< Psalm 103 >

1 Ngen i kapinga Ieowa o lol i mar a saraui!
தாவீதின் பாடல். என் ஆத்துமாவே, யெகோவாவைப் போற்று; என் முழு உள்ளமே, அவருடைய பரிசுத்த பெயரைப் போற்று.
2 Ngen i kapinga Ieowa, o der monokela a kotin wiawia mau ong uk!
என் ஆத்துமாவே, யெகோவாவுக்கு நன்றிசொல்; அவர் செய்த எல்லா நன்மைகளையும் மறவாதே.
3 Me kotin makeki ong uk dip om karos, ap kotin kamauiala om somau kan.
அவர் உன்னுடைய அக்கிரமங்களையெல்லாம் மன்னித்து, உன்னுடைய நோய்களையெல்லாம் குணமாக்கி,
4 Me kotin dore uk ala sang ni wasa apwal, me kotin ninie kin uk mak o kalangan;
உன்னுடைய உயிரை அழிவுக்கு விலக்கி மீட்டு, உன்னைக் கிருபையினாலும் இரக்கங்களினாலும் முடிசூட்டி,
5 Me kotin kapai uk adar ni om malar, o kotin kapulpul uk ala dueta adler.
நன்மையினால் உன்னுடைய வாயைத் திருப்தியாக்குகிறார்; கழுகுக்குச் சமமாக உன்னுடைய வயது திரும்ப இளவயது போலாகிறது.
6 En Ieowa a wiawia me pung, o a kotin kapungala, me mi ni kalokolok sapung.
ஒடுக்கப்படுகிற அனைவருக்கும், யெகோவா நீதியையும் நியாயத்தையும் செய்கிறார்.
7 A kotin kasale ong Moses al en a meakaros, o ong men Israil a wiawia kan.
அவர் தமது வழிகளை மோசேக்கும், தமது செயல்களை இஸ்ரவேல் சந்ததிக்கும் தெரியப்படுத்தினார்.
8 Ieowa me dir en kalangan o mak, a kin kotin kanongama, o a kalangan me lapalap.
யெகோவா உருக்கமும், இரக்கமும், நீடிய சாந்தமும், மிகுந்த கிருபையுமுள்ளவர்.
9 A sota kin kotin kaloke aramas ansau karos, o pil sota ongiong kokolata.
அவர் எப்பொழுதும் கடிந்துகொள்வதில்லை; என்றைக்கும் கோபமாக இருப்பதில்லை.
10 A sota kotin pwain ong kitail duen dip atail, o sota depuk ong kitail duen atail sapung kan.
௧0அவர் நம்முடைய பாவங்களுக்குத் தகுந்தபடி நமக்குச் செய்யாமலும், நம்முடைய அக்கிரமங்களுக்குத் தகுந்தபடி நமக்குச் சரிக்கட்டாமலும் இருக்கிறார்.
11 A duen ileile en lang sang sappa, iduen a mak lapalap ong ir, me kin masak i.
௧௧பூமிக்கு வானம் எவ்வளவு உயரமாக இருக்கிறதோ, அவருக்குப் பயப்படுகிறவர்கள்மேல் அவருடைய கிருபையும் அவ்வளவு பெரிதாக இருக்கிறது.
12 Duen mas en lang o kapin lang ara doo pasang, iduen a kotin kadooana wei sang kitail dip atail.
௧௨மேற்கிற்கும் கிழக்கிற்கும் எவ்வளவு தூரமோ, அவ்வளவு தூரமாக அவர் நம்முடைய பாவங்களை நம்மைவிட்டு விலக்கினார்.
13 Duen sam amen pokepoke na seri, iduen Kot kotin kupukupura irail, me lan i.
௧௩தகப்பன் தன்னுடைய பிள்ளைகளுக்கு இரங்குகிறதுபோல, யெகோவா தமக்குப் பயந்தவர்களுக்கு இரங்குகிறார்.
14 Pwe a kotin mangi, da me kitail wiaui kida, a kotin mangi, me kitail me pwel par.
௧௪நம்முடைய உருவம் இன்னதென்று அவர் அறிவார்; நாம் மண்ணென்று நினைவுகூருகிறார்.
15 Aramas amen kin rasong rä, a kin masal pasang dueta wantuka nan sap o.
௧௫மனிதனுடைய நாட்கள் புல்லுக்கு ஒப்பாக இருக்கிறது; வெளியின் பூவைப்போல் பூக்கிறான்.
16 Ma kisiniang pan leler, a soer mia, o a solar asa deu a.
௧௬காற்று அதின்மேல் வீசினவுடனே அது இல்லாமற்போனது; அது இருந்த இடமும் இனி அதை அறியாது.
17 A kalangan en Ieowa pan duedueta kokolata ong ir, me lan i, o a melel ong seri en seri kan,
௧௭யெகோவாவுடைய கிருபையோ அவருக்குப் பயந்தவர்கள்மேலும், அவருடைய நீதி அவர்கள் பிள்ளைகளுடைய பிள்ளைகள்மேலும் ஆதிகாலம் முதற்கொண்டு என்றென்றைக்கும் உள்ளது.
18 Ong ir, me kin kolekol a inau, o madamadaua duen a masan kan, pwen kapwaiada.
௧௮அவருடைய உடன்படிக்கையைக் கைக்கொண்டு, அவருடைய கட்டளைகளின்படி செய்ய நினைக்கிறவர்கள் மேலேயே உள்ளது.
19 Ieowa kotin kauada mol a nanlang, o a kotin kaunda meakan karos.
௧௯யெகோவா வானங்களில் தமது சிங்காசனத்தை நிறுவியிருக்கிறார்; அவருடைய ராஜரிகம் எல்லாவற்றையும் ஆளுகிறது.
20 Kapikapinga Ieowa, komail sapwilim a tounlang kan, komail me lapalap akan ni manaman, me kin kapwaiada a masan kan, o peiki ong moat en a masan!
௨0யெகோவாவுடைய வார்த்தையைக் கேட்டு, அவருடைய வசனத்தின்படி செய்கிற பலத்த வல்லமையுள்ளவர்களாகிய அவருடைய தூதர்களே, அவரைத் துதியுங்கள்.
21 Kapikapinga Ieowa sapwilim a pokon akan karos, o sapwilim a ladu kan, me kin kapwaiada kupur a!
௨௧யெகோவாவுக்குப் பிரியமானதைச் செய்து, அவர் பணிவிடைக்காரர்களாக இருக்கிற அவருடைய எல்லா சேனைகளே, அவரைப் போற்றுங்கள்.
22 Kapikapinga Ieowa sapwilim a dipisou kan ni wasa karos, me a kotin kakaun, ngen i kapinga Ieowa!
௨௨யெகோவா ஆளுகிற எல்லா இடங்களிலுமுள்ள அவருடைய எல்லா படைப்புகளே, அவரைப் போற்றுங்கள்; என் ஆத்துமாவே, யெகோவாவைப் போற்று.

< Psalm 103 >