< ارمیا 6 >
ای اهالی بنیامین فرار کنید! برای نجات جانتان از اورشلیم بگریزید! در شهر تقوع شیپور خطر را به صدا درآورید، در بیتهکاریم نشانههای خطر را بر پا کنید، چون بلا و ویرانی عظیمی از سوی شمال به این سو میآید! | 1 |
௧பென்யமீன் வம்சத்தாரே, நீங்கள் எருசலேமின் நடுவிலிருந்து ஒன்றாய்க்கூடி ஓடி, தெக்கோவாவில் எக்காளம் ஊதி, பெத்கேரேமின்மேல் அடையாளமாகத் தீவெளிச்சம் காட்டுங்கள்; ஒரு தீங்கும் மகா அழிவும் வடக்கேயிருந்து தோன்றுகிறதாயிருக்கிறது.
من اورشلیم را نابود خواهم کرد شهری که مانند دختری زیبا و ظریف است. | 2 |
௨செல்வமாய் வளர்ந்த அழகுள்ள மகளாகிய சீயோனை அழிப்பேன்.
پادشاهان با سپاهیانشان گرداگرد آن خیمه خواهند زد و هر یک در هر کجا که بخواهند مستقر خواهند شد. | 3 |
௩மேய்ப்பர் தங்கள் மந்தைகளுடன் அவளிடத்திற்கு வருவார்கள்; அவர்கள் அவளுக்கு விரோதமாய்ச் சுற்றிலும் கூடாரம்போட்டு, அவனவன் தன் தன் இடத்தில் மேய்த்து,
ببین، برای جنگ آماده میشوند. هنگام ظهر جنگ درمیگیرد و تمام بعد از ظهر به شدت ادامه مییابد تا شامگاه که هوا تاریک میشود. | 4 |
௪அவளுக்கு விரோதமாய் போர்செய்ய ஆயத்தம்செய்யுங்கள் என்றும், மத்தியானத்தில்தானே நாம் போய்ச்சேருவதற்கு எழுந்திருங்கள்; ஐயோ, பொழுது சாய்ந்து, மாலைநேர நிழல்கள் நீண்டுபோகிறதே;
آنگاه میگویند: «بیایید در تاریکی شب حمله کنیم و تمام کاخهایش را از بین ببریم!» | 5 |
௫எழுந்திருங்கள், நாம் இரவுநேரத்திலாவது போய்ச்சேர்ந்து, அவளுடைய அரண்மனைகளை அழிப்போம் என்றும் சொல்லுவார்கள்.
خداوند لشکرهای آسمان چنین میفرماید: «درختانش را ببرید و با آن در مقابل اورشلیم سنگر بسازید. این شهر باید مجازات بشود، چون پر از ظلم است. | 6 |
௬சேனைகளுடைய யெகோவா சொல்லுகிறது என்னவென்றால், மரங்களை வெட்டி, எருசலேமுக்கு விரோதமாய்க் கோட்டைமதில் போடுங்கள்; அதுவே விசாரிக்கப்படவேண்டிய நகரம்; அதின் உட்புறமெல்லாம் கொடுமை.
همانطور که از چشمه، آب فوران میکند، از این شهر هم شرارت بیرون میجهد! فریاد ظلم و ستم در کوچههایش طنین انداخته است. بیماری و زخمهای متعفن آن همواره در برابر دیدگانم میباشد. | 7 |
௭ஊற்றானது, தன் தண்ணீரைச் சுரக்கச்செய்வதைப்போல, அது தன் தீங்கைச் சுரக்கச்செய்கிறது; அதில் கொடுமையும் தீமையான காரியங்களும் கேட்கப்படுகிறது; துக்கமும் காயங்களும் எப்பொழுதும் எனக்கு முன்பாகக் காணப்படுகிறது.
ای اهالی اورشلیم، از این سختیها درس عبرت بگیرید، و گرنه از شما بیزار شده، سرزمینتان را ویران خواهم کرد تا کسی نتواند در آن ساکن شود.» | 8 |
௮எருசலேமே, என் ஆத்துமா உன்னை விட்டுப் பிரியாமலிருக்கவும், நான் உன்னைப் பாழும் குடியில்லாத தேசமும் ஆக்காமலிருக்கவும் புத்தியைக்கேள்.
