< مزامیر 90 >
دعای موسی، مرد خدا. ای خداوند، تو همیشه پناهگاه ما بودهای. | 1 |
௧தேவனுடைய மனிதனாகிய மோசேயின் ஜெபம். ஆண்டவரே, தேவனே நீர் தலைமுறை தலைமுறையாக எங்களுக்கு அடைக்கலமானவர்.
قبل از آنکه دنیا را بیافرینی و کوهها را به وجود آوری، تو بودهای. تو را ابتدا و انتهایی نیست. | 2 |
௨மலைகள் தோன்றுமுன்பும், நீர் பூமியையும், உலகத்தையும் உருவாக்குமுன்னும், நீரே அநாதியாய் என்றென்றைக்கும் தேவனாக இருக்கிறீர்.
انسان را به خاک برمیگردانی و میگویی: «ای خاکیان، به خاک تبدیل شوید!» | 3 |
௩நீர் மனிதர்களைத் தூளாக்கி, மனித சந்ததிகளை, திரும்புங்கள் என்கிறீர்.
هزار سال در نظر تو چون یک روز، بلکه چون یک ساعت است. | 4 |
௪உமது பார்வைக்கு ஆயிரம் வருடங்கள் நேற்றுக்கழிந்த நாள்போலவும் இரவுவேளைபோலவும் இருக்கிறது.
تو انسان را چون سیلاب از جای بر میکنی و میبری. زندگی او خوابی بیش نیست. او مانند گیاهی است که صبح میروید و میشکفد ولی عصر پژمرده و خشک میشود. | 5 |
௫அவர்களை வெள்ளம்போல் அடித்துக்கொண்டு போகிறீர்; தூக்கத்திற்கு ஒப்பாக இருக்கிறார்கள்; காலையிலே முளைக்கிற புல்லுக்கு ஒப்பாக இருக்கிறார்கள்.
௬அது காலையிலே முளைத்துப் பூத்து, மாலையிலே அறுக்கப்பட்டு உலர்ந்துபோகும்.
بر اثر غضب تو ما رو به نابودی میرویم و خشم تو ما را پریشان و بیقرار ساخته است. | 7 |
௭நாங்கள் உமது கோபத்தினால் அழிந்து உமது கடுங்கோபத்தினால் கலங்கிப்போகிறோம்.
گناهان ما را در برابر چشمان خود گذاشتهای و هیچ خطای ما از دید تو پنهان نیست. | 8 |
௮எங்களுடைய அக்கிரமங்களை உமக்கு முன்பாகவும், எங்களுடைய மறைவான பாவங்களை உமது முகத்தின் வெளிச்சத்திலும் நிறுத்தினீர்.
روزهای زندگی ما بر اثر خشم تو کوتاه شده است و عمر خود را مثل یک خواب میگذرانیم. | 9 |
௯எங்களுடைய நாட்களெல்லாம் உமது கோபத்தால் போய்விட்டது; ஒரு கதையைப்போல் எங்கள் வருடங்களைக் கழித்துப்போட்டோம்.
عمر ما هفتاد سال است و اگر قوی باشیم، شاید به هشتاد سال برسد. ولی در طول این مدت چیزی جز درد و رنج نصیب ما نمیشود. هر آن ممکن است عمرمان به سر آید و به عالم دیگر پرواز کنیم. | 10 |
௧0எங்களுடைய ஆயுள் நாட்கள் எழுபது வருடங்கள், பெலத்தின் மிகுதியால் எண்பது வருடங்களாக இருந்தாலும், அதின் மேன்மையானது வருத்தமும் சஞ்சலமுமே; அது சீக்கரமாகக் கடந்து போகிறது. நாங்களும் பறந்துபோகிறோம்.
خداوندا، کیست که بداند شدت خشم تو چقدر است؟ کدام یک از ما چنانکه باید و شاید از تو میترسد؟ | 11 |
௧௧உமது கோபத்தின் வல்லமையையும், உமக்குப் பயப்படக்கூடிய விதமாக உமது கடுங்கோபத்தையும் அறிந்துகொள்கிறவன் யார்?
به ما یاد بده که بدانیم عمر ما چه زودگذر است تا در این عمر کوتاه با خردمندی زندگی کنیم. | 12 |
௧௨நாங்கள் ஞான இருதயமுள்ளவர்களாகும்படி, எங்களுடைய நாட்களை எண்ணும் அறிவை எங்களுக்குப் போதித்தருளும்.
ای خداوند، نزد ما برگرد! تا به کی منتظر باشیم؟ بر بندگانت رحم کن. | 13 |
௧௩யெகோவாவே, திரும்பிவாரும், எதுவரைக்கும் கோபமாக இருப்பீர்? உமது அடியார்களுக்காகப் பரிதபியும்.
صبحگاهان ما را از محبت خود بهرهمند گردان تا در تمام عمر خود شادمان باشیم. | 14 |
௧௪நாங்கள் எங்களுடைய வாழ்நாட்களெல்லாம் சந்தோஷித்து மகிழும்படி, காலையிலே எங்களை உமது கிருபையால் திருப்தியாக்கும்.
به اندازهٔ سالهایی که ما را ذلیل و خوار ساختهای، ما را شاد و سرافراز گردان. | 15 |
௧௫தேவனே நீர் எங்களை சிறுமைப்படுத்திய நாட்களுக்கும், நாங்கள் துன்பத்தைக் கண்ட வருடங்களுக்கும் இணையாக எங்களை மகிழ்ச்சியாக்கும்.
بگذار ما بندگانت بار دیگر اعمال شگفتانگیز تو را مشاهده کنیم. عظمت خود را بر فرزندانمان نمایان ساز. | 16 |
௧௬உமது செயல்கள் உமது ஊழியக்காரர்களுக்கும், உமது மகிமை அவர்களுடைய பிள்ளைகளுக்கும் விளங்குவதாக.
خداوندا، ما را مورد لطف خود قرار بده و در تمام کارهایمان ما را برکت عطا فرما، بله، در تمام کارهایمان ما را برکت عطا فرما! | 17 |
௧௭எங்களுடைய தேவனாகிய ஆண்டவரின் பிரியம் எங்கள்மேல் இருப்பதாக; எங்களுடைய கைகளின் செயல்களை எங்களிடத்தில் உறுதிப்படுத்தும்; ஆம், எங்களுடைய கைகளின் செயல்களை எங்களிடத்தில் உறுதிப்படுத்தியருளும்.