, i wrócił się Dawid ze wszystkim ludem do Jeruzalemu.
௩பின்பு அதிலிருந்த மக்களை அவன் வெளியே கொண்டுபோய், அவர்களை வாள்களும், கடப்பாரைகளும், கோடரிகளும் செய்கிற பணியில் பலவந்தமாக உட்படுத்தி; இப்படி அம்மோனிய மக்களின் பட்டணங்களுக்கெல்லாம் தாவீது செய்து, எல்லா மக்களோடு எருசலேமிற்குத் திரும்பினான்.
4 Potem znowu gdy była wojna w Gazer z Filistynami, zabił Sobbochaj Husatczyk Syfę, który był z narodu olbrzymów; a tak Filistynowie poniżeni są.
௪அதற்குப்பின்பு கேசேரிலே பெலிஸ்தர்களோடு யுத்தம் உண்டாயிற்று; அப்பொழுது ஊசாத்தியனாகிய சிப்பெக்காய் இராட்சத சந்ததியர்களில் ஒருவனான சிப்பாயி என்பவனைக் கொன்றான்; அதினால் அவர்கள் அடக்கப்பட்டார்கள்.
5 Była też jeszcze wojna z Filistynami, gdzie zabił Elchana, syn Jairowy, Lachmiego, brata Golijata Gietejczyka, którego drzewce u włóczni było nawój tkacki.
௫திரும்பப் பெலிஸ்தர்களோடு யுத்தம் உண்டாகிறபோது, யாவீரின் மகனாகிய எல்க்கானான் காத்தூரானாகிய கோலியாத்தின் சகோதரனான லாகேமியைக் கொன்றான்; அவனுடைய ஈட்டிக் தாங்கு நெய்கிறவர்களின் படைமரம் அளவு பெரிதாக இருந்தது.
6 Nadto jeszcze była wojna w Get, gdzie był mąż wzrostu wielkiego, mając po sześć palców, wszystkich dwadzieścia i cztery; a ten też był z narodu tegoż olbrzyma.
௬மறுபடியும் ஒரு யுத்தம் காத்திலே நடந்தபோது, அங்கே உயரமான ஒரு மனிதன் இருந்தான்; அவனுக்கு ஆறு ஆறு விரலாக இருபத்துநான்கு விரல்கள் இருந்தது, அவனும் இராட்சத சந்ததியாக இருந்து,
7 Ten gdy urągał Izraelowi, zabił go Jonatan, syn Samaja, brata Dawidowego.
௭இஸ்ரவேலை சபித்தான்; தாவீதின் சகோதரனாகிய சிமேயாவின் மகன் யோனத்தான் அவனைக் கொன்றான்.
8 Ci byli synowie jednego olbrzyma z Get, którzy polegli od ręki Dawidowej, i od ręki sług jego.
௮காத்தூரிலிருந்த இராட்சதனுக்குப் பிறந்த இவர்கள் தாவீதின் கையினாலும் அவனுடைய வீரர்களின் கையினாலும் இறந்தார்கள்.