< ناحوم 1 >
خداوند این رؤیا را که دربارهٔ نینوا است به ناحوم القوشی نشان داد: | 1 |
௧நினிவே பட்டணத்தைக் குறித்த எல்கோசானாகிய நாகூமின் தரிசனப் புத்தகம்.
یهوه خدایی غیور است و از کسانی که با وی مخالفت ورزند، انتقام میگیرد و با خشم شدید آنان را مجازات میکند. | 2 |
௨யெகோவா எரிச்சலுள்ளவரும் நீதியை நிலைநாட்டுகிறவருமான தேவன்; யெகோவா நீதிசெய்கிறவர், கடுங்கோபமுள்ளவர்; யெகோவா தம்முடைய எதிரிகளுக்குப் பிரதிபலன் அளிக்கிறவர். அவர் தம்முடைய பகைவர்கள்மேல் என்றும் கோபம் வைக்கிறவர்.
خداوند دیر خشمگین میشود ولی گناه را هرگز بیسزا نمیگذارد. قدرت او عظیم است و آن را میتوان در گردبادهای وحشتناک و طوفانهای شدید مشاهده کرد. ابرها خاک زیر پای او هستند! | 3 |
௩யெகோவா நீடிய சாந்தமும், மிகுந்த வல்லமையுமுள்ளவர்; அவர்களைத் தண்டனையில்லாமல் தப்புவிக்கமாட்டார்; யெகோவாவுடைய வழி சுழல்காற்றிலும் பெருங்காற்றிலும் இருக்கிறது; மேகங்கள் அவருடைய பாதத்திலுள்ள தூசியாயிருக்கிறது.
به فرمان خداوند دریاها و رودها خشک میشوند، چراگاههای سبز و خرم باشان و کرمل از بین میروند و جنگلهای سرسبز لبنان طراوت و خرمی خود را از دست میدهند. | 4 |
௪அவர் சமுத்திரத்தை அதட்டி, அதை வற்றிப்போகச்செய்து, சகல ஆறுகளையும் வறட்சியாக்குகிறார்; பாசானும் கர்மேலும் சோர்ந்து, லீபனோனின் செழிப்பு வாடிப்போகும்.
در حضور او کوهها میلرزند، تپهها گداخته میشوند، زمین متلاشی میگردد و ساکنانش نابود میشوند. | 5 |
௫அவர் சமுகத்தில் மலைகள் அதிர்ந்து கரைந்துபோகும்; அவர் பிரசன்னத்தினால் உலகமும் பூமியும் அதில் குடியிருக்கிற அனைவரோடும் எடுபட்டுப்போகும்.
کیست که بتواند در برابر خشم خدا ایستادگی کند؟ غضب او مانند آتش فرو میریزد و کوهها در برابر خشم او خرد میشوند. | 6 |
௬அவருடைய கோபத்திற்கு முன்பாக நிற்பவன் யார்? அவருடைய கடுங்கோபத்திலே நிலைநிற்பவன் யார்? அவருடைய எரிச்சல் நெருப்பைப்போல இறைக்கப்படுகிறது; அவராலே கன்மலைகள் பெயர்க்கப்படும்.
خداوند نیکوست و در روز بلا و سختی پناهگاه میباشد. او از کسانی که به او توکل میکنند مراقبت مینماید، | 7 |
௭யெகோவா நல்லவர், இக்கட்டு நாளிலே பாதுகாப்பான கோட்டை; தம்மை நம்புகிறவர்களை அறிந்திருக்கிறார்.
ولی دشمنان خود را با سیلابی شدید از بین میبرد و آنها را به ظلمت مرگ روانه میکند. | 8 |
௮ஆனாலும் நினிவேயின் நிலையை, புரண்டுவருகிற வெள்ளத்தினால் முற்றிலுமாக அழிப்பார்; இருள் அவருடைய எதிரிகளைப் பின்தொடரும்.
