< یوئیل 3 >
خداوند میفرماید: «در آن زمان وقتی رفاه و سعادت را به یهودا و اورشلیم بازگردانم، | 1 |
௧இதோ, யூதாவிற்கும் எருசலேமிற்கும் ஏற்பட்டிருக்கிற சிறையிருப்பை நான் திருப்பும் அந்நாட்களிலும் அக்காலத்திலும்,
سپاهیان جهان را در درهٔ یهوشافاط جمع خواهم کرد و در آنجا ایشان را به خاطر میراث خود، اسرائیل محاکمه خواهم نمود، چون قوم مرا در میان قومها پراکنده ساخته، سرزمین مرا تقسیم کردند. | 2 |
௨நான் எல்லா தேசத்தாரையும் கூட்டி, யோசபாத்தின் பள்ளத்தாக்கிலே அவர்களை இறங்கிப்போகச் செய்வேன், அவர்கள் என் மக்களையும் இஸ்ரவேலென்னும் என் பங்கையும் அந்நியமக்களுக்குள்ளே சிதறடித்து என் தேசத்தைப் பங்கிட்டுக்கொண்டதினால்,
آنها بر سر افراد قوم من قمار کردند و پسران را در ازای فاحشهها و دختران را در مقابل شراب فروختند تا مست کنند. | 3 |
௩அவர்கள் என் மக்கள்பேரில் சீட்டுப்போட்டு, ஆண்குழந்தைகளை விபச்சாரிகளுக்கு விலையாகக் கொடுத்து, மதுபானம் குடிப்பதற்காக பெண் குழந்தைகளைத் திராட்சைரசத்திற்கு விலையாகக் கொடுத்ததினாலும், அங்கே அவர்களோடு வழக்காடுவேன்.
«ای صور و صیدون، و ای شهرهای فلسطین چه میخواهید بکنید؟ آیا میخواهید از من انتقام بگیرید؟ اگر چنین کنید من بیدرنگ شما را مجازات خواهم کرد. | 4 |
௪தீருவே, சீதோனே, பெலிஸ்தியாவின் அனைத்து எல்லைகளே, உங்களுக்கும் எனக்கும் என்ன? இப்படி எனக்குச் சரிக்கட்டுகிறீர்களோ? இப்படி எனக்குச் சரிக்கட்டுவீர்களாகில், நான் தாமதமில்லாமல் மிகவேகமாக நீங்கள் சரிகட்டுகிறதை உங்கள் தலையின்மேல் திரும்பும்படிச் செய்வேன்.
طلا و نقره و تمام گنجینههای گرانبهای مرا گرفته و آنها را به بتخانههای خود بردهاید. | 5 |
௫நீங்கள் என்னுடைய வெள்ளியையும் பொன்னையும் எடுத்து, இன்பமும் உயர்ந்ததுமான என் பொருட்களை உங்கள் கோவில்களிலே கொண்டுபோய்,
مردم یهودا و اورشلیم را به یونانیان فروختهاید و ایشان را از سرزمینشان آواره کردهاید. | 6 |
௬யூதாவின் மக்களையும் எருசலேமின் மக்களையும் அவர்களுடைய எல்லைகளுக்குத் தூரமாக்கும்படிக்கு, கிரேக்கரிடத்தில் விற்றுப்போட்டீர்கள்.
«ولی من دوباره آنها را از جاهایی که به آنها فروخته شدهاند باز میگردانم و همهٔ اعمال شما را بر سر خودتان خواهم آورد. | 7 |
௭இதோ, நீங்கள் அவர்களை விற்றுப்போட்ட அவ்விடத்திலிருந்து நான் அவர்களை எழும்பிவரச்செய்து, நீங்கள் சரிக்கட்டினதை உங்கள் தலையின்மேல் திரும்பும்படி செய்து,
من پسران و دختران شما را به مردم یهودا خواهم فروخت و ایشان هم آنها را به سبائیان که در سرزمینی دوردست ساکنند خواهند فروخت. من که خداوند هستم این را میگویم. | 8 |
௮உங்கள் மகன்களையும், மகள்களையும் யூதா மக்களின் கையிலே விற்பேன்; இவர்கள் அவர்களைத் தூரதேசத்தார்களாகிய சபேயரிடத்தில் விற்றுப்போடுவார்கள்; யெகோவா இதைச் சொன்னார்.
«برای جنگ آماده شوید و به همه خبر دهید! بهترین سربازان خود را بسیج کنید و تمام سپاهیان خود را فرا خوانید. | 9 |
௯இதை அந்நியமக்களுக்குள்ளே அறிவியுங்கள்; போருக்கு ஆயத்தம்செய்யுங்கள்; பராக்கிரமசாலிகளை எழுப்புங்கள்; போர்வீரர்கள் எல்லோரும் சேர்ந்து ஏறிவரட்டும்.
گاوآهنهای خود را ذوب نموده، شمشیر بسازید و از ارههای خود نیزه تهیه کنید. شخص ضعیف بگوید:”من قوی هستم!“ | 10 |
௧0உங்கள் மண்வெட்டிகளைப் பட்டயங்களாகவும், உங்கள் அரிவாள்களை ஈட்டிகளாகவும் அடியுங்கள்; பலவீனனும் தன்னைப் பலவான் என்று சொல்வானாக.
