< مزامیر 86 >
دعای داوود. ای خداوند، دعای مرا بشنو و آن را اجابت فرما، زیرا ضعیف و درماندهام. | 1 |
௧தாவீதின் ஜெபம். யெகோவாவே, உமது செவியைச் சாய்த்து, என்னுடைய விண்ணப்பத்தைக் கேட்டருளும்; நான் ஏழ்மையும் ஒடுக்கப்பட்டவனுமாக இருக்கிறேன்.
جان مرا حفظ کن و مرا نجات ده زیرا من خدمتگزار وفادار تو هستم و بر تو توکل دارم. | 2 |
௨என்னுடைய ஆத்துமாவைக் காத்தருளும், நான் பக்தியுள்ளவன்; என் தேவனே, உம்மை நம்பியிருக்கிற உமது அடியேனை நீர் இரட்சியும்.
خداوندا، بر من رحمت فرما، زیرا تمام روز به درگاه تو دعا میکنم. | 3 |
௩ஆண்டவரே, எனக்கு இரங்கும், நாள்தோறும் உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்.
به من شادی بده، زیرا، ای خداوند، تنها تو را میپرستم. | 4 |
௪உமது அடியேனுடைய ஆத்துமாவை மகிழ்ச்சியாக்கும்; ஆண்டவரே, உம்மிடத்தில் என்னுடைய ஆத்துமாவை உயர்த்துகிறேன்.
تو برای آنانی که تو را میخوانند نیکو و بخشنده و سرشار از محبتی. | 5 |
௫ஆண்டவரே, நீர் நல்லவரும், மன்னிக்கிறவரும், உம்மை நோக்கிக் கூப்பிடுகிற எல்லோர்மேலும் கிருபை மிகுந்தவருமாக இருக்கிறீர்.
ای خداوند، دعای مرا اجابت فرما! به نالهٔ من توجه نما! | 6 |
௬யெகோவாவே, என்னுடைய ஜெபத்திற்குச் செவிகொடுத்து, என்னுடைய விண்ணப்பங்களின் சத்தத்தைத் கவனியும்.
به هنگام سختی تو را خواهم خواند، زیرا دعای مرا مستجاب خواهی فرمود. | 7 |
௭நான் துயரப்படுகிற நாளில் உம்மை நோக்கிக் கூப்பிடுவேன்; நீர் என்னைக் கேட்டருளுவீர்.
خداوندا، خدایی دیگر مانند تو وجود ندارد. کارهای تو بینظیر است. | 8 |
௮ஆண்டவரே, தெய்வங்களுக்குள்ளே உமக்கு இணையுமில்லை; உம்முடைய செயல்களுக்கு ஒப்புமில்லை.
همهٔ قومهایی که آفریدهای خواهند آمد و تو را پرستش نموده، نام تو را خواهند ستود. | 9 |
௯ஆண்டவரே, நீர் உண்டாக்கின எல்லா தேசங்களும் வந்து, உமக்கு முன்பாகப் பணிந்து, உமது பெயரை மகிமைப்படுத்துவார்கள்.
زیرا تو بزرگ و قادر هستی و معجزه مینمایی؛ تنها تو خدا هستی! | 10 |
௧0தேவனே நீர் மகத்துவமுள்ளவரும் அதிசயங்களைச் செய்கிறவருமாக இருக்கிறீர்; நீர் ஒருவரே தேவன்.
خداوندا، راه خود را به من نشان ده تا وفادارانه در آن گام بردارم. مرا یاری ده تا بدون شک و دودلی تو را خدمت نمایم. | 11 |
௧௧யெகோவாவே, உமது வழியை எனக்குப் போதியும், நான் உமது சத்தியத்திலே நடப்பேன்; நான் உமது பெயருக்குப் பயந்திருக்கும்படி என்னுடைய இருதயத்தை ஒருமுகப்படுத்தும்.
با تمام وجودم تو را حمد و سپاس خواهم گفت و پیوسته عظمت نام تو را بیان خواهم نمود، | 12 |
௧௨என் தேவனாகிய ஆண்டவரே; உம்மை என்னுடைய முழு இருதயத்தோடும் துதித்து, உமது பெயரை என்றென்றைக்கும் மகிமைப்படுத்துவேன்.
زیرا محبت تو در حق من بسیار عظیم است؛ تو مرا از خطر مرگ رهانیدهای! (Sheol ) | 13 |
௧௩நீர் எனக்குப் பாராட்டின உமது கிருபை பெரியது; என்னுடைய ஆத்துமாவைத் தாழ்ந்த பாதாளத்திற்குத் தப்புவித்தீர். (Sheol )
خدایا، مردم متکبر بر ضد من برخاستهاند و گروهی ظالم و ستمگر در فکر کشتن منند. آنها به تو توجهی ندارند. | 14 |
௧௪தேவனே, அகங்காரிகள் எனக்கு விரோதமாக எழும்புகிறார்கள், கொடுமைக்காரராகிய கூட்டத்தார்கள் என்னுடைய உயிரை வாங்கத் தேடுகிறார்கள், உம்மைத் தங்களுக்கு முன்பாக நிறுத்தி பார்க்காமலிருக்கிறார்கள்.
اما تو، خداوندا، خدایی رحیم و فیاض و دیرخشم و سرشار از محبت و وفا هستی. | 15 |
௧௫ஆனாலும் ஆண்டவரே, நீர் மனவுருக்கமும், இரக்கமும், நீடிய பொறுமையும், பூரண கிருபையும், சத்தியமுமுள்ள தேவன்.
روی خود را به سوی من برگردان و بر من رحمت فرما. بندهٔ خود را توانا ساز و او را نجات ده. | 16 |
௧௬என்மேல் நோக்கமாகி, எனக்கு இரங்கும்; உமது வல்லமையை உமது அடியானுக்கு அருளி, உமது அடியாளின் மகனைக் காப்பாற்றும்.
لطف و مهربانی خود را به من نشان ده، مرا یاری کن و دلداری ده، تا آنانی که از من نفرت دارند این را ببینند و شرمنده شوند. | 17 |
௧௭யெகோவாவே, நீர் எனக்குத் துணைசெய்து என்னைத் தேற்றுகிறதை என்னுடைய பகைஞர் கண்டு வெட்கப்படும்படிக்கு, எனக்கு அநுகூலமாக ஒரு அடையாளத்தைக் காண்பித்தருளும்.