< داوران 10 >
پس از مرگ ابیملک، «تولع» (پسر فواه و نوهٔ دودا) برای رهایی اسرائیل به پا خاست. او از قبیلهٔ یساکار بود، ولی در شهر شامیر واقع در کوهستان افرایم سکونت داشت. | 1 |
௧அபிமெலேக்குக்கு இறந்தப் பின்பு, தோதோவின் மகனான பூவாவின் மகன் தோலா என்னும் இசக்கார் கோத்திரத்தான் இஸ்ரவேலை காப்பாற்ற எழும்பினான்; அவன் எப்பிராயீம் மலைத்தேசத்து ஊராகிய சாமீரிலே குடியிருந்தான்.
وی مدت بیست و سه سال رهبری اسرائیل را به عهده داشت. وقتی مرد، او را در شامیر دفن کردند | 2 |
௨அவன் இஸ்ரவேலை 23 வருடங்கள் நியாயம் விசாரித்து, பின்பு இறந்து, சாமீரிலே அடக்கம் செய்யப்பட்டான்.
و «یائیر» جانشین وی شد. یائیر از اهالی جلعاد بود و بیست و دو سال رهبر اسرائیل بود. | 3 |
௩தோலா இறந்தப் பின்பு, கீலேயாத்தியனான யாவீர் எழும்பி, இஸ்ரவேலை 22 வருடங்கள் நியாயம் விசாரித்தான்.
او سی پسر داشت که دسته جمعی بر سی الاغ سوار میشدند. آنها در سرزمین جلعاد سی شهر داشتند که هنوز آنها را «شهرهای یائیر» مینامند. | 4 |
௪முப்பது கழுதைக்குட்டிகளின்மேல் ஏறும் முப்பது மகன்கள் அவனுக்கு இருந்தார்கள்; அவர்களுக்கு முப்பது ஊர்களும் இருந்தது; கீலேயாத் தேசத்திலிருக்கிற அவைகளுக்கு இந்த நாள்வரைக்கும் யாவீரின் கிராமங்கள் என்கிற பெயர் இருக்கிறது.
وقتی یائیر مرد، او را در قامون دفن کردند. | 5 |
௫யாவீர் இறந்து, காமோன் பட்டணத்தில் அடக்கம் செய்யப்பட்டான்.
آنگاه مردم اسرائیل بار دیگر از خداوند روگردان شده، به پرستش بعل و عشتاروت و خدایان سوریه، صیدون، موآب، عمون و فلسطین پرداختند و خداوند را ترک گفته، دیگر او را پرستش نکردند. | 6 |
௬இஸ்ரவேல் மக்கள், மறுபடியும் யெகோவாவின் பார்வைக்குத் தீமையானவைகளைச் செய்து, யெகோவாவை வணங்காமல் அவரை விட்டுப்போய், பாகால்களையும், அஸ்தரோத்தையும், சீரியாவின் தெய்வங்களையும், சீதோனின் தெய்வங்களையும், மோவாபின் தெய்வங்களையும், அம்மோன் மக்களின் தெய்வங்களையும், பெலிஸ்தர்களின் தெய்வங்களையும் தொழுதுகொண்டார்கள்.
پس خشم خداوند بر اسرائیل افروخته شد و او فلسطینیها و عمونیها را بر اسرائیل مسلط ساخت. آنها بر اسرائیلیهایی که در سمت شرقی رود اردن در سرزمین اموریها (یعنی در جلعاد) بودند، ظلم میکردند. همچنین عمونیها از رود اردن گذشته، به قبایل یهودا، بنیامین و افرایم هجوم میبردند. اسرائیل مدت هجده سال زیر ظلم و ستم قرار داشت. | 7 |
௭அப்பொழுது யெகோவா இஸ்ரவேலின்மேல் கோபமடைந்து, அவர்களைப் பெலிஸ்தர்கள் கையிலும், அம்மோனியர்களின் கையிலும் ஒப்புக்கொடுத்தார்.
௮அவர்கள் அந்த ஆண்டுமுதல் 18 வருடங்களாக யோர்தான் நதிக்கு அப்பாலே கீலேயாத்திலுள்ள எமோரியர்களின் தேசத்தில் இருக்கிற இஸ்ரவேல் மக்களையெல்லாம் நெருக்கி ஒடுக்கினார்கள்.
௯அம்மோனியர்கள் யூதாவின்மேலும், பென்யமீன்மேலும், எப்பிராயீம் குடும்பத்தினர்மேலும் யுத்தம்செய்ய யோர்தான் நதியைக் கடந்துவந்தார்கள்; இஸ்ரவேலர்கள் மிகவும் நெருக்கப்பட்டார்கள்.
