< Psalm 32 >

1 MEID pai, me dip arail lapwadar, o me ar sapung pwaipwaidier!
மஸ்கீல் என்னும் தாவீதின் பாடல். எவனுடைய மீறுதல் மன்னிக்கப்பட்டதோ, எவனுடைய பாவம் மூடப்பட்டதோ, அவன் பாக்கியவான்.
2 Aramas meid pai, me Ieowa solar pan kapokoki ong dip ar, me sota likam nan mongiong ar.
எவனுடைய அக்கிரமத்தைக் யெகோவா எண்ணாமலிருக்கிறாரோ, எவனுடைய ஆவியில் கபடமில்லாதிருக்கிறதோ, அவன் பாக்கியவான்.
3 Pwe ni ai men okila, kokon ai kan ap susueda kilar ai sangesang ran karos.
நான் அடக்கிவைத்தவரையில், எப்பொழுதும் என் கதறுதலினாலே என் எலும்புகள் உலர்ந்துபோயிற்று.
4 Pwe lim omui katoutou ia nin ran o ni pong, o ai kelail mongedier, dueta ni ansau en karakar. (Sela)
இரவும் பகலும் என்மேல் உம்முடைய கை பாரமாக இருந்ததினால், என் பெலன் கோடைக்கால வறட்சிபோல வறண்டுபோயிற்று. (சேலா)
5 I me i weokadang komui dip ai kan, o sota okila ai sapung kan. Ngai indinda: I pan weokadang Ieowa ai katiwo kan; komui ap kotin maki ong ia sued en dip ai. (Sela)
நான் என் அக்கிரமத்தை மறைக்காமல், என் பாவத்தை உமக்கு அறிவித்தேன்; என் மீறுதல்களைக் யெகோவாவுக்கு அறிக்கையிடுவேன் என்றேன்; தேவனே நீர் என் பாவத்தின் தோஷத்தை மன்னித்தீர். (சேலா)
6 I me saraui kan karos pan potoan kapakap ong komui arain ansau me komui kak diarokada. Lapake kalaimun pan wiaui, a a sota pan lel ong ir.
இதற்காக உம்மைக் காணும் காலத்தில் பக்தியுள்ளவனெவனும் உம்மை நோக்கி விண்ணப்பம் செய்வான்; அப்பொழுது மிகுந்த வெள்ளம் வந்தாலும் அது அவனை அணுகாது.
7 Komui me pere pa i, kom pan kotin perawei sang ia men kamasak, i ap pan dorela o kapinga ni peren. (Sela)
நீர் எனக்கு மறைவிடமாயிருக்கிறீர்; என்னை நீர் இக்கட்டுக்கு விலக்கிக்காத்து, இரட்சிப்பின் பாடல்கள் என்னைச் சூழ்ந்துகொள்ளும்படி செய்வீர். (சேலா)
8 I pan padaki ong uk o kasale ong uk al o, me koe en weweid ia; I pan kalua kin uk por en mas ai.
நான் உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியை உனக்குக் காட்டுவேன்; உன்மேல் என் கண்ணை வைத்து, உனக்கு ஆலோசனை சொல்லுவேன்.
9 Komail der dueta os de as amen me sota ar madamadaua, me mau ong, kisin mata en ko ong au arail, a ma so, re sota pan duki ong uk.
வாரினாலும் கடிவாளத்தினாலும் வாய் கட்டப்பட்டாலொழிய, உன் அருகில் சேராத புத்தியில்லாத குதிரையைப்போலவும் கோவேறு கழுதையைப்போலவும் இருக்கவேண்டாம்.
10 Me sapung o kin lodi ong song en madak toto, a me kaporoporeki Ieowa, kalangan en Ieowa pan kapil pena i.
௧0துன்மார்க்கனுக்கு அநேக வேதனைகளுண்டு; யெகோவாவை நம்பியிருக்கிறவனையோ கிருபை சூழ்ந்து கொள்ளும்.
11 Polauleki Ieowa, o pereperen komail me pung kan, o kapikapinga komail karos me lelapok melel akan.
௧௧நீதிமான்களே, யெகோவாவுக்குள் மகிழ்ந்து களிகூருங்கள்; செம்மையான இருதயமுள்ளவர்களே, நீங்கள் எல்லாரும் ஆனந்தமுழக்கமிடுங்கள்.

< Psalm 32 >