< ایوب 5 >
فریاد برآور و کمک بطلب، ولی آیا کسی گوش میدهد؟ کدام یک از فرشتگان به دادت میرسد. | 1 |
“நீ விரும்பினால் கூப்பிட்டுப் பார், ஆனால் யார் உனக்குப் பதிலளிப்பார்? பரிசுத்தர்களில் யாரிடம் நீ திரும்புவாய்?
سرانجام در عجز و درماندگی از غصه میمیرند. | 2 |
கோபம் மூடனைக் கொல்லும், பொறாமை புத்தியில்லாதவனைக் கொல்லும்.
کسانی که از خدا برمیگردند، ظاهراً کامیاب هستند، ولی بلای ناگهانی بر آنها نازل میشود. | 3 |
மூடன் நிலைகொள்வதை நானே கண்டிருக்கிறேன், ஆனாலும் உடனே அவன் குடும்பத்திற்கு அழிவு வருகிறது.
فرزندان ایشان بیپناه میگردند و در محکمه محکوم میشوند و کسی از آنها حمایت نمیکند. | 4 |
அவனுடைய பிள்ளைகள் பாதுகாப்பின்றி இருக்கிறார்கள், வழக்காடுகிறவர்கள் இல்லாமல் நீதிமன்றத்தில் நசுக்கப்படுகிறார்கள்.
محصولاتشان را گرسنگان میخورند و ثروتشان را حریصان غارت میکنند. | 5 |
பசியுள்ளவர்கள் அவனுடைய அறுவடையை முட்செடிகளுக்குள் இருந்துங்கூட எடுத்துச் சாப்பிடுவார்கள்; பேராசைக்காரர் அவனுடைய செல்வத்திற்காகத் துடிப்பர்.
بلا و بدبختی هرگز بدون علّت دامنگیر انسان نمیشود. | 6 |
ஏனெனில் கஷ்டம் மண்ணிலிருந்து எழும்புவதில்லை; தொல்லை நிலத்திலிருந்து முளைப்பதுமில்லை.
بدبختی از خود انسان سرچشمه میگیرد، همچنانکه شعله از آتش برمیخیزد. | 7 |
தீப்பொறிகள் மேலே பறக்கிறதுபோல, மனிதன் தொல்லைகளை அனுபவிக்கப் பிறந்திருக்கிறான்.
اگر من جای تو بودم، مشکل خود را نزد خدا میبردم. | 8 |
“ஆனாலும் நான், இறைவனைத் தேடி, அவருக்குமுன் எனது வழக்கை வைத்திருப்பேன்.
زیرا او معجزات شگفتانگیز میکند و کارهای عجیب و خارقالعادهٔ بیشمار انجام میدهد. | 9 |
அவர் ஆராய முடியாத அதிசயங்களையும், கணக்கிடமுடியாத அற்புதங்களையும் செய்கிறார்.
بر زمین باران میباراند و کشتزارها را سیراب میکند، | 10 |
பூமிக்கு மழையைக் கொடுக்கிறவர் அவரே; நாட்டுப்புறங்களுக்குத் தண்ணீரை அனுப்புகிறவரும் அவரே.
فروتنان را سرافراز میگرداند و رنجدیدگان را شادی میبخشد. | 11 |
அவரே தாழ்மையானவர்களை உயர்த்தி, துயரத்தில் இருப்பவர்களையும் பாதுகாத்து உயர்த்துகிறார்.
او نقشههای اشخاص حیلهگر را نقش بر آب میکند تا کاری از پیش نبرند. | 12 |
அவர் தந்திரமானவர்களின் கைகளுக்கு வெற்றி கிடைக்காதபடி, அவர்களுடைய திட்டங்களை முறியடிக்கிறார்.
حکیمان را در زیرکیِ خودشان به دام میاندازد و توطئههای ایشان را خنثی مینماید. | 13 |
இறைவன் ஞானிகளை அவர்களுடைய தந்திரத்திலேயே பிடிக்கிறார், தந்திரமுள்ளவர்களின் திட்டங்கள் தள்ளப்படுகின்றன.
روز روشن برای آنها مانند شب تاریک است و در آن کورمال کورمال راه میروند. | 14 |
பகல் நேரத்தில் காரிருள் அவர்கள்மேல் வரும்; இரவில் தடவித்திரிவதுபோல் நண்பகலிலும் தடவித் திரிவார்கள்.
