< پیدایش 11 >
در آن روزگار همهٔ مردم جهان به یک زبان سخن میگفتند. | 1 |
௧பூமியெங்கும் ஒரே மொழியும், ஒரே விதமான பேச்சும் இருந்தது.
جمعیت دنیا رفتهرفته زیاد میشد و مردم به طرف شرق کوچ میکردند. آنها سرانجام به دشتی وسیع و پهناور در بابِل رسیدند و در آنجا سکنی گزیدند. | 2 |
௨மக்கள் கிழக்கேயிருந்து பயணம்செய்யும்போது, சிநெயார் தேசத்தில் சமபூமியைக்கண்டு, அங்கே குடியிருந்தார்கள்.
آنها با هم مشورت کرده، گفتند: «بیایید خشتها درست کنیم و آنها را خوب بپزیم.» (در آن منطقه خشت به جای سنگ و قیر به جای ملات به کار میرفت.) | 3 |
௩அப்பொழுது அவர்கள்: “நாம் செங்கல் அறுத்து, அதை நன்றாகச் சுடுவோம் வாருங்கள்” என்று ஒருவரோடு ஒருவர் பேசிக்கொண்டார்கள்; கல்லுக்குப் பதிலாக செங்கலும், சாந்துக்குப் பதிலாக நிலக்கீலும் அவர்களுக்கு இருந்தது.
سپس گفتند: «بیایید شهری بزرگ برای خود بنا کنیم و برجی بلند در آن بسازیم که سرش به آسمان برسد تا نامی برای خود پیدا کنیم. این کار مانع پراکندگی ما خواهد شد.» | 4 |
௪பின்னும் அவர்கள்: “நாம் பூமியெங்கும் சிதறிப்போகாதபடி, நமக்கு ஒரு நகரத்தையும், வானத்தைத் தொடுமளவு ஒரு கோபுரத்தையும் கட்டி, நமக்குப் பெயர் உண்டாகச் செய்வோம் வாருங்கள்” என்று சொல்லிக்கொண்டார்கள்.
اما خداوند فرود آمد تا شهر و برجی را که مردم بنا میکردند، ببیند. | 5 |
௫மனிதர்கள் கட்டுகிற நகரத்தையும் கோபுரத்தையும் பார்க்கிறதற்குக் யெகோவா இறங்கினார்.
خداوند گفت: «مردم با هم متحد شدهاند و همگی به یک زبان سخن میگویند. از این به بعد هر کاری بخواهند میتوانند انجام دهند. | 6 |
௬அப்பொழுது யெகோவா: “இதோ, மக்கள் ஒரே கூட்டமாக இருக்கிறார்கள்; அவர்கள் அனைவருக்கும் ஒரே மொழியும் இருக்கிறது; அவர்கள் இதைச் செய்யத்தொடங்கினார்கள்; இப்பொழுதும் தாங்கள் செய்ய நினைத்தது ஒன்றும் தடைபடாது என்று இருக்கிறார்கள்.
پس بیایید به پائین برویم و زبان آنها را تغییر دهیم تا سخن یکدیگر را نفهمند.» | 7 |
௭நாம் இறங்கிப்போய், ஒருவர் பேசுவதை மற்றொருவர் புரிந்துகொள்ளாதபடி, அங்கே அவர்கள் மொழியைத் தாறுமாறாக்குவோம்” என்றார்.
این اختلافِ زبان موجب شد که آنها از بنای شهر دست بردارند؛ و به این ترتیب خداوند ایشان را روی زمین پراکنده ساخت. | 8 |
௮அப்படியே யெகோவா அவர்களை அந்த இடத்திலிருந்து பூமியெங்கும் சிதறிப்போகச் செய்தார்; அப்பொழுது நகரம் கட்டுவதை விட்டுவிட்டார்கள்.