خداوند لشکرهای آسمان میفرماید: «مانند درخت مویی که همۀ خوشههایش چیده شده، قوم اسرائیل نیز خوشهچینی خواهد شد آن گونه که خوشهای باقی نماند.» | 9 |
௯திராட்சைக்குலைகளை அறுக்கிறவனைப்போல உன் கையைத் திரும்பக் கூடைகளின்மேல் போடென்று சொல்லி, அவர்கள் இஸ்ரவேலின் மீதியாயிருந்த பழத்தைத் திராட்சைச்செடியின் பழத்தைப்போல் நன்றாய்ப் பொறுக்கிக்கொண்டு போவார்கள் என்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார்.
من به خداوند گفتم: «چه کسی به سخنان و هشدارهای من گوش فرا خواهد داد؟ ایشان گوشهای خود را بستهاند و نمیخواهند بشنوند. کلام تو ایشان را ناراحت و خشمگین میسازد و نمیخواهند به گوششان برسد. | 10 |
௧0அவர்கள் கேட்கும்படி நான் யாருடன் பேசி எச்சரிப்பேன்? அவர்களுடைய காது விருத்தசேதனமில்லாதது; அவர்கள் கேட்கமாட்டார்கள்; யெகோவாவுடைய வசனம் அவர்களுக்கு நிந்தையாயிருக்கிறது; அதின்மேல் அவர்களுக்கு விருப்பமில்லை.
به سبب تمام این کارهای شرمآورشان من از خشم الهی لبریزم و دیگر نمیتوانم تحمل کنم.» آنگاه خداوند فرمود: «خشم و غضب خود را بر سر اهالی اورشلیم خواهم ریخت بر کودکانی که در کوچهها بازی میکنند، بر مجلس جوانان، بر زن و شوهرها، و بر سالخوردگان. | 11 |
௧௧ஆகையால் நான் யெகோவாவுடைய கடுங்கோபத்தால் நிறைந்திருக்கிறேன்; அதை அடக்கி இளைத்துப்போனேன்; வீதிகளிலுள்ள பிள்ளைகளின்மேலும், வாலிபருடைய கூட்டத்தின்மேலெங்கும் அதை ஊற்றிவிடுவேன்; ஆண்களும், பெண்களும், முதியவர்களும், மிக வயதானவர்களுங்கூடப் பிடிக்கப்படுவார்கள்.
زنان و خانهها و مزرعههایشان، همه به دست دشمن خواهند افتاد، چون من اهالی این سرزمین را تنبیه خواهم کرد. | 12 |
௧௨அவர்களுடைய வீடுகளும், சொந்தநிலங்களும், அவர்களுடைய மனைவிகளுடன் ஏகமாக அந்நியர் வசமாகும்; என் கையை இந்தத் தேசத்தின் குடிமக்களுக்கு விரோதமாக நீட்டுவேன் என்று யெகோவா சொல்லுகிறார்.
همگی ایشان از کوچک تا بزرگ، دروغگو بوده، به دنبال سود نامشروع میباشند، حتی انبیا و کاهنان نیز فریبکارند! | 13 |
௧௩அவர்களில், சிறியோர்முதல் பெரியோர்வரை, ஒவ்வொருவரும் பொருளாசைக்காரர்; இதுவுமல்லாமல் தீர்க்கதரிசிகள்முதல் ஆசாரியர்கள்வரை ஒவ்வொருவரும் பொய்யர்.
آنها زخمهای قوم مرا میپوشانند گویی چیز چندان مهمی نیست. میگویند:”آرامش برقرار است!“در حالی که آرامشی وجود ندارد. | 14 |
௧௪சமாதானமில்லாமலிருந்தும்: சமாதானம் சமாதானம் என்று சொல்லி, என் மக்களின் காயங்களை மேலோட்டமாகக் குணமாக்குகிறார்கள்.