خدا مظلومان و فقیران را از چنگ ظالمان میرهاند. | 15 |
இறைவன் ஒடுக்குவோரின் வாளிலிருந்து வறுமையுள்ளோரை விடுவித்து, வன்முறையாளரின் கையிலிருந்து அவர்களைக் காப்பாற்றுகிறார்.
او به فقیران امید میبخشد و دهان ظالمان را میبندد. | 16 |
ஆதலால் ஏழைகளுக்கு எதிர்கால நம்பிக்கை உண்டு, அநீதி தன் வாயை மூடும்.
خوشا به حال کسی که خدای قادرمطلق تأدیبش میکند. پس وقتی او تو را تأدیب مینماید، دلگیر نشو. | 17 |
“இறைவனால் திருத்தப்படுகிறவன் ஆசீர்வதிக்கப்பட்டவன்; எனவே எல்லாம் வல்லவரின் கண்டிப்பை நீ அசட்டை பண்ணாதே.
اگر خدا تو را مجروح کند خودش هم زخمهایت را میبندد و تو را شفا میبخشد. | 18 |
அவர் காயப்படுத்திக் காயத்தைக் கட்டுகிறார்; அவர் அடிக்கிறார், அவருடைய கை ஆற்றுகிறது.
او تو را از هر بلایی میرهاند تا گزندی به تو نرسد. | 19 |
ஆறு பெரும் துன்பங்களிலும் உன்னைக் கைவிடாமல் காப்பார்; அவை ஏழானாலும் ஒரு தீமையும் உன்மேல் வராது.
خدا تو را هنگام قحطی از مرگ نجات خواهد داد و در موقع جنگ از دم شمشیر خواهد رهانید. | 20 |
பஞ்சத்தில் சாவிலிருந்தும் யுத்தத்தின் வாளுக்கு இரையாகாமலும் விலக்கிக் காப்பார்.
از زخم زبان در امان خواهی بود و وقتی هلاکت آید، از آن نخواهی ترسید. | 21 |
தூற்றும் நாவிலிருந்து நீ பாதுகாக்கப்படுவாய்; பேராபத்து வரும்போதும் நீ பயப்படாமலிருப்பாய்.
بر هلاکت و قحطی خواهی خندید و از حیوانات وحشی هراس به دل راه نخواهی داد. | 22 |
அழிவையும் பஞ்சத்தையும் கண்டு நீ சிரிப்பாய்; நீ பூமியிலுள்ள காட்டு மிருகங்களுக்கும் பயப்பட வேண்டியதில்லை.
زمینی که شخم میزنی خالی از سنگ خواهد بود و جانوران خطرناک با تو در صلح و صفا به سر خواهند برد. | 23 |
வயல்வெளியின் கற்களுடன் நீ ஒரு ஒப்பந்தம் செய்துகொள்வாய், காட்டு விலங்குகளும் உன்னுடன் சமாதானமாய் இருக்கும்.
خانهٔ تو در امان خواهد بود و از اموال تو چیزی دزدیده نخواهد شد. | 24 |
உன் கூடாரம் பாதுகாக்கப்பட்டிருப்பதை நீ அறிவாய்; உன் உடைமைகளைக் கணக்கெடுக்கும்போது ஒன்றும் குறைவுபடாதிருப்பதையும் நீ காண்பாய்.
نسل تو مانند علف صحرا زیاد خواهند بود، | 25 |
உன் பிள்ளைகள் அநேகராய் இருப்பார்கள் என்பதை நீ அறிவாய். உன் சந்ததிகள் பூமியின் புற்களைப்போல் இருப்பார்கள்.
و تو همچون خوشهٔ گندم که تا وقتش نرسد درو نمیشود، در کمال پیری، کامیاب از دنیا خواهی رفت. | 26 |
ஏற்றகாலத்தில் தானியக்கதிர்கள் ஒன்று சேர்க்கப்படுவதுபோல், உன் முதிர்வயதிலே நீ கல்லறைக்குப் போவாய்.
تجربه به من ثابت کرده است که همهٔ اینها حقیقت دارد؛ پس به خاطر خودت نصیحت مرا بشنو. | 27 |
“நாங்கள் ஆராய்ந்து பார்த்ததில் இவை உண்மை என்று கண்டோம். நீ இவற்றைக் கேட்டு, உனக்கும் இவை பொருந்தும் என்று எடுத்துக்கொள்.”