از این سبب آنجا را بابِل نامیدند، چون در آنجا بود که خداوند در زبان آنها اغتشاش ایجاد کرد و ایشان را روی زمین پراکنده ساخت. | 9 |
௯பூமியெங்கும் பேசப்பட்ட மொழியைக் யெகோவா அந்த இடத்தில் தாறுமாறாக்கியதால், அதின் பெயர் பாபேல் எனப்பட்டது; யெகோவா அவர்களை அந்த இடத்திலிருந்து பூமியெங்கும் சிதறிப்போகச் செய்தார்.
این است تاریخچۀ نسل سام: دو سال بعد از طوفان، وقتی سام ۱۰۰ ساله بود، پسرش ارفکشاد به دنیا آمد. | 10 |
௧0சேமுடைய வம்சவரலாறு: வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு 2 வருடங்களுக்குப் பிறகு, சேம் 100 வயதானபோது, அர்பக்சாத்தைப் பெற்றெடுத்தான்.
پس از تولد ارفکشاد، سام ۵۰۰ سال دیگر زندگی کرد و صاحب پسران و دختران شد. | 11 |
௧௧சேம் அர்பக்சாத்தைப் பெற்றபின் 500 வருடங்கள் உயிரோடிருந்து மகன்களையும் மகள்களையும் பெற்றெடுத்தான்.
وقتی ارفکشاد سی و پنج ساله بود، پسرش شالح متولد شد. | 12 |
௧௨அர்பக்சாத் 35 வயதானபோது சாலாவைப் பெற்றெடுத்தான்.
پس از تولد شالح، ارفکشاد ۴۰۳ سال دیگر زندگی کرد و صاحب پسران و دختران شد. | 13 |
௧௩சாலாவைப் பெற்றபின் அர்பக்சாத் 403 வருடங்கள் உயிரோடிருந்து மகன்களையும் மகள்களையும் பெற்றெடுத்தான்.
وقتی شالح سی ساله بود، پسرش عابر متولد شد. | 14 |
௧௪சாலா 30 வயதானபோது ஏபேரைப் பெற்றெடுத்தான்.
پس از تولد عابر، شالح ۴۰۳ سال دیگر زندگی کرد و صاحب پسران و دختران شد. | 15 |
௧௫ஏபேரைப் பெற்றபின் சாலா 403 வருடங்கள் உயிரோடிருந்து மகன்களையும் மகள்களையும் பெற்றெடுத்தான்.
وقتی عابر سی و چهار ساله بود، پسرش فِلِج متولد شد. | 16 |
௧௬ஏபேர் 34 வயதானபோது பேலேகைப் பெற்றெடுத்தான்.
پس از تولد فِلِج، عابر ۴۳۰ سال دیگر زندگی کرد و صاحب پسران و دختران شد. | 17 |
௧௭பேலேகைப் பெற்றபின் ஏபேர் 430 வருடங்கள் உயிரோடிருந்து மகன்களையும் மகள்களையும் பெற்றெடுத்தான்.
فِلِج سی ساله بود که پسرش رعو متولد شد. | 18 |
௧௮பேலேகு 30 வயதானபோது ரெகூவைப் பெற்றெடுத்தான்.
پس از تولد رعو، فِلِج ۲۰۹ سال دیگر زندگی کرد و صاحب پسران و دختران شد. | 19 |
௧௯ரெகூவைப் பெற்றபின் பேலேகு 209 வருடங்கள் உயிரோடிருந்து மகன்களையும் மகள்களையும் பெற்றெடுத்தான்.
وقتی رعو سی و دو ساله بود، پسرش سروج متولد شد. | 20 |
௨0ரெகூ 32 வயதானபோது செரூகைப் பெற்றெடுத்தான்.
پس تولد سروج، رعو ۲۰۷ سال دیگر زندگی کرد و صاحب پسران و دختران شد. | 21 |
௨௧செரூகைப் பெற்றபின் ரெகூ 207 வருடங்கள் உயிரோடிருந்து மகன்களையும் மகள்களையும் பெற்றெடுத்தான்.
وقتی سروج سی ساله بود، پسرش ناحور به دنیا آمد. | 22 |
௨௨செரூகு முப்பது 30 நாகோரைப் பெற்றெடுத்தான்.