ای نینوا، چرا به فکر مخالفت با خداوند هستی؟ او با یک ضربه تو را از پای در خواهد آورد، به طوری که دیگر نخواهی توانست مقاومت کنی. | 9 |
௯நீங்கள் யெகோவாவுக்கு விரோதமாகச் செய்ய நினைக்கிறதென்ன? அவர் முற்றிலுமாக அழிப்பார்; துன்பம் மறுபடியும் உண்டாகாது.
دشمنانش را همچون خارهای به هم پیچیده و مانند کسانی که از مستی تلوتلو میخورند به داخل آتش میاندازد و آنها همچون کاه در شعلههای آتش سوخته شده دود میشوند. | 10 |
௧0அவர்கள் மிக நெருக்கமாக இருக்கிற முட்செடிகளுக்கு ஒப்பாக இருக்கும்போதும், தங்கள் மதுபானத்தினால் வெறிகொண்டிருக்கும்போதும், அவர்கள் முழுவதும் காய்ந்துபோன சருகைப்போல எரிந்துபோவார்கள்.
این پادشاه تو کیست که جرأت میکند بر ضد خداوند توطئه کند؟ | 11 |
௧௧யெகோவாவுக்கு விரோதமாகப் பொல்லாத நினைவுகொண்டிருக்கிற தீய ஆலோசனைக்காரன் ஒருவன் உன்னிடத்திலிருந்து புறப்பட்டான்.
خداوند میفرماید: «سپاه آشور هر قدر هم قوی و بزرگ باشد، محو و نابود خواهد شد. «ای قوم من، به اندازۀ کافی شما را تنبیه کردهام، اما بار دیگر تنبیهتان نخواهم کرد. | 12 |
௧௨யெகோவா சொல்லுகிறது என்னவென்றால்: அவர்கள் சம்பூரணமடைந்து அநேகராயிருந்தாலும் அழிந்துபோவார்கள்; அவன் ஒழிந்துபோவான்; உன்னை நான் சிறுமைப்படுத்தினேன், இனி உன்னைச் சிறுமைப்படுத்தாதிருப்பேன்.
اینک زنجیرهای شما را پاره میکنم و شما را از قید اسارت پادشاه آشور آزاد میسازم.» | 13 |
௧௩இப்போதும் நான் உன்மேல் இருக்கிற அவன் பாரத்தை எடுத்துப்போட்டு, உன் கட்டுகளை அறுப்பேன்.
خداوند به پادشاه آشور میفرماید: «نسل تو را از بین میبرم تا نام و نشانی از تو باقی نماند. بتها و بتخانههای تو را نابود خواهم کرد و قبرت را خواهم کند، زیرا تو نفرتانگیزی.» | 14 |
௧௪உன்னைக்குறித்துக் யெகோவா கட்டளைகொடுத்திருக்கிறார்; இனி உன் பெயரை நிலை நாட்ட வாரிசு உருவாவதில்லை; உன் தேவர்களின் கோவிலில் இருக்கிற வெட்டப்பட்டசிலையையும், வார்க்கப்பட்ட சிலையையும், நான் அழியச்செய்வேன்; நீ கனவீனனானபடியால் அதை உனக்குப் பிரேதக்குழியாக்குவேன்.
ببینید، قاصدی از کوهها سرازیر شده، خبر خوش پیروزی را ندا میدهد. ای یهودا، عیدهای خود را برگزار نما و نذرهای خود را به خدا وفا کن، چون دشمن، دیگر هرگز برنمیگردد. او برای همیشه ریشهکن شده است! | 15 |
௧௫இதோ, சமாதானத்தைக் கூறுகிற சுவிசேஷகனுடைய கால்கள் மலைகளின்மேல் வருகிறது; யூதாவே, உன் பண்டிகைகளை அனுசரி; உன் பொருத்தனைகளைச் செலுத்து; தீயவன் இனி உன் வழியாகக் கடந்துவருவதில்லை, அவன் முழுவதும் அழிக்கப்பட்டான்.