< مزامیر 35 >
مزمور داوود. ای خداوند، با دشمنانم دشمنی کن و با کسانی که با من میجنگند، بجنگ. | 1 |
௧தாவீதின் பாடல். யெகோவாவே, நீர் என்னுடைய எதிராளிகளோடு வழக்காடி, என்னோடு சண்டையிடுகிறவர்களோடு போரிடும்.
زرۀ خود را بپوش و سپر خود را بردار و به کمک من بیا. | 2 |
௨நீர் கேடகத்தையும் பெரிய கேடகத்தையும் பிடித்து, எனக்கு ஒத்தாசையாக எழுந்து நில்லும்.
نیزهٔ خود را به دست گیر و راه آنانی را که مرا تعقیب میکنند، ببند. به من اطمینان بده که مرا نجات خواهی داد. | 3 |
௩என்னைத் துன்பப்படுத்துகிறவர்களோடு எதிர்த்து நின்று, ஈட்டியை ஓங்கி அவர்களை வழிமறித்து: நான் உன்னுடைய இரட்சிப்பு என்று என்னுடைய ஆத்துமாவுக்குச் சொல்லும்.
آنانی که قصد جان مرا دارند، خجل و رسوا شوند؛ آنانی که بدخواه من هستند شکست خورده، خوار و سرافکنده شوند. | 4 |
௪என்னுடைய உயிரை வாங்கத்தேடுகிறவர்கள் வெட்கப்பட்டுக் கலங்குவார்களாக; எனக்குத் தீங்குசெய்ய நினைக்கிறவர்கள் அவமானமடைவார்களாக.
همچون کاه در برابر باد پراکنده شوند و فرشتهٔ خداوند آنها را براند. | 5 |
௫அவர்கள் காற்றடிக்கும் திசையில் பறக்கும் பதரைப்போல ஆவார்களாக; யெகோவாவுடைய தூதன் அவர்களைத் துரத்துவானாக.
وقتی فرشته آنها را تعقیب میکند، راه آنها تاریک و لغزنده شود تا نتوانند فرار کنند. | 6 |
௬அவர்களுடைய வழி இருளும் சறுக்கலுமாக இருப்பதாக; யெகோவாவுடைய தூதன் அவர்களைப் பின்தொடருவானாக.
زیرا بیجهت برای من دام نهادند و چاهی عمیق کندند تا در آن گرفتار شوم. | 7 |
௭காரணமில்லாமல் எனக்காகத் தங்களுடைய வலையைக் குழியில் ஒளித்துவைத்தார்கள்; காரணமில்லாமல் என்னுடைய ஆத்துமாவுக்குப் படுகுழி வெட்டினார்கள்.
باشد که ناگهان بلایی بر آنها نازل شود و در دامی که نهادهاند و چاهی که کندهاند، خود گرفتار شوند. | 8 |
௮அவன் நினைக்காத அழிவு அவனுக்கு வந்து, அவன் மறைவாக வைத்த வலை அவனையே பிடிக்கட்டும்; அவனே அந்தக் குழியில் விழுந்து அழிவானாக.
و اما جان من از وجود خداوند شادی خواهد کرد و به سبب نجاتی که او میدهد خوشحال خواهد شد. | 9 |
௯என்னுடைய ஆத்துமா யெகோவாவில் சந்தோஷித்து, அவருடைய இரட்சிப்பில் மகிழ்ந்திருக்கும்.
با تمام وجودم میگویم: «کیست مانند تو، ای خداوند؟ تو ضعیف را از دست زورگو نجات میدهی و مظلوم را از چنگ ظالم میرهانی.» | 10 |
௧0ஒடுக்கப்பட்டவனை, அவனிலும் பலவானுடைய கைக்கும், ஏழையும் எளிமையுமானவனைக் கொள்ளையிடுகிறவனுடைய கைக்கும் தப்புவிக்கிற உமக்கு ஒப்பானவர் யார் யெகோவாவே, என்று என்னுடைய எலும்புகளெல்லாம் சொல்லும்.
شاهدان بیرحم علیه من برخاستهاند و مرا به چیزهایی متهم میکنند که روحم از آنها بیخبر است. | 11 |
௧௧கொடுமையான சாட்சிகள் எழும்பி, நான் அறியாததை என்னிடத்தில் கேட்கிறார்கள்.
نیکی مرا با بدی پاسخ میدهند و جان مرا میرنجانند. | 12 |
௧௨நான் செய்த நன்மைக்குப் பதிலாகத் தீமைசெய்கிறார்கள்; என்னுடைய ஆத்துமா சோர்ந்து போகச்செய்யப்பார்க்கிறார்கள்.
و اما من، وقتی آنها بیمار بودند لباس عزا پوشیدم، جان خود را با روزه رنج دادم و برایشان دعا کردم. | 13 |
௧௩அவர்கள் வியாதியாக இருந்தபோது சணல் என்னுடைய உடையாக இருந்தது; நான் உபவாசத்தால் என்னுடைய ஆத்துமாவை உபத்திரவப்படுத்தினேன்; என்னுடைய ஜெபமும் கேட்கப்படவில்லை.
مانند یک دوست و برادر برای آنها دل سوزاندم؛ چنان اندوهگین بودم که گویی مادرم را از دست دادهام! | 14 |
௧௪நான் அவனை என்னுடைய நண்பனாகவும் சகோதரனாகவும் நினைத்து நடந்துகொண்டேன்; தாய்க்காகத் துக்கப்படுகிறவனைப்போல் துக்கஉடை அணிந்து தலைகவிழ்த்து நடந்தேன்.