پس از تولد ناحور، سروج ۲۰۰ سال دیگر زندگی کرد و صاحب پسران و دختران شد. | 23 |
௨௩நாகோரைப் பெற்றபின் செரூகு 200 வருடங்கள் உயிரோடிருந்து மகன்களையும் மகள்களையும் பெற்றெடுத்தான்.
وقتی ناحور بیست و نه ساله بود، پسرش تارح، به دنیا آمد. | 24 |
௨௪நாகோர் 29 வயதானபோது தேராகைப் பெற்றெடுத்தான்.
پس از تولد تارح، ناحور ۱۱۹ سال دیگر زندگی کرد و صاحب پسران و دختران شد. | 25 |
௨௫தேராகைப் பெற்றபின் நாகோர் 119 வருடங்கள் உயிரோடிருந்து மகன்களையும் மகள்களையும் பெற்றெடுத்தான்.
تارح هفتاد ساله بود که صاحب سه پسر شد به نامهای ابرام، ناحور و هاران. | 26 |
௨௬70 வயதானபோது ஆபிராம், நாகோர், ஆரான் என்பவர்களைப் பெற்றெடுத்தான்.
این است تاریخچۀ نسل تارَح: تارح پدر ابرام و ناحور و هاران بود؛ و هاران پدر لوط. | 27 |
௨௭தேராகுடைய வம்சவரலாறு: தேராகு ஆபிராம், நாகோர், ஆரான் என்பவர்களைப் பெற்றெடுத்தான்; ஆரான் லோத்தைப் பெற்றெடுத்தான்.
هاران در همان جایی که به دنیا آمده بود (یعنی اور کلدانیان) در برابر چشمان پدرش در سن جوانی درگذشت. | 28 |
௨௮ஆரான் தன் பிறந்த இடமாகிய ஊர் என்கிற கல்தேயர் தேசத்துப் பட்டணத்திலே தன் தகப்பனாகிய தேராகு இறப்பதற்குமுன்னே இறந்தான்.
ابرام و ناحور ازدواج کردند. نام زن ابرام سارای، و نام زن ناحور مِلکه بود. (مِلکه و خواهرش یسکه دختران برادر ناحور، یعنی هاران بودند.) | 29 |
௨௯ஆபிராமும் நாகோரும் திருமணம் செய்தார்கள்; ஆபிராமுடைய மனைவிக்கு சாராய் என்று பெயர்; நாகோருடைய மனைவிக்கு மில்க்காள் என்று பெயர்; இவள் ஆரானுடைய மகள்; அந்த ஆரான் மில்க்காளுக்கும் இஸ்காளுக்கும் தகப்பன்.
سارای نازا بود و فرزندی نداشت. | 30 |
௩0சாராய்க்குக் குழந்தையில்லை; மலடியாக இருந்தாள்.
تارح پسرش ابرام، نوهاش لوط و عروسش سارای را با خود برداشت و اور کلدانیان را به قصد کنعان ترک گفت. اما وقتی آنها به شهر حران رسیدند در آنجا ماندند. | 31 |
௩௧தேராகு தன் மகனாகிய ஆபிராமையும், ஆரானுடைய மகனும், தன்னுடைய பேரனுமாயிருந்த லோத்தையும், ஆபிராமுடைய மனைவியாகிய தன்னுடைய மருமகள் சாராயையும் அழைத்துக்கொண்டு, அவர்களுடன் ஊர் என்கிற கல்தேயர்களுடைய பட்டணத்தைவிட்டு, கானான் தேசத்திற்குப் போகப் புறப்பட்டான்; அவர்கள் ஆரான்வரைக்கும் வந்தபோது, அங்கே தங்கிவிட்டார்கள்.
تارح در سن ۲۰۵ سالگی در حران درگذشت. | 32 |
௩௨தேராகுடைய ஆயுசு நாட்கள் 205 வருடங்கள்; தேராகு ஆரானிலே இறந்தான்.