< مزامیر 133 >
سرود زائران به هنگام بالا رفتن به اورشلیم. مزمور داوود. چه خوشایند و چه دلپسند است که قوم خدا به یکدلی با هم زندگی کنند! | 1 |
சீயோன் மலை ஏறும்போது பாடும் தாவீதின் பாடல். இறைவனின் மக்கள் ஒற்றுமையுடன் ஒருமித்து வாழ்வது எவ்வளவு நல்லதும், எவ்வளவு மகிழ்ச்சிக்குரியதுமாய் இருக்கிறது!
یکدلی، همچون روغن خوشبویی است که بر سر «هارون» ریخته میشود و بر ریش و ردایش میچکد! | 2 |
அது தலையில் ஊற்றப்பட்டு தாடியில் வடிகின்ற விலையேறப்பெற்ற எண்ணெய்போல் இருக்கிறது; ஆரோனின் தாடியில் வடிந்து, அவனுடைய அங்கிகளின் கழுத்துப்பட்டியில் இறங்கும் எண்ணெய்போல் இருக்கிறது.
یکدلی، مانند شبنمی است که بر کوه بلند حرمون مینشیند و از آنجا بر کوههای اورشلیم فرود میآید. در آنجاست که خداوند برکت خود را عنایت میکند، برکت زندگی جاوید را. | 3 |
எர்மோன் மலையின் பனி சீயோனின் மலைகள்மேல் இறங்குவதைப்போல் அது இருக்கிறது; ஏனெனில் அங்கே யெகோவா தமது ஆசீர்வாதத்தை வழங்குகிறார்; வாழ்வையும் என்றென்றைக்கும் வழங்குகிறார்.