آیا قوم من از بتپرستی شرمندهاند؟ نه، ایشان بویی از شرم و حیا نبردهاند! از این رو، من ایشان را مجازات خواهم نمود و ایشان در میان کشتگان خواهند افتاد.» | 15 |
௧௫அவர்கள் அருவருப்பானதைச் செய்ததினிமித்தம் வெட்கப்படுகிறார்களோ? ஆனாலும் வெட்கப்படமாட்டார்கள், வெட்கப்படவும் அவர்களுக்குத் தெரியாது; ஆதலால் விழுகிறவர்களுக்குள்ளே விழுவார்கள்; நான் அவர்களை விசாரிக்குங்காலத்தில் இடறுண்டுபோவார்கள் என்று யெகோவா சொல்லுகிறார்.
با وجود این، خداوند چنین میفرماید: «بر سر جادهها بایستید و بپرسید راه درست، یعنی راهی که خداشناسان در ایام قدیم میپیمودند، کدام است؛ شما نیز همان راه را دنبال نمایید تا در وجودتان آرامش بیابید. ولی شما جواب میدهید:”نه، ما این راه را پیروی نخواهیم کرد!“ | 16 |
௧௬வழிகளில் நின்று, முன்னோர்களின் பாதைகள் எவையென்று கேட்டு விசாரித்து, நல்ல வழி எங்கே என்று பார்த்து, அதில் செல்லுங்கள்; அப்பொழுது உங்கள் ஆத்துமாவுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும் என்று யெகோவா சொல்லுகிறார்; அவர்களோ, நாங்கள் அதில் நடக்கமாட்டோம் என்கிறார்கள்.
بر شما نگهبانانی گماشتم تا به شما هشدار دهند که به صدای شیپور خطر گوش دهید، ولی شما گفتید:”گوش نخواهیم داد!“» | 17 |
௧௭நான் உங்கள்மேல் காவலாளரையும் வைத்து, எக்காள சத்தத்திற்கு செவிகொடுங்கள் என்றும் சொன்னேன்; அவர்களோ: நாங்கள் கேட்கமாட்டோம் என்கிறார்கள்.
پس خداوند میگوید: «ای قومها بشنوید! ای گواهان بنگرید که بر سر ایشان چه خواهد آمد! | 18 |
௧௮ஆகையால் தேசங்களே, கேளுங்கள்; சபையே, அவர்களுக்குள் நடக்கிறதை அறிந்துகொள்.
ای زمین گوش بده! من بر سر این قوم بلایی خواهم آورد که ثمرهٔ خیالات گناهآلود خودشان است، چون به کلام من گوش نمیدهند و دستورهای مرا زیر پا میگذارند. | 19 |
௧௯பூமியே, கேள்; இந்த மக்கள் என் வார்த்தைகளைக் கேட்காமலிருந்து, என் நியாயப்பிரமாணத்தைக் கேட்காமல் அதை வெறுத்துவிடுகிறார்கள்; அவர்கள்மேல் நான் அவர்கள் நினைவுகளின் பலனாகிய தீங்கை வரச்செய்வேன்.
پس دیگر چه فایدهای دارد که از سرزمین سبا برای من بخور میآورند و از سرزمینهای دور دست، عطرهای گرانبها. من هدایای ایشان را نمیتوانم بپذیرم؛ دیگر برایم خوشایند نیستند. | 20 |
௨0சேபாவிலிருந்து வருகிற தூபவர்க்கமும், தூரதேசத்தினுடைய சுகந்தப்பட்டையும் எனக்கு எதற்கு? உங்கள் சர்வாங்கதகனங்கள் எனக்கு விருப்பமல்ல; உங்கள் பலிகள் எனக்கு இன்பமாயிராது.
بنابراین من بر سر راه این قوم سنگهای لغزنده قرار خواهم داد تا پدران، پسران و دوستان و همسایگانشان بلغزند و هلاک شوند.» | 21 |
௨௧ஆகையால் இதோ, நான் இந்த மக்களுக்கு இடறல்களை வைப்பேன்; அவைகள்மேல் தகப்பன்களும், பிள்ளைகளும், நண்பர்களும், அண்டைவீட்டுக்காரனும், ஏகமாக இடறுண்டு அழிவார்கள் என்று யெகோவா சொல்லுகிறார்.
خداوند میفرماید: «از سرزمین شمال لشکری در حرکت است و قوم نیرومندی برای جنگ با شما برخاستهاند. | 22 |
௨௨இதோ, வடதேசத்திலிருந்து ஒரு மக்கள்கூட்டம் வந்து, பூமியின் கடைசி எல்லைகளிலிருந்து ஒரு பெரிய தேசம் எழும்பும்.