سرانجام بنیاسرائیل به سوی خداوند بازگشت نموده، التماس کردند که ایشان را نجات بخشد. آنها اعتراف نموده، گفتند: «خداوندا نسبت به تو گناه ورزیدهایم، زیرا تو را ترک نموده، بتهای بعل را پرستش کردهایم.» | 10 |
௧0அப்பொழுது இஸ்ரவேல் மக்கள் யெகோவாவை நோக்கி முறையிட்டு: உமக்கு விரோதமாகப் பாவஞ்செய்தோம்; நாங்கள் எங்களுடைய தேவனைவிட்டு, பாகால்களைத் தொழுதுகொண்டோம் என்றார்கள்.
ولی خداوند به ایشان فرمود: «مگر من شما را از دست مصریها، اموریها، عمونیها، فلسطینیها، | 11 |
௧௧யெகோவா இஸ்ரவேல் மக்களை நோக்கி: எகிப்தியர்களும், எமோரியர்களும், அம்மோனியர்களும், பெலிஸ்தர்களும்,
صیدونیها، عمالیقیها، و معونیها نرهانیدم؟ مگر به هنگام تمام سختیها به داد شما نرسیدم؟ | 12 |
௧௨சீதோனியர்களும், அமலேக்கியர்களும், மாகோனியர்களும், உங்களை ஒடுக்கும் நேரங்களில், நீங்கள் என்னை நோக்கி முறையிட்டபோது, நான் உங்களை அவர்களுடைய கைக்கு விலக்கி இரட்சிக்கவில்லையா?
با وجود این، شما مرا ترک نموده، به پرستش خدایان دیگر پرداختید. پس من دیگر شما را رهایی نخواهم بخشید. | 13 |
௧௩அப்படியிருந்தும் நீங்கள் என்னைவிட்டு, அந்நிய தெய்வங்களை ஆராதனை செய்தீர்கள்; ஆகையால் இனி உங்களை இரட்சிக்கமாட்டேன்.
بروید و از خدایانی که برای خود انتخاب کردهاید کمک بطلبید! بگذارید در این هنگام سختی، آنها شما را برهانند!» | 14 |
௧௪நீங்கள் போய், உங்களுக்காகத் தெரிந்துகொண்ட தெய்வங்களை நோக்கி முறையிடுங்கள்; அவைகள் உங்களுடைய ஆபத்தின் காலத்தில் உங்களை இரட்சிக்கட்டும் என்றார்.
اما ایشان به خداوند گفتند: «ما گناه کردهایم. هر چه صلاح میدانی با ما بکن، ولی فقط یکبار دیگر ما را از دست دشمنانمان نجات بده.» | 15 |
௧௫இஸ்ரவேல் மக்கள் யெகோவாவை நோக்கி: பாவஞ்செய்தோம், தேவரீர் உம்முடைய பார்வைக்கு நலமானதை எங்களுக்குச் செய்யும்; இன்றைக்குமட்டும் எங்களை இரட்சித்தருளும் என்று சொல்லி,
آنگاه خدایان بیگانهٔ خود را ترک گفته، تنها خداوند را عبادت نمودند و خداوند به سبب سختیهای اسرائیل اندوهگین شد. | 16 |
௧௬அந்நிய தெய்வங்களைத் தங்கள் நடுவிலிருந்து விலக்கிவிட்டு, யெகோவாவுக்கு ஆராதனை செய்தார்கள்; அப்பொழுது அவர் இஸ்ரவேலின் துயரத்தைப் பார்த்து மனதுருகினார்.
در آن موقع سپاهیان عمونی در جلعاد اردو زده، آماده میشدند که به اردوی اسرائیلیها در مصفه حمله کنند. | 17 |
௧௭அம்மோனியர்கள் கூட்டங்கூடி, கீலேயாத்திலே முகாமிட்டார்கள்; இஸ்ரவேல் மக்களும் கூடிக்கொண்டு, மிஸ்பாவிலே முகாமிட்டார்கள்.
رهبران اسرائیلی از یکدیگر میپرسیدند: «کیست که فرماندهی نیروهای ما را به عهده بگیرد و با عمونیها بجنگد؟ هر کس که داوطلب شود رهبر مردم جلعاد خواهد شد!» | 18 |
௧௮அப்பொழுது கீலேயாத்தின் மக்களும் பிரபுக்களும் ஒருவரையொருவர் நோக்கி: அம்மோனியர்கள்மேல் முதலில் யுத்தம்செய்யப்போகிற மனிதன் யார்? அவனே கீலேயாத்தின் குடியிருப்புகளுக்கெல்லாம் தலைவனாக இருப்பான் என்றார்கள்.