< حِزِقیال 9 >
آنگاه خدا با صدایی بلند گفت: «مأموران مجازات شهر را فرا خوان! بگو سلاحهایشان را بیاورند!» | 1 |
௧பின்பு தேவன் என்னுடைய காதுகள் கேட்க மகா சத்தமாக; எருசலேம் நகரத்தின் விசாரிப்புக்காரர்கள் அழிக்கும் ஆயுதங்களைத் தங்களுடைய கைகளில் பிடித்துக்கொண்டுவரவேண்டும் என்று சொன்னார்.
ناگاه شش مرد از دروازهٔ شمالی آمدند و هر یک، سلاح خود را در دست داشت. همراه آنها مردی بود با لباس کتان که قلم و دوات با خود داشت. آنها همه وارد خانهٔ خدا شدند و کنار مذبح مفرغین ایستادند. | 2 |
௨அப்பொழுது இதோ, ஆறு ஆண்கள், வெட்டுகிற ஆயுதங்களைத் தங்களுடைய கைகளில் பிடித்துக்கொண்டு, வடக்கே பார்த்த உயர்ந்த வாசலின் வழியிலிருந்து வந்தார்கள்; அவர்களில் சணல்நூல் அங்கி அணிந்து, தன்னுடைய இடுப்பில் கணக்கனுடைய மைக்கூட்டை வைத்திருக்கிற ஒருவன் இருந்தான்; அவர்கள் உள்ளே நுழைந்து, வெண்கல பலிபீடத்தின் அருகில் நின்றார்கள்.
سپس حضور پرجلال خدا از بالای کروبیانی که بر آنها بود، برخاست و به آستانهٔ عبادتگاه آمد و آن مردی را که لباس کتانی پوشیده بود و قلم و دوات داشت، خطاب کرده، | 3 |
௩அப்பொழுது இஸ்ரவேலின் தேவனுடைய மகிமை கேருபீன்மேலிருந்து எழும்பி, ஆலயத்தின் வாசற்படியிலே வந்து, சணல்நூல் அங்கி அணிந்து, தன்னுடைய இடுப்பில் கணக்கனுடைய மைக்கூட்டை வைத்திருக்கிற மனிதனைக் கூப்பிட்டு,
گفت: «در کوچههای اورشلیم بگرد و روی پیشانی کسانی که به خاطر شرارتهایی که در این شهر انجام میشود، گریه و ماتم میکنند، علامت بگذار.» | 4 |
௪யெகோவா அவனை நோக்கி: நீ எருசலேம் நகரம் எங்கும் சுற்றிவந்து, அதற்குள்ளே செய்யப்படுகிற எல்லா அருவருப்புகளுக்காக பெருமூச்சுவிட்டு அழுகிற மனிதர்களின் நெற்றிகளில் அடையாளம் போடு என்றார்.
آنگاه شنیدم که خداوند به مردان دیگر فرمود: «به دنبال او به شهر بروید و کسانی را که بر پیشانیشان علامت ندارند، بکشید. هیچکس را زنده نگذارید و به کسی رحم نکنید. | 5 |
௫பின்பு அவர் என்னுடைய காதுகள் கேட்க மற்றவர்களை நோக்கி: நீங்கள் இவன் பின்னாலே நகரமெங்கும் சுற்றிவந்து வெட்டுங்கள்; உங்களுடைய கண் தப்பவிடாமலும், நீங்கள் இரங்காமலும்,
پیر و جوان، دختر و زن و بچه، همه را از بین ببرید؛ ولی به کسانی که بر روی پیشانیشان علامت هست، دست نزنید. این کار را از خانهٔ من شروع کنید.» پس با کشتن بزرگان قوم که در خانهٔ خدا بودند، کشتار را شروع کردند. | 6 |
௬முதியோர்களையும், வாலிபர்களையும், கன்னிகைகளையும், குழந்தைகளையும், பெண்களையும் வெட்டி கொன்றுபோடுங்கள்; அடையாளம் போடப்பட்டிருக்கிற ஒருவனையும் தொடாமல் இருங்கள், என்னுடைய பரிசுத்த ஸ்தலத்திலே தொடங்குங்கள் என்று என்னுடைய காதுகள் கேட்கச் சொன்னார்; அப்பொழுது அவர்கள் ஆலயத்திற்கு முன்னே இருந்த மூப்பர்களிடத்தில் துவங்கினார்கள்.
خداوند به ایشان گفت: «این عبادتگاه را آلوده کنید! حیاط آن را از جنازه پر سازید! دست به کار شوید!» پس ایشان فرمان خدا را در تمام شهر اجرا کردند. | 7 |
௭அவர் அவர்களை நோக்கி: நீங்கள் எருசலேம் ஆலயத்தைத் தீட்டுப்படுத்தி, முற்றங்களைக் கொலை செய்யப்பட்டவர்களாலே நிரப்பி, புறப்பட்டுப்போங்கள் என்றார்; அவர்கள் எருசலேம் நகரத்தில் போய் வெட்டினார்கள்.
وقتی آنها کشتار را شروع کردند و من تنها مانده بودم، رو به خاک افتادم و فریاد زدم: «ای خداوند یهوه! آیا تو بر اورشلیم آنقدر غضبناک هستی که هر کسی را که در اسرائیل باقی مانده باشد، از بین خواهی برد؟» | 8 |
௮அவர்கள் வெட்டிக்கொண்டுபோகும்போது நான் மட்டும் தனித்து, முகங்குப்புற விழுந்து: ஆ, யெகோவாகிய ஆண்டவரே, தேவரீர் எருசலேமின்மேல் உமது கடுங்கோபத்தை ஊற்றும்போது இஸ்ரவேலின் மீதியானவர்களையெல்லாம் அழிப்பீரோ என்று முறையிட்டேன்.
او در پاسخ فرمود: «گناهان قوم اسرائیل و یهودا خیلی زیاد است. تمام سرزمین پر است از ظلم و جنایت! ایشان میگویند:”خداوند این را نمیبیند! او این سرزمین را رها کرده است!“ | 9 |
௯அதற்கு அவர்: இஸ்ரவேலும் யூதாவுமாகிய மக்களின் அக்கிரமம் மிகவும் பெரிது; தேசம் இரத்தப்பழிகளால் நிறைந்திருக்கிறது; நகரமும் மாறுபாட்டினால் நிரப்பப்பட்டிருக்கிறது; யெகோவா தேசத்தைக் கைவிட்டார்; யெகோவா பார்க்கமாட்டார் என்று சொல்லுகிறார்கள்.
پس من نیز بر ایشان رحم نخواهم کرد و از سر تقصیراتشان نخواهم گذشت. آنها را به سزای همهٔ اعمالشان خواهم رساند.» | 10 |
௧0ஆகையால் என்னுடைய கண் தப்பவிடுவதுமில்லை, நான் இரக்கம்செய்வதுமில்லை; அவர்களுடைய வழியின் பலனை அவர்கள் தலையின்மேல் இறங்கச்செய்வேன் என்றார்.
آنگاه مردی که لباس کتانی پوشیده و دوات و قلم با خود داشت، آمد و گفت: «فرمانی که داده بودی، اجرا شد.» | 11 |
௧௧இதோ, சணல்நூல் அங்கி அணிந்து, தன்னுடைய இடுப்பில் மைக்கூட்டை வைத்திருக்கிற மனிதன் வந்து: நீர் எனக்குக் கட்டளையிட்டபடி செய்தேன் என்று காரியத்தைத் தெரிவித்தான்.