ایشان به کمان و نیزه مسلحند، سنگدل و بیرحم هستند و وقتی بر اسبهای خود سوار میشوند، صدایشان مانند خروش دریاست! آنها برای جنگ با اورشلیم مهیا شدهاند.» | 23 |
௨௩அவர்கள் வில்லும் வேலும் பிடித்துவருவார்கள்; அவர்கள் கொடியவர்கள், இரக்கம் அறியாதவர்கள்; அவர்கள் சத்தம் கடலின் இரைச்சலைப்போல் இருக்கும்; மகளாகிய சீயோனே, அவர்கள் உனக்கு விரோதமாக போர்செய்யக் குதிரைகளின்மேலேறி அணியணியாக வருவார்கள் என்று யெகோவா சொல்லுகிறார்.
مردم اورشلیم میگویند: «این خبرها را شنیدهایم، برای همین دستهایمان لرزان شده و مانند زنی که در حال زاییدن است، دچار هراس و دردیم. | 24 |
௨௪அவர்கள் வருகிற செய்தியைக் கேட்டோம்; நம்முடைய கைகள் தளர்ந்தது; துன்பமும், கர்ப்பவதிக்கு உண்டாகும் வேதனையைப்போன்ற வேதனையும் நம்மைப் பிடித்தது.
جرأت نداریم به صحرا برویم و یا در جادهها قدم بگذاریم، چون دشمن ما مسلح است! ترس از هر سو ما را فرا گرفته است!» | 25 |
௨௫வயல்வெளியில் புறப்படாதிருங்கள்; வழியிலும் நடக்காதிருங்கள்; சுற்றிலும் எதிரியின் பட்டயமும் பயங்கரமுமுண்டு.
خداوند میفرماید: «ای قوم من، لباس ماتم بر تن کن و به عزا بنشین؛ مانند کسی که در مرگ تنها پسرش به عزا نشسته، به تلخی سوگواری کن، چون سربازان غارتگر، ناگهان بر تو هجوم خواهند آورد. | 26 |
௨௬என் மக்களாகிய மகளே, நீ சணல் ஆடையைக் கட்டிக்கொண்டு, சாம்பலில் புரண்டு, ஒரே மகனுக்காகத் துக்கிக்கிறதுபோல மனங்கசந்து புலம்பு; அழிக்கிறவன் திடீரென்று நம்மேல் வருவான்.
«ای ارمیا، من تو را سنگ محک قرار دادهام تا قوم مرا محک بزنی؛ پس کردار و رفتار ایشان را مشاهده و ارزیابی نما. | 27 |
௨௭நீ என் மக்களின் வழியை அறிந்துகொள்ளவும் சோதித்துப்பார்க்கவும் நான் உன்னை அவர்களுக்குள்ளே கோட்டைச்சுவராகவும், பாதுகாப்பாகவும் வைத்தேன்.
آنها کاملاً یاغی شده و دلشان همچون مفرغ و آهن سخت گردیده است؛ به هر جا که میروند، غیبت میکنند؛ تمام اعمالشان گناهآلود است. | 28 |
௨௮அவர்களெல்லோரும் முரட்டாட்டமான அகங்காரிகளும், தூற்றித்திரிகிறவர்களுமாக இருக்கிறார்கள்; அவர்கள் வெண்கலமும் இரும்புமானவர்கள்; அவர்களெல்லோரும் கெட்டவர்கள்.
آهنگر با افزودن دمای کوره، سرب را تصفیه میکند، ولی قوم من تصفیه ناپذیرند، زیرا بدکاران از آنها جدا نمیشوند. | 29 |
௨௯தோல்பை வெந்தது; ஈயம் நெருப்பினால் அழிந்தது; புடமிடுகிறவனுடைய பிரயாசம் வீணாகப்போனது; பொல்லாப்புகள் நீங்கிப்போகவில்லை.
ایشان”نقرهٔ ناخالص بیمصرف“نامیده خواهند شد، چون من ترکشان کردهام.» | 30 |
௩0அவர்கள் தள்ளுபடியான வெள்ளி என்னப்படுவார்கள்; யெகோவா அவர்களைத் தள்ளிவிட்டார்.