< مزامیر 116 >
خداوند را دوست میدارم زیرا ناله و فریاد مرا میشنود | 1 |
நான் யெகோவாவிடம் அன்பாயிருக்கிறேன், ஏனெனில் அவர் என் குரலைக் கேட்டார்; இரக்கத்திற்காக நான் கதறியதை அவர் கேட்டார்.
و به درخواست من گوش میدهد، پس تا آخر عمر، نزد او دعا خواهم کرد. | 2 |
அவர் எனக்குச் செவிகொடுத்தபடியால், நான் என் வாழ்நாளெல்லாம் அவரை வழிபடுவேன்.
خطر مرگ بر من سایه افکنده بود و مایوس و غمگین بودم، (Sheol ) | 3 |
மரணக் கயிறுகள் என்னைச் சிக்கவைத்தன; பாதாளத்தின் வேதனைகள் என்மீது வந்தன; கஷ்டமும் கவலையும் என்னை மேற்கொண்டன. (Sheol )
سپس نام خداوند را خواندم و فریاد زدم: «آه ای خداوند، مرا نجات بده!» | 4 |
அப்பொழுது நான் யெகோவாவின் பெயரைச்சொல்லிக் கூப்பிட்டுச் சொன்னதாவது: “யெகோவாவே, என்னைக் காப்பாற்றும்!”
او چه خوب و مهربان است! آری، خدای ما رحیم است. | 5 |
யெகோவா கிருபையும் நீதியுமுள்ளவர்; நம்முடைய இறைவன் கருணை நிறைந்தவர்.
خداوند افراد سادهدل و فروتن را حفظ میکند. من با خطر روبرو بودم، ولی او مرا نجات داد. | 6 |
யெகோவா கற்றுக்கொள்ளவிருக்கும் இருதயமுள்ளவர்களைப் பாதுகாக்கிறார்; நான் தாழ்த்தப்பட்டபோது, அவர் என்னை இரட்சித்தார்.
ای جان من، آسوده باش، زیرا خداوند در حق من خوبی کرده است! | 7 |
என் ஆத்துமாவே, மீண்டும் நீ இளைப்பாறு; யெகோவா உனக்கு எவ்வளவு நல்லவராய் இருக்கிறார்.
او مرا از مرگ نجات داد و اشکهایم را پاک کرد و نگذاشت پایم بلغزد، | 8 |
யெகோவாவே, நீர் என் ஆத்துமாவை மரணத்திலிருந்து விடுவித்தீர்; என் கண்களைக் கண்ணீர் சிந்துவதிலிருந்தும், என் கால்களை இடறுவதிலிருந்தும் விடுவித்தீர்.
تا بتوانم در این دنیا در حضور خداوند زیست کنم. | 9 |
நான் உயிருள்ளோரின் நாட்டிலே யெகோவாவுக்கு முன்பாக நடப்பேன்.
به تو ایمان داشتم، پس گفتم: «سخت پریشانم!» | 10 |
“நான் மிகவும் துன்பப்பட்டிருக்கிறேன்” என்று நான் சொன்னபோதிலும், நான் விசுவாசித்தேன், ஆகையால் பேசுகிறேன்.
در اضطراب خود به تو فریاد برآوردم: «همه دروغ میگویند!» | 11 |
ஆனாலும் என் மனச்சோர்வினாலே, “எல்லா மனிதரும் பொய்யர்” என்று நான் சொன்னேன்.
اما اینک در برابر همهٔ خوبیهایی که خداوند برای من کرده است، چه میتوانم به او بدهم؟ | 12 |
யெகோவா எனக்குச் செய்த எல்லா நன்மைகளுக்கும் பதிலாக, நான் அவருக்கு எதைத்தான் கொடுப்பேன்?
پیالۀ نجات را بلند خواهم کرد و نام خداوند را که مرا نجات داده، سپاس خواهم گفت. | 13 |
நான் இரட்சிப்பின் பாத்திரத்தை உயர்த்திக்கொண்டு யெகோவாவினுடைய பெயரைச் சொல்லி வழிபடுவேன்.
در حضور قوم او نذرهای خود را به خداوند ادا خواهم کرد. | 14 |
நான் யெகோவாவுக்குச் செய்த நேர்த்திக் கடன்களை அவருடைய மக்கள் எல்லாருக்கும் முன்பாக நிறைவேற்றுவேன்.
جانهای مقدّسان خداوند نزد او عزیزند، پس او نخواهد گذاشت آنها از بین بروند. | 15 |
யெகோவாவினுடைய பரிசுத்தவான்களின் மரணம் அவருடைய பார்வையில் விலையேறப்பெற்றது.
ای خداوند، من بندهٔ تو و پسر کنیز تو هستم. تو مرا از چنگ مرگ رها ساختی. | 16 |
யெகோவாவே, உண்மையாகவே நான் உமது பணியாளனாய் இருக்கிறேன்; நான் உமது அடியாளின் மகனும், உமது ஊழியக்காரனுமாய் இருக்கிறேன்; என்னைக் கட்டியிருந்த சங்கிலியிலிருந்து நீர் என்னை விடுதலையாக்கினீர்.
قربانی شکرگزاری را به حضورت تقدیم میکنم و نام تو را گرامی میدارم. | 17 |
நான் உமக்கு ஒரு நன்றிக் காணிக்கையைப் பலியிட்டு, யெகோவாவினுடைய பெயரைச் சொல்லி வழிபடுவேன்.
در حضور تمام مردم اسرائیل و در خانهٔ تو که در اورشلیم است، نذرهای خود را ادا خواهم نمود. سپاس بر خداوند! | 18 |
நான் யெகோவாவுக்குச் செய்த நேர்த்திக்கடனை, அவருடைய மக்கள் எல்லோருக்கும் சமுகத்தில் நிறைவேற்றுவேன்.
எருசலேமே உன் நடுவில் யெகோவாவினுடைய ஆலய முற்றங்களில், நான் எனது நேர்த்திக்கடனை நிறைவேற்றுவேன். அல்லேலூயா.