اما وقتی من در زحمت افتادم، آنها شاد و خندان علیه من جمع شدند. حتی کسانی که نمیشناختم به من حملهور شدند و بیوقفه به من ناسزا گفتند. | 15 |
௧௫ஆனாலும் எனக்கு ஆபத்து உண்டானபோது அவர்கள் சந்தோஷப்பட்டுக் கூட்டங்கூடினார்கள்; அற்பமானவர்களும் நான் அறியாதவர்களும் எனக்கு விரோதமாகக் கூட்டம் கூடி, ஓயாமல் என்னை இகழ்ந்தார்கள்.
آری، مرا استهزا کردند و مانند آدمهای هرزه به من دشنام دادند. | 16 |
௧௬அப்பத்திற்காக வஞ்சகம் பேசுகிற பரியாசக்காரர்களோடு சேர்ந்துகொண்டு என்மேல் பற்கடிக்கிறார்கள்.
خداوندا، تا به کی نظارهگر خواهی بود؟ جانم را از شرّ آنها رهایی ده؛ زندگی مرا از دست این شیران درنده نجات ده. | 17 |
௧௭ஆண்டவரே, எதுவரைக்கும் இதைப் பார்த்துக்கொண்டிருப்பீர்? என்னுடைய ஆத்துமாவை அழிவுக்கும், எனக்கு அருமையானதைச் சிங்கக்குட்டிகளுக்கும் தப்புவியும்.
آنگاه در میان جماعت بزرگ، تو را ستایش خواهم نمود و در حضور مردم، تو را سپاس خواهم گفت. | 18 |
௧௮மகா சபையிலே உம்மைத் துதிப்பேன், திரளான மக்களுக்குள்ளே உம்மைப் புகழுவேன்.
نگذار کسانی که بیجهت با من دشمنی میکنند به من بخندند و آنانی که از من متنفرند، مسخرهام کنند. | 19 |
௧௯வீணாக எனக்கு எதிரிகளானவர்கள் என்னால் சந்தோஷப்படாமலும், காரணமில்லாமல் என்னைப் பகைக்கிறவர்கள் கண் சிமிட்டாமலும் இருப்பார்களாக.
سخنان آنان دوستانه نیست؛ آنها بر ضد کسانی که صلحجو هستند و زندگی آرامی دارند افترا میزنند. | 20 |
௨0அவர்கள் சமாதானமாகப் பேசாமல், தேசத்திலே அமைதலாக இருக்கிறவர்களுக்கு விரோதமாக வஞ்சகமான காரியங்களைக் கருதுகிறார்கள்.
به من میگویند: «ما با چشمان خود دیدیم که چه کردی!» | 21 |
௨௧எனக்கு விரோதமாகத் தங்கள் வாயை விரிவாகத் திறந்து, ஆ ஆ, ஆ ஆ, எங்கள் கண் கண்டது என்கிறார்கள்.
اما تو، ای خداوند، از همه چیز آگاهی؛ پس اینچنین ساکت نباش؛ ای خداوند، از من دور مباش! | 22 |
௨௨யெகோவாவே, நீர் இதைக் கண்டீர், மவுனமாக இருக்கவேண்டாம்; ஆண்டவரே, எனக்குத் தூரமாகாமலிரும்.
ای یهوه خدای من، برخیز و به دادم برس و از حق من دفاع کن! | 23 |
௨௩என் தேவனே, என் ஆண்டவரே, எனக்கு நியாயஞ்செய்யவும் என்னுடைய வழக்கைத் தீர்க்கவும் விழித்துக்கொண்டு எழுந்தருளும்.
ای یهوه خدای من، بر طبق عدالت خود، در مورد من داوری کن و نگذار دشمنانم به من بخندند. | 24 |
௨௪என் தேவனாகிய யெகோவாவே, உம்முடைய நீதியின்படி என்னை நியாயம் விசாரியும், என்னைக்குறித்து அவர்களை மகிழவிடாமலிரும்.
نگذار در دل خود بگویند: «ما به آرزوی خود رسیدیم! او را شکست دادیم!» | 25 |
௨௫அவர்கள் தங்களுடைய இருதயத்திலே: ஆ ஆ, இதுவே நாங்கள் விரும்பினது என்று சொல்லாதபடிக்கும், அவனை என்று பேசாதபடிக்கும் செய்யும்.
آنانی که از ناکامی و بدبختی من شاد شدهاند، خود خجل و شرمنده شوند؛ کسانی که خود را از من برتر و بزرگتر میدانند، سرافکنده و رسوا گردند. | 26 |
௨௬எனக்கு நேரிட்ட ஆபத்துக்காகச் சந்தோஷப்படுகிறவர்கள் ஒன்றாக வெட்கி அவமானப்பட்டு, எனக்கு விரோதமாகப் பெருமைபாராட்டுகிறவர்கள் வெட்கத்தாலும் அவமானத்தாலும் மூடப்படவேண்டும்.
اما آنانی که میخواهند حقم به من داده شود، شاد و خرم باشند و پیوسته بگویند: «خداوند بزرگ است و خواستار سلامتی و موفقیتِ خدمتگزار خود میباشد.» | 27 |
௨௭என்னுடைய நீதி தெரியவேண்டுமென்று விரும்புகிறவர்கள் கெம்பீரித்து மகிழ்ந்து, தமது ஊழியக்காரனுடைய சுகத்தை விரும்புகிற யெகோவாவுக்கு மகிமை உண்டாவதாக என்று எப்போதும் சொல்லட்டும்.
آنگاه من عدالت تو را بیان خواهم کرد و تمام روز تو را سپاس خواهم گفت. | 28 |
௨௮என் நாவு உமது நீதியையும், நாள்முழுவதும் உமது துதியையும் சொல்லிக்கொண்டிருக்கும்.