ای همهٔ قومها، بشتابید و از هر طرف جمع شوید.» اکنون ای خداوند، جنگاوران خود را فرود آر! | 11 |
௧௧சகல மக்களே, நீங்கள் சுற்றிலுமிருந்து ஒன்றாக வந்து கூடுங்கள்; யெகோவாவே, நீரும் அங்கே உம்முடைய பராக்கிரமசாலிகளை இறங்கிவரச்செய்வீராக.
خداوند میفرماید: «قومها جمع شوند و به درهٔ یهوشافاط بیایند، چون من در آنجا نشسته، همه را داوری خواهم کرد. | 12 |
௧௨மக்கள் எழும்பி யோசபாத்தின் பள்ளத்தாக்கிற்கு வருவார்களாக; சுற்றிலுமுள்ள மக்களை நியாயந்தீர்க்க அங்கே நான் வீற்றிருப்பேன்.
داسها را آماده کنید، زیرا محصول رسیده و آماده است. انگورهای داخل چرخشت را با پا له کنید، چون از شرارت این مردم لبریز شده است.» | 13 |
௧௩பயிர் முற்றியது, அரிவாளை நீட்டி அறுங்கள், வந்து இறங்குங்கள்; ஆலை நிரம்பியிருக்கிறது, ஆலையின் தொட்டிகள் வழிந்தோடுகிறது; அவர்களுடைய ஒழுக்கக்கேடு பெரியது.
مردم دستهدسته در درهٔ یهوشافاط جمع میشوند، زیرا در آنجا روز خداوند بهزودی فرا خواهد رسید. | 14 |
௧௪நியாயத்தீர்ப்பின் பள்ளத்தாக்கிலே மக்கள் திரள்திரளாக இருக்கிறார்கள்; நியாயத்தீர்ப்பின் பள்ளத்தாக்கிலே யெகோவாவின் நாள் சமீபமாயிருக்கிறது.
آفتاب و ماه تاریک میشوند و ستارهها دیگر نمیدرخشند. | 15 |
௧௫சூரியனும், சந்திரனும் இருண்டுபோகும், நட்சத்திரங்கள் ஒளிமங்கும்.
خداوند از اورشلیم فریاد برمیآورد. آسمان و زمین میلرزند؛ اما خداوند همچنان پناهگاه و قلعهٔ قوم خود اسرائیل خواهد بود. | 16 |
௧௬யெகோவா சீயோனிலிருந்து கெர்ச்சித்து, எருசலேமிலிருந்து சத்தமிடுவார்; வானமும் பூமியும் அதிரும்; ஆனாலும் யெகோவா தமது மக்களுக்கு அடைக்கலமும் இஸ்ரவேல் மக்களுக்கு பாதுகாப்பான கோட்டையுமாக இருப்பார்.
«آنگاه خواهید دانست که من یهوه خدای شما، در کوه مقدّس خود صهیون، ساکنم. اورشلیم برای همیشه از آن من خواهد بود و زمانی میرسد که دیگر هیچ سپاه بیگانهای از آن گذر نخواهد کرد. | 17 |
௧௭என் பரிசுத்த மலையாகிய சீயோனிலே வாசமாயிருக்கிற நான் உங்கள் தேவனாகிய யெகோவா என்று அப்பொழுது அறிந்துகொள்வீர்கள்; அப்பொழுது எருசலேம் பரிசுத்தமாக இருக்கும்; அந்நியர்கள் இனி அதைக் கடந்துபோவதில்லை.
«از کوهها شراب تازه خواهد چکید و از بلندیها شیر جاری خواهد شد. نهرهای خشک یهودا از آب پر خواهند شد و از خانهٔ خداوند چشمهای خواهد جوشید تا درهٔ شطیم را سیراب سازد. | 18 |
௧௮அக்காலத்தில் மலைகள் திராட்சைரசத்தைப் பொழியும், மலைகள் பாலாக ஓடும், யூதாவின் ஆறுகள் எல்லாம் கரைபுரண்டு ஓடும்; ஒரு ஊற்று யெகோவாவுடைய ஆலயத்திலிருந்து புறப்பட்டு சித்தீம் என்னும் பள்ளத்தாக்கை நீர்ப்பாய்ச்சலாக்கும்.
مصر و ادوم هر دو به سبب ظلمی که به سرزمین یهودا کردند از بین خواهند رفت، زیرا مردم بیگناه آنجا را کشتند. | 19 |
௧௯யூதா மக்களின் தேசத்திலே குற்றமில்லாத இரத்தத்தைச் சிந்தி, அவர்களுக்குச் செய்த கொடுமையின் காரணமாக எகிப்து பாழாய்ப்போகும், ஏதோம் பாழான வனாந்திரமாகும்.
«ولی یهودا و اورشلیم تا به ابد پایدار خواهند ماند. | 20 |
௨0ஆனால் யூதாவோ நீண்டகாலமாகவும், எருசலேம் தலைமுறை தலைமுறையாகவும் குடியேற்றப்பட்டிருக்கும்.
من انتقام خون قوم خود را خواهم گرفت و از تقصیر کسانی که بر آنها ظلم کردند، نخواهم گذشت. من در اورشلیم با قوم خود ساکن خواهم شد.» | 21 |
௨௧நான் தண்டிக்காமல் விட்டிருந்த அவர்களுடைய இரத்தப்பழியை தண்டிக்காமல் விடமாட்டேன்; யெகோவா சீயோனிலே வாசமாயிருக்கிறார்.